வெள்ளி, 30 ஜூன், 2023

அறந்தாங்கி தொண்டைமான்



கள்ளர் குடியில் தோன்றிய தொண்டைமான் மன்னர்களில் ஒரு பிரிவினர் 450 ஆண்டுகளுக்கு மேலாக அறந்தாங்கி பகுதியை தனி அரசாகவும் மற்றும் சோழ, பாண்டிய , விசய நகர, மராட்டிய மன்னர்களின் மேலாண்மையை ஏற்றும் ஆட்சி செய்தனர். வளர்த்து வாழ்வித்த பெருமாள் தொண்டைமான் என்பவன் விசெங்கி நாட்டில்  1201  ஆம் ஆண்டு இருந்துள்ளான், இவனே அறந்தாங்கி தொண்டைமானில் முதன்மையானவன்.

அறந்தாங்கி பகுதில் உள்ள சிங்கவனம் அரையன் மெய்கண் கோபாலர்கள், பாளையவனம் அரையன் வணங்காமுடி பண்டாரத்தார்கள் கள்ளர் குலத்தை சேர்த்தவர்கள் என்பதை நாம் அறிந்ததே.

அறந்தாங்கி தொண்டைமான் உயர் அலுவலர் பெயர் கலியுக மெய்யன் காலிங்கராயர் என்பவன் குறிக்கப்படுகிறான். மேலும் உயர் அலுவலராக கற்பூர காலிங்கராயர் , சிற்றம்பலமுடையான் காலிங்கராயர் , திருச்சற்றான் காலிங்கராயர், திருவம்பலமுடையான் காலிங்கராயர், நிரம்பவழகியான் காலிங்கராயர் இருந்துள்ளார்கள். காளிங்கராயன் பட்டம் தாங்கிய கள்ளர் குடும்பங்கள் இன்றும் அந்த பகுதில் வாழ்கின்றனர்.

தமிழ் அகராதி 



ஆய்வாளர் ஜெ. ராஜா முகமது அவர்கள் புதுக்கோட்டை தொண்டைமான் பற்றிய தனது ஆய்வில், புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கும் அறந்தாங்கி தொண்டைமான்களுக்கும் தொடர்பு இல்லை என்று எந்த ஆதாரங்கள் இல்லாமலும் பதிவு செய்ததை , ஆய்வாளர் ராசு கவுண்டர் அவர்கள் இதனை மறுத்து தக்க ஆதாரங்கள் கொண்டு இருவரும் ஒரு கால்வழியினரே என்று விளக்கி உள்ளார். ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தொண்டைமான்கள் அனைவரும் கள்ளரின் ஒரு பிரிவினரே என்று கூறியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தொண்டைர்கோன் என்று பாராட்டப்பெறுகின்றான் பாண்டிய மன்னர்களின் தளபதி, கப்பற்கோவை தலைவன், கப்பலூர் நாடு கருமாணிக்கன். இன்றும் கப்பலூர் நாடு கருமாணிக்கன் வாரிசுகள் கள்ளர் குலத்தை சேர்த்தவர்கள் என்பதை நாம் அறிந்ததே.





கொங்கு மண்டலத்தில் சிறப்போடு வாழும் கொங்கு வேளாளர்களில் தொண்டைமான் பட்டம் உள்ளது. அவர்கள் கஞ்சி தொண்டைமான் மன்னர் தங்களுக்கு இந்த பட்டம் அளித்தாகக் கூறிக்கொள்ளுகிறார்கள்.

சுமார் கி.மு 3 – 1 நூற்றாண்டுகள் காலத்தில் உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னன் சோழநாட்டில் இருந்து 48000 வேளாளர்களை புதுக்கோட்டைப் பகுதியில் குடியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த புதுக்கோட்டை பகுதியில் தொண்டைமான்கள் பிற்காலச் சோழர்கள் காலத்தில் திருப்பதி தொண்டைமான் கோட்டை என்ற பகுதியில் இருந்து இங்கு வந்து சிலர் அன்பில், அறந்தாங்கி, சூரைக்குடி போன்ற பகுதியில் குடியமர்ந்தனர்.



தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதியை மதுரை பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்கள் இந்த தொண்டைமான் வேந்தர்கள். கி.பி.14-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் பிரதிநிதியாக இருந்து, புதுக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார் மஞ்சக்குடியுடையார், திருநோக்கு அழகியார் தொண்டைமான் .

இவரின் மரபு வழியே வந்தவர்கள், அறந்தாங்கியில் கோட்டைக் கொத்தளங்கள் அமைத்து, அந்த ஊரையே தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள்.

இவர்களின் கல்வெட்டு, செப்பேடுகளில் இவர்கள் ஆவணங்களிலும இவர்களின் பூர்விகமாக தொண்டைநாட்டுத் தொடர்பே பெரிதும் இடம்பெற்றுள்ளது. தங்களது பூர்வீகமாக காஞ்சி, காளத்தி மலை (சித்தூர்), பாலாறு, கம்பாநதி, ஆதொண்டைமலை, தொண்டைமான் நாடு என்றே அதிகமாக குறிப்பிடுகின்றர்.


அறந்தாங்கி தொண்டைமான்கள் ஆவுடை நாதர் அனுக்கிரகம் பெற்றோர் என்றும், "ஆவுடைய நாயனார் ஸ்ரீபாதபக்தர்" என்றே தங்களைஅழைத்துக்கொண்டனர். ஆவுடை என்ற பெயர் தாங்கிய ஆவுடை ரகுநாத தொண்டைமான் என்பவரே புதுக்கோட்டை தொண்டைமான்காளில் முதன்மையானவர் என்பது குறிப்பிட்ட தக்கது.

அறந்தாங்கி தொண்டைமான் தங்களை நாககன்னிகை வழிவந்தவர்கள் என்றும், இந்திரன் ஏழடி கொண்டவன் என்றும் தங்களை கூறிக்கொள்கின்றனர்.





(ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மழைவளம் வேண்டி சகஸ்ரநாம லட்சார்ச்சனை விழா)

 அரிமர்த்தன பாண்டியன்





அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் கலை பொக்கிசம் ஆவுடையார்கோயில். இந்த கோயில் விக்ரம சோழபாண்டியன், தஞ்சையை ஆண்ட நாயக்கன், மராட்டி மன்னன், சேதுபதி மன்னன், தொண்டைமான் மன்னன் பாலைவன வணங்காமுடி பண்டாரத்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது.

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.


ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது.


இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


மாணிக்கவாசகர் விழா :-


இந்த பழமையான திருக்கோயிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் மாணிக்கவாசகர் திருவாதிரை பெருவிழா நடைபெறுகிறது. மாணிக்கவாசகருக்கு பூஜையும் அதைத்தொடர்ந்து 11 நாள் மண்டகப்படியும் நடைபெறுகிறது. 

மண்டகப்படியின் முடிவில் தேரோட்டத்தோடு விழா முடிவடைகிறது.

11 நாள் மண்டகப்படிதாரர்கள்:-


முதல் நாள் :- நெல்வேலி பிள்ளைமார் வகையரா மற்றும் நவக்குடி கிராமத்தார்கள்


இரண்டாம் நாள் :- ஆவுடையார்கோயில் கிராமத்தார்கள், நேமத்தான்பட்டி அண்ணாமலை செட்டியார் குடும்பத்தார்கள்.


மூன்றாம் நாள்:- புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்காக அரசூர் கிராமத்தார்கள்


நான்காம் நாள் :- கோபாலர் கட்டளை சிங்கவனம் ஜமீனுக்காக பில்லுக்குடி கிராமத்தார்கள்


ஐந்தாம் நாள் :- பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி அறக்கட்டளை


ஆறாம் நாள் :- வீரசேகரன் சேர்வைக்காரர், மறவனேந்தல்(கள்ளர் சேர்வை)


ஏழாம் நாள் :- தஞ்சை சமஸ்தானத்திற்காக திருவாவடுதுறை ஆதீனம்


எட்டாம் நாள் :- இராமநாதபுரம் சமஸ்தானம்


ஒன்பதாம் நாள் :- பாலையவனம் ஜமீனுக்காக கரத்திக்கோட்டை, விச்சூர் சேர்வைக்காரர்கள் (கள்ளர் சேர்வை)


