விஜய ரகுநாத ராய தொண்டைமான் ஆட்சி காலத்தில் கிபி 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது புதுக்கோட்டை பழைய அரண்மனை! இந்த அரண்மனையை மையமாக வைத்தே நான்கு திசைகளிலும் ராஜவீதிகள் உருவாக்கப்பட்டது! பழைய அரண்மனை தற்போது உபயோகத்தில் இல்லை! ஆனால் அரண்மனையில் இருந்த தொண்டைமான் மன்னர்களின் பூஜைவீடு இன்று தட்சிணாமூர்த்தி கோயிலாக உள்ளது! மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதி வியாழன் மக்கள் பிரார்த்தனை செய்ய கோயில் திறக்கப்படுகிறது.
கிபி 18 ஆம் நூற்றாண்டில் திருவரங்குளம் காட்டில் கடும் தவங்கள் புரிந்து வந்த சாது சதாசிவ பிரமேந்திரர் விஜய ரகுநாத ராய தொண்டைமான் மன்னருக்கு ஆசி வழங்கி, தட்சிணா மூர்த்தி மந்திரத்தை மணலில் எழுதி கொடுத்தார். மந்திரம் எழுதப்பட்ட மணல் தட்சிணாமூர்த்தி கோயிலில் கிட்டதட்ட 3 நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்படுகிறது.
சதாசிவ பிரம்மேந்திரரின் உருவப்படம் இங்கு வழிபாட்டுக்கு உள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலிலும் சதாசிவ பிரம்மேந்திரருக்கு வழிபாடுகள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மக்களின் உணர்வுகளில் கலந்த தட்சிணாமூர்த்தி கோயிலில் மன்னர் குடும்பத்தினரால் அவ்வப்போது பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது!
மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையில் உள்தோற்றம் மற்றும் பூஜை வீடுகள் எவ்வாறு இருந்திருக்கும் என அறிய தட்சிணா மூர்த்தி கோயிலுக்கு சென்று காணுங்கள்! இறை அருளோடு 300 ஆண்டுகால வரலாற்றையும் அசை போடலாம்!
ஆய்வு. திரு சியாம் சுந்தர் சம்பட்டியார்