திங்கள், 26 ஜூன், 2023

பழனியாண்டி பிள்ளை (தொண்டைமான்)




திரு R. பழனியாண்டி பிள்ளையின் சுயசரிதம் I An Uncommon Businessman of A Past Era என்ற பெயரில் நீதியரசர் S . நாகமுத்து கீருடையார் வெளியிட ரா. பழனியாண்டி பிள்ளையின் கொள்ளுப்பேரன் தொழிலதிபர் திரு. E . கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். மகள் வழி கொள்ளுப்பேரன் பொறியாளர் திரு. எ. துரைவேல் அவர்களும் திரு. K . இராமலிங்கம் அவர்களும் E . கோடிஸ்வரனின் மகன் பெற்றுக்கொண்டார். 

திரு. பழனியாண்டி பிள்ளை அவர்கள் சாலியமங்கலத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் 1854 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பட்டப்பெயர் தொண்டைமான் ஆனால் அவர் தன் பெயருடன் பிள்ளை என்ற அடைமொழியை சேர்த்துக்கொண்டார். மொரீஷியஸில் வணிகம் செய்த அவருடைய தந்தையார் திரு. ராமசாமி பிள்ளை தன் மனைவி இறந்த விட்டமையால் 5 வயதான தன் மகனையும் அழைத்து சென்றார். வியாபாரத்தின் அத்தனை நிலவு சுளுவுகளை எல்லாம் கற்றுக்கொடுத்தார்.


இவர் தன்னுடைய 22 வது வயதில் தென் ஆப்பிரிக்கா சென்றார். அருகில் ஸ்பிங்கோ என்ற ஒரு இடத்தில் ஒரு கடையை அமைத்து பொருட்களை வாங்கி விற்கிறார். விரிவு செய்கிறார். தொழில் லாபகரமாக நடக்கிறது. இந்தநிலையில் ஓர் இரவு காட்டாற்று வெள்ளம் வருகிறது. அவரும் பணியாட்களும் காப்பற்றபடுகின்றனர். பொருடகளும் காப்பாற்றப்படுகிறது. இது ஆண்டவரின் செயலே என உறுதியாக நம்புகிறார். பின்னர் 300 ஏக்கர் நிலம் வாங்குகிறார்.


சிறு பகுதியில் விவசாயம் செய்கிறார். மீதிப்பகுதியில் இந்தியாவில் இருந்துவந்த கூலி தொழிலாளர்கள் தங்கவும் விவசாயம் செய்யவும் ஏற்ப்பாடு செய்து அதற்கு சிறு தொகையை பெற்றுக்கொள்கிறார். இரும்பு பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். அதன் நிமித்தமாக சமையல்காரரை உடன் அழைத்துக்கொண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, ஸ்காட்லாந்து போன்ற ஊர்களுக்கு கப்பலில் பயணம் செய்கிறார். 1884 ஆம் ஆண்டு திருபவனம் வந்து தனது 30 வது வயதில் திருமணம் செய்து கொண்டு உறவினர்கள் இருவரை உடன் அழைத்துக்கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்கிறார். மனைவியுடன் கப்பலில் செல்லும்போது பேராபத்து ஏற்பட்டு அதிலிருந்தும் ஆண்டவர் அருளால் காப்பாற்றப்படுகிறார்கள். டர்பனில் சுப்பிரமணிய சுவாமிக்கு கோயில் கட்டினார். இந்திய வந்தபிறகும் முருகனுக்கு மயிலாசனமும், விக்கிரங்களும் அனுப்பி வைத்தார். 15 ஆண்டுகள் மிக நேர்மையாகவும், நாணயமாகவும் வியாபாரம் செய்து பெரும் பொருளீட்டி மனைவி குழந்தைகளுடன் தமிழகம் வந்தடைந்தார்.


இந்தி வந்த பிறகும் ஆண்டவருக்காக நாகூரில் தர்காவில் ஒரு பெரிய வெண்கலக்கதவு அமைத்துக் கொடுத்தார். இரயில் நிலையத்தை ஒட்டி ஏழைகள் தங்கு பண்டிகை காலங்களில் சமைத்து உண்ணும்படியாக மூன்று சாத்திரங்களை கட்டினார். தன் பையன்களை வியாபாரத்தில் ஈடுப்படுத்தி நலமாக பழனி விலாஸ் எண். 133 திருவொற்றியூர் , தண்டையார்பேட்டை, சென்னையில் வாசிக்கும் போது அவரது 74 வது வயதில் அவருடைய வாழ்வு அனுபவங்களை எழுதி தருமாறு உறவினர்கள் கேட்க பிள்ளை அவர்களும் தன்னுடைய சுயசரிதை 1927 இல் எழுதினார். 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது மூத்த மகன் திரு. இராமசாமி பிள்ளை அவர்கள் அவரது எழுத்தை அச்சில் கொண்டுவந்தார். 1928 ஆம் ஆண்டு மே மாதம் பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அந்த புத்தகம் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.


