திங்கள், 26 ஜூன், 2023

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் கள்ளர் நாடும் தொண்டைமான் மன்னரும்


ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரை பெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு ஆளுநரின் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். அந்த நாட்குறிப்புகளை ஆராய்ந்து இந்திய தொல்லியல் துறை பல பாகங்களாக வெளியிட்டுள்ளது.
ஆனந்தரங்கம் பிள்ளை

கள்ளர் நாடுகளுக்கு எழுதிய மிரட்டல் கடிதம் கிபி 1751 ல்:

மே மாதம், கிபி 1751 ல் பிரெஞ்சு அரசாங்கம் 72 பாளையக்காரர்கள் மற்றும் , கள்ளர் நாடுகளுக்கு தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு எழுதிய கடிதம் அவரது நாட்குறிப்புகளில் உள்ளது.

அதில்

1) விசங்கிநாட்டு கள்ளர் (புதுக்கோட்டை),
2) தொண்டைமான் புரத்து கள்ளர்,
3) பிறமலை கள்ளர்,
4) தன்னரசு நாட்டு கள்ளர்,
5) நாகமலை கள்ளர் (திண்டுக்கல்)



ஆகிய கள்ளநாடுகளிடம் கண்டிப்பாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டது. அதே கடிதத்தில் மதுரை 72 பாளையங்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டது. இந்த கள்ளர் நாடுகள் அப்போது எவ்வாறு வலிமை பெற்று பெரும் பலத்துடன் விளங்கியதை இதன் மூலம் அறியலாம்.

இதில் வரும் விசங்கி நாட்டார், தொண்டைமான் ஆட்சிக்கும் அடங்காமல், பல இன்னல்களை தொண்டைமான்களுக்கு அளித்ததை வரலாறு நெடுகிலும் காணமுடிகிறது.



விசங்கு நாட்டுக் கள்ளர்கள் மிகவும் தைரியத்துடன் சண்டையிடும் வல்லவர்கள். குதிரைகளை கவர்ந்து வருபதில் நேர்த்தியானவர்கள். செய்திகளை கொண்டு வருவதும், ஒற்றர் வேலை பார்ப்பதிலும் சிறந்தவர்கள். தேவை ஏற்படும் போது கொலையும் செய்பவர்கள். என குறிப்பிடப்படுகிறது.




தொண்டைமான் மன்னர்கள் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் மிக பெரிய எதிரியாகவே இறுதிவரை இருந்தார்கள். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பெரும் தாக்குதலுக்கு புதுக்கோட்டை உள்ளன போதும் பக்கத்தில் இருந்த மற்ற ராஜ்ஜியங்கள் போல சந்தர்ப்பத்திற்க்கு தகுந்தவாறு மாறி மாறி முடிவு எடுக்காமல், நிலையாக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதரவாளராகவே இருந்தார்கள். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தை புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் பெற்றனர். ஆனால் புதுக்கோட்டை நவீன நகரமாக இருப்பதற்கும், மக்கள் பாதுகாப்பிற்கும் தொண்டைமான்களே காரணம்.

யார் இந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி:

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் பிரித்தானிய, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும்.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் ஆளுமைக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த பிரெஞ்சு, பிரித்தானிய, டச்சு கிழக்கிந்தியக் கம்பனிகள், பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியன.

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு ஆதரவாக இருந்தவர்கள் இன்று சுதந்திர வீரர்களாகவும், பிரித்தானிய கம்பனிக்கு ஆதரவாக இருந்தவர்கள் துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுவது அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும்.

சோழ பாண்டிய காலங்களில் சிறிய மற்றும் பெரிய அரசுகள், தங்கள் ஆளும் பகுதியை காப்பாற்றி கொள்வதற்காக, தங்களுக்கு சாதகமான அரசுகளுடன் நட்புகொண்டனர். அதை போல 16, 17 ஆம் நூற்றாண்டில் உள்ள அரசுகளும் தங்கள் பகுதியை விரிவுபடுத்தவும், போர்களை தவிர்க்கவும் பிரெஞ்சு, பிரித்தானிய கம்பனிளுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டன.

இந்தியா முழுவதும் முகலாயா்கள் வசம் இருந்தது. செஞ்சி, தஞ்சாவூா் மற்றும் மதுரை நாயக்கா்கள் மற்றும் சிறிய பாளையக்காரா்கள் முகலாயா்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்தனா். தென்னிந்தியாவில் முகலாயா்களின் பிரதிநிதியாக ஹைதராபாத் நிஜாம் விளங்கினார். இவா் சில பகுதியின் நிர்வாகத்தை ஆற்காட்டு நாவப்பிடம் ஒப்படைத்தார். கப்பம் ஒழுங்காக கட்டாத பகுதிகள் நாவப்பின் படைகளால் தாக்கப்பட்டன. ஆனால் புதுக்கோட்டை பகுதிகளுக்கு நாவாப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

1740ல் ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானின் மறைவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் சப்தர் அலிகானுக்கும், மருமகனான சந்தா சாயபுவுக்கும், பதவி சண்டை வர ஆங்கிலேயர் சப்தர்அலிகானை ஆதரிக்க, சந்தா சாயபு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. ஆங்கிலேயர் ஆதரவு பெற்ற சப்தர்அலிகான் ஆற்காடு நவாப் ஆனார்.


