புதுக்கோட்டை
வந்ததில் இருந்து மாவட்டம் சார்ந்த வரலாறு தேடி படிக்கிறேன்.
டாக்டர்.ஜெ.ராஜாமுகமது அவர்களின் நூல்கள் மியூசியத்தில் கிடைக்கிறது."ஒரு
ராஜாவின் காதல் கதை " என்கிற சிறிய நூல் படித்ததில் இருந்து மனம் நொந்து
போனது.
22.7.19
அன்று தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வாரிசாக இருந்திருக்க வேண்டிய "சிட்னி
மார்த்தாண்டன் " பிறந்தநாள். தமிழகத்தில் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் மன்னனாக
முடிசூட வேண்டிய நாயகன் எந்த ஒரு அதிகாரத்தையும் பெறாமல் , இம் மண்ணை ஆளவும்
முடியாமல் , மண்ணில் காலடியும் எடுத்து வைக்க முடியாமல், ஒரு சராசரி பிரஜையாக
இத்தாலியின் ஒரு சொகுசு ஹோட்டலில் மாரடைப்பால் காலமானார் சிட்னி.
யார்
இந்த சிட்னி ?
புதுக்கோட்டை
மன்னர் ராஜா மார்த்தாண்ட பைரவத்தொண்டைமான் மூலம் ஆச்த்திரேலிய சீமாட்டி ”எச்மி
சாரட் மோலி பிங்க்” கருவில் உதித்தவர் தான் நான் இங்கு குறப்பிட்டுள்ள குட்டி
இளவரசன் பெயர் ‘ சிட்னி மார்த்தாண்ட தொண்டைமான்” புதுக்கோட்டை
சமஸ்த்தானத்தின் எட்டாவது மன்னர் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் (1839-1884)
இவருக்கு வாரிசு இல்லை.
அப்போது
ஆண் வாரிசு இல்லாத சமஸ்தானங்களை ஆங்கில அரசு ஏப்பம் விட்டுக் கொண்டு இருந்தது.
ஆனால் புதுக்கோட்டைக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தது. ராஜாவின் மகள் வழிப் பேரன்
மார்த்தாண்டனை தனது வாரிசாக சுவீகாரம் எடுத்துக்கொண்டார் ராமசச்திர தொண்டைமான்.
அவர்
15.4.1886 அன்று மரணம் அடைந்தார்.பாலகன் மார்த்தாண்டனுக்கு பட்டம்
சூட்டப்பட்டது.கவர்னரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசர் மேலை நாட்டு கலாசாரங்கள்
கற்று தேர்ந்தார். இந்திய கலாச்சாரம் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற
திவான் எண்ணம் பலிக்க வில்லை.
இந்தியாவிலும்
ஐரோப்பாவிலும் சுற்றுப்பயணம் ஏற்பாடு
செய்யப்பட்டது. மன்னருக்கு புதுக்கோட்டை பிடிக்கவில்லை திருச்சியில் உள்ள (
இப்போது கண்டோன்மெண்ட் அருகில் ) அரண்மனையில் தங்கி உல்லாசமாக இருந்து வந்தார்.
1894
ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முழு பொறு ப்பையும் மன்னர் மார்த்தாண்ட
பைரவத் தொண்டைமான் ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19.
உலக
நாடுகளை சுற்றிய மன்னர், 10.8.1915
அன்று மெல்பேர்ன் நகரில் மோலியை திருமனம் செய்து கொண்டார். புதுக்கோட்டையில்
குழப்பம், மோலியை யாருக்கும் பிடிக்கவில்லை. ஆங்கிலேய அரசும் ஒரு ஆஸ்திரேலியர்
வாரிசை மன்னராக்க விருப்பம் இல்லாமல் இருந்தது.
மனைவியை யாரும் அங்கிகரிக்க வில்லை
என்பது மன்னருக்கு வருத்தம். 22.11.1895 அன்ரு மாலை 5.30 க்கு விலை உயர்ந்த ரோல்ச்
ராய்ஸ் காரில் மோலியுடன் வந்து இறங்கினார் புதுக்கோட்டையில். (அப்போது அந்த காரை
இந்தியாவில் வாங்கிய முதல் நபர் இவர்தான். பெட்ரோல் ஆச்திரேலியாவில் இருந்து
வந்துள்ளது.) நாடும் மக்களும் அரசும் ராணிக்கு உரிய மரியாதை வழங்காததால் மனம்
உடைந்து போயிருந்தார் மன்னர். வயிற்றில் கருவும் உருவானது, அந்த கருவை அழிக்க ராஜ
சூழ்ச்சிகள் எல்லாம் நடந்தது. காலமெல்லாம் புதுக்கோட்டையின் ராணியாக உலா வரலாம் என
எண்ணிய மோலி யின் கனவு தவிடு பொடி ஆனது. 16.4.1916 அன்று இலங்கை வழியாக இருவரும் ஆஸ்திரேலியா சென்றனர். அதன் பின் மோலி புதுக்கோட்டைக்கு வரவே இல்லை..
