திங்கள், 23 ஜூலை, 2018

தமிழ் அகராதியில் கள்ளர் பட்டத்திற்கான ஆய்வு


மன்னசிங்காரியர் அல்லது மன்னசிங்காரி : 


மன்னசிங்கரி யர் (எ) மன்னசிங்காரியர்

மன்னசிங்கரி = மன்ன (மன்னன்) + சிங்கரி ( சிங்கம்)

"மன்ன எம்பிரான் வருக என்எனை
மாலும் நான்முகத் தொருவன்"

மன்ன - மன்னனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; மாலும் நான்முகத்து ஒருவனும் - திருமாலும் நான்கு திருமுகங்களுடைய ஒப்பற்றவனாகிய பிரமனும்.

மிகப்பிரபலமான நரசிம்மர் தலம் சிங்கரி கோவில், வைணவ மடத்தின் முதல் ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. நரசிம்மர் மற்றோரு பெயர் சிங்கரி.

மன்னசிங்காரியர் - மன்னரில் சிங்கம் போன்றவர்கள் என்று பொருள்


பட்டங்கட்டியார் :

பட்டஞ்சூடிய அதிகாரி, தலைவருக்குரிய பட்டம்.


கீருடையார்:

உடையான் என்றால் உடையவன் என்று பொருள்.

கீர் உடையான் என்றால், கீரம் என்பதற்குச் 'சொல் ' என்பது பொருள் மேலும் சீரம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பால் என்பது பொருள். அச்சொல் தமிழில் கீரம்" என்று கூறப்படும். பால் வளம் உடையவர் அல்லது சொல் வளம் உடையவர் என்ற பொருளை தருவது கீருடையான்.

தமிழ் காத்த புலவரே நக்கீரர் என்பவர். . நக்கீரம் என்ப தற்கு நல்ல சொல் என்பது பொருள். இவர் நல்ல சொற்களை அமைத்துப் பாட்டு இயற்று வதில் வல்லவர். ஆதலின் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர். நக்கீரம் என்பதற்கு இனிய பால் என்பது பொருள். நக்கீரர் இனிய பாலைப் போன்ற சுவையான பாட்டுக் களை இயற்றும் புலவர். அதல்ை நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர்.

கீரனூர், கீரமங்கலம், கீரன்குடி, எனப் பெயர் கொண்டு பல ஊர்கள் சிறந்து இன்றும் விளங்குகின்றன.

மாவெட்டியார் :

மதயானைகளைத் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவி பயன்பட்டது. அந்த மத யானைகளை அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய மாவீரர்களுக்கு உடைய  பட்டம்  " மாவெட்டி "

கவிராயர் :

கவிராயர் என்ற பட்டம், அதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால், கவிபாடுவதில் வல்லவர் என்பர். கல்வெட்டை கொஞ்சம் அலசியதில் அவர் வீட்டுக்கு அருகேயுள் நாடு பெயர் கவிர்நாடு, கவிர்நாட்ரயர் மருவி கவிராயராக மாறிவிட்டது - ஆய்வு . திரு. யாஊயாகே பார்த்தி 

பொ. ஆ 1655 - மதுரை நாட்டின் தலைவன் திருமலை பின்னத்தேவன்


நாயக்க அரசு, குமரி முனையிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான தமிழரின் நிலப்பரப்பை கைப்பற்றி ஆண்ட ஓர் அரசு, எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி வரி வசூல் செய்து ஆட்சி நடத்திய ஓர் அரசு, தன் அரண்மனைக்கு சில மைல் தொலைவில் இருந்த கள்ளர் நாட்டிலிருந்து எந்த வரியும் வசூல் செய்ய முடியவில்லை.


தொட்டிய நாயக்கர் மதுரையில் ஆட்சி அமைக்கும் போது எதிர்த்து அடித்தனர் கள்ளர் குடிகள்( காலம் கிபி 1560), * Madura - country of kallar caste* என மதுரையை கள்ளரின் நாடாக குறித்த மெக்கன்சி ஒலைச்சுவடிகள்.

கிபி 1654 ல் கள்ளர்களை ஒடுக்க பல முயற்சி செய்த திருமலை நாயக்கன், கள்ளர் நாடுகளை அடக்கி ஒரு பாளையம் அமைக்கமுடியால் தினறியபோது ஒரு சமரசத்திட்டத்திற்கு வந்தான், எட்டு நாட்டிலும் கம்பளி விரித்து அதிகாரம் பன்ன உரிமை கொடுத்து உரப்பனூர் பின்னத்தேவருக்கு பட்டம் கட்டி, மேலும் பின்னத்தேவன், சுந்ததேவனை அழைத்து பல பட்டங்கள் பல பரிசுகள் கொடுத்து நட்பு பாராட்டிய மதுரை கள்ளர் நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டான்.
.

