வெள்ளி, 16 ஜூன், 2023

வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான்




பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள். கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் (1070 – 1122) அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. 'வாண்டையர் அரசன்', 'அரசர்கள் நாதன்', 'உலகுபுகழ் கருணாகரன்' என கலிங்கத்துப்பரணியில் புகழப்படுபவர் 'கருணாகரத் தொண்டைமான்'.


புலிக்கொடிகலிகள்வன்





கருணுகரத் தொண்டைமான் பல்லவ அரசர் மரபுவழி வந்தவன்; தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன்; வண்டை என்ற ஊரின் தலைவன். இங்ங்னம் சிற்றரசனுகத் திகழ்ந்த இப்பெருமகன் குலோத்துங்கனின் தலைமைச் சேனதிபதி யாகவும் மந்திரத் தலைவகுகவும் விளங்கினான். கலிங்கத்துப் பரணி ஆசிரியர் இச்செய்திகளையும் தம் நூலில் குறிப்பிடுகின்ருர். 

"மண்ட லீகரும் மாநில வேந்தரும் 

வந்து ணங்கு கடைத்தலே வண்டைமன் 
தொண்டை மான் முதல் மந்திரப் பாரகர் 
சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே” 

கருணாகரத் தொண்டைமான், இன்றைய ஒடிசா என்று குறிப்பிடப்படும் கலிங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வடகலிங்க மன்னன்.


அனந்த வர்ம சோழ கங்கனை வென்று அவனை சிறைப்படுத்தி சோழப்பேரரசரான முதலாம் குலோத்துங்க சோழப் பேரரசரின் காலடியில் விழச்செய்ததுடன், ஏராளமான பொன்னும் மணியும் பவளங்களும் திறைப் பொருளாகக் கொண்டு வந்து சோழப்பேரரசர் காலடியில் கொட்டியதுடன்


ஏராளமான யானைகள், கதிரைகள், ஒட்டகங்களையும் அதன் படை வீரர்களையும் சிறைபடுத்தி கொண்டு வந்த வீரத்தைப் பாராட்டி வழங்கப்பட்டதே வாண்டையார் பட்டம். 


கிபி.1112ல் முதலாம் குலோத்துங்க சோழனின் (கிபி.1070-1120) ஆணையை ஏற்று, அவருடைய அமைச்சர் தலைவனும் தலைமைப் படைத்தளபதியுமாகிய பரணிபுகழ் கருணாகரத் தொண்டைமான் வட கலிங் நாட்டின்மீது மிகப்பெரிய படையை வழிநடத்திச் சென்று அந்நாட்டின் 
அரசன் அனந்தவர்ம சோழ கங்கனை போர்க்களத்தில் வென்று, அவனது பாக்கி செலுத்தவேண்டிய இரு திறைகளுடனும் அவனுடைய போர் யானைப்படைகள், குதிரைப்படைகள், ஒட்டகங்கள், தேர்கள், ஐஸ்வர்யங்களான நவ ரத்தின மணிக்குவியல்கள் ஆகியவற்றை போரில் கவர்ந்து கொண்டதுடன், அனந்தவர்ம சோழ கங்கனையும் சங்கிலியில் பிணித்து சிறைப் பிடித்துக் கொண்டு சோழ நாடு திரும்பிய கருணாகரத் தொண்டைமான், அனைத்தையும் குலோத்துங்க சோழனின் காலடியில் சமர்ப்பித்தார்.


கலிங்க வெற்றியையே கள்ளர் மரபினரின் கலிங்கராயர் பட்டம் உணர்த்துகிறது


இதனால், முதலாம் குலோத்துங்க சோழன் தன் தலைமைப் படைத் தலைவனின் ஆற்றலையும் பெருவீரத்தையும் பாராட்டி அவரை பெருமைபடுத்தி அதற்கு ஈடாக குடவாயிலுக்கு அருகில் உள்ள வண்டாழஞ்சேரியை (தற்போது வண்டுவாஞ்சேரி என்று மரூவி வழங்கி வருகின்றது) தலைநகராக்கி சுற்றுப்பகுதிகளை அத்தலைநகருடன் இணைத்து அந்நாட்டிற்கு வண்டை நாடு எனப் பெயர் சூட்டி, அவ்வண்டை 
நாட்டின் அரசனாக கருணாகரத் தொண்டைமானுக்கு குலோத்துங்க சோழன் தன் பொற்கரங்களாலேயே முடி சூட்டி, அவருக்கு வண்டையர் கோன், வண்டை நகர அரசன், வண்டையர் அரசன், வண்டையர்க்கரசு, வண்டைமன், வண்டை நகராதிபதி ஆகிய பட்டங்களையும் அவ்வேளையில் சூட்டி பெரிதும் பாராட்டி மனம் மகிழ்ந்தார்.


கவிச்சக்கரவர்த்தி தீபங்குடி ஜெயம்கொண்டார் முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக அலங்கரித்தவர். அவர் கருணாகரத் தொண்டைமானுடன் சென்று கலிங்கத்துப்போரை நேரில் கண்டு தான் கண்ட போர்க்களக் காட்சிகளையும் கருணாகரத் தொண்டைமான் அப்போரில் ஆற்றிய வீர, தீர அரிய போர் சாகசங்களையும் நேரில் கண்டு, வியந்து. இப்போர் ஆற்றல் இவருக்கு எப்படி வந்தது. இவர் என்ன அர்ச்சணனா, தேவர்களின் தலைவனான இந்திரன் வஜ்ராயுத த்தால் போரிட்டதையும் விஞ்சிய அசகாய சூரனா என வியப்புற்று, தான் நேரில்கண்ட போர்க்களக் காட்சிகளையும், அவருடைய படை எழுச்சியையுய், அதன் படை பெருக்கத்தையும் நேரில் கண்டு.


