திங்கள், 26 ஜூன், 2023

கீழாநிலைக் கோட்டை



கீழாநிலை எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை. 61 ஏக்கர் பரப்பளவுள்ளது. 


காரைக்குடி அரிமளம் செல்லும் வழியில் உள்ள புகழ்மிக்க கோட்டை தான் இந்த கீழா நிலைக்கோட்டை. கீழாநிலை என்பது கிழக்கு நிலை என நிர்ணயிக்கப்படுகிறது. ஏனென்றால் மேல நிலை, புது நிலை என இதேபோல் உள்ள ஊர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கில் உள்ளது. கீழாநிலை புதுக்கோட்டை
யிலிருந்து 20.5 மைல்கள் தொலைவில் உள்ளது. புதுநிலை வயல் எனும் வருவாய் கிராமத்தை உள்ளடக்கியது (மக்கள்தொகை அப்பொழுது 1167).

கோட்டைக்குள் அனுமன் கோவில், அருள்மிகு அரியநாயகி அம்மன் கோவில், அம்மன்குளம், தெற்கில் விஷ்ணு ஆலயங்களை உள்ளடக்கியது. தெற்கில் முனீஸ்வரர் கோவிலையும் கொண்டுள்ளது.

மிகவும் பழமையான,பாரம்பரியமிக்க கோட்டையான கீழாநிலைக் கோட்டையை கட்டியது சோழரா இல்லை பாண்டியரா என்ற கேள்வி இன்று வரை தொடர்கிறது. ஏனென்றால் கல்வெட்டுகள் ஏதும் கிடைக்காத நிலையில், சிங்கள புனித நூல்களாக மகாவம்சம் மற்றும் குலவம்ச நூல்களில் இக்கோட்டையானது சோழர், பாண்டியர்களின் எல்லை இராணுவமாக செயல்பட்டதை பற்றி விவரிக்கிறது.

இலங்கை மஹாவம்ச கூற்றுப்படி ஒரு சிங்கம் பொன்னமராவதியில் இருந்து கீழாநிலை வரையும் அதைத்தாண்டி தஞ்சைமாவட்டம் மணல்மேல்குடிவரை ஓடியதாகவும் அதன்மூலம் சோழர், பாண்டியர்கள் தங்கள் எல்லைகளை 10,11ம் நூற்றாண்டுகளில் வகுத்துள்ளனர்.

இந்த சிங்கம் ஓடிய பகுதியானது வடக்கே சிங்களர்கள் தென்னிந்தியாவில் பிடித்து வைத்திருந்த பகுதிகளை தொட்டிருந்தது.
இடைப்பட்ட பகுதியில் 12 மற்றும் 13 ம் நூற்றாண்டுகளில் சாலைமார்க்க போக்குவரத்தானது கீழாநிலை முதல் அறந்தாங்கி வரை கிழக்கு வரையிலும் திருப்பத்தூர் முதல் பொன்னமராவதி மேற்கு வரை இன்றளவும் விரிவடைந்துள்ளது.

10 மற்றும் 12 நூற்றாண்டு ஆரம்பத்தில் சோழர்களின் வலிமையான கிழக்கு கோட்டையாக இருந்த் கிழாநிலைக் கோட்டையானது. 12ஆம் நூற்றாண்டு இடைப்பகுதியில் பாண்டியர்களின் எழுச்சியில் பாண்டியர் வசம் சென்றது. 

இலங்கை மஹாவம்ச நூலின்படி பாண்டிய நாட்டின் வடக்கெல்லையாக தற்போதுள்ள பொன்னமராவதி திகழ்ந்துள்ளது இங்கிருந்து கீழாநிலை, மணமேல்குடி (கிழக்கு கடற்கரை வரை ) வரை கிபி 10, 11 ம் நூற்றாண்டு வரை சோழ, பாண்டிய நாட்டின் எல்லைகளாக திகழ்ந்துள்ளன. 

மேலத்தானியம், கீழத்தானியம், கொடும்பாளூர், நார்த்தாமலை, கீழாநிலை மற்றும் பொன்னாமவரதி ஆகியவை சோழ, பாண்டிய நாட்டின் எல்லைகளாக திகழ்ந்து அக்காலகட்டத்தில் முக்கிய கோட்டைகளும், படைப்பற்றுகளும் கொண்டு எந்த நேரமும் போர்களை சந்திக்க தயாராக வீரர்களும் இருந்துள்ளனர்.

சோழர், பாண்டியர் படைத்தளபதிகளாக திகழ்ந்தவர்கள் சேனாபதி அல்லது பிரம்மதிராயர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர் (இன்றும் சேனாதிபதியார் பட்டமுள்ள கள்ளர்கள் உள்ளனர் குன்னான்டார்கோவிலில் சேனாதிபதிக்கும் சிலை உள்ளது)
இந்த நேரத்தில் தான் வரலாற்று சிறப்பு மிக்க சிங்கள தளபதி மதுரையை நோக்கி பாண்டிய நாட்டையும், வீரபாண்டிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள சோழ நாட்டையும் கைப்பற்ற மீமிசல் துறைமுகத்தில் இறங்கி படையெடுத்து வருகிறார். 

