திங்கள், 26 ஜூன், 2023

வைத்திலிங்க தொண்டைமான்



225 வருடங்களுக்கு முன்பு கள்ளர்நாடான வல்லநாட்டு வைத்திலிங்க தொண்டைமான் சிலையை திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோவிலுக்குள் சிலை நிறுவியவர் படமாத்தூர் கெளரி வல்லபதேவர். இதே போல பட்டமங்கலம் ஐயனார் கோவிலிலும் வைத்திலிங்க தொண்டைமானுக்கு சிலை உள்ளது.

சிவகங்கை சீமையில் உள்ள கள்ளர் நாடுகளுள் ஒன்றான பட்டமங்கல நாட்டார்களின் வரலாறு புதுக்கோட்டையில் இருந்து தொடங்குகிறது. கிபி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாட்டில் இருந்து பட்டமங்கலத்தில் குடியேறி வாழத்தொடங்கினர்.

பட்டமங்கலத்தில் கிபி 18 ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் சூரியத்தொண்டைமான். சிவகங்கை சீமை வரலாற்றில் புகழ்பெற்ற வைத்தியலிங்க தொண்டைமானின் தந்தையாவார்.



சூரியத்தொண்டைமான் வளர்ந்தவுடன் தனது முன்னோரின் வரலாற்றை தெரிந்து கொண்டு, வல்லநாட்டில் உள்ள கருப்பரை தரிசித்து, கருப்பரின் நினைவாக சில ஆயுதங்களை பட்டமங்கலத்துக்கு எடுத்து சென்று கருப்பராக நினைத்து வழிபட்டார். இன்றும் அவர் வணங்கிய ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடைபெறுகிறது. வல்லநாட்டு கருப்பர் கோயில் திருவிழாக்களிலும் இவரது வாரிசுகள் பங்கு கொள்கின்றனர்.

பாண்டியர் காலம் :

புதுக்கோட்டை கல்வெட்டு எண் 595, மாறவர்மன் வீரப்பாண்டியன் காலத்தை சேர்ந்தது (கிபி 1352) , அக்கல்வெட்டில் " வல்லநாட்டு பூவரசகுடி அரையர்களில் சூரியத்தொண்டைமான் " என தொண்டைமான் குல அரையரை குறிக்கிறது.



வல்லநாட்டு கள்ளர்நாடாய் விளங்கியது என புதுக்கோட்டை கல்வெட்டு எண் 38, கூறுகிறது (வல்லநாட்டு கள்ளப்பால் நாடாய் இசைந்த நாடு). வல்லநாட்டில் தொண்டைமான்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்து அவர்களில் ஒரு பிரிவினர், பட்டமங்கலத்தில் குடியேறியது நிரூபணமாகிறது. பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு.


பட்டமங்கலத்தார் ஒலைசுவடிகள்:

பட்டமங்கலநாட்டில் இருந்து சிவகங்கை சமஸ்தானத்திற்கு அனுப்பட்ட ஒலைகளில் பட்டமங்கலத்தாரின் பூர்வீகம் பற்றிய வாசகங்களும் இணைந்துள்ளதை காணமுடிந்தது.




"கேரள சிங்கவள நாடு மேலதிருத்தி முட்டத்தூர் பட்டமங்கலம் அட்டமாசித்தி ஆண்டபிள்ளை நயினார் மதியாத கண்ட விநாயகர் நவயடி அழகு சௌந்தரி திருமணி முத்தாறு மாதவன் நயினா ரென்று பெயர் விளங்கிய கரும்பீசர சேதுவிராயர் வல்லநாட்டுக் கருப்பையா கிருவ கிடாச் சித்து நாடுல தேசி முதல் காசி வரையில் சிறந்த நாடு எங்கள் நாடு மங்கை நாடு".

பட்டமங்கல தொண்டமான்களின் முன்னோர் பற்றிய ஒலைச்சவடி தகவல்



"ஆனந்த சித்திரை கேரளசிங்கவள நாடு மேலதிருத்தி முட்டத்தும் பட்டமங்கலம் அடைக்கலம் சாத்த நாடு பெரிய அம்பலம் சூரியத் தொண்டைமான், 1. வைத்தியலிங்க தொண்டமான் 2. ஆனைகாத்த தொண்டமான் 3. ரகுபதி தொண்டமான் 4. முத்தழகு தொண்டமான் 5. ராமசாமி தொண்டமான் 6. வெங்கடாசலத் தொண்டமான் 7. அரண்மனை அம்பலம் ஆறுமுகம் சேர்வை 8. பட்டமங்கலம் தேவாலயம் பிர்மாலயம் சிவாலயம் பொருந்திய மதியாத கண்ட விநாயகர் அட்டமாசித்தி நவயடிக் காளியாகிய அழகு சௌந்தரி அம்மன் அய்யனார் பந்தி கிராம தேவதைகள் விருந்தி பண்ணுகிற வழக்கம்”

