திங்கள், 26 ஜூன், 2023

ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமான் (1640 – 1661)



பல்லவராய மன்னர்களின் பல்லவராயன் சீமை என்று அழைக்கப்பட்ட பகுதியில், கள்வர் கோமான் புல்லியின் வேங்கடத்தில் இருந்து வந்த தொண்டைமான்களில் ஒரு பிரிவினர் அம்புநாட்டில் தங்கியிருத்தனர். இவர்கள் தங்களின் ஆட்சி அமைவதற்க்கான காலத்தை எதிர்நோக்கி, காத்திருந்தனர்.

அதற்கான அடித்தளம் இட்டவரும், புதுக்கோட்டை தொண்டைமான் என்ற அரசமரபு உருவாவதற்கு வித்திட்டவரும், ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமானே ஆவார்.


ஆவடை ரகுநாத தொண்டைமானை பற்றிய நூல்கள் இந்திரகுலம், காசிப கோத்திரம், திருமங்கையாழ்வார் வழிவந்தர்வர்கள் என்றும், இவர்கள் மாலை “வாகை மாலை” என்றும் குறிப்பிடுகின்றனர். பல்லவர்களை போன்று சிங்கக் கொடியினை கொண்டவர்களாக இருந்தனர்.

இந்திரகுலம், காசிப கோத்திரம், வாகை மாலை பற்றிய விளக்கம் காண்போமானால்..

இந்திர குலம்: தொல்காப்பியமும் இந்திரனை போற்றுகிறது. வள்ளுவர் இவனை " இந்திரனே சாலும் கரி” இந்திரத்தைக் கட்டுப்படுத்தி வென்றதால் அவன் இந்திரன் என்று அழைக்கப்படுகிறான் என்கிறார். 




இந்திரன் என்பதற்கு தேவர்கோன், அரசன், சூரியன், நாக நாதன், கரியவன் என்று அகராதி விளக்கம் தருகிறது. 


தொண்டைமான்கள் இந்திர குலம் என்பதற்கு அரசகுலம் என்றும் பொருள் கொள்ளவும் முடியும்.


காசிப கோத்திரம்: காசிப கோத்திரம் காசிபர் ரிசியை குறிக்கும். காசிபர், மரீசி முனிவரின் மகன் ஆவார். காசிபருக்கு இந்திரன், திருமால் (வாமனர்), அக்கினி, நாகர்கள் என்று பல மகன்கள் உண்டு.  கரிகாற் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்த இரேணாட்டுச் சோழன், கடப்பை மாவட்டம் ஜம்மல் மடுகு தாலுகாவில் கோசினெ பள்ளி கிராமத்தில் கருங்கற்றூண் தூணில் தெலுங்கு எழுத்தில் உள்ள சாசனம் "சோழ மகாராசன் என்னும் அரசன், கரிகாற் சோழனுடைய பரம்பரையில் சூரிய குலத்தில் காசிப கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறான் (408 டிக 1904). இதே வேங்கடத்தில் இருந்து வந்த தொண்டைமான் மன்னர்களும் தங்களை காசிப கோத்திரம் என்று கூறிக்கொள்கின்றனர்.




வாகை மாலை: வெற்றி பெறும் செயலில் மேம்பட்டு அரசர்களுடன் போரிட்டுப் போர்த் தொழில்களில் வெற்றி பெற்றபின் மணமுடைய வாகைமாலை சூடி, தோற்ற அரசர்களின் வளம் பொருந்திய நாடுகளைக் கைக்கொண்டார்கள், அரசர்க்கு உரிய முடி நீங்கலாக ஏனைய அரசர்க்குரிய செல்வங்கள் எல்லாவற்றையும் உடையவரானார். தொண்டைமான்களும் வாகை மாலை சூடி இந்திய தேசம் உருவான பின்னும் இவர்கள் மட்டும் இந்த மண்ணை தனி ராஜ்யமாக ஆண்டார்கள்.

திருமங்கையாழ்வார்: சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்த 'காராளர் கற்பகம்’ எனப்பட்ட திருமங்கையாழ்வார் வழி வந்தவர்களாக தொண்டைமான்கள் குறிப்பிடுவதற்கு ஏற்ப, இவர்கள் பூர்விக பகுதியான திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர்மேல் மங்கைபுரக் கோவில் (இளங்கோவில்) சோழர் காலத்தில் பெரிய நாட்டவர் ’திருமங்கையாழ்வார்க்கு நாட் பூசை செய்து வந்ததை மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறுகிறது.







மிகவும் பழமை வாய்ந்த தொண்டைமான் பரம்பரையில் வந்த தொண்டைமான்களில் ஆவுடை ரகுநாத தொண்டைமான், விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கராயவுக்கு ராணுவ சேவை செய்துவந்தார் (1640 – 1661). "அனுராகமாலை" என்னும் நூல் "இந்நிலமன் சீரங்கராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை" என்று கூறுகிறது.





