வியாழன், 15 ஜூன், 2023

சங்கரப்பதிக் கோட்டை





இது தேவகோட்டையின் அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ளது சங்கரப்பதிக் கோட்டை. செம்பொன்மாரிக் கோட்டை 1200இல் இரண்டாம் குலோத்துங்கன் பாண்டியர் ஐவரை வென்ற இடமென ஒட்டக்கூத்தர் பாடியுள்ள கோட்டை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் அரசிருக்கை வைத்திருந்த கோட்டையிது.

செம்பொன்மாரி நாட்டுக்கு உரிய தொன்மைக் கோட்டை. சங்க காலத்தில் பாண்டிய வேந்தரின் அரசிருக்கைக் கோட்டை. பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த போரில் சோழன் கோட்டையை கைப்பற்றினான்.

இதை சங்கப் பாடல் பதிவு செய்திருக்கிறது. பண்பாட்டுப் போர்க்களங்கள் என்ற தனது ஆய்வுநூலில் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் "செம்பொன்மாரிப் போர்" என்ற தலைப்பில் தனி அதிகாரமாய் எழுதியுள்ளார்.

பதினான்காம் நூற்றாண்டில் சேதுபதி ஒருவன்  இக் கோட்டையை
புதுப்பித்திருக்கிறான். 1728 -1729 இந்த இரண்டு ஆண்டுகள் இக் கோட்டையில் தன் படையோடு ஆண்டான் பவானி சங்கரன்.

1674 -1729 ஆண்டுகளில் சேதுவள நாட்டை ஆண்டவன் புகழ்மிகு கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதிக்கு பட்டத்து ராணியும் 45 ஆசைநாயகியர் இருந்தும் குழந்தை இல்லை.

தனது தளபதிகளான புதுக்கோட்டை கறம்பைக்குடி தொண்டைமான் சகோதரர்களின் தங்கை காதலி ஆயி நாச்சியாரை  இரண்டாவதாக மணந்தான். கள்ளிச்சியான இவள் வயிற்றில் பிறந்தவன் தான் பவானி சங்கரன்.

கிழவன் சேதுபதி இறந்தான், பவானி சங்கரன் சிறுவன், கிழவனின் உறவினர்களான திருவுடையாத் தேவனும் தண்டத் தேவனும் 1726 வரை ஆண்டனர்.

சேதுவளநாட்டின் அரசுரிமை மறவர்களுக்கு உரியது, அதிலும் செம்பிநாட்டுக்கிளை மறவருக்கே உரியது, இந்த விதிகளை சூழ்ச்சியால் முறியடித்த பவானிசங்கரன் சேதுபதி அரியணையில்
அமர்ந்தான்.



மறவர்கள் கிளர்ச்சிசெய்தனர் சமாளிக்க முடியாத பவானி சங்கரன்
தன் ஆதரவுப் படையோடு கள்ளர்கள் மிகுதியானபகுதியிலுள்ள இந்தக் கோட்டைக்கு வந்தான்.

பவானி சங்கரன், இரகுநாத கிழவன் சேதுபதியின் மகனான இவர். அவரது தந்தையின் மறைவுக்குப்பிறகு அரியணை ஏற விரும்பினார். ஆனால் இவர் சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மறக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் என்ற காரணத்தினால் இராமநாதபுர அரண்மனை மரபின்படி இவருக்கு அரசுரிமை மறுக்கப்பட்டது. 

1711-1726 காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சரபோசி கூட்டணியில் சேதுபதி அரியணையை கைப்பற்ற முயன்றான். மராட்டிய மன்னர்.செய்யும் படை உதவிக்கு கைமாறாக தான் இராமநாதபுரம் சேதுபதியானதும் பட்டுக்கோட்டை சீமையை, தஞ்சை மன்னருக்கு விட்டுக்கொடுப்பதாக வாக்களித்தார். ஆனால் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பிறகு தஞ்சை மன்னருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இதனால் கோபமுற்ற தஞ்சை மராத்திய மன்னர் பவானி சங்கர சேதுபதியின் எதிரிகளின் படையெடுப்புக்கு உதவி செய்தார். ஓரியூர் அருகில் நடந்த போரில் பவானி சங்கரத் தேவர் தோற்கடிக்கப்பட்டார்.


பவானிசங்கரன் 1728 -29  இரண்டு வருடம் இக்கோட்டையில் வாழ்ந்தான். கள்ளிச்சி மகனான தன்னை கள்ளர் நாடுகளின் அம்பலங்கள் பாதுகாப்பர், தாய்மாமன்களான புதுக்கோட்டை தொண்டைமான்கன் உதவிகள் செய்வார்கள் என்று நம்பியிருக்கிறான்.  ஆனால் தொண்டைமான் இவர்க்கு இவருக்கு எதிரான அணியில் இருந்துள்ளார். 

அந்த இரண்டு ஆண்டுகள் இக் கோட்டையை தனது பதியாக (இருப்பிடமாக) கொண்டு பவானி 'சங்கரன் ' ஆண்டதால் தான் இதற்கு சங்கரப்பதிக் கோட்டை எனப் பெயர் விளங்கியது. அதற்கு முன்பு இது ஊரின் பெயரால் செம்பொன்மாரி கோட்டை என்றே அழைக்கப்பட்டது.


இடையில் என்ன நடந்ததோ? மராட்டியனின் படை கோட்டையை கைப்பற்றி பவானி சங்கரனைக் கைது செய்து தஞ்சையில் சிறைவைத்து விசாரணை நாடகம் நடத்திக் கொன்றான். 

அறந்தாங்கி வட்டத்தில் முப்பத்தியாறு கிராமங்களைக் கொண்ட சிங்கவள நாட்டின் கள்ளர் அரையன் மராட்டியனின் நண்பன் மெய்க்கன் கோபாலன் செம்பொன்மாரியை திறையாகப் பெற்றதாய் மராட்டிய செப்புப் பட்டயத்தில் (1758இல்) பதிவாகியுள்ளது.


18 ஆம் நூற்றாண்டில் மருது பாண்டியர் போர்ப் பயிற்சி பாசறை மற்றும் புகலிடமாகவும், வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரன் ஊமைத்துரை மறைந்து கொள்ளும் இடமாக பயன்படுத்தியுள்ளார். 

இந்தக் கோட்டையின் கட்டுமானம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இதில் 50 கற்தூண்கள் இதன் வடிவமைப்பிற்கு மிகவும் பொருத்தமாக காட்சியளிக்கிறது.

ஹைதர் அலி, தளபதி சங்கரபதி இந்தக் கோட்டையில் தங்கியிருந்து குதிரைகளுக்குப் போர்பயிற்சி அளித்தார். அதனால் இது சங்கரபதி கோட்டை என்று ஆனது என்று ஒரு கதை சொல்லப்படுகிறது. ஆனால் அதற்க்கான அதரங்கள் ஏதும் இல்லை.

ஆய்வு : ஐயா. ஆறாவயல் பெரியய்யா

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்