அப்போது சிங்கள தளபதியை எதிர்கொள்ள பல பாண்டிய,சோழ தளபதிகள் மீமிசல், தொண்டி, ஏம்பல், பொன்பற்றி(பொன்பேத்தி), கப்பலூர், கண்டதேவி, அணில் ஏறாக் கோட்டை ,மங்கலம், தொண்டைமான் காடு, செம்பொன்மாரி, லங்கமாரி, ஆறாவயல், இறகுசரி, ஏழுகோட்டை, உஞ்சனை, அஞ்சுகோட்டை, அதளையூர், வல்ல நாடு, கீழாநிலை, மனமேல்குடி என தங்களது தாய் நாட்டை காக்க போராடினர்.

அத்தாக்குதலில் கீழாநிலை கோட்டையானது, சிங்களத் தளபதி லங்கப்புரா, செம்பொன்மாரி நாட்டு அரசர் மாளவச் சக்கரவர்த்தியை வீழ்த்திய பின்பு தனது படையை கீழாநிலை கோட்டைக்கு திருப்புகிறார். 

அப்போது கீழாநிலை கோட்டையை வீழ விடாமல் சோழர் குல காவலன் பெருமாள் பல்லவராயர் லங்கப்புராவை எதிர்த்து தாக்குதல் நடத்துகிறார்.

இத்தாக்குதலால் லங்கப்புரா சோழ நாட்டிற்கு செல்லாமல் தனது படையை ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி திருப்புகிறார்.

கீழாநிலை கோட்டையானது பல்லவராயரின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. 

ஶ்ரீவில்லிபுத்தூரில் சிங்கள படை, பாண்டியர் படையை தோற்கடிக்கிறது. இதனால் குலசேகர பாண்டிய மன்னர் அறந்தாங்கி தொண்டைமான் காட்டில் மன்னையர், கள்ளர் வேளைக்காரர், முனையத்திரையர் பாதுகாப்பில் தஞ்சம் அடைகிறார். அதனால் மீண்டும் கீழாநிலை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர் சிங்களப்படைகள்.

அப்போது சிங்கள படைகளை உள்ளே வரவிடாமல், எதிர் தாக்குதல் நடத்தி அறந்தாங்கி தொண்டைமானின் படைகள் விரட்டியடித்தனர்.

அப்போது முதல் 17ஆம் நூற்றாண்டு வரை அறந்தாங்கி தொண்டைமான் கட்டுப்பாட்டில் வருகிறது. 

கிபி1674ல்தஞ்சை நாயக்கரின் படையெடுப்பில் அறந்தாங்கி தொண்டைமானிடம் இருந்து நாயக்கர் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது.

வடமநலைநாட்டின் தலைமை கிராமமான தெம்மாவூரிலும் முக்கிய கோட்டை இருந்துள்ளது அதன்பெயர் "அரசகண்டாரமண்கோட்டை"
கீழாநிலை தஞ்சை நாயக்கர்களின் முக்கிய கோட்டையாக திகழ்ந்தது.
வரலாற்று சிறப்புமிக்க கீழாநிலை கோட்டை முதன் முதலாக அந்நிய மன்னர் கட்டுப்பாட்டிற்கு சென்று விடுகிறது.

அதே கிபி1674ல் தஞ்சை நாயக்கரின் வீழ்ச்சிக்கு பின்பு மராட்டியர் தஞ்சையை ஆட்சி அமைக்கும் நேரத்தில், நாயக்கருக்கு வரிகட்ட மறுத்து, கிழவன் சேதுபதி மதுரை நாயக்கருடன் போரில் ஈடுபடுகிறார், இப்போரில் சேதுபதிக்கு தஞ்சை மராட்டியர்கள் உதவியதால் இக்கோட்டை மற்றும் பாம்பாற்றுக்கு தெற்கிற்கு அப்பால் உள்ள பகுதியை சேதுபதி மராட்டியர்களுக்கு கொடுத்துவிடுகிறார்.

ஆக கீழாநிலை கோட்டை இரண்டாவது முறையாக அந்நியர் கைகளில் சென்று விடுகிறது. 

மராட்டியர் கைகளில் இருந்தாலும், கிபி1700 ஆரம்ப காலகட்டத்திலிருந்து புதுக்கோட்டை தொண்டைமான்கள், மராட்டியருடன் தொடர் மோதல் போக்க கையாண்டு, கீழாநிலைகோட்டையை சர்ச்சைக்குரிய பகுதியாகவே வைத்திருந்தனர்.