பத்தாம் நாள் :- சிறுமருதூர் சேர்வைக்காரர் குடும்பத்தார் (கள்ளர் சேர்வை)



பதினோராம் நாள் :-கே ஆர் ஆர் குடும்பத்தார்கள் - அறந்தாங்கி காங்கிரஸ் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்த பெரியகோட்டையூர் KR .ராமநாதன் சேர்வைக்காரர் (கள்ளர் சேர்வை)

சிறுமருதூர் சேர்வைக்காரர் முன்னால் எம்எல்ஏ திரு.ராஜநாயகம் சேர்வைகாரர்கள், ஆவுடையர்கோயில் ஒன்றியத்தில் பொன்பேத்தி இளையவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் இரா.சுந்தர்ராஜன் அம்பலம், பெருவிழா வயல் சேர்வைகாரர்கள், நெற்குப்பம் சேர்வைகாரர்கள் மரவனேந்தல் சேர்வைகாரர்கள் பிரபலமானவர்கள்





அறந்தாங்கி தொண்டைமான்கள் மிழலை நாட்டுக்கு உரியவர்கள். வெள்ளாற்றுக்கு தெற்கிலும் பாம்பாற்றுக்கு வடக்கிலும் அமைந்த பகுதியே மிழலை கூற்றம்.

மிழலை கூற்றத்திலும் காஞ்சிபுரம் என்ற ஊர் ஒன்றை ஏற்படுத்தி அங்கு ஏகாம்பரநாதரைப் பிரதிட்டை செய்து, இறைவனின் திருநாமத்தை தங்கள் பெயராகவும் கொண்டனர் (ஏகாம்பர தொண்டைமான்).

(அறந்தாங்கி தொண்டைமான்களின் நாடான பாலையூர் நாட்டு கள்ளர்கள்)


அறந்தாங்கி தொண்டைமான்களின் பூர்வீக கிராமம் பாலையூர், ஊரின் மிராசு மற்றும் கோயில் முதல் மரியாதைகள் இன்றும் கள்ளர்களுக்கே உள்ளது.

அறந்தாங்கி தொண்டைமான் மரபினர் 11 ஆம் நூற்றாண்டு தொடங்கிப் புதுக்கோட்டை பகுதியில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகளாக விளங்கினர். கையெழுத்து இடும் அலுவலராக, நாடாழ்வாராக, அரையராக, சார் அரையராக விளங்கி பாலையூர் பகுதிக்கு அரசு ஆக நியமனம் பெற்று அறந்தாங்கியைத் தலைநகராகக் கொண்டு அறந்தாங்கி அரசாக வளர்ந்து 1300 முதல் 1759 வரை புதுக்கோட்டை பகுதியில் தனியரசாக ஆவுடையார் கோயில், அறந்தாங்கி, ஆலங்குடி தென்பகுதி, திருமெய்யம் கீழ்ப்பகுதி வட்டங்களில் ஆட்சி செலுத்தும் அரசர்களாக விளங்கிவந்துள்ளனர்.
இவர்களின் அலுவலர்களாக குறிக்கப்படும் பட்டங்களில் இன்றும் புதுக்கோட்டை பகுதியில் கள்ளர்கள் வாழ்கின்றனர்.

அரியபிள்ளை, அறந்தர், கண்டியதேவன், முதலியாண்டார் , முனையத்தரையன், மங்கலராயர், மணவாளன், வாண்டையார் என்ற பட்டங்கள் நேரடியா அங்கு கள்ளர்களுக்கு மட்டுமே உள்ளன.

சில கள்ளர் பட்டங்கள் மருவியதாக உள்ளன. அவை

தென்னவதரையன் - தென்னவராயர் 
சேதிபராயர் - சேதிராயர் 
ஆளப்பிறந்தான் - ஆளம்பிரியர்
நயினார் - நயினியர்
உத்தாண்டையார் - உத்தமண்டார். 
தமிழ்நாடன் – தமிழுதரையர்
அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் சில பகுதிகளின் ஆட்சி பொறுப்பைத் மகன்கள் மற்றும் சகோதரர்களுக்கும் தந்துள்ளனர்.