22.7.1916
அன்று ராணிக்கு சிட்னியில் ஆண்குழந்தை பிறந்தது. அவருக்கு சிட்னி மார்த்தாண்டன்
என பெயர் சூட்டப்பட்டது. ஆங்கில அரசும், சமஸ்த்தான திவானும், உள்ளூர் மக்களும்,
சிட்னி மாத்தாண்டனை மன்னரின் வாரிசாக வந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர்.
வெறுத்துப்போன மன்னர் குதிரை ரேசிலும், ஏனைய கேளிக்கை யிலும் அய்ரோப்பியநாடு களில்
சுற்றி திரிந்தார். ஜார்ஜ் மன்னரை பார்த்து சிட்னியை சமஸ்தான வாரிசாக்க எடுத்த
முயற்சி தோல்வியில் முடிந்தது.
போங்கடா
நீங்க ளும் உங்க சட்டமும் என்று மனைவிக்காகவும், மகனுக்காகவும் சமஸ்தான உரிமையையே
விட்டுக் கொடுத்தார். 22,00,000- ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டு (அப்போ பவுன் 15
ரூ) வெளிநாடு போவிட்டார். பாரிசில் குடியேறினார்.
29.5.1928
ல் மரணம் அடைந்தார். அவரது உடலை புதுக்கோட்டை கொண்டுவர கூட அப்போதைய அங்கில அரசு
ஒத்துக் கொள்ளவில்லை, மோலியும், சிட்னியும் புதுக்கோட்டை வந்தால் வாரிசு சிக்கல்
எழுந்து விடும் என்கிற பயம். பாரிசில் இருந்து கப்பலில் உடல் இங்கிலாந்து கொண்டுவரப்பட்டு வைதீக முரையில் சடங்கு நடத்த ஏற்பாடு செய்தார் மோலி. மன்னர் மறைவுக்கு
பின் வைதீக முறைப்படி வெள்ளை ஆடையை உடுத்தி வந்தார் மோலி.
தந்தை
இல்லா சிட்னி ஏனோ தானோ வென்று வளர்ந்தார். அமெரிக்காவில் ஒரு பெண்ணை திருமணம்
செய்தார் (பிறகு விவாகரத்து ஆனது). தந்தையின் அகால மரணம் தனக்கு வரவேண்டிய அரச பதவி
பறி போனது போன்றவற்றால் மனநிலை சற்று பாதித்து இருந்தார். 20.11.1967 அன்று மோலி
புற்று நோயால் மரணம் அடைந்தார். தந்தையி்ன்
கல்லறைக்கு அருகிலேயே லண்டன் நகரில் தாயின் உடலையும் புதைத்தார் மகன் சிட்னி.
எங்கெங்கோ
சுற்றி 4.1.1984 ல் புதுக்கோட்டை சமஸ்தான வாரிசு யாரும் இல்லாத அனாதையாக
அமெரிக்காவில் இறந்து போனார்.
புதுக்கோடையின்
எந்த வீதிகளில் போனாலும் சிட்னிக்கும் மோலிக்கும் செய்த துரோகம் தொக்கி நிற்கிறது.
ஒரு அதிகாரம் கிடைத்த உடனே அந்தபுற இராணிகளின் எண்ணிக்கை யை அதிகரித்துக் கொள்ளும்
மன்னர்களுக்கு இடையே, தான் காதலித்து மணம் புரிந்த ஒருத்திக்காக தன் சமஸ்தானத்தையே விட்டுக்கொடுத்து வாழ்ந்து மறைந்த மன்னர் பைரவ மார்த்தாண்டன் கதாநாயகன் தான்.
தன் தாய் தந்தையின் காதலை உணர்ந்து தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே தாயையும்
கொண்டு வந்து புதைத்த இளவரசன் எனக்கு என்றும் இளவரசன் தான். அயல் நாட்டு பெண்
என்று உள்ளே வரவிடாமல் செய்த மோலி கணவன் இறந்த பின்னும் வெள்ளை ஆடை உடுத்தி இந்திய
கலாச்சாரம் படி வாழ்ந்த மோலி எனக்கு கற்புக்கரசி தான். வரும் திங்கள் கிழமை
22.7.2019 சிட்னி மார்த்தாண்டன் பிறந்தநாள்.
பதிவு: ஐயா. மணி சேசன்