தருமத்துப்பட்டி செப்பேடு (1655):மதுராபுரிக்கி கற்த்தறாகிய திருமலை னாயக்கறவற்களுக்கு பெத்த பிள்ளை திருமலைப்புன்னைந்தேவனுக்கு எழுதிக் குடுத்த பட்டயம் செயளு பங்குனி ... சோமவாறத்தில் நாடு யெட்டு வணிகத்துக்கும் கம்பிளி அதிகாரமும் புடிசெம்பும் பட்டமும் முதமையும் பாதகொறடு காளாஞ்சியும் ஆகா யிவளவும் திருமலைப் புன்னைதேவனுக்கு பட்டங்கட்டி ஸ்ரீ யானுக்கு வருமானம் சாதியாற் நாட்டில் வந்தது கம்பிளி போடுகிறபோது பாதக்கணிக்கை 5 வச்சு கண்டு கொள்கிறரது ரெண்டாவது சுந்தத்தேவன் மூணாவது ஒச்சாத்தேவன் திருமலை புன்னைத்தேவனுக்கு அரமனையிலிருந்து 60 பண முடிப்பு குடுத்தனுப்புகிரது ஷியானுக்கு பெண் குளந்தை பிரந்ததக்கு திருமலைப் புன்னியக்காளென்று பேறும் வச்சு தங்கப்பதைக்கமும் போட்டு வீரமடையான் செய்க்கி கிளக்கு கணக்கு மானிபத்துக்கு வடக்கு நாலுசெயி நிலம் நஞ்சை மானிபம் பாக்கு வெத்திலை சிலவுக்கு உச்சப்பட்டி தற்மத்துப்பட்டி ஆக ரெண்டுகிராமம் விட்டுக் குடுத்தது பதினெட்டுப் பட்டிக் கோ னாக்கள் ஆடி தீவாளி சங்கழுந்திக்கி கும்புக்(கு) கிடாய் க னாக்கமாற்கள் பால்க்குடம் நெய்க்குடம் கொண்டு வந்து கண்டு கொள்ளவும் யிந்தப்படிக்கி ராசமானிய ஒப்பம் சாட்சி சிவசங்குராச தொண்டைமான், புதுக்கோட்டை சிவதத்தம்பி, கறுமாத்தூற் கொண்டிரியதேவன் தாம்பூர ப்பட்டயஞ் செய்தவன் ஆசாரி யிந்தப் பட்டயத்தை பின்னோர்கள் அடி அளிவு செய்தால் பிராமணாளைக் கொன்றதோசத்திலுங் காறாங்கோவைக் கொன்ற தோசத்திலு அடைந்து போவாறாகவும் வேணும் சொக்கலிங்கம் மீனம்மாள் துணை முணுசாமிதுணை.
.

#அரையன் பின்னத்தேவர்

பின்னத்தேவர் இந்த எட்டுநாட்டின் தலைவராகவும் (எட்டு நாடு 24 உபகிராமம், 64 பரப்பு நாடு, 128 சிதறல் நாடு), அவர் வாழ்ந்த உரப்பனூர் கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டது. புறமலை நாட்டின் (இராஜதானி) தலைமை கிராமம் இராஜதானி உரப்பனூர்.

திருமலை பின்னத்தேவரின் முன்னோர்கள் கீழ உரப்பனூர் கல்யாண கருப்பசாமி என்று அருள் பெயர் விளங்கும் புன்னூர் அய்யன் கோயிலை தங்களது குலக்கோயிலாக கொண்ட பின்னத்தேவர், கட்டபின்னத்தேவர், காரிபின்னத்தேவர். 


1000 வீட்டிடையர்களின் காப்பாளனாக (காவல் தெய்வமாக) திருமலை பின்னத்தேவன் இருந்தார்.
A SOUTH INDIAN SUB CASTE BY - DR.LOUIS DUMONT (French Anthropologist)திருநெல்வேலி ஜில்லாவில் புதுநாட்டில் வாழ்ந்த இடையர்களுக்கு அங்கிருந்த பாளையக்காரன் தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால் அந்தநாட்டு இடையர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு ஓடிவந்து திருமலை நாயகனிடம் அடைக்கலம் புகுந்தார்கள். நாயக்கர் கள்ளர் தலைவன் திருமலை பின்னதேவரை புதுநாட்டு இடையர்கள் ஆயிரம் வீட்டுக்கார்களுக்கு அதிபதியாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்.

இம்மாதிரியாகத் தங்களைப் பரிபாலித்து வரும்படி யாக மன்னனால் நியமிக்கப்பட்ட திருமலைப்பின்னத் தேவர் காலமாகிவிட்டால் அவர் ஸ்தானத்திற்கு வாரிசாக வரும் அடுத்த பட்டக்காரருக்கு முடி சூட்ட வேண்டிய பொறுப்பு இடியர்களுடையது. (மதுரை ஜில்லா கெஜட்டியர்) 

மதுரையில் இராமாயணச்சாவடியிலிருந்து மாரியம்மன் தெப்பக்குளம் வரையிலும் உள்ள இடத்தில் ஆயிரம் வீட்டு இடியர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்கத் தேவர் வசம் ஒப்புவிக்கப்பட்டு அதன்படி வீடுகள் அமைக்கப்பட்டன. இவர்களை இடையர்கள் என்றும் கோனார்கள் என்றும் கோங்கிமார்கள் என்று சொல்வதுண்டு. மதுரைக்கு வடக்கிலும் வடமேற்கில் உள்ள 18 பட்டி (ஊர்கள்) இவர்கள் கன்று காலி ஆடுமாடு மேய்த்துக்குடி வாழ்வதற்கு நாயக்க மன்னர்களால் விடப்பட்டது.