புதுக்கோட்டை தொண்டைமான் யானைக்கான தொடர்பு, பண்டைய தொண்டைமான் இளந்திரையன் பற்றிய பாடல் நமக்கு உணர்த்தும். “வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்” (அகம். 213).



விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயர் ராமேஸ்வரம் செல்லும்போது, அவரது யானைகளில் ஒன்றுக்கு மதம் பிடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் ஆவுடை ரகுநாத தொண்டைமான் தீரத்துடன் போராடி யானையை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.


தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர், தொண்டைமானுக்கு "ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா" எனும் பட்டத்தை அளித்தார்.

இவற்றோடு

1) நிலங்களையும்
2) அம்பாரி யானை
3) முரசு யானை
4) சிங்கமுகபல்லக்கு
5) பெரிய மேளங்கள்
6) உலா வரும்போது கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை
7) "கண்டபெருண்டா (யானையை ஒரு பறவை வேட்டை ஆடுவது போல்)" எனும் உருவம் பதித்த பதாகைகளை தனக்கு முன் எடுத்துசெல்லும் உரிமை
8) பகல் நேரங்களில் தனக்கு முன்னும் பின்னும் விளக்குகளை எடுத்து செல்லும் உரிமை
9) இவரது புகழை பாடிச்செல்ல கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை
10) சிங்கக்கொடி, மீன் கொடி, கருடக்கொடி, ஹனுமர்கொடி பயன்படுத்தும் உரிமை
11) குதிரைகள் படைசூழ செல்லும் உரிமை
12) வெண்குற்ற குடை உயபோகப்படுத்தும் உரிமை

என பல உரிமைகள் ஆவுடை ரகுநாத தொண்டைமானர்க்கு அளிக்கப்பட்டது.


விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வெங்கடராயர் (1630 முதல் 1642 வரை) காலத்தில் அவருடைய உதவியுடன்  ஆவடை ரகுநாத தொண்டைமான்  தொண்டைமான் தனது ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யம் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் தொண்டைமான்கள் தலைமையில் ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்யமாக உருவாகியது. 





No:15 1920-1921 அரசால் ஆவணப்படுத்தப்பட்ட செப்பேட்டில் கிபி1641லே புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரிடம் ஜெயங்கொண்ட நாடும், அதனுடைய 16 பிரிவை கொண்ட பாப்பாகுடி நாடு மற்றும் மாகாணம், நாடு,கூற்றம்,கிராமங்கள் இருந்ததாக குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் இந்த நிலப்பரப்பு தஞ்சை மராட்டிய படையெடுப்புக்கு பின்பு மராத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது.


திருமலை சேதுபதி காலத்தில் அவரின் வருகையின் போது புதுக்கோட்டை தொண்டைமான் மரியாதை அளித்ததாக " மறவர் சாதி வர்ணம்" எனும் ஒலைச்சுவடிகள் கூறுகிறது. இவரது ஆட்சி காலம் ( கிபி 1645-1670) . ( Mackenzie manuscript : madras journal of literature and science பக்கம்:347, கிபி,1836).


திருமலை நாயக்கர் ஒலைச்சுவடி ஒன்றில், அவரது காலத்தில் இருந்த சமஸ்தானமாக புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் கால 72 பாளையங்களில் குளத்தூர் தொண்டைமான் பாளையமும் குறிக்கப்பட்டுள்ளது.















































கிபி 1639 ல் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் உதவியோடு வெள்ளாற்றின் வடக்கே உள்ள பல்லவராயர் பகுதிகளை தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது. (கிபி 1819 ல் எழுதப்பட்ட அரண்மனை குறிப்பு)

இந்த பகுதியில் திருப்பெருந்துறை ஆவுடையார் திருநாமத்தை தாங்கிய ஆவுடை ரகுநாத தொண்டைமான் தனது வலிமையால், தனக்கு கிடைத்த பகுதியில், ஸ்ரீரங்கராயரின் உதவியோடு அரையராக ஆட்சி செய்து வந்தார்.

திருமலை நாயக்கர் ஒலைச்சுவடி ஒன்றில், அவரது காலத்தில் இருந்த சமஸ்தானமாக புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் கால 72 பாளையங்களில் குளத்தூர் தொண்டைமான் பாளையமும் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கரின் காலம் கிபி (1623-1659) ஆகும் (oriental historical manuscripts in tamil language vol 2 பக் 161 கிபி 1835)

மன்னர் இரகுநாத சேதுபதி (1647-1672) மீது பாசம்கொண்டவர் ஆவுடை ரகுநாத தொண்டைமான், அதனால் தனது முதல் மகனுக்கு ரகுநாத ராய தொண்டைமான் என்று பெயரிட்டார்.


பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு முதன் முறையாக இரண்ய கற்ப வேள்வி நடத்தி இரண்ய கற்ப யாஜி என்ற பெயரைப் பெற்றவர் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் காலத்திலேயே அதாவது கிபி 1645- 1672 ல் புதுக்கோட்டை பாளையத்தின் தலைவராக தொண்டைமான் குறிக்கப்படுகிறார். (மெகன்சி சுவடிகள்).