அறந்தாங்கி தொண்டைமான்கள்

01) உய்யவந்தான் திருநோக்கழகியான் தொண்டைமான்.
02) சூரிய தேவர் தொண்டைமான்.
03) பிச்சர் தொண்டைமான்.
04) தேவராயத் தொண்டைமான்.
05) பெரிய ரவினியனான ரகுநாதத் தொண்டைமான்.
06) ஆளுடை நயினார் தொண்டைமான்
07) ஆவுடை நயினார் தொண்டைமான்
08) ஆண்டியப்ப நயினார் தொண்டைமான்.

பாண்டிய மன்னர்களின் மீது கொண்ட அன்பினால்

09) சுந்தரபாண்டியத் தொண்டைமான்
10) விக்ரம பாண்டியத் தொண்டைமான்
11) குலசேகர தொண்டைமான்

பெருமாள் பெயருடைய தொண்டைமான்கள்

12) திருநெல்வேலிப் பெருமாள் தொண்டைமான்.
13) அழகிய பெருமாள் தொண்டைமான்.
14) இன்பவனப் பெருமாள் தொண்டைமான்.
15) ஏகப் பெருமாள் தொண்டைமான்.
16) வளர்த்து வாழ்வித்த பெருமாள் தொண்டைமான்
17) மழவல்லப் பெருமாள் தொண்டைமான்
18) அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான்

நாயக்க மன்னர்களின் மீது கொண்ட அன்பினால்

19) இரகுநாத நாயக்கத் தொண்டைமான்.
20) அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான்.
21) தியாகராசர் நரச நாயக்கத் தொண்டைமான்.

வணங்காமுடி தொண்டைமான்கள்

22) அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான்.
23) வணங்காமுடித் தொண்டைமான்.
24) முத்து வணங்காமுடித் தொண்டைமான்.
25) விசய அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான்.
26) அதிசூரராமத் தொண்டைமான்.
27) அலைவில் அஞ்சாத தொண்டைமான்.
28) அச்சமறியாத் தேவர் தொண்டைமான்.
29) பொன்னம்பலநாத தொண்டைமான்.
30) வீரவினோதத் தொண்டைமான்.
31) தீராவினை தீர்த்தான் தொண்டைமான்


உய்யவந்தான் திருநோக்கழகியான் தொண்டைமான் (பொ. ஆ-1319)

புதுக்கோட்டைப் பகுதியை மதுரை பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்கள் தொண்டைமான் வேந்தர்கள். கி.பி.14-ஆம் நூற்றாண்டில் 1319 ல், இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் பிரதிநிதியாக இருந்து, புதுக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னர், மஞ்சக்குடி எனும் ஊரில் இருந்தபடி ஆட்சி செய்ததால், அவர் மஞ்சக்குடியுடையார், திருநோக்கு அழகியார் தொண்டைமான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.


மஞ்சக்குடியுடையார் தான் பிறந்த ஊரில், அதாவது மஞ்சக்குடியில் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அந்த சைவ- வைணவ ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் இறைத் திருமேனிகளை தான் எப்போதும் வணங்கும் கோலத்தில், சுமார் ஐந்தரை அடி உயரம் உள்ள தனது உருவச்சிலைகளை நிறுவியுள்ளார். இவரது அலுவலராக அம்பலகாரர் ஒருவர் இருந்தாக உள்ளது.

சூரிய தேவர் தொண்டைமான் (பொ. ஆ-1399)

சூரிய தேவர் தொண்டைமான், பிள்ளைவயல் என்ற ஊரைக் கொடையாக மாறவர்மன் வீரபாண்டியன் ஆட்சியில் திருநாள் சிலவுகளுக்காக அளித்துள்ளார்.

பிச்சர் தொண்டைமான் (பொ. ஆ–1426)

1426 ஆம் ஆண்டு ராசராச வளநாட்டுப் பாலையூர் நாட்டவருக்கு பிச்சர் தொண்டைமான் வரி நிர்ணயம் செய்ததை புராதனபுரீசுவரர் கோயில் கல்வெட்டு குறிக்கிறது. இவர் சூரியதேவரான குலசேகர தொண்டைமான் மகன் ஆவர். இவர் அலுவலராக திருச்சிற்றம்பலமுடையன் காலிங்கராயர் என்பவர் இருந்துள்ளார்.

