சனி, 31 மார்ச், 2018

அம்பலகாரர் / அம்பலம் வரலாறு



"அம்பலகாரர்" என்பது கள்ளர் சாதிப் பட்ட பெயர்களுள் ஒன்றாகும். அம்பலகாரன் என்ற சொல்லுக்கு "கள்ளர் சாதித் தலைவன்" என்றும் "கள்ளர் நாட்டுத் தலைவன்" என்றும் பொருள் தருகிறது தமிழகராதி. 

கள்ளர் மரபை சேர்ந்த
நரசிங்கபட்டி மேலநாட்டு அம்பலகாரர்கள்

அம்பலம் என்பது பிரச்சனைகளை அம்பலப்படுத்தி அதாவது வெளிப்படுத்தி விவாதித்து தீர்வு காண்கின்ற பொது சபை. அதனை தலைமை தாங்கி வழிநடத்துபவன் அம்பலக்காரன். அவ் அம்பலக்காரன் நீதி அதிகாரமுடையவனாகவும், காவல் அதிகாரம் உடையவனாகவும் இருப்பான்.



கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் "அம்பலம்" என்ற வார்தையைப் பட்டமாகப் பயன்படுத்திக் கொள்கிறனர்.

சுதந்திர போராட்டத்தில் முக்கியமானவர்கள் 
  • ஆறூர் வட்டகை நாட்டு தலைவர் நன்னி அம்பலம்
  • கிழக்கு நாட்டு தலைவர்களான சேதுபதி அம்பலம்
  • ண்முகபதி அம்பலம்
  • பாகனேரி நாட்டு தலைவர் வாளுக்கு வேலி அம்பலம்,
  • சோலைமலை அம்பலக்காரன்
  • கருப்பண்ண அம்பலக்காரன்.
ஆறூர் வட்டகை நாட்டு தலைவர் 
நன்னி அம்பலம்

நன்னியம்பலம்



வாளுக்கு வேலி அம்பலம்




சோழர் கால கல்வெட்டு

சோழர் காலத்தில் கிராம ஊர்சபை கூடும் இடம் அம்பலம் என அழைக்கப்பட்டது. ஊர்சபையை ஆள்பவர்கள் அம்பலார், அம்பலம் ஆள்பவர் என அழைக்கப்படுவர். 


தஞ்சைப் பெரியகோவில் திருச்சுற்றின் வடபுறச் சுவற்றில் இருக்கும் நீண்ட கல்வெட்டு.

பெரியகோவிலில் இசைக்கலைஞர்களாக பணியாற்றிய 130 பேர்கள். இவர்களின் விபரங்கள் மற்றும் இவர்களுக்கான நிவந்தங்களும் இக்கல்வெட்டில் உள்ளன.

இந்த இசைக்கலைஞர்களில் சோழ தேச போர்வீரர்களும் இருந்துள்ளனர். குதிரைப்படை, யானைப்படை, வலங்கை வேளாக்காரப்படை மற்றும் பல்வேறு படைப்பிரிவில் இருப்பவர்கள் கோவில் இசைக்கலைஞர்களாகவும் இருந்தனர். 

அதில் பக்கவாத்தியம் வாசிப்பவர் ராஜகண்டியத் தெரிந்த வலங்கை வேளைக்காரர் பட்டாலகன் அம்பலம்.

இன்றும் ராஜகண்டிய அம்பலகாரர்கள் வாழ்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இலங்கையின் கண்டி மாநகரின் 
வள்ளல் துரைராசா இராசகண்டியர்


கிபி 10 ஆம் நூற்றாண்டில் முத்தூற்கூற்றம் கப்பலூர் நாட்டுப் பகுதியில் கள்ளம்பலதேவன் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். இன்றும் கப்பலூர் கள்ளர் மரபினை சேர்ந்த கரியமாணிக்கம் அம்பலம் வழியினரால் ஆளப்படுகிறது. கள்ளர்களுக்கு அம்பலம் எனும் பட்டம் தொன்று தொட்டு வழங்கப்படுவதை இந்த கல்வெட்டு உரைக்கிறது.





கங்கைகொண்ட சோழபுரத்துத்‌ திருக்கொற்றவாசலில்‌ புறவாயில்‌ சேனாபதி இளங்காரிக்குடையான்‌ சங்கரன்‌ அம்பலம்‌ என்று திருவா வடுதுறைக்‌ கோயில்‌ கல்வெட்டு கூறுகிறது. 




