திங்கள், 26 ஜூன், 2023

பொ. ஆ 1789 ~ 1807 - ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர்



ராய ரகுநாத தொண்டைமான் மன்னருக்கு ஒரேயொரு பெண் வாரிசு மட்டுமே இருந்ததால், அவர் காலமான பின்பு அவருடைய சகோதரர் முறையிலான அதாவது சிறிய தந்தையாகிய திருமலைத்தொண்டைமானுடைய மூத்த புதல்வர் ஸ்ரீவிஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் என்பார் தமது முப்பதாவது வயதில் ஆட்சிக்கு வந்தார். 1789 டிசம்பர் 30இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட இவர் 1807 பிப்ரவரி 1 வரை ஆட்சியில் இருந்தார்.

1759 மே மாதத்தில் திருமலை ராய தொண்டைமான் சாஹேபுக்கு மகனாகப் பிறந்தவர் விஜயரகுநாத தொண்டைமான். இவரும் தனி ஆசிரியரை வைத்துக் கொண்டு கல்வி பயின்றவர்.

புதுக்கோட்டையில் மற்ற நாட்டு கள்ளர்களை கட்டுக்குள் கொண்டு வர பல தாக்குதல்கள் செய்ய வேண்டி இருந்தது. அடங்கா கள்ளர்களோடு போராடாத தொண்டைமான் மன்னர்களே இல்லை எனும் அளவுக்கு கள்ளர்கள் விளங்கினர். ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத தொண்டைமான் கள்ளர்களை அடக்க மேற்கொண்ட முயற்சிகள் நாட்டுப்புற பாடலாக உள்ளது.


" ராக்கத்தான்பட்டி மற்றும் செங்களூர் கள்ளர்களை அடக்க சங்கிலியோடு நாய்களை கொண்டு தாக்கினார். புலியூர் மற்றும் நடுவூர் நாட்டு கள்ளர்களை வெட்டி பொதியாக (மூட்டைகளாக) வண்டியில் ஏற்றி அனுப்பினார். விசங்கி நாட்டு கள்ளர்களின் வீம்பை அடக்க தாக்குதல் நடத்திய மகாராஜனான தொண்டைமான் ” என வரலாற்று வரிகள் தெரிவிக்கின்றன.


மன்னரின் முக்கிய படைபற்று தலைவர்கள் (இவர்கள் அனைவரும் கள்ளர்கள்)

1. ராய பல்லவராயர் (722 பேர் கொண்ட படை) ( போரம் - பெருங்களூர்)
2. நல்லபெரியான் மண்ணப்பவேளார் (அண்டக்குளம்)
3.ராமசாமி ராங்கியதேவர் ( வேகுப்பட்டி)
4.இளந்தாரி முத்து விசய அம்பலக்காரர் ( திருமயம் பகுதி - வெள்ளாற்று தெற்கு)
5.சுப்பையா அம்பலக்காரர் (ஆயிக்குடி)
6.ராமசாமி ராங்கியத்தேவர் (கட்டயாப்பட்டி)
7.முத்துக்கருப்பன் அம்பலக்காரர் (ஆனைவரி)
8.ஆவுடையப்ப சேர்வைக்காரர் (கண்ணனூர்)
The hollow crown - ethinohistory of little kingdom: nicholas dirks

ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத தொண்டைமான் மன்னர் ஈரவயல், கூத்தனுர் , பரந்தவயல், புதுவயல் என்ற நிலத்தையும், கூடலூர் என்ற ஊரையும் காசிக்கு தானமாக வழங்கினார்.

இவருடைய காலத்தில் தான் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருந்த காலம். தெற்கில் பாளையக்காரர்களையெல்லாம் அடக்கி ஒடுக்கி தங்கள் ஆளுமையை அங்கே நிலை நாட்டிய பிறகு மீதமிருந்த ஒருசிலர் அடங்கிப் போய் விட்டதாலும், மீதமிருந்த எதிரிகள் மிகச் சிலரே. அவர்களை அடக்கி ஒடுக்குவது ஒன்றும் ஆங்கில கம்பெனியாருக்கு அரிதான காரியமாக இருக்கவில்லை. ஆகவே தென் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட பிரிட்டிஷாரின் கைக்குப் போய்விட்டதாகவே சொல்லலாம். 1800ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் இந்தியாவின் தென் பகுதியைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டார்கள். இவர் ஆங்கில கம்பெனியாருக்கும், ஆற்காட்டு நவாபுக்கும் நட்பாக இருந்தார்.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1790 ல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளிமேல் படையெடு்த்து வந்தகாலை இம்மன்னர் ஆங்கிலேயருக்குத் துணையாக நன்று அவனை மடக்கியடித்தார். அதன் நன்றிக் கடனாக இவருக்கு “ராஜா பகதூர்” எனும் விருதை கர்நாடக நவாப் முகமது அலிகான் வாலாஜா (ஆற்காடு நவாப்) அளித்து கெளரவித்தார். 1796 அக்டோபர் 17ஆம் நாள் இவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

1797 தன்னிடம் அடப்பக்காரராக வேலை செய்த கூத்தப்பன் என்பவரிடம் கொண்ட அன்பினால் அவரது பெயரால் அன்னதான சத்திரம் ஒன்றை புதுக்கோட்டை- ராமேஸ்வரம் மார்க்கத்தில் கட்டினார்.