மதுரையில் இராமாயணச்சாவடி மேற்கே உள்ள கிருஷ்ணன் கோவில் கோங்கிமார்களுக்கு சொந்தம். இந்த கோவிலுக்குத் திருமலை பின்னதேவன் பாதுகாவலனாகும். விழாக்காலங்களில் தேவருக்கு பட்டம் பரிவட்டம், பாதகாணிக்கை, தீர்த்தம் துளசி மரியாதையும் உண்டு. இவர்களின் காவல் தெய்வமாக இருந்தார்.


ஆதித்திருமலை பின்னத்தேவரில் இருந்து பாத்து பேர் பட்டம் ஆண்டிருக்கிறார்கள்.


1) ஆதித்திருமலை பின்னத்தேவர்
2) திருமலை பெருமாள் தேவர்
3) திருமலை பின்னத்தேவர்
4) திருமலை மூக்குப்பரி பெரியபாண்டி தேவர்
5) திருமலை பின்னத்தேவர்
6) திருமலை மூக்குப்பரி கலியாணித்தேவர் 
7) திருமலை ஆணைஞ்சித்தேவர் 
8) திருமலை மூக்குப்பரி கலியாணித்தேவர் 
9) திருமலை ஆணைஞ்சித்தேவர் 
10) திருமலை பின்னத்தேவர்

மேலும் தெய்வேந்திர கோத்திரமாகிய திருமலை பின்னதேவனை சேர்ந்த ஆறு தாய் மகன்களும் திருமலை நாயக்கனை சந்திக்கும் போது கீழ்கண்டவற்றை அளித்துள்ளனர்.


1) தங்கத்தால் செய்யப்பட்ட கிளியின் சிலை
2) தங்க பூக்கள்
3) வெள்ளி பூக்கள்
4) அரிசி
5) பணம்
6) பசு
7) ஆடு

இதனை பெற்றுக்கொண்ட திருமலை நாயக்கன் மகிழுந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து குடுத்தார்.


மூக்குப்பரி பட்டம்


கி.பி. 1656ல் மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை நாயக்கர், திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.


அதே நேரத்தில் தன்னரசு படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் மூக்குப்பரி என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு திருமலை சேதுபதி என்ற பட்டமும் ராணி சொல் காத்தான் என்ற பெயரும் வழங்கினார்.

தருமத்துப்பட்டி செப்பேடு (1655):

நன்றி: 

உயர்திரு. ஐயா முத்து தேவர் (மூவேந்தர்குலதேவர்சமூகவரலாறு)
உயர்திரு. த. வல்லாளத்தேவர்( கள்ளர் நாடு அறக்கட்டளை )

ஆய்வு: திரு. சியாம் குமார் சம்பட்டியார்

திங்கள், 16 ஜூலை, 2018

பொ. ஆ. 1698-1700 இல் மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்த கள்ளர் நாட்டு அரையன்மதுரையில் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்த பாதரியார்கள், தங்களது மெசினரி ரெக்கார்டுகளில் அக்கால வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.

Father Peter Martin கிபி 1700 ல் அவர் எழுதிய குறிப்புகளில் மதுரை தேவர்கள் பற்றி குறித்துள்ளார்.

மதுரை கள்ளர்கள் மிகவும் பலம்பெற்று திகழ்கின்றனர். இவர்கள் மதுரை மன்னருக்கு கட்டுப்படாமல் தன்னாட்சி செய்து வருகின்றனர்.சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, கள்ளர்களின் தலைவர், மதுரை நகரை தாக்கி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.


பிறகு இரண்டு வருடங்களாக மதுரையை, கள்ளர் தலைவர் ஆட்சி செய்து வந்தார்.

இதனால் நாட்டை இழந்த ராணி மங்கம்மாவின் தளவாய், பெரும்படையுடன் மதுரையை தாக்க தயாரானார். இரவில், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், மதுரையை தாக்கினார். கோட்டையின் ஒரு வாயிலை நான்கு யானைகளை கொண்டு தாக்கினார்.

கள்ளர்கள் போருக்கு தயாராகும் முன்பே பெரும்படையுடன் தாக்கியதால், கள்ளர்களால் சமாளிக்க இயலவில்லை. பல கள்ளர்களின் வீரர்கள்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையை ஆண்ட கள்ளர்களின் தலைவர் (Rebellious Prince), அங்கிருந்து தப்பி, அவரது கள்ளர் நாட்டுப்பகுதியில் வாழத்தொடங்கினார்.

இந்த கள்ளர் தலைவர் கீழக்குயில்குடி பகுதியை சேர்த்தவர். கீழக் குயில்குடி மதுரையின் வடகீழ்திசையில் சமண(அமண) மலை என்ற ஒரு குன்றின் சாரலில் இருக்கின்றது.

திருமலை நாயக்கர் தன்னுடைய ஆட்சி காலத்தில், கள்ளர்களுக்கு பட்டம் கட்டி, மரியாதைகள் அளித்து சுமுகமாக வாழ்ந்தார். ஆனால் அவருக்கு பின் வந்த நாயக்க மன்னர்களால், கள்ளர்களுடன் சுமூக உறவை மேற்கொள்ள இயலவில்லை என்பதற்கு சான்றாக இந்த தகவல் உள்ளது.

