திங்கள், 26 ஜூன், 2023

பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் - (1928 ~ 1948)




புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னராக ராஜகோபால தொண்டைமான் பதவியேற்றார். இவரே புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி தொண்டைமான் மன்னராக விளங்கினார்.      இவர் ராமசந்திர தொண்டைமானுக்கும் அவருடைய இரண்டாவது மனைவி மாதுஸ்ரீ ராஜா ஸ்ரீமதி ராணி ஜானகி ஆயி சாஹேபுக்கும் 1922 ஜூன் 23இல் பிறந்தவர்.

1928 நவம்பர் 19இல் ஆறே வயதான ராஜகோபால தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக நியமனம் பெற்றார். இவருக்கு ரகுநாத பல்லவராயர் ரெஜண்டாக 1929 பிப்ரவரி வரை பணிபுரிந்தார். 1929 பிப்ரவரி முதல் 1944 ஜனவரி 17 வரை புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாகத்தை ஆங்கிலேய அதிகாரி அலெக்சாண்டர் தோடென்ஹாம் என்பார் கவனித்துக் கொண்டார்.



இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.

இவருடைய காலத்து சாதனையாக சமஸ்தானத்துக்கு ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டது. 1930இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை கட்டடக் கலையில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அழகிய ஆடம்பர அரண்மனையில் தான் இப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. 

                       

ராஜகோபால தொண்டைமான் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் புதுக்கோட்டை மனமகிழ் மன்றத்தின் தலைவராகவும், கொடைக்கானல் போட் சவாரி கிளப்புக்குத் தலைவரகவும் இருந்தார். பிரிட்டிஷ் அரசு இவருக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் விருதை 1935லும் ஆறாம் ஜார்ஜ் மன்னர் பட்டமளிப்பு விழா மெடலை 1937ஆம் ஆண்டிலும், இந்திய சுதந்திர தின மெடலை 1948லும் பெற்றார்.

இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.




1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய சமயத்தில் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றை சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். சமஸ்தானங்கள் அனைத்தும், மன்னர் பதவியையும், சுகபோகம், அதிகாரம், சொத்துக்களையும் இழக்கத் தயாராக இல்லாத நிலையில் தானே விரும்பி இந்தியாவுடன் சேர்ந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை மட்டுமே என்பது ஒரு சிறப்பு மிகு இந்திய வரலாறு.

ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . சிறந்த மோட்டார் வாகன தொழில் நுட்ப வல்லுனராக திகழ்ந்து மிக சாமான்ய மனிதானக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர்1997இல் மறைந்தார்.

ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

புதுக்கோட்டைக்கும் இராமநாதபுரத்திற்கும் ஓர் காலத்தில் ஒரு கல்யாண சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மற்றும், புதுக்கோட்டை யரசர்களின் சம்பந்திகளாயுள்ளோர். மாங்காட்டான் பட்டி இராங்கியர், மேலைக் குறிச்சி இராங்கியர், கல்லாக்கோட்டை சமீன்தார் சிங்கப்புலி ஐயா, காட்டுக்குறிச்சிப் பன்றிகொண்டார், நெடுவாசல் சமீன்தார் பன்றிகொண்டார் முதலாயினார் ஆவர்.

புதுக்கோட்டை இராட்சிசயம் சிறிதாயிருப்பினும் தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குப் பின்பு இதுவே தமிழ் நாட்டு அரசாங்கமாக விளங்கிவந்தது. தமிழ் மொழியைப் புரந்த அம்மன்னர்களைப் போலவே இவர்களும் இப் பொழுது புரந்து வருகின்றனர். சர் வில்லியம் பிளாக்பர்ன் கூறிய படி புதுக்கோட்டை மன்னர் மிகவும் அதிகாரமுள்ளவராவர் .

"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் தொண்டைமான்























வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்