ஆற்காடு நவாப் தான் கம்பெனியாரிடம் வாங்கிய கடனை வசூல் செய்து கொள்ள பாளையக்காரர்களிடம் வரிவசூலைச் செய்து கொள்ளும்படி அனுமதி கொடுத்திருந்தார். ஆற்காடு நவாப்பிற்கு வரி செலுத்திய பாஞ்சாலங்குறிஞ்சி பாளையக் காரரான கட்டபொம்மு நாயக்கன் ஆங்கில கம்பெனியாருக்கு வரி கட்ட மறுத்தான். அப்போது ராணுவ பலம் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியார் தங்களுக்கு இந்த உரிமையை ஆற்காடு நவாப் கொடுத்திருப்பதாகவும், ஆகவே பாளையக்காரர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று வாதிட்டனர். இதனால் இவ்விருவருக்குள்ளும் தகராறு மூண்டது.

1799 பிரிட்டிஷ் கம்பெனியாருடன் கட்டபொம்மு நாயக்கன் போரில் ஈடுபட்டான். அந்தப் போரில் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக போர் செய்தார். நடந்த போரில் தோற்று, தப்பிப் பிழைத்த கட்டபொம்மு நாயக்கன், சிவகங்கை காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி வந்த கட்டபொம்மன், ஊமைத்துரை, கட்டபொம்மனின் மைத்துனர்கள் இருவர், மெய்காப்பாளர்கள் மூவர் என மொத்தம் ஏழு பேர் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கும் இடையில் புதுக்கோட்டை மகாராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட காட்டில் மறைந்திருந்தனர்.

தொண்டைமான் தரப்பு ஒற்றர்படை களப்பூர் காட்டில் சந்தேகப்படும்படி சிலர் நடமாடுகிறார்கள் என புதுக்கோட்டை அரண்மனைக்கு தகவல் அனுப்பியது.

புதுக்கோட்டை மகாராஜாவின் அனுமதி பெறாமல் தங்கியிருந்த காரணத்தினால் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறார் மன்னர்.

திருக்களம்பூர் "சர்தார் திருக்களம்பூர் முத்துவைரவ அம்பலக்காரர்" என்பவரிடம் பணி ஒப்படைக்கப்படுகிறது. அம்பலக்காரரும் அவரது படையும் தாரை தப்பட்டை முழங்க காட்டிற்குச் சென்று கட்டபொம்மனையும் மற்றவர்களையும் நாலா பக்கங்களிலும் சூழ்ந்துகொண்டார்கள். பிறகு கட்டபொம்மன தப்பிக்க வழி இல்லாமல் பிடிபட்டான்.

இதற்கிடையில் ஆங்கிலேயர்களிடமிருந்து கட்டபொம்மனைப் பிடித்துக்கொடுக்கும்படி ஆணை வர, ஆங்கிலேயர்களுக்குக் நட்போடு நடந்துவரும் தனது ஆட்சியில், அவர்களுடன் பகமையை ஏற்படுத்தி தன் நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் துன்பம் வந்துவிடக்கூடாதே என்ற நோக்கத்துடனும் கட்டபொம்மனையும் மற்றவர்களையும் ஆங்கிலேர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார் மன்னர். கைது செய்யப்பட்டவர்களை புதுக்கோட்டைக்கு அழைத்து வராமல் அங்கிருந்தே மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு ஊமைத்துரையும் மற்றவர்களும் தப்பிக்க, கட்டபொம்மன் மட்டும் கயத்தாறில் தூக்கில் போட ஆங்கில அரசு முடிவுசெய்தது ஆனால் இவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என சட்டப்படி ஒருவர் அடையாளம் காட்டி உறுதி செய்ய வேண்டும்.. இது வீரபாண்டியை நன்கு அறிந்த ஒருவர்தான் செய்யமுடியும் என்பதால் பக்கத்து பாளையக்காரரான எட்டப்பன் உதவியை அரசு நாடியது... கயத்தாறு வந்த எட்டப்பன் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் வீரபாண்டிய கட்டபொம்மன்தான் என உறுதிசெய்துவிட்டு புறப்பட்டார். எட்டபநாயக்கன் வம்சத்தினரிடம் அடப்பகாரனக இருந்தவர்கள் தான் கட்டபொம்மன் நாயக்கர் பரம்பரையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை தொண்டைமானின் தளபதி சர்தார் திருக்களம்பூர் முத்துவைரவ அம்பலக்காரர். கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் பிடித்துக் குடுத்ததால் முத்துவைரவ அம்பலக்காரர் மீது 'முத்து வைரவ அம்பலக் கும்மி' இயற்றப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான செய்திகள் 'முத்துவீரவைரவ அம்பலக்காரர் கும்மிமெட்டில்' உள்ளது.