1801 இல், மதுரை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதும் கீழகுயில்குடி கள்ளர்கள் எதிராகவே இருந்துள்ளனர். ஆங்கிலேயர்கள், நிலத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளை, உணவுப் பொருட்களைப் பயிரிடாமல், பணப் பயிர் என்று சொல்லப்படும், பருத்தியை விதைக்கச் சொன்னார்கள். அதற்கு விவசாயிகள் மறுத்தனர்.

அப்படி மறுத்த தங்களுக்கு உடன்படாத கள்ளர்கள் மீது, இந்தச் சட்டத்தை தேவையில்லாமல் ஆங்கிலேய அரசு ஏவியது. இதற்காக கீழக்குயில்குடியில் தனியாக நீதி மன்றம் ஒன்று உருவாக்கப் பட்டது. 1911 ம் ஆண்டே தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக „கீழக்குயில்குடி“ என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த ஊர் மதுரையின் காலனிய எதிர்ப்புச் சரித்திரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. மதுரையில் எது நடந்தாலும் உடனே கீழக்குயில்குடிக்கு காவல்துறை விரைந்து வருவதற்கு வெலிங்கடன் வீதி என்ற பெயருள்ள வீதியே மதுரைப் பகுதியில் முதலில் போடப்பட்ட சீரான வீதியாகும். ஆங்கிலேயருக்கு எதிராக மதுரையில் எது நடந்தாலும், இந்தக் கீழக்குயில்குடி மக்கள் முதலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவர்.

ஐயா ந.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரைக்கு மேற்கில் உள்ள கீழக்குடி நாடு பற்றி தனது கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் "திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது 4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும். கற்பக நாடு என்பது 7 மாகாணமும், 30 ஊர்களும் உடையதாகும். முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேதுநாடு, கற்பகநாடு என்னும் பெயர்களால் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது".


ஆய்வு : திரு. சியாம் குமார் சம்பட்டியார் 

பொ. ஆ. 1662 - தஞ்சையை காத்த, எதிரிகளால் "காட்டின் அரசன்" என்று போற்றப்படும், நந்தவனம்பட்டி அரையன் மெய்கொண்டான்திரிபுவன சக்ரவர்த்தின் ஸ்ரீ கோனேரி மெய்க்கொண்டான் குலசேகர தேவன் என்ற பாண்டியன் ஐடில வர்மன் 1475 ல் இத்தமிழ் மண்ணை ஆட்சி செய்தார்.

அது போல அரையன் மெய்க்கொண்டான் தஞ்சை நந்தவனம்பட்டியை 1662 ல் அரையனாக ஆட்சி செய்கிறார்.


கள்ளர்நாடுகளில் ஒன்று கீழத்துவாக்குடி நாடு - நந்தவனப்பட்டி.

கிராமத்தின் அம்பலகாரர் : கண்டியர் பட்டம்

பொதுக்கோவில்: காமாட்சி அம்மன், முனியாண்டவர்

மற்றப்பட்டப்பெயர்கள் கொண்ட கள்ளர்கள் :
கூழாக்கியார், கொடும்புரார், சோழங்கர் வாழ்கிறார்கள்.


கிபி 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்த பாதரியார்கள் , தங்களது மெசினரி ரெக்கார்டுகளில் அக்கால வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.

Father J Bertrand என்பவர் தனது காலத்தில் பதிவு செய்த நிகழ்வுகளை காணலாம்.

மெய்க்கொண்டான் தஞ்சை நந்தவனம்பட்டியை ஆட்சி செய்த கள்ளர் நாட்டின் அரையனாக விளங்கினார்.

அவரது வீரத்தின் சிறப்பை அந்த சீமையிலுள்ள அனைவரும் அறிவர். மெய்கொண்டான் வாள் சண்டையில் வல்லவர்.


அப்பகுதியில் ஒரு கிறிஸ்தவர் வாள் சண்டை பயிற்சி அளிக்கும், பள்ளியை நடத்தி வந்தார். அதை கேள்விப்பட்ட மெய்கொண்டான் , கிறிஸ்தவரை சந்திந்து, தன்னுடன் வந்து , வாள் சண்டையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் , மெய்கொண்டானின் பெருமையை உணர்ந்த, கிறிஸ்தவர், அவருடன் சண்டையிட மறுத்தார்.ஆனால் மெய்கொண்டான் அவரை ஊக்குவித்து சண்டையிட அழைத்து, அவருடன் சண்டையிட அழைத்தார்.


அவரின் அழைப்பை ஏற்று, கிறிஸ்தவர், சண்டையிட்டார். அவர் மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையான முறையிலும் சண்டையிட்டார். கிறிஸ்தவரின் நேர்த்தியை,கண்டு வியந்த மெய்கொண்டான், கிறிஸ்தவரை வீழ்த்தினாலும், தன்னுடைய வாளை அவரிடம் அளித்து, அவரை தனது ஆலோசகராக ஏற்றுக்கொண்டார். அவரின் சார்பாக தேவாலயத்தை கட்டிக்கொடுத்தார். பாதிரியார்களிடம் மிகுந்த அன்பை காட்டியதாக குறிப்பிடுகிறார்.
.