மத்தம் மேல் நாடு அம்பலக்காரர்‌ - காலம்‌ : 1328
கள்ளர் மரபை சேர்ந்த அறந்தாங்கி உய்யவந்தான்‌ திருநோக்கழகியான்‌ தொண்டைமானார்‌கென்று தனிப்பகுதிகள்‌ இருந்தன என்றும்‌, ஊரைக்‌ கோயிலுக்குக்‌ கொடையாகக்‌ கொடுக்கும்‌ அளவிற்கு உரிமையுடையவராக இருந்தனர்‌. என்றும்‌ அறிகிறோம்‌. அம்பலக்காரர்‌ என்ற அலுவலர்‌ பெயரும்‌ உள்ளது. இவர் திருவாதவூர் மத்தம் மேல் நாடு அம்பலக்காரர்‌ ஆவார். 





நரசிங்கன்பட்டி அர்ச்சுனப்‌ பெருமாள்‌ அம்பலகாரர்‌ 
(ஆண்டு 1615)




மதுரை மேலூருக்கு அருகிலுள்ள நரசிங்கன்‌ பட்டியில்‌ கி.பி. 1615 ஐ சார்ந்த கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சு, உப்பு ஆகிய வற்றை வணிகம்‌ செய்ய நகரத்தார்கள்‌ எல்லாரும்‌ நரசிங்கன்பட்டி அர்ச்சுனப்‌ பெருமாள்‌ அம்பலகாரர்‌ வீட்டுக்குவந்து ஒன்று கூடிப்‌ போவார்கள்‌. வணிகம்‌ முடிந்து திரும்பி வரும்போது அம்பலகாரர்‌ வீட்டிலேயே அனைவரும்‌ ஒன்று கூடிக்‌ கணக்குப்‌ பார்த்து ஊருக்குத்‌ திரும்புவார்கள்‌. இந்த உண்மை பஞ்சு, உப்பு வணிகக்‌ கூட்டுறவு முறிகளால்‌ அறிய முடிகிறது. அதில்‌ ஒரு வியாபாரக்‌ கூட்டில்‌ வந்த வருமானம்‌. 743.3/4 வராகன்‌. இதனைக்‌ கொண்டு இங்கு ஒர்‌ ஊருணி வெட்டிக்‌ கற்கட்டிடம்‌ கட்டியுள்ளனர்‌ நகரத்தார்கள்‌. இந்த ஊருணிக்கு நகரத்தார்‌ ஊருணி என்றும்‌ பஞ்சுப்பொதி ஊருணி என்றும்‌ பெயராகும்‌. இதனை இந்த ஊருணியிலுள்ள கல்வெட்டுணர்த்துகிறது. (புலவர்‌ இராம. தெய்வராயன்‌ (1982) மெய்யாத்தாள்‌ படைப்பு, பக்‌ 17.18)


தமிழகராதி

1) அம்பலக்காரன்: கள்ளச்சாதித் தலைவன் (chief of the Kallar caste),he who publishes the decrees of the assembly,
2) கள்ளச்சாதி : ஒரு சாதியர், அம்பலகாரச்சாதி
3) அம்பலக்காரன்: கள்ளச்சாதித் தலைவன், சபையின் தீர்மானத்தை வெளியிடுவோன்
4) அம்பலம்: சபை, சாதிக்கூட்டம் ,
5) அம்பலக்காரர் : நாட்டரசர்

(அம்பலகாரன் என்பது வலையர் பட்டமாகவும் அகராதி விளக்கம் தருகிறது, அம்பலக்காரன் பட்டத்தை அம்பலக்காரன் என்று தனி சாதியாக சாதி சான்றிதழ்களை வலையர்கள் வாங்குகின்றனர்)





அம்பலக்காரன்‌ - கள்ளச்சாதித் தலைவன்‌




1836 ஆம் நூற்றாண்டு 
மெக்கென்சி கையெழுத்துப் பிரதி 
( Mackenzie Manuscripts) 
கள்ளர் பட்டம் அம்பலகாரர் இன்று குறிப்பிடுகிறது



Publication date 1906
Manual of the Malabar District by Logan, William

Ambalakaran  - (Tamil -Chiefs of the Kallar)




கிபி 18 ஆம் நூற்றாண்டு 
"அம்பலகாரப் புலி "