கட்டபொம்மன் வைத்திருந்த ஆயுதங்களான கத்தி, ஈட்டி, களரி, குத்துவாள், கட்டாரி போன்றவற்றை முத்துவைரவன் வாரிசுகள் வீட்டில் வைத்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையன்று அவ்வாயுதங்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்கின்றனர்.

கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளை அக்காலச் சூழலையும் அரசியல் ஆதிக்க போராட்டங்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் 'காட்டிக்கொடுத்தான்' '(காட்டிக்கொடுத்தான்' என்னும் சொல் வரலாற்று ஏடுகளில் சமீபகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லாகும்)!தொண்டைமான் என்பது வரலாற்ற்றுச் சான்றுகளுக்கு முரணானது என்பது அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும். கட்டபொம்மனை மிகைப்பட உயர்த்திக் காட்டுவதற்க்காக கதை, நாடகங்கள் எழுதப்போந்த சில புத்தக ஆசிரியர்கள் அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் "தொண்டைமான் காட்டிக் கொடுத்தான்" என்றும் புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்றும் எழுதிவருவது நல்ல வரலாற்றுச் செய்தியாகுமா? இது போன்ற ஆதாரமற்ற வாசகங்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக இருக்க முடியும்.

புதுக்கோட்டை மகாராஜா கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தார் என்று சொல்லலாமே தவிர காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது பொருத்தமற்றது.




கட்டபொம்மன், தொண்டைமான் மன்னரிடம் அடைக்கலம் என்று கேட்கவும் இல்லை, அவர் வந்தது மன்னருக்குத் தெரியவும் இல்லை. அப்படியிருக்க தன் நாட்டிற்குள் வந்து புகுந்து கொண்டவரை, தங்களிடம் நட்பு பாராட்டும் கம்பெனியார் பிடித்துக் கொடுக்கும்படி கேட்டதிலோ, அவர்களுக்கு உடன்பட்டு நடந்து கொள்வதற்காக அவரைப் பிடித்துக் கொடுத்ததிலோ தார்மீக தவறு எதுவும் இல்லை.

மராத்திய மன்னர்களால் ஆண்டு வரப்பட்ட தஞ்சாவூர் ராஜ்யத்தை 1799 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு, 2ஆம் சரபோஜி மன்னரை தலைநகருக்கு மட்டும் ஆட்சி புரிய விட்டு, மற்ற பகுதிகளின் நிர்வாகத்தை கம்பெனியே மேற்கொண்டது. 1836 முதல் 1855 வரை ஆட்சி புரிந்த இரண்டாம் சிவாஜி இறந்த பின்னர் தஞ்சை முழுவதையும் பிரிட்டிஷார் நேரடியாகவே எடுத்துக் கொண்டனர். தஞ்சை பெரியகோவிலில் சரபோஜி மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. அதில் கி.பி. 1801 ல் மருது சகோதரர்களை கைது செய்ய சரபோஜிகள் ஆங்கிலேயர்களுக்கு பண உதவியும், படை உதவியும் செய்த தகவலும் பதிவாகி உள்ளது.

தஞ்சாவூர் தவிர ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளும் கிழக்கிந்திய கம்பெனியார் வசம் போய்விட்டது. அரசர் என்ற நிலை மாறி அவர்கள் “ஜமீன்தார்கள்” என்ற அளவில் தகுதி குறைக்கப்பட்டது. இப்படி தென்னகம் முழுவதையும் கபளீகரம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டின் ஒரே ஆட்சியாளராக ஆகிவிட்டனர். ஆனால் புதுக்கோட்டை மட்டும் சுதந்திர ராஜ்யமாக இருக்க அனுமதிக்கப்பட்டனர்.


பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சுயேச்சையான சமஸ்தானமாக விளங்கியது புதுக்கோட்டை சமஸ்தானம். பிரிட்டிஷ் கம்பெனியார் இவருக்கு 1803இல் கீழாநிலை எனும் ஊரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பரிசாக அளித்தனர்.

விஜய ரகுநாத தொண்டைமான் மூன்று கல்யாணம் செய்துக்கொண்டார். தொண்டைமாான் , ராணி பிரஹன்நாயகி ஆயி சாஹேபை மணந்து கொண்டார். பிறகு ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேபையும் திருமணம் புரிந்தார். மன்னருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள், இவர்களில் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த இருவர் மட்டும் மன்னர் இறக்கும் போது உயிரோடிருந்தனர். அவர்கள் இரண்டாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் (1797-1825), இரண்டாம் ரகுநாத தொண்டைமான் (1798 – 1839).

இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் பிப்ரவரி 1ஆம் தேதி வானுலகெய்தினர். ராஜா விஜயரகுநாத தொண்டைமான் 1807 மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 47. இவருடன் இவரது இளைய ராணியான ஆயி அம்மணி ஆயி சாஹேப் (சதி எனும்) உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்தார்.



நன்றி: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்


"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் தொண்டைமான்























வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்