Father Proenza என்பவர் கிபி 1662 ல் தனது வரலாற்று குறிப்பில் பின்வருவற்றை குறிப்பிட்டுள்ளார்.
பிஜப்பூர் சுல்தான்கள் தஞ்சையை தாக்கி சூரையாடினர். விஜயராகவ நாயக்க மன்னர் தப்பித்து ஒடினார். மக்கள் தஞ்சையை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடியேறினர். எங்கும் பஞ்சம் தொற்றிக்கொண்டது.

ஆனால் மெய்க்கொண்டானின் ஆளுகை பகுதிகள் மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. பெரும்பான்மையான மக்கள் மெய்கொண்டானிடம் தஞ்சம் அடைந்தனர்.

சுல்தான்கள் பல முறை இவரது பகுதிகளில் படையெடுத்தனர். ஆனால் மெய்க்கொண்டான் மிகவும் தீரத்துடன் போரிட்டு அவர்களை விரட்டினார்.

சுல்மான் ஆதில் ஷா பல முறை போரிட்டு தோல்வி அடைந்து ஒடினான்.

இவரது வீரத்தை கண்டு மெச்சிய, சுல்தான் இவரை " காட்டின் மன்னன்" என அறிவித்து, அப்பகுதியை விட்டு அகன்றனர்.

அவரை சரணடைந்த மக்களையும், உடைமைகளையும் காப்பாற்றினார்.

ஆனால் அவரது உதவியால் பிழைத்த பிற கள்ளர் தலைவர்கள் அவரது மேலாண்மையை எதிர்த்து அவரிடம் மோதினர். ஆனால் பல முறை மோதியும் மெய்கொண்டானே வெற்றி பெற்றார்.

இதனால் அவருடன் இருந்தவர்களின் உதவியால், அவர் தனிமையில் வைத்து சதியால் வீழ்த்தினார்கள்.

மக்களை பேரழிவில் இருந்து காத்த மாவீரன், கள்ளர்களாலேயே வீழ்த்தப்பட்டார் என பாதிரியார் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


மெய்கொண்டானின் தம்பி

Father Andre கிபி 1666 ல் மெய்கொண்டானின் தம்பியை பற்றி குறித்துள்ளார்.அவர் வீரத்தில் சிறந்து விளங்கி தஞ்சை நாயக்கருக்கு படையெடுப்புகளில் பங்கேற்று சாகசங்களை செய்துள்ளார். நாயக்கரின் கோட்டையை, எதிரிகள் தாக்கியபோது, தீரத்துடன் போரிட்டு விரட்டினர்.

சில துரோகிகளின் உதவியுடன் கோட்டைக்குள் நுழைந்த, எதிரிகளை கடைசி எதிரி இறக்கும்வரை போரிட்டு, வென்றார் என குறிப்பிடுகிறார்.


ஆட்சி செய்த கள்ளச்சி :


Father Britto என்பவர் கிபி 1683 ல் தன்னுடைய வரலாற்று குறிப்புகளில் மெய்கொண்டானின் அத்தை, மெய்கொண்டான் ஆட்சி செய்த பகுதிகளை ஆட்சி செய்தார் என்றும்.

வீரமான கள்ளர்களின், தலைவியாக ஒரு பெண் இருந்ததை கள்ளர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.


Father Proenza தன்னுடைய குறிப்புகளில் நந்தவனம்பட்டியை சுற்றி வாழ்ந்த கள்ளர்களை பற்றியும் எழுதியுள்ளார்.


தஞ்சை சீமையில் நடந்துவரும் தொடர்ச்சியான போர்களால் கள்ளர்கள் தங்களை பலத்தை இழந்து உள்ளனர். (தஞ்சை நாயக்கரிடம் இருந்து மராத்தியர் கைக்கு மாறிய குழப்பமான காலம்)

மாபெரும் பலத்துடன் எதிரிகளின் கிராமங்களை சூரையாடும் இந்த கள்ளர்களை யாரும் அடக்கமுடியாது.

கள்ளர்கள் வலுவிழந்தது ஒரு சில பிரிவினருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மற்றொரு தரப்பினர் இதை துருதிஷ்டமாக கருதினர். ஏனெனில் போர் காலங்களில் கள்ளர்களின் உதவியே அவர்களுக்கு தேவைப்பட்டது. கள்ளர்கள் ஒரு வலிமையான போர்படைக்கு நிகராக திகழ்ந்தனர்.

தஞ்சையை துலுக்கர்கள் தாக்கிய போது , மன்னரின் சிப்பாய்களை சமாளிப்பதைவிட, கள்ளர்களின் தாக்குதலை எண்ணியே துலுக்கர்கள் அஞ்சினர்.

கள்ளர்களுக்கு நிகர் எவருமில்லை. கள்ளர்களின் ஒன்றினணயும் திறன், அவர்களின் போர்க்குணம், பல அணிகளாக பிரிந்திருந்தாலும் , நொடி நேரத்தில் ஒன்றினணந்து தாக்கும் திறன் கள்ளர்களின் சிறப்பியல்புகள்.

கள்ளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலைப்போல குதிரையில் பறிந்து சென்று தாக்குதலிலொ ஈடுபடும் திறனுடன் விளங்கினர்.