பட்டமங்கல நாட்டை ஆளும் குறுநில அதிபர்களான அம்பலக்காரர்களுக்கு திருக்கோஷ்டியூர் தேர் திருவிழாக்களில் முதல் மரியாதைகள் தரப்படுகின்றன. இந்த பட்டமங்கல தொண்டைமான்களின் வரிசையில் வந்த வைத்தியலிங்க தொண்டைமான், சிவகங்கை சம்ஸ்தானத்துக்குட்பட்ட பாளையக்காரர். இவர் சிவகங்கை மன்னருக்கு நெருக்கமானவராக திகழ்ந்துள்ளனர். சிவகங்கைக்கு படைஉதவி செய்தவர். சிவகங்கை அரசகுடும்ப விசுவாசி.

ஒரு முறை சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது இவரை அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் சகஜமாக ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார்.

ஒரு முறை காளையார்கோவிலில் தெப்பக்குளம் அமைத்த சின்ன மருது அந்த தெப்பக்குளத்தில் பல் நீரூற்றுகள் கிளம்பி அதன் தண்ணீர் சமையத்தி அளவுக்கு அதிகமாக பெருக வைத்தியலிங்க தொண்டைமானை அழைத்து அதை சரி செய்ய யோசனை கேட்டார், அதற்க்கு தொண்டைமான் அயிரைமீண்கள் பல வாங்கி விட்டால் இந்த தேவையில்லாத நீரூற்றுகளை சரி செய்யலாம் என யோசனை தெரிவித்திருந்தார்.

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரின் மறைவிர்க்கு பின் நடந்த வாரிசுரிமைபோட்டியில் படமாத்தூர் கௌரிவல்லபரை வளைத்த மருது அவரை சிறையில் அடைத்ததாகவும் அப்போது ஒரு நாட்டிய காரப் பெண்ணின் உதவியோடு கௌரிவல்லபரை தப்புவிக்க உதவிசெய்தவர். மருதுசகோதரர்களுக்கு எதிராக படமாத்தூர் கௌரி வல்லபதேவரை ஆதரித்தற்க்காக முன்பு நட்பாய் இருந்த மருது சகோதரர்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.

கௌரிவல்லபர் மோதலில் விபரம் தெரிந்த சின்னமருது சந்திக்கவரச்சொல்கிறார். பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டு சின்னமருதுவின் ஆட்கள் இவரைபிடிக்கமுயல கத்தியால் குத்திக்கொன்டு தற்க்கொலை செய்து கொள்கிறார். இது திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோவிலுக்கு அருகே நடந்தது. அதே இடத்தில் பின்பு பட்டமேற்ற கௌரிவல்லபத் தேவர் வைத்தியலிங்க தொண்டைமானின் தியாகத்தையும் உதவியையும் பாராட்டி அவருக்கு திருப்பத்தூர் கோட்டை கருப்பர்கோவிலுக்குள் ஒரு சிலை வைத்தார். இன்றும் அந்த கோவிலில் வைத்தியலிங்க தொண்டைமானின் சிலையை கானலாம்.

இலங்கையை சேர்ந்த தமிழ் அமைச்சரான சௌமிய மாதவ தொண்டைமான் வைத்தியலிங்க தொண்டைமானின் வம்சத்தை சார்ந்தவர் ஆவார். வைத்தியலிங்க தொண்டைமானின் வம்சாவளியினர் பட்டமங்கலத்திலும் இலங்கையிலும் நிறைபேர் வாழ்கின்றனர்.  அமைச்சராலும், T.புதூர் பங்காளிகளாலும் இச்சிலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.





இவ்வாறு புதுக்கோட்டை யில் பாண்டியர் காலத்தில் வாழந்து வந்த வல்லநாட்டு தொண்டைமான்கள் கிபி 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையில் குடியேறி பட்டமங்கல நாட்டு அம்பலங்களாக உயர்ந்து தங்களது வீரத்தால் சிவகங்கை சீமை மீட்பு போர்களில் தங்களது தீரத்தை காட்டி இன்றும் தொண்டை மன்னர்களின் பெருமை பேசும் விதமாக இலங்கை அமைச்சர்களாக சாதித்து வருகின்றனர்.

தொண்டைமான்கள் சென்ற இடமெங்கும் ஆளும் சிறப்பு பெற்றவர்கள். திருப்பதி முதல் திருக்கோஷ்டியூர் வரை, அறந்தை முதல் இலங்கை வரை.

ஆதாரம்: 

ஒலைச்சுவடிகள் மற்றும் பூர்வீகம் பற்றிய தகவல்கள்
பட்டமங்கலம் கும்பாபிஷேக மலர் வெளியீடு 1987
புதுக்கோட்டை கல்வெட்டுகள்


ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்