#ஜோசெப் பிரான்சுவா டூப்லேக்ஸ்

கல்கத்தா - சந்திர நாகூர் நகரில் பிரெஞ்சு மேலதிகாரியாக டூப்லேக்ஸ் நியமிக்கப்படார். அவரது சிறப்பான பணியால் 1742-ல் தலைமை ஆளுனராக நியமிக்கப்பட்டார். பிரெஞ்சு ஆட்சிப்பகுதியின் எல்லைகளை இந்தியா முழுவதும் விரிவாக்குவதை தமது நோக்கமாக கொண்டு இந்திய சிற்றரசுகளுடன் நட்புறவாடி பிரெஞ்சுச் செல்வாக்கை உயர்த்தினார். இந்திய குடிமக்களைக் கொண்டே, சிப்பாய்கள் எனப் பெயரிட்டார், இராணுவப்படையை உருவாக்கினார். மைசூரின் ஹைதர் அலியும் அவரது சேவையில் இருந்தார். இவற்றால் பிரித்தானியர் பெரும் கலக்கமடைந்தனர்.

பிரஞ்சு ஆளுனர் டூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள், 1746 இல் மதராஸ் சண்டையில் பிரித்தானியரிடமிருந்து சென்னை மற்றும் கடலூர் பகுதிகளைக் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற அடையாறு சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. இப்போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு வித்திட்டது.

1748-ம் ஆண்டில் பிரிட்டிஷார் புதுச்சேரியை முற்றுகையிட்டனர். பிரிட்டிஷாருக்கும் பிரான்சிற்கும் அமைதி உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது.

1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர்.

போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர் வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749 இல் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின.

1751-ல் பர்மாவில் பிரெஞ்சு செல்வாக்கை நிலைநிறுத்த டூப்ளே தனது தூதராக சியூ டெ புரூனோவை அனுப்பி பர்மியர்களுக்கு எதிராக மொங் மக்கள் சண்டையிட இராணுவ உதவி புரிந்தார்.


பிரித்தானியருக்கும் பிரெஞ்சுப் படையினருக்குமான மோதல்கள் 1754 வரை நீடித்தது. இதனால் அமைதியை விரும்பிய பிரான்சு டூப்லேக்ஸ்-க்கு மாற்றாக இந்தியாவிற்கு ஓர் சிறப்பு ஆணையரை அனுப்பியது. டூப்லேக்ஸ் கட்டாயமாக அக்டோபர் 12, 1754-ல் தாய்நாட்டிற்கு கப்பலில் ஏற்றப்பட்டார். 

(வறிய நிலையில் எவரும் அறியாது நவம்பர் 10, 1763 வெள்ளி கிழமை அன்று டூப்லேக்ஸ் மரணமடைந்தார்)



1754 இல் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது.

1758 இல் மூன்றாவது ஆங்கில மைசூர் போர் மூண்டது. தென்னிந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத்தை முறியடிக்க பிரெஞ்சுப் பிரபு லால்லி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். புனித டேவிட் கோட்டையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் சென்னையை முற்றுகையிட்டார். ஆனால் அதனைக் கைப்பற்றத் தவறிவிட்டார்.

1760 இல் பிரித்தானியப் படைகள் வந்தவாசிச் சண்டையில் வெற்றி பெற்றன. காரைக்காலைக் கைப்பற்றின. 1761 இல் பாண்டிச்சேரியும், செஞ்சிக் கோட்டையும் பிரித்தானியரிடம் வீழ்ந்தன. பிரெஞ்சு நிறுவனம் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது.

1798 – 4 மே 1799 முடிய ஆங்கிலேய-மைசூர் போர் நடைபெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர். இப்போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். பிரித்தானியக் கம்பெனி ஆட்சியாளர்களால், மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார் அரச குலம் கீழ் கொண்டுவரப்பட்டது.

பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்திய சக்தியாக உருப்பெற்றது. இவர்களுக்கு நிலையான ஆதரவாளர்களான தொண்டைமான் மன்னர்கள் எந்த ஒரு வரியும் காட்டாமல் , சுதந்திர ஆட்சி செய்தனர்.



நன்றி . 
சியாம் சுந்தர் சம்பட்டியார்
சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்