கள்ளர்கள் குதிரையை எந்த கடிவாளமும் இல்லாமல் கட்டுப்படுத்தும் திறனுடன் விளங்கினர் . கடிவாளம் இன்றி குதிரையை தாங்கள் விரும்பிய திசையில் செலுத்தும் வல்லமை பெற்றவர்கள். நொடிப்பொழுதில் நூற்றுக்கணக்கான குதிரைகளில் மின்னல் போல ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி விட்டு இடி போல் தோன்றி மறையும் வல்லமையுடன் திகழ்ந்தனர் கள்ளர்கள்.

தஞ்சை சீமையில் நாயக்கர் ஆட்சி முடிவுற்று மராட்டியர் ஆட்சி தோன்றிய காலத்தில் நந்தவனம்பட்டி சுற்று வட்டார பகுதி கள்ளர்களின் போர் உதவியையும் வல்லமையும் நேரில் கண்ட பாதிரியாரின் குறிப்புகள், கள்ளர்களின் வல்லமையையும், தஞ்சை நாயக்கர் காலத்திலும் அப்பகுதி கள்ளர்கள் தன்னாட்சியோடு விளங்கியதையும் எடுத்துரைக்கிறது.


மேற்கொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் அங்கு சிறப்பாக வாழ்கின்றனர். இந்த மேற்கொண்டார் என்பது மெய்க்கொண்டான் என்றும் மருவி அல்லது மாரி இருக்க வாய்ப்பு உள்ளது.


(Source: Tamilaham in seventeenth century :c sathyanathaier)
ஆவூர் (புதுக்கோட்டை) கிறிஸ்தவ மெசினரியில் முதல் கடிதமே அவரைப்பற்றிதான்.

வீரமுடன் போரிட்டு தஞ்சை மக்களை காத்த மாவீரன் மெய்கொண்டான் வீரத்தினை போற்றுவோம்.

ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் , திரு. பரத் கூழாக்கியார்

ஞாயிறு, 15 ஜூலை, 2018

பொ. ஆ. 1659 இல் பீஜப்பூர் சுல்தானுக்கு எதிராக கள்ளர்களின் கொரில்லா தாக்குதல்.


பீஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷா (Mohammed Adil Shah) வடக்கே பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு இவர் ஆட்சி செய்தாலும் தென்னிந்தியாவில் இவன் தனது ஆளுகையைச் சில இடங்களில் நிறுவினான். கி.பி 1646 ல் விஜயநகரப் பேரரசின் அரசன் ஸ்ரீரங்கன் ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்தான். அவனது இந்த தோல்வி தமிழகத்தில் இருந்த அனைத்து நாயக்க அரசுகளையும் ஆட்டம் காண வைத்தது.

முக்கியமாக விஜய நகரப் பேரரசின் விசுவாசிகளான தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு வந்தனர். தஞ்சை நாயக்கர்களின் இந்த நிலையை அறிந்த அடில்ஷா அவர்களை தனக்குக் கப்பம் கட்டும்படி செய்தார்.

மதுரை இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கன் 1659 ஆம் ஆட்சி ஆண்டில் தஞ்சாவூரை விஜயராகவ நாயக்கன் ஆண்டு வந்தான். கிபி 1659, ல் பீஜப்பூர் சுல்தானான " அலி அடில் ஷா II" , நாயக்கர்களின் வலுவின்மையை பயன்படுத்தி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் படையெடுத்து மிகுந்த நாசங்களை ஏற்படுத்தினான்.

கிபி1659 மார்ச் 19 ஆம் நாள் பிஜபூர் சுல்தான் அதில் ஷாவின் ஆனைக்கினங்க அவருடைய தளபதிகளான சகோசி, முலாவின் தலைமையில் ஒரு பெரும் படையை தஞ்சையை கைப்பற்ற அனுப்பி வைக்கிறார்.அப்படைகள் திருச்சி வல்லம், மலைக்கோவில் போன்ற இடங்களில் நாயக்கர் படையை தோற்கடித்த பின்னர் தஞ்சையில் திடீர் தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

இதனால் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதிகள் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களையும், சோழ நாட்டின் வளமும் பொய்த்து போனது.இந்நிலையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை நாட்டு கள்ளர்கள் ஒன்றினைந்து " கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தினர். 


தஞ்சை வந்த முகலாய பெரும் படைக்கு அப்போது தஞ்சை ஆண்ட நாயக்கர் படையை விட கள்ளர் படைப்பற்றை பார்த்து அஞ்சி நிலைகுலைந்து போகிறார்கள்.
அந்த நிகழ்வை அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் “முகலாயப்படை நாயக்கர் படையை விட கள்ளர் படையை பார்த்து பயந்தனர்” என்று குறிக்கிறார்.


அதுமட்டு இல்லாமல் பிஜபூர் தளபதிகள் சகோசி, முலா செஞ்சி, திருச்சி, தஞ்சையில் கொள்ளையடித்து வைத்த செல்வங்களை கள்ளர் பெருங்குடிகள் அத்தனையும் கவர்ந்து செல்கின்றனர்.மன்னார்குடி,வல்லம் பகுதிகளை இஸ்லாமிய படைகள் கைப்பற்றிய காரணத்தாலும் தஞ்சையை விட்டு நாயக்க மன்னர் வெளியேறுகிறார். அப்படி அவர் வெளியேறும் போது தனது படை வீரர்களுடன் அரச கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்களையும்(தங்கம்,வைரம் மற்றும் இதர பொருள்களை ) எடுத்துக்கொண்டு செல்கிறார்.