கிபி 18 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட " குன்றக்குடி நொண்டி நாடகம்" எனும் ஒலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள அம்பலக்காரர் கள்ளர் பற்றிய வரிகள்

குபேரக் குடி

கள்ள நாட்டு அம்பலக்காரப்புலி

சீரும் புலி பெற்ற கலங்காப் புலி

கள்ளர் பற்றுக்கு ஒரு துள்ளுக் குட்டி

சேறுப்புலி வெள்ளையன்

சிறுகுடி நாட்டு கள்ளர் என்னை சேர்ந்த கிளை

என்னை சார்ந்த கிளை நிரை மேலை நாட்டவரும் "




அம்பல் : சிலரறிந்து புறங்கூறு மொழி. (தொல். பொ. 225.)

அம்பல் என்றால் ஒற்றாடல் என்று பொருள். அதாவது உளவறிதல். ஒற்றுவேலை செய்து மன்னருக்கு தகவல் அனுப்புவது. இது போர் மறவர்களின் பணிகளில் ஒன்று. படையெடுத்து வரும் பகையரசனிடம் அதிரப் பொருதல், கோட்டைக் காவல்/ முற்றுகை போன்ற செயல்களைப் போல் உளவறிதல் நிர்வாகத்தின் முக்கியப் பணி . அந்தச் செயலுக்கு அம்பல் என்று பெயர். ஒற்றறிந்து செய்தியை மன்னருக்கு வெளிப்படுத்துவதால், அதாவது இரசியத்தை கண்டுபிடித்து சொல்வதால் இதை "அம்பலப்படுத்துதல் " என்கிறோம். இந்தச் செய்யும் கள்ளர்கள் அம்பலகாரர்கள் என்று அழைக்கப்பட்டனர். குலங்களாக வளர்ச்சி பெற்ற பிறகு இதனை செய்தவர்கள் கள்ளர்கள்(தகவல் : திரு . மருதுபாண்டியன் இரா.) 

ஒவ்வொரு கள்ளர் நாட்டிற்கும் தலைவர் நாட்டார் எனப்பட்டார். அந்நாட்டார்கள் "அம்பலம் "என்ற பட்டத்தை சூட்டிகொண்டர்கள். அதனால் இவர்கள் நாட்டார் கள்ளர்கள் அல்லது நாட்டுகள்ளர்கள், அம்பலகாரர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். பிறமலை கள்ளர்கள் நாட்டுகள்ளர்களைபோல "அம்பலம்' என்ற அதிகார அமைப்பை உருவாக்கிகொள்ளவில்லை .அதே சமயம் தங்களின் முன்னோர்களின் நினைவாக ஊர்களில் உள்ள பொதுஅமர்வு கல்லிற்கு "அம்பலக்கல் "என்று பெயரிட்டுகொண்டனர். ஊரின் முக்கிய நிகழ்வுகளில் இன்றும் இந்த "அம்பலக்கல்லிற்கு "மரியாதை செய்யப்படுகிறது. மதுரை நகரத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள நாட்டு கள்ளர்கள் பெரும்பாலும் "அம்பலம் " என்ற பட்டதை பயன்படுத்துகின்றனர். (தகவல் : பிறமலைகள்ளர் வாழ்வும் -வரலாறும் நூலாசிரியர் திரு . சுந்தரவந்திய தேவன்)

மதுரை மாவட்டம், மேலூர் பகுதி கள்ளர்களின் சாதி பட்டமாக தேவர் பட்டமிருந்தது, நாட்டின் தலைவர் கரையின் தலைவர் ஊரின் தலைவர் ஆகியோருக்கு மட்டும் சிறப்பு கெளரவ பட்டமான அம்பலகாரர் பட்டமிருந்தது. இதன்பிறகு அம்பலகாரர் சபை கூடி நாட்டின் தலைவர், கரையின் தலைவர் - பெரிய அம்பலம் என்றும் திருமணமானவர்கள் அம்பலம் என்றும் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வந்தனர். அம்பலம் என்னும் பட்டம் தலைவருக்கான பட்டம், நாட்டின் தலைவர், ஊரின் தலைவர், கரையின் தலைவர், குடும்பத்தலைவர் ஆகியோர் அம்பலம் பட்டம் போட அனுமதியுண்டு. (தகவல் திரு . வல்லாளத்தேவன், கள்ளர் நாடு)