தேவராயத் தொண்டைமான் (பொ. ஆ-1432 - 46)

1432-46 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர். குற்றம் செய்தவர்களுக்கு இவர் வழங்கிய தண்டனை போலவே வழங்க வேண்டும் என்று 1482 ஆம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஆளுடை நயினார் தொண்டைமான் (பொ. ஆ–1434)

1434 ஆம் ஆண்டு ஆளப்பிறந்தானை சேர்த்த கண்டியதேவர், பிச்சன் தொண்டைமான், பகையாபிள்ளையான தோற்றம் அழகியார், பிச்சன் ஊராட்சியார் மணவாளன், ஆரியச் சக்கரவர்த்திகள் மணவாளன் ஆகியோர்க்கு குடிக்காடு என்ற பகுதி காணியாகக் ஆளுடை நயினார் தொண்டைமான் அவர்களால் கொடுக்கப்பட்டது.

அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1441)

அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான் அவர்கள் எட்டியத்தளி, ஆளப்பிறந்தான், குறும்பூர் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நிலங்கள் கொடையாக அளித்துள்ளார். இவரது தம்பி சுந்தரபாண்டியத் தொண்டைமான் மற்றும் குலசேகர பாண்டிய தொண்டைமான். அழகிய மணவாளப் பெருமாளுக்கு நயினார் இலக்கப்பத் தண்ணாயக்கத் தொண்டைமானார், மெய் நின்ற பெருமாள் அதிசூரராமத் தொண்டைமான் என இரண்டு ஆண் மக்கள் இருந்தனர்.

#சுந்தரபாண்டியத் தொண்டைமான் (பொ. ஆ-1443)

எட்டியத்தளி அகத்தீசுரமுடையார் கோயிலுக்கு குலசேகர பாண்டியன் ஆட்சியில் சுந்தரபாண்டியத் தொண்டைமான் சாலிய நகரத்தாரும் கைக்கோளரும் அரைப்பணம் கொடுக்க வேண்டும் என்று வரி நிர்ணயம் செய்துள்ளார்.

திருநெல்வேலிப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1463)

புதுக்கோட்டை நெல்வேலி பகுதியில் வாழ்ந்த இவரும் அறந்தாங்கி தொண்டைமான் களில் ஒருவர். 1463 ஆம் ஆண்டு திருமால் கோயில், பிடாரி கோயிலுக்கு கொடை அளித்துள்ளார். இதனை நிரம்ப அழகியார் காலிங்கராயன் என்பவர் எழுதியுள்ளார்.

ஆவுடை நயினார் தொண்டைமான் (பொ.ஆ-1476)

1476 ஆம் ஆண்டு ஆளப்பிறந்தானை சேர்த்த பூமிசுவரர் கோயிலில் காலை சந்திக்காக ஆவுடை நயினார் தொண்டைமானால் 12 மா நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்டது.

இன்பவனப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1476)

இன்பவனப் பெருமாள் தொண்டைமான் அவர்கள் 1476 ஆம் ஆண்டு கோயில்களுக்கு வயலைக் கொடையாக அளித்துள்ளார்.

ஏகப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1478)

பொ. ஆ - 1478 ஆம் ஆண்டு பல கோயில்களுக்கு கொடையாக நிலங்களை அளித்துள்ளார். இவர் கல்வெட்டுகள் மூலம் இவர் விசய நகர ஆட்சிக்கு உட்பட்டு ஆட்சி செய்தவர் என்று தெரிகிறது. இவர் அலுவலர்களாக காலிங்கராயன் என்பவர்கள் இருந்துள்ளனர். இவருக்கு மூன்று மகன்கள்

கள்ளப்பற்றில் நின்று பயம் தீர்ந்து என்று குறிக்கப்படுகிறது.

அதிசூரராமத் தொண்டைமான் (பொ. ஆ–1478)

அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானின் மகன் ஆவார், இவர் ஏகப் பெருமாள் தொண்டைமான் காலத்தில் (1478) ஆளப்பிறந்தான் பகுதியில் நிர்வாகியா இருந்தார்.

அலைவில் அஞ்சாத தொண்டைமான் (பொ. ஆ–1478)

ஏகப் பெருமாள் தொண்டைமானின் மகன், இவர் குறும்பூர் கோயிலில் ஒரு பகுதியை தம் கொடையாக திருப்பணி செய்துள்ளார்.