அப்படி அவரும் அவரது படையும் தஞ்சையை தாண்டி செல்லும் போது கள்ளர்படை பற்று நாயக்க மன்னரையும் அவரது படையும் வழிமறித்து அவர்களிடம் இருந்த செல்வங்களை கவர்ந்துவிடுகிறார்கள்.

நாயக்க மன்னரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நாயக்க அரசு கருவூல செல்வங்களை “ஏழை மக்கட்களுக்கு சரி சமமாக பிரித்து கொடுத்துவிடுகிறார்கள்”

இதனை வரலாற்று ஆய்வாளர் திரு.சத்தியநாத அய்யர் அவர்கள் கள்ளர்கள் பெருமக்கள் இந்த செயலை “நாயக்க மன்னரின் பேராசை செல்வங்கள் உழைக்கும் ஏழை மக்களிடம் கொடுத்து சேமிக்கப்பட்டது” என வர்ணிக்கிறார்.

கள்ளர் பெருங்குடிகள் நாயக்க மன்னரிடம் கொள்ளையிட்ட பெருமதிப்பு மிக்க செல்வங்களை தாங்களே வைத்துக்கொண்டு மிகவும் சொகுசாக ஆடம்பரமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்களின் மரபு வழி ஈகை தன்மை செல்வத்தை ஏழைகளுக்கு பகிந்தளித்து அதில் இறைவனை கண்டார்கள்.

இந்த வள்ளல் தன்மை சங்ககாலத்தில் வெட்சி போரில் ஆ நிரைகளை(அக்கால செல்வமாகிய மாடுகள்) கவர்ந்து வந்து தன் நாட்டு மக்களுக்கு கொடையளிப்பார்கள்.


கள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத, சுல்தான்கள் தஞ்சை மற்றும் புதுகை பகுதிகளை விட்டு ஒடினர். கள்ளர்களின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலாலும், தந்திரத்தாலும் பிஜபூர் தளபதிகள் சகோசியும், முலாவும் நாயக்கர் மன்னரிடம் கொஞ்சம் பணத்தை பெற்று தஞ்சையை விட்டு வெளியேறுகின்றனர்.


அது போல மீண்டும் கிபி 1660 ல் பீஜப்பூர் சுல்தான்களுக்கு எதிராக தஞ்சை குறுநில கள்ளர் நாட்டு தலைவர் போரில் ஈடுப்பட்டார்.
தஞ்சையை ஒவ்வொரு அந்நியபடையெடுப்பிலும் சோழ தேச காவலராக காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கு போல் கள்ளர் பெருங்குடிகள் தங்களுடைய குருதியை தஞ்சைகாவலுக்காக சிந்தியுள்ளனர்.சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்பித்து சோழநாட்டு பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. சோழ மண்டலத்தில் கள்ளன் தொண்டைமான், வடுக நாயக்கன், வடக்கத்திய மராட்டியன் ஆட்சி நடந்தாலும் கள்ளர்கள் நாடுகளில் அந்த அந்த கள்ளர் நாட்டு தலைவர்களால் ஆளப்பட்டது.


ஆய்வு : 
உயர் திரு. சியாம் குமார் சம்பட்டியார்

உயர் திரு. சோழ பாண்டியன்,ஏழுகோட்டை நாடு


தகவல் : 


HISTORY OF NAYAKS by Mr.Sathiyanatha Aiyar

வெள்ளி, 13 ஜூலை, 2018

மயில்ராயன்கோட்டை நாட்டு “அம்பலம்” பட்டம் முடிசூட்டும் விழா.

சிவகங்கை சீமை மயில்ராயன்கோட்டை நாட்டு “அம்பலம்” பட்டம் முடிசூட்டும் விழா.

இடம்: திருக்கோஷ்டியூர்
நன்றி. உயர்திரு. Kalaimani Ambalam

வியாழன், 12 ஜூலை, 2018

சிங்கவள நாட்டு புன்னைநல்லூர் மாரியம்மன்
தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று “சோழசம்பு” எனும் நூல் கூறுகிறது.

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985-1014) காலத்தில், தான் ஆண்ட ஊர்களைப் பல மண்டலங்களாகப் பிரித்தான். அவற்றிற்கு "வள நாடுகள்" எனப் பெயரிட்டான்.

இராசராசசோழன் காலத்து தஞ்சாவூர் நகர எல்லைகள் கிழக்கு எல்லை - புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், மேற்கு எல்லை - வல்லம் களிமேடு, வடக்கு எல்லை - விண்ணாறு (வெண்ணாறு), தெற்கு எல்லை - நாஞ்சிக்கோட்டை தெரு,

முதலாம் இராசராசசோழனது ஆனேயின்படி ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.


அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பது ஒன்று. இராசேந்திர சிங்கன் என்பது முதலாம் இராசராச னது சிறப்புப் பெயர்களில் ஒன்று.
“ராஜராஜ தேவர்க்கு யாண்டு 22-ஆவது வடகரை சரஜேந்திர சிங்கவள நாட்டுப் பொய்கை நாட்டுத் தேவ தானம் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்து மகாதேவர் (S. I. I. Volume V 516)” . இந்த கல்வெட்டில் குறிப்பிடும் சிங்கவளநாடு என்பது தற்போது உள்ள சிங்கவளநாடு பகுதி அல்ல.


