செவ்வாய், 27 ஜூன், 2023

தொண்டைமான் மன்னர்களின் சிறப்புகள்


தொண்டைமான் மன்னர்களின் சிறப்புகள் மற்றும் அவர்களை பற்றிய குறிப்புகள்


நார்த்தாமலை தொண்டைமான் (கி.பி16-17)


1) 31 St Dec, கி.பி.1822ம் ஆண்டு கேப்டன் ஃப்ளாக் பர்ன் மண்ணின் மைந்தர்களான தொண்டைமான்களின் சுயாட்சி உரிமை குறித்து தஞ்சை மராத்திய மன்னர் சரபோஜிக்கு தெளிவாக கடிதம் எழுதியுள்ளார்.


தொண்டைமான்கள் ஒரு ரூபாய் கூட வரி ஆங்கிலேயருக்கு செலுத்தவில்லை என்பதனை இதன் மூலம் நாம் அறியலாம். அதில் தொண்டைமான் மன்னர் மண்ணின் மைந்தர், சுயமாக ஆள்பவர்,படைகளை வைத்துகொள்ள உரிமை, வரிவசூலித்துக்கொள்ளுதல், தொண்டைநாட்டின் அரசியல், பொருளாதார விவகாரங்களில் அவர்களே முடிவு எடுத்துக்கொள்ள உரிமை உள்ளது நாங்கள் தலையிடமாட்டோம். தொண்டைமான்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எங்களை (ஆங்கிலேயரை) வணங்கவேண்டிய தேவையில்லை.

2) 1948 வரை குற்றம் செய்தவர்க்கு மரண தண்டனை அளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை.


3) தொண்டைமான்கள் முடிசூடும் அருள்மிகு ஶ்ரீ பிரகதாம்பாள் ஆலயம். 

4) புதுக்கோட்டை தொண்டைமான்கள்  வெளியிட்ட நாணயங்களில் தாங்கள் குலதெய்வமான (அரைகாசு அம்மன்) ஶ்ரீ பிரகதாம்பாள் படத்தோடுதான் வெளியிட்டார்கள். புதுக்கோட்டைக் சமஸ்தானத்துக்கென தனி நாணயம் (அம்மன்காசு) 1/26 அனா.

5) கிபி 18ம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டை தொண்டைமான்கள்


  • 1000 குதிரைப்படை வீரர்களையும்,
  • 3000 காலாட்படை வீரர்களையும்,
  • 22 இராணுவ அதிகாரிகளையும்,
  • 90 துப்பாக்கி சுடும் வீரர்களையும்,
  • அரசரின் பாதுகாவலுக்காக 16 மெய்காவலர்களையும் கொண்டிருந்தனர்.

6) தசரா (தீபாவளி) பண்டிகையின்போது கள்ளர்குல புதுக்கோட்டை தொண்டைமான் மாளிகையில் 50,000 பேருக்கு மேல் பணமும், அரிசியும் வழங்கப்படும்.

7) பெருமளவிலான பிராமணர்களுக்கு இலவச உணவுகள் வழங்கப்பட்டு, சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்களுக்கு ₹ 4000 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

8) அரண்மனை முன்னால் தொண்டைமான்களுக்கு முன்பு புதுக்கோட்டையை (சிலபகுதிகள்) ஆண்ட கள்ளர்குல பல்லவராயர்களால் உருவாக்கப்பட்ட பல்லவன் குளம் இன்றளவும் உள்ளது.

9) தமிழகத்தின் முதல் இலவச கல்வியை தொடங்கிய தொண்டைமான் 


  • கிபி 1813 ல் விஜய ரகுநாத தொண்டைமான் தமிழகத்தின் முதல் இலவச கல்விக்கு வித்திட்டார். புதுக்கோட்டையில் இலவச பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இலவசமாக அளிக்கப்பட்டது.
  • 1850 களில் மிசினரி பள்ளிகள் தொடங்க இலவச நிலங்களை அளித்தார். 1857 ல் இலவச ஆங்கிலப்பள்ளியை திறந்தார். 1875 ல் மேலும் 4 இலவச பள்ளிகள் திறக்கப்பட்டன. 200 வருடங்களுக்கு முன்பே தன் நாடு முழுவதும் இலவச பள்ளிகளை திறந்தனர் தொண்டைமான் மன்னர்கள்.



வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்