திரு. ஞானசம்பந்தன் எழுதிட்ட புத்தகத்தை அச்சிட்ட பெருமை திரு. குலோத்துங்கன் சேதுராயர், திரு. பழனிராஜன் தெண்கொண்டார் ஆகியோர்களையே சாரும்.


திரு. ரா. பழனியாண்டி பிள்ளை அவர்கள் குடும்பம் அதே பழனி விலாசில் 6 வது தலைமுறையாக பொருள் செல்வத்துடன் அருள் ஆசியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.


நாகூரில் நடக்கும் கந்தூரி விழாவின் போது சென்னையிலிருந்து இதற்கென்றே தனியாக தயார் செய்யப்பட்டு ஆண்டவர் சமாதியின் மீது சாத்தப்படும் சால்வை எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த சால்வையை வாங்குவது சாத்துவது ஆகிய உரிமை அவரது குடும்பத்தாருக்கே உரிய பாக்கியமாகும்.


நாகூர் ஆண்டவர் சிறப்புகள் :


நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹ¥ல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான் மேலும் முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது.


நாகூர் ஷாஹ¥ல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர். ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்.


தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. (10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது (11). தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன. கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும் மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது (12). நாகூர் பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள் தெரிவிக்கின்றன (13).


18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட செய்தியும் நமக்கு கிடைக்கிறது (15).


நாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர்.


1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது (25).


கவிஞர் நாகூர் காதர் ஒலி

நாகூர் நாயகம் அவர்கள் மறைந்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்


1) முதன்முதலில் கீற்றால்

ஆன மேல் கூரை அமைத்து விளக்கேற்றி

வைத்தவர்கள் நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த

மீனவ மக்கள்


2) தஞ்சை மன்னர்களால் 15

கிராமங்கள் மானியமாக வழங்கப்பட்டது. 195000 சதுரடி பரப்பளவில் நாகூர் தர்கா

கட்டிடங்கள் மட்டும் கட்டப்பட்டது .


3) ரவுலா ஷரீப் மேலே

தங்க கலசத்தை அமைத்துக் கொடுத்தவர்

கூத்தாநல்லூர் மகா தேவ அய்யர்.


4) தலைமாடடு மினாராவை கட்டிக்கொடுத்தவர்

நாகப்பட்டினம் நல்ல சயீது மரைக்காயர்


5) சாஹபு மினாராவைக் கட்டிக்கொடுத்தவர்

செஞ்சியை சேர்ந்த இபுறாஹீம் கான்,,


6) முதுபக்மினாராவை கட்டிக்கொடுத்தவர் மலேசியாவை

சேர்ந்த பீர் நெய்னார்,,


7) ஓட்டு மினாராவை

கட்டிக்கொடுத்தவர் பரங்கிப் பேட்டை தாவூத்

கான்,


8) பெரிய மினாரா தஞ்சை மன்னன் பிரதாப்சிங்கால் கட்டிக் கொடுக்கப்பட்டது.


9) அலங்கார

வாசல் நாகூர் அப்துல் காதர் நகுதா

என்பவரால் கட்டப்பட்டது ..


10) தர்கா முழுவதும்

தரை தளம் கோவிந்த சாமி செட்டியார்

என்பவரால் போடப்பட்டது


11) நாகூர் நாயகத்தின்

வாசலுக்கு செம்பு கேட் போட்டு

கொடுத்ததும் பழனியாண்டி பிள்ளை சத்திரம்

கட்டியதும் சென்னையை சேர்ந்த பழனியாண்டி

பிள்ளை.


12) டச்சுக்காரர்கள் பீர் மண்டபத்தைக்

கட்டிக் கொடுத்தனர்.


13) ரெங்கைய்யா என்பவரும் நாகூராரின் சீடராக திகழ்ந்தார் அவரது பெயரில் வாஞ்சூரில் மெயின் ரோட்டின் இடது புறம் ரெங்கைய்யா மடம் என பெரிய மடம் ஒன்று இன்றும் உள்ளது.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்