குளிச்சப்பட்டு, கத்தரிநத்தம், தளவாபாளையம் மற்றும் மருங்கை ஆகிய நான்கு ஊர்களை சேர்த்து சிங்க வளநாடு உருவாக்கப்பட்டது. இதில் குளிச்சப்பட்டு அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகவும், சிங்க வளநாட்டின் தலைமை கிராமமாகவும் விளங்குகின்றது.

அய்யம்பேட்டையில் உள்ள ஒரு பிரபலமான கள்ளர் குடும்பம் மருங்கை சிங்கநாட்டாழ்வார் பட்டம் உடையவர்கள். அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம் (Local chieftain )

நாட்டு குலதெய்வ கோவில் வழிபாட்டு முறையை பின்பற்றி வந்த தஞ்சை கள்ளர்கள். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அப்பொழுதே 20000 மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இக்கோவில்களில் பிராமணர்களுக்கே அனுமதி இல்லை.


கிபி (1800_1850) வாக்கில் அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் இந்த மாரியம்மன் கோவிலையும் பிராமணர்களை கைப்பற்ற சொல்ல அதற்கு பிராமணர்கள் நாங்கள் கள்ளர்களால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்றும், எங்கள் கால்நடைகள் அவர்களால் கொள்ளையடிக்கப்படும் எனவும் பதில் அளித்துள்ளனர்.

தெய்வம் - துர்க்கை, மாரியம்மன் (முத்துமாரி), தீர்த்தம் – வெல்லகுளம், தலவிருட்சம் – வேம்புமரம்.

இந்த கோவிலின் முக்கியமான மூலவர் மாரியம்மன். முத்துமாரியம்மன் என்றும் சொல்வதுண்டு. புன்னை வனத்தில் இருந்ததால் புன்னைநல்லூர் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

புன்னை மரத்தின் சிறப்பாக கல்லெழுத்துச் சாசனத்தில் சுந்தர சோழன் காலத்தில் ஊர் சபையினர் கோயில் அருகேயுள்ள புன்னை மரத்தடியில் கூடி கோயில் சார்ந்த முடிவுகளை எடுத்தனர் என்று கூறுகின்றது. அன்னியூர் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சங்ககாலத்தில் ஆண்ட மன்னன் அன்னி. அன்னியின் காவல்மரமான புன்னை மரத்தை குறுக்கைப் பறந்தலைப் போரில் வென்ற திதியனும், சோழனும் பாண்டியனும் வெட்டிச் சாய்த்துவிட்டனர். கள்ளர்களின் பட்ட பெயரான புன்னைகொண்டார், புன்னையர், அன்னிவாசல்ராயர் இங்கு குறிப்பிடத்தக்கது.


இங்கே ராமசாமி கண்டியரால் குதிரை வாகனத்தில் அம்மன் புறபாடு நடைபெறுகிறது.மரகதவள்ளி மாணிக்க குச்சிராயர்


ஆறடி உயரமுள்ள இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் புற்றுமண்ணால் ஆன சுயம்பு வடிவம். அம்மனைக் காணக் கண்கோடி வேண்டும். அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. 5 வருடத்துக்கு ஒரு முறை, ஒரு மண்டலத்துக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது. இந்த நேரத்தில் வெண் திரையில் அம்மனை வரைந்து அதற்கு ஆவாகனம் செய்து அர்ச்சனைகளும் ஆராதனைகளும் செய்வார்களாம். இந்த நேரத்தில் மூலவரான மாரியம்மனுக்கு இரு வேளைகளும் தைலக்காப்பு, புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் உக்கிரமாக இருப்பாராம். அதனால் இளநீர் போன்றவை நைவேத்தியம் செய்யப்படுகிறது.

முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.

அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பிராத்தனைக்காக இங்கு தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். 

கோவிலில் தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. குடம் குடமாகத் தண்ணீரைக் கொண்டு வந்து இதில் கொட்டுகிறார்கள். இதனால் அம்மனின் உக்கிரம் தணியுமாம். கோடைக் காலங்களில் அம்மனின் முகத்திலும் சிரசிலும் முத்து முத்தாக வியர்க்குமாம்.


இந்த கோவிலின் உற்சவ மூர்த்திக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் தினந்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சுற்று சன்னிதிகளாக காத்தவராயன், பேச்சியம்மன், அய்யனார், விநாயகர், முருகன் சன்னிதிகள் உள்ளன.

ஆங்கிலேய துரைகளுக்கும் தன் சக்தியை காட்டியிருக்கிறார். மராட்டிய காலத்தில் “ரெசிடெண்ட்” என்ற ஆங்கிலேய துரை அம்மனுக்கு அடிபணிந்ததாக வரலாறு கூறுகிறது.

இங்கு திருவிழாவென்று பார்த்தால் ஆடி மாதம் முத்து பல்லக்கு, ஆவணி மாதத்தில் கடைசி ஞாயிற்றுகிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் தெப்போற்சவம், மற்றும் நவராத்திரி என்று வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது.சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர்.

ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்

தொண்டைமானின் மெய்கீர்த்தி

 அறந்தாங்கி  தொண்டைமானின் மெய்கீர்த்தி "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" ( சோழர்கள் சூரிய குலம் ) &qu...