அச்சமறியாத் தேவர் தொண்டைமான் (பொ. ஆ–1478)

ஏகப் பெருமாள் தொண்டைமானின் மற்றொரு மகன்

பொன்னம்பலநாத தொண்டைமான் (பொ. ஆ–1508)

ஏகப் பெருமாள் தொண்டைமான் மூத்த மகன் சிதம்பரநாதன் என்ற பொன்னம்பலநாத தொண்டைமான். இவர் விஜய நகர அரசர்கள் கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர் ஆகியோரின் கீழ் ஆட்சி செய்தனர் என்று வளவர்மாணிக்கம் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. 1508 இல் பட்டம் ஏற்றவுடன் இவன் இன்றியமையாத செல்வுகட்காகத் கோயில் பண்டாரத்திலிருந்து கடன் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் கட்டமுடியாததால் வடவெள்ளாற்று நாட்டு களக்குடி, மையூர் விஜயபுரம் ஊர்களை விற்று வந்த பொருள்களை கொண்டு கோயில் கடனை அடைத்தார். இவரது மகன் வீரவினோதத் தொண்டைமான்.

பொன்னம்பலநாத தொண்டைமான் பட்டப்பெயர்கள் அச்சம் அறியான், அலைவில் அஞ்சாதான், திருமிழலை திருநாடன், மல்லையாதிபதி.

சிறப்புகள்:


1. ஏழே நாளில் இலங்கையில் உள்ள சிங்களவர்களை வென்று அவர்களிடம் வரி வாங்கி வந்தவர்

2.யானையை பரிசாக வழங்குபவர்.
3.பயம் என்றால் என்னவென்று தெரியாதவர்



அறந்தாங்கி தொண்டைமானாரில் வரும் பொன் அம்பலத் தொண்டைமானார், ஆதி சேதுபதிகள், தேவரையர்கள் சிங்களர்களை அடக்கி இலங்கையில் வன்னியர் என்கிற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.

வீரவினோதத் தொண்டைமான் (பொ. ஆ–1530)

பொன்னம்பலநாத தொண்டைமான் தன் தந்தை ஏகப் பெருமாள் தொண்டைமானாரிடம் இளமைப் பருவத்தில் காணியூர்கள் பெற்றுத் தான் நிர்வாகம் செய்தது போலவே தன்னுடைய மகன் வீரவினோதத் தொண்டைமானுக்கு மிழலைக் கூற்றத்து மேல்கூறு நாட்டு நாலுகோட்டைப் பற்று ஏற்றநாட்டுப் புரவில் சிறுகுறிச்சி வயல் என்ற ஊரை அளித்து. வளவர்மாணிக்கம் என்ற ஊரில் வீடு ஒன்றை அளித்தார். வீரவினோதத் தொண்டைமான் அந்த பகுதியில் நிர்வாகத்தை மேற்கொண்டார்

ஆண்டியப்ப நயினார் தொண்டைமான் (பொ. ஆ-1670)

இவர் பூமியூர் மடத்திற்கு நிலங்களை வழங்கியுள்ளார்.

இரகுநாத நாயக்கத் தொண்டைமான் (பொ. ஆ-1670)

அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான் (பொ. ஆ-1670)

தஞ்சை நாயக்கரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு இரகுநாத நாயக்கத் தொண்டைமான், அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான் இருவரும் தங்களுக்குள் அறந்தாங்கி அரசுக்கு உரிமை வேண்டி போர் வரும் சூழ்நிலையில் இருவரும் போர் செய்யாமல் ஒப்பந்தம் செய்து கொண்டனர்

பெரிய ரவினியனான ரகுநாதத் தொண்டைமான் (பொ. ஆ–1700)

இவர் ஆண்டியப்ப நயினார் தொண்டைமான் மகன், 1700 ஆம் நூற்றாண்டில் பொய்கை வயல் என்ற பகுதியை கோயிலுக்கு கொடையாக வழங்கியுள்ளார்.