மேலும் அம்பலம் என்பதற்கு வேறு சில விளக்கங்கள் உள்ளன 


குமரிநாடிருந்த பண்டைக் காலத்தில், குமரிமலைக்கும் பனிமலைக்கும் நடுவிடத்திலிருந்த தில்லைநகரைப் பாண்டியன் பாருக்கு நெஞ்சத் தாவாகக் கொண்டு, அங்கு நடவரசன் திருப்படிமை நிற்க அம்பலம் அமைத்தான். நடவரசப் படிமைகள் நிற்கும் கோவில்க ளெல்லாம், அம்பலமென்று பெயர் பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. அம்பலம் ஆடரங்கு. அம்பலக் கூத்தன் என்பன தில்லைச் சிவன் பெயர்கள். 

பேரம்பலம் ஏற்பட்ட பின், ஆடம்பலம் சிற்றம்பலம் எனப்பட்டது. அப்பெயரே இன்று சிதம்பரம் எனத் திரிந்து வழங்குகின்றது. சிற்றம்பலம் பொன்னால் வேயப்பட்டபின், பொன்னம்பலம் எனப்பட்டது. அதன் பின்னரே மணியம்பலம் வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலியவை தோன்றின.

அம் - அம்பு - அம்பல் = 1. கூடுதல், கூட்டம். ஒ.நோ: உம் - கும் - கும்பு - கும்பல். அம்பல் - அம்பலம் = கூட்டம், அவை, கூடுமிடம், மன்றம்.

அரும்பு போன்ற சிலருரை பழி. "அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின்" (தொல். கள. 48). "அம்பலும் அலரும் களவு." (இறை. 22).

பல்லவர்கள் காலத்திலும் , முற்காலச் சோழர்கள் காலத்திலும் திருக்கோயில்களில் கோபுரங்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இராஜராஜன் காலத்தில் முக்கியத்துவம் பெறத்துவங்கிய கோபுரக்கலை முதல் குலோத்துங்கனால் ஏற்றம் பெற்றது .  சிறப்புகள் பலபெற்றுத் திகழ்ந்தன. இவற்றிற்கு மதுரை , ஸ்ரீவில்லிப்புத்தூர் , திருவண்ணாமலை கோபுரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் .

தில்லைக்கோயிலில் இருந்த சேரர்பாணிக் கோபுர அமைப்பு மட்டுமின்றி , அம்பலம் எனும் கூத்துமேடையமைப்பும் சேரர் கலையில் முக்கிய அங்கமாகும் . திருச்சூர் இருஞ்சாலக்குடா போன்ற கோயில்களில் ‘ கூத்தம்பலம் எனும் அம்பலமும் , கூடியாட்டம் என்ற சாக்கையர் கூத்தும் , தற்போது வழக்கில் உள்ளன. தமிழகத்தில் பொற்சபை , தாமிரச்சபை என்றெல்லாம் அழைக்கும் மரபு இருப்பதன்றி அம்பலம் என்று அழைக்கும் மரபு பிற கோயில்களில் இல்லை . சோழர்காலக் கல்வெட்டுக்களில் சபையோர் கூடும் அம்பலம் பற்றிய குறிப்புகள் உண்டு . ஆனால் அவ்வழக்கு தற்போது இல்லை . தென்மாவட்டங்களில் அம்பலக்காரர் என்று அழைக்கும் வழக்கம் இன்றும் உண்டு. நூல் - தமிழகக் கோயிற்கலை மரபு

கண்ணதாசன் பார்வையில் 


தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் நூலில் - 
கள்ளர்கள்‌ வழக்கமாகச்‌ சூடிக்‌ கொள்ளும்‌ பட்டப்பெயர்‌ அம்பலக்காரன்‌ (அவைத்‌ தலைவன்‌ என்னும்‌ பொருளது) என்பதாகும்‌. சிலர்‌, மறவர்களையும்‌ அகமுடையார்களையும்‌ போலத்‌ தேவன்‌ (தெய்வம்‌) அல்லது சேர்வைக்காரன்‌ (படைத்‌ தளபதி) என்ற பட்டப்பெயரையும்‌ வைத்துக்‌ கொள்கின்றனர்‌ என 1891 சென்னை மாநிலக்‌ கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்‌ கின்றது.




