திங்கள், 26 ஜூன், 2023

தொண்டைமான் இளந்திரையன்



காஞ்சி பண்டு அருவாநாடு எனப் பெயர்பெற்று விளங்கிற்று அந்தநாட்டில் வாழ் மக்கள் அருவாளர் என அழைக்கப் பெற்றனர்.

அருவாத்தலைவன், 
அருவாநாடன், 
அருமைநாடன், 
அருமடான், 
அருவாநாட்டான், 
அருமநாட்டான் 

என்னும் பட்டங்களையுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர். 

இந்த பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது.

கரிகாலன் காலத்திற்குப் பிறகு, அந்நாடு, தொண்டையர் என்பார் ஆளுகைக்கு உட்பட்டதால், அது தொண்டையர் நாடு அல்லது தொண்டைநாடு என்ற பெயர் பெற்றது; திரையன் என்பானொருவன் தோன்றி, பவத்திரி என்ற ஊரை உரிமைகொண்டு வேங்கடத்தைச் சூழ உள்ள அந்நாட்டை ஆண்டு வந்தான். இவனே பெரும்பாணாற்றுப்படை பெற்ற தொண்டைமான் இளந்திரையன்.

தொண்டைமான் இளந்திரையனையும் சான்றோர் “தொண்டையோர் மருக”என்பர். தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும்.


“வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும்
ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்”(அகம். 213)

எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதற்குத் தென்னெல்லை பெண்ணையாறும், மேலெல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாமென்பது கல்வெட்டுக்களால் அறிகின்றோம்.

தொண்டைமான் என்ற கள்ளர் குடியினர், இன்றுவரை தாங்கள் வாழும்  நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்றனர். 1948 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இன்று புதுக்கோட்டை தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் MLA வாக இருக்கிறார். இலங்கையின் அமைச்சராக ஆறுமுக தொண்டைமான் இருக்கிறார். தொண்டைமான் நாடு என்றால் புதுக்கோட்டை, அதை தவிர கள்ளரில் தொண்டைமான் மரபினர் வாழும் பகுதிகள்

தொண்டராயன்பட்டி:- தஞ்சாவூர் மாவட்டம்,  பூதலூர் வட்டத்தில்  அமைந்துள்ள  தொண்டராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


தொண்டராம்பட்டு :- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில்  உள்ள தொண்டைராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


தொண்டைமான்தோப்பு :- தஞ்சாவூர் மாவட்டம்,  அம்மாப்பேட்டை வட்டத்தில் அருமலைக்கோட்டை ஊராட்சியில்  உள்ள தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


தொண்டைமான்பட்டி :- திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் வட்டத்தில் வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டைமான்பட்டி :- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்


தொண்டைமான்பட்டி :- திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் வட்டத்தில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டைமான்ஊரணி :புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை  வட்டத்தில் தொண்டைமான்  பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


தொண்டைமான்ஏந்தல்:- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் வட்டத்தில் தொண்டைமான்  பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்


தொண்டைமான்நல்லூர்:- புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை வட்டத்தில்,  தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டைமான்புஞ்சை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், கலியரான்விடுதி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டைமான்விடுதி :புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை  வட்டத்தில் குளவாய்ப்பட்டி  ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


தொண்டைமான் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், பட்டத்திக்காடு ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டைமான் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், குளமங்கலம் ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி. 


தொண்டைமான்குடியிருப்பு :- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம்,வல்லவாரி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டைமான் குடியிருப்பு :- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், அரையப்பட்டி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டைமான் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், ஆலங்காடு ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


தொண்டாம்புரியர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், கருப்பட்டிப்பட்டி ஊராட்சியில் தொண்டாம்புரியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 


இத்தொண்டையரை


“உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டை யோர்”(பெரும்பாண். 454-5) என்றும்,

“பொருவார் மண்ணெடுத் துண்ணும்
அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்”(குறுந். 240) என்றும்,

சான்றோர் கூறுவதை, நோக்கின் இத்தொண்டையர் யானைப்படை கொண்டு பெரும்போருடற்றும் சிறப்புடையரென்பது தெளிவாம்.
தொண்டைமான்களில் இளந்திரையன் என்பவன் மிக்க சிறப்புடையவன். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
“இருநிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த், திரை தருமரபின் உரவோன் உம்பல்” (பெரும்பாண்.29-31) என்பதனால், இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினானென்றும், அவன் வழித் தோன்றல் இவனென்றும் அறியலாம்.

வென்வேற்கிள்ளி யென்னும் சோழனுக்கும், நாகநாட்டு வேந்தன் மகள் பீலிவளை யென்பாட்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்ததாக, இவன் திரையில் மிதந்து கரை யடைந்தானென மணிமேகலை கூறுகிறது.

கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் தன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான்.


சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான்.

சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும்,நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி,காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி,வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான்.

இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது.  காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாராகும். தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான்.

‘ஆதொண்டை’ என்னும் கொடி ஒன்று உண்டு, ஆடி அம்மாவாசை விரதம் இருப்போர் இக்காலத்தில் தொண்டங்காயை உண்டுகொண்டு விரதம் இருப்பர். இந்த ஆதொண்டை என்னும் சொல் முதலெழுத்து குறைந்து தொண்டு என வழங்கலாயிற்று எனலாம். இந்தத் தொண்டைக்கொடி மிகுதியாகப் படர்ந்திருந்த நாடு தொண்டைநாடு எனப்பட்டது எனக் கொள்வாரும் உண்டு.

தொண்டைமான் இளந்திரையன் வழி வந்தவர்களே தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாராகும். பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கையை ஏழு நாட்களில் அழித்தவன் தொண்டைமான் ஆவுடைரகுநாத தொண்டைமான்  இவர்கள் எல்லாம் தொண்டைமான் வம்சம் சார்ந்தவர்கள். தொண்டைமார், தொண்டையார், தொண்டைபிரியர், தொண்டைமான் கிளையர் என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும் சோழன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன.




கரிகாலனையடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.

இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி முத்தரையர் என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன.

காடவராயர் மரபினர் 


காடுவெட்டியார் மரபினர்

சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும், தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.





வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்