திங்கள், 26 ஜூன், 2023

ஆறுமுகன் தொண்டமான்




மலையகத் தந்தையின் பேரன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) ,27.05.2020 காலமானார்.

பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கலாமா, ஈழத் தமிழர் விவகாரம் குறித்து விவாதம் எழும்போதெல்லாம் பெரும்பாலானவர்களால் இப்படியொரு கருத்து முன்வைக்கப்படும். ஆனால், இலங்கையில் தனி நாடு கேட்டு போராடியவர்கள், பிழைக்கப்போனவர்கள் அல்ல. அவர்கள், வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கையின் பூர்வகுடி மக்கள். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கப் போனவர்கள் என யாருமே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறார்கள். அவர்கள்தான் மலையகத் தமிழர்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களான இவர்கள், மலை சார்ந்த இடங்களில் வாழ்ந்துவருவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.






இவர்கள் யார், எதற்காக இங்கிருந்து இலங்கைக்குப் போனார்கள் என்பது பற்றித் தெரிந்துகொண்டால்தான், மாரடைப்பால் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பற்றி நாம் புரிந்துகொள்ள முடியும்.

19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம், சாதிக்கொடுமைகள் தாங்காமல் மக்கள் அல்லாடி வந்தனர். மக்களின் இந்த நிலையை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆங்கிலேயர்கள், அவர்களை இலங்கைக்கு அழைத்துச்சென்று, வேலைவாய்ப்புகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். தனுஷ்கோடி வரைக்கும் நடைப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தோணிகள் மூலமாக தலைமன்னாருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கிருந்து மீண்டும் இலங்கையின் மலையகப் பகுதிகளுக்கு நடைப்பயணமாகவே அழைத்துச் செல்ல, போகும் வழியிலேயே பலர் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள், ரப்பர், காப்பி, டீ எஸ்டேட்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். நாளொன்றுக்கு பல மணி நேரத்துக்கும் மேலாக வேலைபார்க்க நிர்பந்திக்கப்பட்டனர். அடி, உதை எனப் பல சித்ரவதைகளுக்கும் ஆளாகினர்.

அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவர்தான் சௌமியமூர்த்தி தொண்டமான். இவர்களின் மூதாதையர், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பதூர் அருகே உள்ள பட்டமங்கலம் புதூர் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.

இலங்கையில் மலையகத் தமிழர்களின் முகமாகத் திகழ்ந்தவர். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், மலையகத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படுபவருமான சௌமிமய மூர்த்தியின் பெயரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். தமிழர்களின் கலை & கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்; குரல்கொடுத்தவர்.

அப்படி மலையக மக்களின் உரிமைக்காகப் போராடியவரும், மலையகத் தந்தை என போற்றப்படுபவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன்தான், தற்போது மறைந்துள்ள ஆறுமுகம் தொண்டமான். 1964-ம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், தமிழகத்தின் ஏற்காடு மான்ட்ஃபோன்டில் பள்ளிப் படிப்பையும் கொழும்பு ரோயல் கல்லூரியில், கல்லூரிப் படிப்பையும் பயின்றுள்ளார். தாத்தாவின் வழியில், 1990-ம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து, அரசியலில் காலடி எடுத்துவைத்துள்ளார். 1993-ம் ஆண்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994-ம் ஆண்டு, கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று பிரமாண்ட வெற்றியுடன் நாடாளுமன்றம் சென்றார். சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், 1999-ம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனர், சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் குடும்பவழி வாரிசாக மட்டுமின்றி, அவருக்குப் பின்னர் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்று அரசியல் வாரிசாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். சிங்களத் தலைவர்களோடு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் மலையக மக்களின் நலன்களுக்காக அவர்களுடன் இணக்கமான நட்பைக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். மலையக மக்களின் நலன்களுக்காகக் கடந்த 30-ஆண்டுகளாகப் பணியாற்றியவர். 25-ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டவர். தமிழக அரசியல்வாதிகள் பலருடன் மிகவும் நெருக்கமான நட்பைப் பேணி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 2010-ம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மலையகத்துக்கும் அழைத்துச்சென்று, தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்தவரும் இவர்தான்.

மறைந்த ஆறுமுகம் தொண்டமான், அடிக்கடி தமிழகம் வந்து சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்துவரும் உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். தமிழக அரசியல்வாதிகளிலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவர், ஆறுமுகம் தொண்டைமான். ஜல்லிக்கட்டுக் காளைகளையும் வளர்த்து வருகிறார். 

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்