வெள்ளாற்றின் வடக்கில் இருந்து ஜெயங்கொண்டான் நாடு வரை புதுக்கோட்டை தொண்டைமான்களின் நிலப்பரப்பு கிபி1641லே இருந்தது என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாத உன்மையே. இந்த செப்பேட்டில் குறிக்கப்பெற்ற பாப்பா நாடு கள்ளர் குடியின் விசையாத்தேவரவர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகிக்கும். ( "ராஜேந்திரசோழவளநாடு பொய்யூர் கூற்றத்துப் பாப்பாக்குடி நாடு, சிறுநெல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் நல்லவன் விசையாத்தேவரவர்கள் குமாரர் ராமலிங்க விசையாத்தேவரவர்கள் பாப்பானாட்டவர்களுக்கு காணியாக இருக்கும் செயங்கொண்டநாத சுவாமி".)

விசயநகர அரசர் ஸ்ரீரங்கராயர் உதவியுடன் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பல்லவராயர் பகுதிகளை கைப்பற்றுதல்:-


" In a palace document, dated 1819AD, it is said that 180 years before that date " the pallavarayars were ruling at pudukkottai and raya tondaiman with the consent of sriranga raya of anagundi( vijayanagar) conquered it" (General history of pudukkottai state R.aiyar 1916 page 120)

கிபி 1819 ல் எழுதப்பட்ட அரண்மனை குறிப்பில், கிபி 1639 ல் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் உதவியோடு புதுக்கோட்டை பல்லவராயர் பகுதிகள் ராய தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக  தொண்டைமான் மன்னர்கள் வெளியிட்ட 24 செப்பேடுகளிலும் ஸ்ரீரங்கராயரின் மேலாண்மையை மட்டுமே குறித்துள்ளனர்.

கிபி 1655 ல் திருமலை நாயக்கர் பிறமலை நாட்டு பின்னத்தேவருக்கு அளித்த செப்பேட்டில், சாட்சியாக தொண்டைமான் புதுக்கோட்டை என குறிப்பிடப்பட்டுள்ளது.(பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 493)

திருமலை நாயக்கரின் காலம் கிபி (1623-1659) ஆகும் (oriental historical manuscripts in tamil language vol 2 பக் 161 கிபி 1835).

இவற்றின் முலம் புதுக்கோட்டையின் பெரும்பான்மையான பகுதிகள் கிபி 1686 க்கு முன்பே அதாவது கிபி 1639 ல் தொண்டைமான் வசம் வந்துவிட்டதை அறியலாம். 

ஆவடை ரகுநாத தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் கிருஷ்ணா முத்து வீரப்ப நமன தொண்டைமான். இந்த ஆவுடை தொண்டைமானின் மகனான இரகுநாத தொண்டைமான், பிற்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை தோற்றுவித்தார்.

ஆவுடை ரகுநாத தொண்டைமான் மகன்கள் மற்றும் மகள்

1) ராஜா ஸ்ரீ ரகுநாத ராய தொண்டைமான், 
2) ராஜா ஸ்ரீ கிருஷ்ணா முத்து வீரப்ப நமன தொண்டைமான், 
3) ராய பச்சை தொண்டைமான் சாஹிப், 
4) ராய பிரம்ம தொண்டைமான் சாஹிப், 
5) ஸ்ரீமதி காதலி அம்மாள் ஆயி சாஹிப்

ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமான் 1661 இல் காலமானார்.

ஆவுடைய தொண்டைமான் தன்னுடைய வலிமையால் அரையர் நிலைக்கு உயர்ந்தவர், சோழ கல்வெட்டுகளில் காணப்படும் "கள்ளப்பற்று" என்பது எத்தனை வலிமை உள்ள வீரர்கள் வாழ்ந்த பகுதி என்று நடுநிலையான ஆய்வாளர்கள் அறிவார்கள் ஆனால் இராமநாதபுரம் வரலாறு என்ற நூலில் எஸ். எம் கமால் என்ற ஆய்வாளர், கள்ளர்கள் திருட்டை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும், மதுரை நாயக்கர் ஆட்சியில் கள்ளர்கள் மக்களை மிகவும் கொடுமை செய்ததாகவும் அவர்களை கிழவன் சேதுபதி மன்னர் வந்தே அடக்கி, திருத்தி காவல் தொழில் தந்ததாகவும், பல கள்ளர்களை கொன்றதாகவும் அதில் ஆவுடைய தொண்டைமான் மகன் ரகுநாத தொண்டைமானை தனது படையில் சேர்த்துக் கொண்டதாகவும், மற்ற கள்ளர்கள் திருந்தி விவசாயம் செய்தார்கள் என்று எந்த அடிப்படையான ஆதாரம் இல்லாமல், ஒரு வன்மொதோடு எழுதி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆய்வு : உயர்திரு. சியம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்