1885
The Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial Industrial, and Scientific Products of the Mineral, Vegetable, and Animal Kingdoms, Useful Arts and Manufactures









Martial races of undivided india




South Indian Gilds
1925

Among the Kallars of Madura and Trichinopoly Districts, the community implicitly obeys the Ambalakaror headman. Cases of theft of cattle are successfully ttaced if referred to their caste-punchayat; and moral offences are effectively punished through excommunication if necessary. The accused during all such special gatherings ot the punchayat are to pay expenses of the gatherings which may extend to three or four days, (அரியலூர் கள்ளர்கள்)







பட்டமங்கள அம்பலகாரர் 

“பல ஊர்கள் இனைந்து ஒரு நாடாகி, அந்த நாட்டுக்கு ஒரு ஆற்றல்மிக்க தலைவன் “அம்பலகாரன்” என்ற பெயரால் அழைக்கப்பட்டு, அவனது ஆணைக்குக் கட்டுப்பட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். “அம்பலகாரன்” என்பது ஒரு வகுப்பாரை குறிக்கும் சொல்லாக சில நேரங்களில் பயன்படுத்த்ப்பட்டாலும் கூட கள்ளர் நாடுகளின் தலைவர்கள் தான் “அம்பலகாரர்” என பட்டம் சூட்டி வந்தனர். அந்த அம்பலகாரர்கள் குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்காக ஒன்றாக கூடி கலந்துரையாடி சிக்கல்களை கலைவகுத்தனர். அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளின் ஆலயங்களில் பட்டுப்பரிவட்ட மரியாதைக்கு உரியவர்களாக மதிக்கப்பட்டார்கள்.


“அட்டமாசத்தி அருளிய பட்டமங்கை” என கூறுகிற அம்மனின் தளம், அது தான் பட்டமங்கலம். அந்த பட்டமங்கல அம்பலகாரருக்கு திருக்கோஸ்டியூர் தேர் திருவிழாவில் பட்டுப்பரிவட்டம் கட்டி சிறப்பு செய்வார்கள். பாகனேரி அம்பலகாரருக்கு அந்நாட்டு சிவன் கோவில், அம்பாள் கோவில்களில் எல்லா உரிமைகளும் மரியாதைகளும் உண்டு. அம்பலகாரர் என்னும் தகுதியை பணம் முதலிய எந்த சாதனத்தினாலும் திடீரென ஒருவர் பெற்றுவிடுவதில்லை. அது பரம்பரையாக வந்துகொண்டிருப்பதாகும். ஒருகால் அம்பலகாரருக்கு சந்ததி இல்லாமல் போய்விட்டால் அவரை சார்ந்த தகுதி உடைய வேரொருவரை ஊரார் தேர்ந்தெடுப்பர். (தகவல்:  உயர் திரு . கலைஞர் கருணாநிதி)

குடிமக்களிடம் வரிகளை பெற்று ஊரையும் வளப்படுத்தி, ஊர்க்காவலையும் வலுப்படுத்தி, குறுநில மன்னர்களுக்கு அடுத்த நிலையில் தங்கள் நாடுகளில் ஆட்சி செலுத்திய அம்பலகாரர்கள்- கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் மூன்று குழுக்களில் இருந்தார்கள் என்றாலும் இவர்கள் அனைவரும் ஒரே வகுப்பினர் என்னும் உணர்ச்சியை வேங்கடசாமி நாட்டார் அவர்கள் வெளிப்படுத்துகிறார்.”

1659
திசைக்காவல் குப்பச்சி அம்பலகாரன்

மூணுடைப்பு என்ற கிராமத்தின் திசைக்காவல் பணிபுரியும் பளுத்தாண்டிக் குப்பச்சி அம்பலகாறன் என்பவன் திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதி முத்துராமலிங்க துரையும் பள்ளிமடம் வந்திருந்த போது அவர்களைப் பாதகாணிக்கை, சீனி சர்க்கரையுடன் வணங்கிச் சந்தித்தான். அவனது கோரிக்கையைக் கேட்ட அவ்வரசர்கள் அதற்கிணங்க அவனுக்கு புன்செய், நன்செய் நிலங்களை மானியமாகத் தந்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. 





