நார்த்தாமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் அமர்ந்தபடி அத்தனை வளங்களையும் தந்தருள்கிறாள் முத்துமாரியம்மன். ஊரின் பெயர் நார்த்தாமலை என்பதால் இத்தலத்து அம்மன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் எனப் பெயர் பெற்றாள். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால் நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக பெருங்களூர் ஸ்தல புராணம் விவரிக்கிறது.
புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் நார்த்தாமலையைப் பல்லவராயர்களிடமிருந்து கைப்பற்றி அதனை இயற்கை அரண்களுடன் கூடிய இராணுவ நிலையமாகப் பயன்படுத்தியுள்ளனர். மன்னர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் வரை நார்த்தாமலை புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
புகழ்பெற்ற புதுக்கோட்டை நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில் விசங்கி நாட்டு பாலாண்டார்களின் திருப்பணி....
இக்கோயிலில் பல்லவராயர்கள், சோழங்கத்தேவர்கள் முதல் மரியாதை பெறுகின்றனர்.....
பெருங்களூரில் இருந்து நார்த்தாமலை அடுத்த ஆவாரங்குடிப்பட்டியை சுற்றியுள்ள 10 கிராமங்கள் பல்லவராயகளுக்கு தொண்டைமானால் அளிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படை தளவாடங்களுடன் அங்கு குடியேறினர்.
நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில், இன்றும் பெருங்களூர் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. நார்த்தாமலை அம்மன் கோயிலில் ஆறாம் மண்டகப்படி பல்லவராயர்களுக்கு உரியதாகும். ஆறாம் மண்டகப்படியின் போது மட்டுமே, காளை வாகனம் தேரில் வைத்து கோயிலை சுற்றி இழுத்து வரப்படுகிறது. ஆகாச ஊரணி எனும் இடத்தில் இருந்து சாமி கொண்டுவரப்பட்டு ஆறாம் மண்டகப்படி அன்றும் கோயிலை சுற்றி வலம் வரும் . (சர்தார் முத்துக்குமார் பல்லவராயர் : லெக்கணாப்பட்டி தலைவர், ஆவாரங்குடிப்பட்டி)
நாரத்தாமலை மாரியம்மன் கோயில்
கொடிமரம் உபயம் : கிபி 1883
அய்யாவு பீலிமுண்டார்
வீரக்குடி நாட்டார்
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து அம்மன் ஆலயங்களின் தலைமை அம்மன் கோவிலாக இங்குள்ள முத்துமாரி அம்மன் கோவில் விளங்குகிறது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டும் நடைபெறுகிறது.
இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறும் முக்கியமான ஜல்லிக்கட்டுகளில் ஒன்றாகும்.
இதைவிட மிக முக்கிய குறிப்புகள்: நார்த்தாமலை பூவாடைகாரி, வேப்பிள்ளை காரி, மகமாயி, மாரிஅம்மா, என்று பல பெயர்களில் உறுமாறி கூப்பிடும் புகழ்பெற்ற நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரி அம்பாள் கருவறை சிலை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திர்க்கு உட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சியில் , கீழக்குறிச்சி உழவுகாட்டில் இருந்து எடுத்து நார்த்தாமலையில் அம்பாளுக்கு கோவில்கள் கட்டி வணங்க படுகிறது, இதைவிட ஒன்று கீழக்குறிச்சி கிராம &ஊராட்சிக்கு தனிஒரு மண்டாக படி இருந்தது (அம்மன் ஒருநாள் திருவிழா ) அதை கீழக்குறிச்சி எல்லை கிராம கோவில்களின் சில பல காரணத்தால் விளத்துபட்டி ஊராட்சியான ஊரபட்டி கிராமத்திர்கு தாரை வார்த்து கொடுத்ததாக வரலாறு கூறுகிறது இன்றும் கீழக்குறிச்சி ஊராட்சி வாழ் மக்கள் அம்மனுக்கு வருடம் தவறாமல் பல இடங்களில் பிரமாண்டமான முறையில் தண்ணீர் பந்தல் அமைத்து அண்ணதாணம் செய்துவருகிரார்கள் & ஊர் மக்கள் பல வகையான காவடிகளும் பால் குடங்களும் அலகு குத்துதலும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை .
வேட்டவலம் ஜமீன்தார் (நத்தமர்) வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் இங்கு வந்து அம்பாளின் அருளினால் தன் சொந்த முயற்சியால் கோயிலை விரிவுபடுத்தியும், மண்டபங்கள் எழுப்பியுள்ளார். அம்மன் சன்னதியின் வடபுற சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கல்லினால் ஆன முருகன் எந்திரம் மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.
புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட இந்தக் கோயிலில்
பங்குனியின் இரண்டாம் ஞாயிறு பூச்சொரிதல் விழா;
3-ம் ஞாயிறு அம்மனுக்கு காப்புக் கட்டுதல்;
4-ம் ஞாயிறு அன்று எட்டாம் நாள் திருவிழா;
மறுநாள் திங்கட்கிழமை தேரோட்டம்;
பத்தாம் நாள் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறுகிறது.
பக்தர்கள் நார்த்தாமலையில் திரண்டு வந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர். ஆடி வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அம்மை, திருமணத் தடை, பிள்ளை வரம், தீராத நோய், ஓயாத கவலை என கண்ணீரும் கம்பலையுமாக தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக அருள்பாலிக்கிறாள் நார்த்தாமலை அம்மன். முகூர்த்த நாளில், கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.