திங்கள், 26 ஜூன், 2023

இராணி " காதலி நாச்சியார் "


மூவேந்தர்களுக்கு பின் சுதந்திர மன்னராக, ஏறக்குறைய தமிழத்தின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் மாமன்னர் பர இராஜகேசரி, ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி (1671–1710).


புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் தங்கையான காதலி நாச்சியாரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். இவரது இயற்பெயர் காத்தாயி ஆயி என்றும் மேலும் "கதலி நாச்சியார்" என்றும் குறிப்பிடுகின்றனர்.


இராசராசன் சோழன் மகனான இராசேந்திரனைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவள் வானவன் மகாதேவி என்றாலும், இராசராசன் பட்டத்தரசியாகத் திகழ்ந்தவள் உலகமகாதேவி. இவள் இரணியகருப்பம் என்னும் விழா எடுத்தாள், பொன்னைக் கொண்டு கோயில் ஒன்று எடுப்பித்தாள். அது போல காதலி நாச்சியார் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி பல அறக் கொடைகளை வழங்கியிருப்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சேதுபதிகளின் வழக்கப்படி முதல் மனைவியாக செம்மநாட்டு மறக்குல மங்கை மணந்தார். இரண்டாவதாக கள்ளர்க்குல காதலி நாச்சியாரை மணந்து பட்டத்து அரசியாக்கினார்.( Nicholas dirks hollow crown. P.160)

இராமேஸ்வர திருக்கோயில் உள்துறை கட்டளைக்கு மேலச் சீத்தை என்ற கிராமத்தை இராணியர் கிபி 1693 ல் இராணியார் வழங்கியதை சேதுபதி செப்பேடுகள் கூறுகின்றன.

சேதுபயணிகளின் பயன்பாட்டிற்கு எம்மண்டலமும் கொண்டான் எனும் கிராமத்தை தானமாக வழங்கினார். அந்த அன்னசத்திரம் இன்றும் உச்சிப்புளி என்ற செயலற்று உள்ளது. அந்த கிராமம் இன்று என்மனம் கொண்டான் என அழைக்கப்படுகிறது.

கிழவன் சேதுபதியின் களத்தூர் செப்பேடு கிபி 1709 ல் வெளியிடப்பட்டது. இச்செப்பேட்டில் " ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் தர்மபத்நியான ராய தொண்டைமானார் புத்ரி ரெகுநாத ராய தொண்டைமானார் சகோதரியான காதலி நாச்சியாரவர்கள் " இராணியார் என குறிக்கப்படுகிறார்.



கிபி 1709ல் தேர்போகி நாட்டிலுள்ள களத்தூருக்கு " ரெகுநாத காதலி ஆயிபுரம்" என்று பெயர் மாற்றி 55 பாகங்களாக பிரித்து 55 அந்தணர்களை குடியேற்றி கொடையளித்த செய்த இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. *இவ்வூர் இக்காலத்தில் டி.களத்தூர் என அழைக்கப்படுகிறது. (தொண்டைமான் செப்பேடுகள் - பக் 31. த.தொ.து.வெ)

கிழவன் சேதுபதி மன்னர் இறந்ததும் அவருடன் காதலி நாச்சியாரும் மற்றும் அவருடன் மற்ற 46 மனைவியரும் உடன் கட்டை ஏறினர். அதற்கு பிறகு நடந்த சடங்குகள் The madura manual (கிபி 1868) Nelson பின்வருமாறு கூறியுள்ளார்.

ராமநாதபுரம் நகரத்துக்கு வெளியே பெரிய குழி வெட்டப்பட்டு மரக்கட்டைகள் நிரப்பப்பட்டன. மன்னரின் உடல் அலங்கரிக்கப்பட்டு எறியூட்டுவதற்கு வைக்கப்பட்டது. மரக்கட்டைகளின் அடிப்பாகத்தில் நெருப்பு வைக்கபட்டது. பிராமணர்கள் சடங்குகளை மேற்கொண்டனர். அச்சமயத்தில் உடன்கட்டை ஏற வேண்டிய அரசியின் தலைமுதல் பாதம் வரை நகை மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் எறிந்து கொண்டிருக்கும் மன்னரின் உடலை சுற்றி வந்தார்கள்.

தொண்டைமான் மன்னருக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தன் தங்கையான காதலி நாச்சியாரை கட்டி அணைத்து துக்கத்தை வெளிபடுத்தினார். அரசி காதலி நாச்சியார் கண்கள் குளமாகி உணர்ச்சியற்றவாறு இருந்தாள். தான் அணிந்திருந்த ஆபரணங்களை அகற்றினாள். சுற்றியிருந்த கூட்டத்தினை நோக்கினாள். உடன்கட்டையை நோக்கினாள். உடன்கட்டையில் பாய்ந்து கிழவன் சேதுபதியுடன் தீயில் ஐக்கியமானாள். கூடியிருந்த மக்களின் அழுகை சத்தம் விண்ணை பிளந்தது.


உடல்கள் முழுதாக எரிந்தபின் பிராமணர்கள் சடங்குகளை செய்தனர், எலும்பு மற்றும் சாம்பலை உயர்ந்த ரக துணிகளில் அள்ளி கட்டினர்.அவை ராமேஸ்வர தீவுக்கு எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. தீயில் பாய்ந்து மன்னருடன் கலந்த கற்புக்கரசிக்கு, உடன்கட்டை ஏறிய இடத்தில் கோயில் எழுப்பபப்பட்டது. 

( Madura manual 1868 - nelson page 245-246)jesuit letters ft martin-1713)


நன்றி : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்