(ஆண்டு 1730)

மகா வீரனான இளந்தரி அம்பலக்காரன் 

 
தஞ்சை கள்ளர்களின் தலைகாவல் முறி பட்டயங்கள்

தஞ்சை கள்ளர்களுக்கு ஈராயிரம் பட்டங்களுக்கு மேல் இருந்தாலும், அப்பாட்டங்களோடு சேர்ந்து அம்பலகாரர் என்று தலைகாவல் முறி பட்டயங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

தாது வைகாசி மீ 17 உ ஏரிமங்கலம் நாட்டிலிருக்கும் கறுத்த காங்கய அம்பலகாரர், கீழத்தூவாகுடியைச் சேர்ந்த செங்கிபட்டியிலிருக்கும் ஒத்தய மேல் கொண்டார் அம்பலகாரர் கருவிப்பட்டியிலிருக்கும் இராமைய மேல் கொண்டார் அம்பலக்காரர் இவர்களுக்குக் கூகையூர் சீமை நாட்டார், சொக்கநாத உடையார் , மற்றமுள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன் காவல் பட்டயம் எழுதி குடுத்தோம்.
.

தஞ்சையின் பெரும்பாலான பகுதிகளில் காவல் உரிமையை கையில் வைத்திருந்தவர்கள்  கள்ளர்கள் 


கள்ளர் மரபை சேர்ந்த திருவையாற்றுச் சப்தஸ்தலப்பதிகம் 
கூனம்பட்டி 
அம்பலகாரர் மகா-ற--ஸ்ரீ குமாரசாமி மேற்கொண்டார்
(ஆண்டு 1902)
அவர்களால் இயற்றபெற்றது
கள்ளர் மரபை சேர்ந்த கச்சமங்கலம் அகண்ட பரப்பிர்மமாகிய சொக்கனாதக்கடவுள் மீனாம்பிகை சுப்பிரமண்யக் கடவுள் தாண்மலர்கட்குத் திருக்கச்சமாலை 
இயற்றமிழ்ச்சங்க அக்ராசனாதிபதி 
ஸ்ரீமான் சொ. சிங்காரவடிவேல் வன்னிய முண்டார் அம்பலகாரர் அவர்களால் இயற்றியது.
(1911)



கள்ளர் மரபை சேர்ந்த சிவசுப்பிரமணியர் பேரிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பேரிலும் பஜனைக் கீர்த்தனை
மதுரைஜில்லா மேலூர் தாலுகா உள்கடை மலம்பட்டி
மகா-ற--ஸ்ரீ கருப்பண அம்பலம் குமாரர் சின்னாத்தி அம்பலம் 
அவர்களால் இயற்றபெற்றது
(1924)




சோழப்புரையர்‌, அஞ்சாத கண்டப்புரையர்‌, வணங்கனாத்தேவன்‌, தொண்டைமான்‌ அம்பலம்‌, சொக்கட்‌ டான்‌ அம்பலம்‌ என ஐந்து அம்பலகாரர்‌.
(ஆண்டு 1467)





நாட்டார் பட்டயம் 














மல்லாக்கோட்டை பெரிய ஆவுடை அய்யர் கோயில்‌ சன்னிதி வாசலிள்‌ மல்லாகோட்டை அம்பலகாரர்‌ முன்னுக்கு வெள்ளூர்‌ அம்பலக்காரர்‌ முன்னுக்கு
(ஆண்டு 1750)




பத்துக்கரை அம்பலகாரர்‌
காலம்‌ : பொ.ஆ. 1783




 

செய்தி: கோட்டையூர்‌ கைலாச அம்பலகாரர்‌ சிவலோக பதவி அடைந்தமை
காலம்‌ : பொ.ஆ. 1889 

காலம் 19 ஆம் நூற்றாண்டு - சின்னத்தம்பி அம்பலக்காரர்‌ மகன்‌ பெரியணன்‌ என்பவர்‌ ஊரார்‌ தர்மமாக வேலங்குடி. பெரியநாயகி அம்மனுக்கு கல்தொட்டி. செய்து கொடுத்தமை. 



கட்டசிம்ப அம்பலக்காரன்‌ பிச்சன்‌ அம்பலம்‌ 
சொக்கலிங்கபுரத்தில்‌ இருந்த மற்றும்‌ அவனது மனைவி வீராயி ஆகியோரது பக்தியைத்‌ தெரிவிக்கிறது.









மறவர் பற்றிய கல்வெட்டில் 
சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993..................... வயல கானாடுபுல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக.................
.