அழகிய பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1700)

அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான் மகன் அழகிய பெருமாள் தொண்டைமான். இவர் இறங்கல் மீட்டான் வயலையும் செட்டி செய் என்ற நிலத்தையும் திருப்பெருந்துறை கோயிலுக்கு கொடையாக அளித்தனர்.

அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1716)

அறந்தாங்கி அரசு ஆண்டவராய இரகுநாத ஆவுடைத் தொண்டைமான் அவர்கள் மகன் அருணாச்சல வணங்காமுடி தொண்டைமான். 1716 ஆம் ஆண்டு அந்தணர்களுக்கு ஏனாதி என்ற ஊரை வழங்கியுள்ளார்

வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1739)

அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான் மகன் வணங்காமுடித் தொண்டைமான் ஆவார். இவர் 1739 ஆம் ஆண்டு பெருவயல் வள்ளி தெய்வானை கோயிலுக்கும், பரமேஸ்வரன் கோயிலுக்கும் ஊர்களை கொடையாக தந்துள்ளார்.

முத்து வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1739)

சிதம்பர வணங்காமுடித் தொண்டைமான் மகன் முத்து வணங்காமுடித் தொண்டைமான். 1739 ஆம் ஆண்டு பெருவயல் இமுருகன் கோவிலின் பூசை அபிடேகம், நைவேத்தியம் திருவிளக்கு கட்டளைகட்காக குடியூர், சிந்தாமணி ஏந்தல் ஆகிய ஊர்களை மராட்டிய மன்னர் பிரதாப்சிங் அவர்களின் நலத்தின் பொருட்டு மேலும் இவர் தந்தை தாய் நலம் வேண்டி இந்த கொடையை வழங்கியுள்ளார். 1740 ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு நாட்டாணி என்ற ஊரை கொடையாக வழங்கியுள்ளார்

விசய அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1759)

ஆண்டவராயா வணங்காமுடி தொண்டைமான் மகன் விசய அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான். இவர் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களை வைகை நாட்டில் உள்ள கிறிஸ்த்துவர்களான ராயப்பத்தேவர் மகன் அந்தோணி முத்து தேவருக்கு நிலத்தை விற்பனைசெய்துள்ளார்.

மேலும் இவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் மகன்கள் மற்றும் சகோதர்கள் சில பகுதியின் பொறுப்பாளராக இருந்துள்ளனர். அவர்கள்

வளர்த்து வாழ்வித்த பெருமாள் தொண்டைமான்

வாள்விட்ட பெருமாள் தொண்டைமானார் தன்னை விசங்க நாட்டு தொண்டைமானாக குறித்துள்ளார்



விக்ரம பாண்டியத் தொண்டைமான்

குலசேகர தொண்டைமான்

மழவல்லப் பெருமாள் தொண்டைமான்

தீராவினை தீர்த்தான் தொண்டைமான்

தியாகராசர் நரச நாயக்கத் தொண்டைமான்

குறிப்பு:

1) புதுக்கோட்டை தொண்டைமான் இவர்களின் காழ்வழியினர். ஆவுடையார் இருவருக்கும் பொது தெய்வம்.


2) புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் பலர் திருமால் என்றும், அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களில் பலர் பெருமாள் என்றும் பெயர் தாங்கியவர்கள்.

3) புதுக்கோட்டை தொண்டைமான் இந்திரகுலம் என்றும், அறந்தாங்கி தொண்டைமான் தங்களை இந்திரன் ஏழடி கொண்டவன் என்றும் கூறிக்கொள்கின்றர்.

4) அறந்தாங்கி வணங்காமுடி தொண்டைமான் வழியினரே , பாளையவனம் வணங்காமுடி பண்டாரத்தார் அரையன்கள்.

5) இன்றும் அறந்தாங்கி, புதுக்கோட்டை தொண்டைமான் வழியினர் இந்த பகுதியில் கள்ளர் குலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

6) சிவகங்கை பட்டமங்கலத்தில் வாழ்ந்து வருகின்ற தொண்டைமான்கள் , அறந்தாங்கி தொண்டைமான்களையே தங்களது முன்னோராக கூறிக்கொள்கின்றனர். (இலங்கை மலையக தந்தையும் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் )

நன்றி:

உயர்திரு. புலவர் செ. இராசு

நூல் : அறந்தாங்கி தொண்டைமான்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்