கிபி1723ல் இராமநாதபுர வாரிசு போரில் தண்ட தேவன் சேதுபதி, புதுக்கோட்டை மன்னரிடம் ஆதரவு கேட்க, அதற்கு தொண்டைமான் உதவி செய்கிறார். செய்த உதவிக்காக கிழவன் சேதுபதி போட்ட ஒப்பந்தத்தை தண்ட தேவன் சேதுபதி ரத்து செய்து, கீழாநிலை கோட்டையை இரகுநாத தொண்டைமானுக்கு கொடுக்கப்படுகிறது.

கிபி1726ல் ரகுநாத தொண்டைமான் கீழாநிலை கோட்டையை பல நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்த அடிப்படையில் மராட்டியர்களுக்கு விற்று, பட்டுக்கோட்டை தெற்கு பகுதிகளை பெறுகிறார். ஆனால் தஞ்சை மராட்டியர் ஒப்பந்த விதிகளை மீறியதால் கிபி1736ல் மராட்டிய படைகளை கீழாநிலை 
கோட்டையில் இருந்து விரட்டி, மீண்டும் கீழானிலைக்கோட்டை தொண்டைமான் வசம் செல்கிறது.

பிறகு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வசமே தொண்டமான் கீழாநிலை கோட்டையை கொடுக்கிறார்.

கிபி1749ல் பிரஞ்சு படைகள் திருச்சி,தஞ்சாவூரை தாக்கிய நேரத்தில், மராட்டிய தளபதி மனோஜி, தொண்டைமான் உதவியை நாட, தொண்டைமானும் தன்னுடைய படைகளை தஞ்சை,திருச்சிக்கு அனுப்பி, பிரஞ்சு படைகளை விரட்டுகிறார்.

இதனால் மராட்டிய தளபதி மனோஜி கீழா நிலை கோட்டையை மீண்டும் தொண்டைமானுக்கே அளிக்கிறார். 

கிபி1756ல் தளபதி மனோஜி தொண்டைமானுக்கு கொடுத்த கீழாநிலைக்கோட்டையை மீண்டும் தஞ்சாவூருடன் இனைக்க ஆனையிடுகிறார். கீழாநிலை மீண்டும் தஞ்சாவூருடன் இணைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பிரஞ்சு படைகளும்,கர்நாடக படைகளும் புதுக்கோட்டையை நான்கு முனை தாக்குதலில் ஈடுபட்டதால் தொண்டைமான் இதனை பெரிதுபடுத்தவில்லை.

கிபி1781ல் ஒட்டுமொத்த தஞ்சையை, மைசூர் படையான ஹைதர் அலியின் படை முற்றுகை இட்டது.
அப்போதைய மராட்டிய மன்னர் சரபோஜி தஞ்சையை விட்டு தலைமறைவானார். அப்போது கீழாநிலைக் கோட்டை மைசூர் படைகள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது.

கிபி 1781ல் ஐதர் அலியால் பிடிக்கப்பட்ட கீழாநிலை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளை மீட்க தொண்டைமான் மன்னரின் ஆணைக்கேற்ப, போரம்( பெருங்களூர்) பல்லவராயர் தலைமையில், ராமசாமி ராங்கியர், சுப்ரமணிய முதலியார் முதலியோர் உதவியுடன் பெரும்படை சென்று ஐதர் அலியின் படையை விரட்டியடித்து, அறந்தாங்கி, கீழாநிலை கோட்டைகளை மீட்டது. (General history of pudukkottai state 1916 page 270) •

ஆனால் கிபி1813வரை தஞ்சை மராட்டியர் பிரிட்டிஸ் அரசாங்கம் மூலமாக தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருந்தது. இறுதியாக ஆண்டுக்கு ஒரு யானை தர வேண்டும் என்கிற ஒப்பந்தம் போட்டது. ஆனால் கிபி1948வரை புதுக்கோட்டை தொண்டைமான்கள் அதை ஏற்கவில்லை. அன்னியர்களிடம் இருந்து முழுமையாக ஒரு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கீழாநிலைக்கோட்டை 167வருடங்கள் தொடர்ச்சியாக தொண்டைமான்களில் ஆட்சியில் இருந்தது.

பின்பு இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:-

இக்கோட்டையை கட்டியது தஞ்சை நாயக்கர், மராட்டியர், சேதுபதி என பல மேனுவலில் தவறாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோட்டையை மூவரும் முறையே புதுப்பித்தையே தவறாக கட்டியதாக எழுதியுள்ளனர். ஆனால் கோட்டையோ சோழர், பாண்டியர், பல்லவராயர், அறந்தாங்கி தொண்டைமான்கள், புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கு உரித்தான ஒன்றாக வருகிறது.



















Source:-
Mahavamsam,culavamsam
Trichy manual
Tanjore Marathas 
Pudukkottai manual
The important monuments in and around pudukkottai 

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

நன்றி: 

திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. பரத் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்