திருமாளிகைக்கூறு தில்லை அம்பலதரையனும்‌ 





இலங்கையின்  யாழ்ப்பாணக கைலாயமாலை. வரி.186. ல்
முத்துவைரவ அம்பலக்காரன்‌
காளியாப்பூரில்‌ கட்டபொம்மனை கண்டுபிடித்த சர்தார்‌ முத்துவைரவ அம்பலக்காரன்‌, இப்பகுதி கும்மிப்பாடல்களில்‌ பரட்‌ பாடப்பட்டுள்ளான்‌. (முத்துவைரவன்‌ சேர்வை கும்மி)



பதிநாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் வெள்ளலூர் நாட்டின் பெரிய அம்பலகாரர் A. வெள்ளைச்சாமி அம்பலகாரர் என்ற அழகம்பலகாரர்.

காலம் :15.7.1878 முதல் 14.1.1924

வெள்ளலூர் அம்பலகாரர்





வெள்ளலூர் நாடு என்பது ஏறத்தாழ ஐம்பதுக்கும் அதிகமான சிறிய ஊர்களின் பகுதியாகும். இது வெள்ளலூர் மாகாணம், அம்பலகாரன்பட்டி மாகாணம், மலம்பட்டி மாகாணம், உறங்கான்பட்டி மாகாணம், குறிச்சிப்பட்டி என ஜந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது .

இந்த ஜந்து மாகாணங்களில் பரவி வாழும் கள்ளர் இன மக்கள் தந்தை வழியில் முண்டவாசிகரை, வேங்கைபுலிகரை, சம்மட்டிகரை, நைகான்கரை, சாயும்படை தாங்கிகரை, வெக்காலிகரை, சலிபுலிகரை, திருமான்கரை செம்புலிகரை, கோப்பன்கரை, மழவராயன்கரை என பணிரெண்டு கரைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஒவ்வொரு கரைக்கும் இரண்டு அம்பலம் என 24 அம்பலகாரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் ஒவ்வொரு கரைக்கும் இரண்டு இளங்கச்சிகள் தெரிவு செய்யப்படுகின்றனர் இளங்கச்சிகள் என்பவர்கள் அம்பலகாரர்களுக்கு உதவியாளர்கள் ஆவர் இந்நாட்டின் பெரிய அம்பலகாரர் கரை அடிப்படையில் இந்த 11 கரைகாரர்களுக்குள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படுகிறார், இவரே கரை அம்பலங்களின் கூட்டத்திற்கும் நாட்டுக்கூட்டத்திற்கும் தலைமை வகுக்கின்றார் இவரது முடிவே இறுதியானதாக கருதப்படுகின்றது.

வெள்ளலூர் நாடு சிதைவுற்று முறைபடுத்தப்பட்ட காலத்திற்கு பின்பு இதுவரை 10 பெரிய அம்பலகாரர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர்.

குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட போது மேலூர் பெரிய அம்பலகாரர் வையாபுரி அவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாவீரர் சேதுபதி அம்பலம் 18 ஆம் நூற்றாண்டில் மருதுபாண்டியருக்காக போரிட்டு தூக்கிலிடப்பட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதிய தென்பாண்டி சிங்கம் எனும் நூல் அம்பலகாரர்களின் வரலாற்றையும் பெருமைகளையும் கூறுகிறது. இந்நூல் கள்ளர் நாட்டுத் தலைவன் வாளுக்கு வேலி அம்பலத்தின் வாழ்க்கை வரலாறாகும். இந்நூலுக்காக கலைஞர் தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ராஜராஜன் விருது பெற்றார். இந்த புதினக்கதை தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் தொலைக்காட்சியில் வெளியானது இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்தார்.



14.5.1965ல் ஐயா சோ.கு.குப்பையன்அம்பலம் சிறுகுடிநாடு சாத்தமங்கலம் கிராம அம்பலகாரராக அம்பலப்பட்டம் முடிசூட்டும்விழா அழைப்பிதழ்


உஞ்சனை இராம. இராமசாமி அம்பலகாரர்

மாம்பட்டி பெரியம்பலகாரர் சேவு.சபாபதி அம்பலகாரர்

சேந்தனி அம்பலம்

கீழே வரலாற்றில் இடம்பெற்ற அம்பலகர்கள் 


அம்பலகாரர் / அம்பலம் சுதந்திர போராட்ட வீரர்கள்

தியாகி கருப்பையா அம்பலம்  INA












நன்றி : 
திரு. 
சோழபாண்டியன்
திரு. வழக்கறிஞர் சிவ.கலைமணி் அம்பலம்
திரு. முனிராஜ் வாணாதிராயர், 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்