திங்கள், 26 ஜூன், 2023

பொ. ஆ. 1839~1886 - பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர்




புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் தங்களைத் தங்கள் குலதெய்வமான பிரஹதாம்பாள் அம்பாள் பெயரால் அவருடைய தாசர்கள் என்று அழைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி இவர் பெயரோடு பிரஹதாம்பாள் தாஸ் என்று சேர்க்கப்பட்டிருக்கிறது.    
             
முந்தைய அரசரான ரகுநாத தொண்டைமானுக்கு இந்த ராமச்சந்திர தொண்டைமான் 1829 அக்டோபர் 20இல் பிறந்தார். இவர் தாயார் ராணி கமலாம்பாள் ஆயி சாஹேப். அரண்மனையிலேயே தனி ஆசிரியர்களிடம் கல்வி பயின்ற இவர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் தன் தந்தை இறந்தவுடன் பிரிட்டிஷ் ரெசிடெண்டின் ஆதரவோடும் வழிகாட்டுதலோடும் அரசாட்சியை ஏற்றுக் கொண்டார்.

ராஜா ராமச்சந்திர தொண்டைமான் மேஜராகும் வரை இவர் சார்பில் புதுக்கோட்டையில் இருந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் ரெசிடெண்ட் ஆட்சியைக் கவனித்து வந்தார். இவருக்கு பதினெட்டு வயது அடைந்த பின் இவரை அரசராக அறிவித்து, “ஹிஸ் எக்செலன்சி” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட வேண்டுமென்று பிரிட்டிஷார் அறிவிப்பு செய்தனர். 1844ஆம் வருஷம் இந்த ராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டை அரசாட்சியை நேரடியாக ஏற்று நிர்வகிக்கத் தொடங்கினார்.

ராமச்சந்திர தொண்டைமான் ஆட்சியில் சமஸ்தானத்தின் நிதிநிலை நன்றாக இல்லை. மேலும் நிர்வாகத்தில் பல ஊதாரிச் செலவுகளும், நிர்வாக சீர்கேடுகளும் நடப்பதாகவும் கண்டறியப்பட்டது. இப்படிப்பட்ட நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இவருக்கு பிரிட்டிஷ் கம்பெனியார் ரெசிடெண்ட் மூலம் இவருடைய விருதான “ஹிஸ் எக்செலன்சி”யை பயன்படுத்த 1859ஆம் ஆண்டில் ஒரு முறையும்,1873இல் ஒரு முறையும் தடை விதித்தது. 1878ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை நிர்வகிக்க “திவான்” எனும் முதல் அமைச்சர் போன்ற பதவிக்கு திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த திவான் ஏ.சேஷையா சாஸ்திரி என்பாரை சென்னை சர்க்கார் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.


புதுக்கோட்டை வரலாற்றில் இந்த சேஷையா சாஸ்திரி என்பார் தன் திறமையாலும், சாதனைகளாலும் போற்றப் படுகிறார். இவர் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் புதுக்கோட்டை நிர்வாகத்தில் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். புதுக்கோட்டை நகரை சீரமைத்து புதுப்பொலிவூட்டினார். இன்றைய நவீன காலகட்டத்தில் நகரமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்கிற பாதையில் அன்றைக்கே புதுக்கோட்டையை ஒரு மாதிரி நகரமாக உருவாக்கினார் சேஷையா சாஸ்திரி. புதுக்கோட்டைக்குச் சிறப்பு செய்கின்ற புதுக்குளத்தையும், நகரத்தின் மத்தியில் சாந்தாரம்மன் கோயிலையொட்டி அமைந்திருக்கும் பல்லவன் குளத்தையும் சீர்படுத்தி புதுப்பித்தார். 1884இல் புதுக்கோட்டைக்கு தபால், தந்தி அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பழமையிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் புதுமைக்குக் கொண்டு வரும் பணிகள் அனைத்தையும் சேஷையா சாஸ்திரி செய்தார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட பல ஊர்களில், சின்னஞ்சிறு கிராமங்களில் அமைந்துள்ள பல ஹிந்து ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. 

ராமச்சந்திர தொண்டைமானுக்கு “ஹிஸ் எக்செலன்சி” விருதும் 11 பீரங்கி குண்டு மரியாதையும் 1885இல் வழங்கப்பட்டது. 1875இல் இவருக்கு இங்கிலாந்தின் இளவரசரான “பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்” பெயரால் வழங்கப்பட்ட விருது கிடைத்தது.  1877இல் இவருக்கு “எம்பரஸ் ஆஃப் இந்தியா” எனும் தங்க மெடல் வழங்கப்பட்டது.

ராமச்சந்திர தொண்டைமான் ராணி பிரஹாதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் என்பவரை 1845 ஜூன் 13இல் திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் 1. கமலாம்பாள் ராஜாமனி பாயி சாஹேப் (இறப்பு: 1903 ஜனவரி 24). மங்களாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் (இறப்பு. 1873). ராமச்சந்திர தொண்டைமான் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார். அவர் ஜானகி சுப்பம்மாள் என்பவர். இவர் நெடுவாசல் ஜமீன்தாரின் மூத்த மகள். இந்தத் திருமணம் 1848 ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்தது. இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு இரு குழந்தைகள் ஒரு பையன் ஒரு மகள் பிறந்தனர். அவர்கள் சிவராம ரகுநாத தொண்டைமான் (இறப்பு 1867), பிரஹதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் (1852 – 1903).

ராமச்சந்திர தொண்டைமான் காலத்திலேயே அவருடைய மகனான சிவராம ரகுநாத தொண்டைமான் காலமாகிவிட்டார். அதனால் மகனை இழந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் என்பவரை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இவர் மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் பேரன். அதாவது மகள் பிரஹதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேபின் மகன். அவரை அடுத்த மன்னராகத் தேர்வு செய்தனர்.

ராமச்சந்திர தொண்டைமானுக்கு இசையில் ஆர்வம் அதிகம். கர்நாடக சங்கீதத்துக்கு அதிக ஆதரவு கொடுத்தார். அரண்மனையில் அடிக்கடி கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடைபெறலாயின. ராமச்சந்திர தொண்டைமானே ஒரு சிறந்த பாடலாசிரியர், கவிஞர். இவர் இயற்றிய குறவஞ்சி நாடகத்துக்கு இவரே இசை அமைத்து அரங்கேற்றினார். அந்த குறவஞ்சி அரங்கேறிய இடம் விராலிமலை முருகன் ஆலயம்.                                 


1. அப்பீல் கோர்ட்டு
2. மூன்று ஜட்ஜிகள்உள்ள செஷன்ஸ் கோர்ட்டு
3. ஸ்மால் காஸ் கோர்ட்டு
4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள்



இலாகாக்கள்

1.வரிவசூல் (ரெவின்யூ).
1. கிராமம்
2. தாலூகா
3. காவல்
4. சிறைச்சாலை
5.தபால்
6.பங்களா
7.மராமத்து
8.உப்பளம்
9.காடு
10.நீதிமன்றம்
11.ஸர்க்கில் ஆபீஸ்









HH Subbamma Bai Sahib Rani of Pudukottai


"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் தொண்டைமான்
















வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்