திங்கள், 26 ஜூன், 2023

பொ. ஆ. 1807 ~ 1825 - இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர்


ராஜா விஜயரகுநாத தொண்டைமானின் இறப்பை யடுத்து அவருடைய மகனான விஜய ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை அரசராக வந்தார். விஜயரகுநாத ராய தொண்டைமான் 1797இல் பிறந்தவர். முந்தைய மன்னரின் இரண்டாவது மனைவியும், மன்னருடன் உடன்கட்டை ஏறியவருமான ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேப் அவர்களுடைய மகன். தனி ஆசிரியரை நியமித்து இவர் அரண்மனையிலேயே கல்வி கற்றவர். இவர் தந்தை காலமானபோது இவரும், இவருக்கு இளையவர் ஒருவரும் மட்டுமே உயிரோடு இருந்தனர்.

இவருடைய தந்தையார் காலமான 1807 பிப்ரவரி 1ஆம் தேதி இவர் பதவிக்கு வந்தார். அப்போது இவருக்கு பதினெட்டு வயது ஆகவில்லை. இவர் மேஜர் ஆகும் வரையில் ஆட்சிப் பொறுப்பு அப்போது தஞ்சாவூரில் ரெசிடெண்ட் பதவியில் இருந்த ஆங்கிலேயர் மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் என்பவர் தலைமையில் இயங்கிய ஒரு மேலாண்மை அவையிடம் இருந்தது.

இவருடைய பங்காளி விசய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார், அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி வியரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஒப்புக்கெர்ணபின், இவருக்க முடிசூட்டுவிழா பதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன்நடைபெற்றது. 

இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு ரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார், கழந்தைகளாகவிருந்த விஜய ரகநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழிகளும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் ்பயிற்றுவிக்கப்பெற்றனர்.

மன்னர் பதவிக்கு வந்து பதினெட்டு வயது ஆகும் வரை பொறுப்பு வகித்த வில்லியம் பிளாக்பர்ன் காலத்தில் புதுக்கோட்டை புதுப்பொலிவு கண்டது. பழமைக் கோலம் பூண்டிருந்த புதுக்கோட்டை புதுத் தோற்றத்தைக் கொடுத்தார் இவர். சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டு போக்கு வரத்துக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. வீடுகள் அனைத்தும் ஓட்டு வீடுகளாக மாறியது. பொது அலுவலகங்களுக்கென்று புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. 

இம்மனர் காலத்துத்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக்ளாகப் பகுக்கப்பட்டது; நீதிமனறங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்ட்டனர். அரசாங்கத்திற்கு வேண்டிய மற்றைக் காரியங்களும் செய்யப்பெற்றன.

1812-ல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று, இவ் பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812-ல் இம்மன்னருக்கும், இவர் தம்பியார்க்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். 

 1825ஆம் ஆண்டில் புது அரண்மனையொன்று திருக்கோகர்ணத்தில் கட்டப்பட்டது. பிளாக் பர்ன் தஞ்சையில் ரெசிடெண்டாக இருந்ததால் அங்கு ஆண்டு வந்த மராத்திய மன்னர்கள் ஆட்சி மராத்தி மொழியில் இருந்தது. அதே மராத்திய மொழியையும் இங்கு அவர் அறிமுகப் படுத்தினார். அரசின் நிர்வாக மொழியாக மராத்தி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இந்த நிலைமை அடுத்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது. உள்ளாட்சித் துறையும், நீதித் துறையும் ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்து பிற இடங்களில் நடப்பதைப் போல புதுக்கோட்டையிலும் அறிமுகம் செய்தார் இவர். நகரின் மையப் பகுதியில் அழகு மிளிரும் வகையில் ஒரு கோட்டையையும் அதனைச் சுற்றிலும் அகழியும் அமைத்து புதிதாக உருவாக்கினார். 

நகரமைப்பில் புதுமை செய்து ஒவ்வொரு திசையிலும் ஒரு முக்கிய வீதி, அதன் பின்னால் ஒவ்வொரு வீதியும் 1,2,3 என்று பெயரிடப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டது. புதிய புதுக்கோட்டைக்கு மேஜர் பிளாக் பர்ன் அஸ்திவாரமிட்டார். அப்போது எழுப்பப்பட்ட அந்த அரண்மனை காலவோட்டத்தில் இப்போது அழிந்து ஆங்காங்கே ஒருசில சுவர்கள் மாத்திரமே மிஞ்சியிருக்கிறது. அவைகளை இப்போதும் மேல ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி பகுதிகளில் காணலாம்.


இவருக்கு இருமனைவியர் உண்டு. விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1812ஆம் வருஷம் புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த சிங்கப்புலிராயர்  என்பவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு திருமலை பன்றிகொன்றான் என்பவரின் மகளையும் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். விஜய ரகுநாத ராய தொண்டைமானுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகன் பெயர் விஜய ரகுநாத ராய தொண்டைமான், இவர் 1823 டிசம்பரில் இறந்து போனார். மகள் ராஜகுமாரி ராஜாமணி பாயி சாஹேப்.

இவர் 1825-ல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இரஜநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் தொண்டைமான்










வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்