வெள்ளி, 30 மார்ச், 2018

“நாட்டார் பட்டயம்”



கிபி1853ஆம் ஆண்டு சித்திரை 24ம் தேதி சர்க்கரைப் புலவர் இயற்றிய இராமயண பிரசங்கத்திற்காக தானமளித்த நாட்டார் பட்டயம் ஆகும்.

இதில் அஞ்சுகோட்டைப்பற்று நாட்டார்களாகவும், அம்பலங்களாகவும் கள்ளர், மறவர்கள் மற்றும் பிள்ளைமார்கள் வருகிறார்கள், இப்பட்டயத்தில் கள்ளர், மறவர் என பிரிக்காமல் அம்பலகாரர்கள் என ஒரு குடையின் கீழ் வருவது தனிச்சிறப்பாக உள்ளது.



மேலும் இதில் கிளைவழி கள்ளர் அம்பலகாரர்களுக்கு தேவர் பட்டம் வருகிறது.

கப்பலூர் வள்ளல் ஐயா கருமாணிக்கதொண்டைமான் வம்சத்தை சேர்ந்த கரிய மாணிக்கம் இராமசாமி அம்பலம் அவர்கள் அவர்களுடைய குடும்ப பெயர் கரி(ரு)யமாணிக்கம் என்று கூறிய உன்மை நிருவணமாகிறது. ஏனென்றால் இந்த பட்டயம் கிபி 1853 காலத்தது, இப்போது உள்ள அவரின் தலைமுறைக்கு சுமார் ஐந்து  தலைமுறைக்கு முந்தையது.

கரிய இராமசாமி அம்பலம் முன்னோர்கள்

தந்தை கரிய மாணிக்கம் அம்பலம்
தாத்தா கரிய இராமசாமி அம்பலம்
கொள்ளுத் தாத்தா கரியமாணிக்கம் அம்பலம்.

இப்போது அவரின் கொல்லு தாத்தாவின் முன்னோர் பெயரும் அதையே தாங்கி நிற்கிறது என்பது கப்பற்கோவையின் நாயகர் கப்பலூர்கருமாணிக்கதொண்டைமான்வம்சாவழியை இன்னும் உறுதிபடுத்துகிறது.

இதுபோக படைகண்டான் அம்பலம் எனப்படுகிற கண்ணங்குடி கள்ளர் அம்பலத்தின் குடும்ப பெயரும் அதையே தாங்கி நிற்கிறது, 800  வருடத்திற்கு முந்தைய சிங்களப் படையெடுப்புக்கு இதே பெயர் தமிழ் படைத்தளபதியாக வருகிறது. 





நாட்டார் பட்டயத்தில் வரும் அம்பலகாரர் பெயர்கள்:

கள்ளர் அம்பலங்கள்:

கரியமாணிக்கம் (கப்பலூர்)
படைகண்டான் (கண்ணங்குடி)
ஆண்டியப்பன் அம்பலம் (ஆற்றங்கரை மாகாணம்)
அனுமத்தேவன் (இறகுசரி)
திடக்கோட்டை தேவன் (வெங்கலூர்)
மல்லித்தேவன் (வெங்கலூர்)
திருக்காட்டி தேவன் (வெங்கலூர்)
உடைச்சி (இலுப்பைகுடி)
ஆண்டான் (ஆயங்குடி)
சின்ன கள்ளப்பத்தான் (ஆலம்பாடி)
பொன்னாண்டான் (கப்பலூர்)
முன்னையன் (களபத்தூர்)
உடைச்சியன் (சிறுகல்)
வணங்காமுடி (அனுமந்தகுடி)
சாத்தப்பன் (திருப்பாக்கோட்டை)
கருதேவன் (மணக்குடி)

மறவர் அம்பலங்கள்:

உடையார் (ஓரியூர்)
வெள்ளையத் தேவன் (பஞ்சாவயல்)
சுப்பாத்தேவன் (பஞ்சாவயல்)
வடுகத் தேவன் (நாலூர்)
கோரணி (பனங்குளம்)
வளை சித்திரன் (திருத்தல்)
சீனி (திருத்தல்)
கருமலைத்தேவன் (அஞ்சுகோட்டை)
சின்னாதித்தேவன் (அஞ்சுகோட்டை)
மல்லாரித் தேவன் (பிள்ளையாரேனேந்தல்)
ராக்கத்தேவன் (கிளியூர்)
மன்னங்காரன் 
கருப்பன் (மருதங்குடி)
கட்டத்தேவன் (ஆக்களூர்)
ஆவணியாத்தேவன் (ஆக்களூர்)
பேயத்தேவன் (ஆக்களூர்)

மேலும் சில அம்பலங்களின் ஊர்கள் இன்று மருவியுள்ளதால் அடையாளம் காண முடியவில்லை.


இச்சிறப்பு மிக்க நாட்டார் பட்டயம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நன்றி 
தமிழக தொல்லியல் துறை

ஆய்வு 
திரு. சோழபாண்டியன் - ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்