இப்படையின் சுமை தாங்க முடியாமல் கார்கோடகன் என்ற பாம்பு தன் பிடரியின் மீது தாங்கியுள்ள உலகத்தின் சுமை படை பெருக்கத்தால் தாங்கமுடியாமல், அப்பாம்பு தன் பிடரியை நெடு நெடு என நெரித்துக் கொண்டதென ஜெயங்கொண்டார் குறிப்பிடுகிறார். மேலும், இத்தொண்டைமானின் படை எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிற தென அறிய முடியாமல், சிவனின் அடியையும் முடியையும் அறிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய திருமாலையும் பிரம்மாவையும் போல்..ஏமாந்தனர் எனக் குறிப்பிடுகின்றார். இப்படை பெருத்த தால்,


உலகம் சிறிதாக தோன்றுகிறதே என்பதை, உலகம் தாங்க முடியாத உலகத்தைவிட பெரிய படை என்பதை, படை பெருத்ததின் பார் சிறுத்ததோ, பார் சிறுத்த தின் படை பெறுத்த தோ ..என கற்பனை நயம் தோன்ற, தீபங்குடி ஜெயங்கொண்டார் கலிங்கததுப்பரணியை பாடினார்.


ஆனை ஆயிரம் வென்ற வான வர்மனைப் பாடுவதே பரணி..என புலவர் பெருமக்கள் குறிப்பிட்டதற்கேற்ப, இக்கலிங்கப் போரில் கருணாகரத்தொண்டைமான், ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி வாகை சூடி திறைகொண்டு வந்தான் எனக்குறிப்பிடுகின்றார் புலவர்..


கோ, கோன், கோமான், அரையர் என்றால் அரசர் என்று பொருள். அரசன் ஆளும் நாட்டின் பெயரை முன்னால் கூறி, அந்நாட்டின் அரசன் என்ற பொருளில் மேற்கண்ட சொற்களில் ஒன்றை பின்னால் இணைத்துச் சொல்வது முடி ஆட்சியில் வழங்கிவந்த மரபு. அதன்படி, கருணாகரத்தொண்டைமானை வண்டை நாட்டின் மன்னராக முடிசூட்டி, அந்நாட்டின் அரசன் என்ற பொருள்பட வண்டையர்கோன் எனஅவருக்கு பட்டமளித்துப் பாராட்டினார் சோழப்பேரரசரான முதலாவது குலோத்துங்கன்.


முடியாட்சிக்குப்பின், கோன் (அரசன்) என்ற சொல் மறைந்து, வண்டையர் என வழங்கி, பின் வாண்டையார் என மரூவி தற்போது வழங்கி வருகின்றது. வாண்டையார் என்ற சொல் கருணாகரத் தொண்டைமானின்


கால்வழிக் கள்ளர்களுக்கு தற்போதும் வழங்கி வருகின்றது.




எனவே, வாண்டையார் அனைவரும், வீரம் விளைந்த அந்த கருணாகரத் தொண்டைமான் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாண்ட அந்த வீரம் விளைந்த அந்த புண்ணிய பூமியான வண்டாழஞ் சேரிக்குச் சென்று

உங்கள் முன்னோரின்..உங்கள் பூர்வீக ஊரை வணங்கி வரலாமே.


குலோத்துங்கன் இட்ட கட்டளையைக் கேட்டவுடன் கருளுகரத் தொண்டமான் போருக்கு எழுத்தமையைக் காட்டும் சொல் லோவியம் இது.


வண்டை வளம்பதி பாடீரே

மல்லையும் கச்சியும் பாடீரே 
பண்டை மயிலேயும் பாடீரே 
பல்லவர் தோன்றலைப் பாடிரே'

(வண்டை-கருணுகரன் ஊர் : கச்சி-காஞ்சிபுரம் ; பல்லவர் தோன்றல்-கருணுகரன்.) பேய்கள் கூழடுவதற்கு அரிசி குற்றுங்கால் உலக்கைப் பாட்டு பாடிக் கொண்டே குற்றுவதைக் காட்டுவது இத்தாழிசை. 


இன்னும் கருணுகரன் பல இடங்களில் 'வண்டை நகர் அரசன்' என்றும், வண்டையர் கோன்’ என்றும் நூலில் குறிக்கப்பெற்றுள் வாான். பிற்கலச் சோழப் பேரரசில் பல்லவ வேந்தர்கள் தம் பழைய பெரு வலிமை குன்றி சோழர்களின் கீழ் அமைச்சர்களாகவும், ஏனைய அலுவலர் களாகவும் அமர்ந்திருந்ததுடன், தொண்டை நாட்டிலும் சோணுட்டிலும், பிறவிடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர் கட்குத் தலைவர்களாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை பல கல்வெட்டுக்களால் அறியலாம். அவ்வாறு அமர்ந்த பல்லவ வேத்தர்களுள் தம் கருணுகரனும் ஒருவன். இவன் முன்னேர் தொண்டை நாட்டை ஆண்டமைபற்றி அவருடைய நாட்டு ஊர்களையும்,  செய்திகளையும் இவனுக்கு உரியனவாகப் புலவர்கள் சிறப்பிப்பாராயினும் உண்மையில் இவன் சோணுட்டவனே.


கருணாகரத் தொண்டைமான் ஆண்ட வண்டை என்ற ஊர் தொண்டை நாட்டிலுள்ள தென்றும், சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில் புகை வண்டிப் பாதையில் ஒரு நிலையமாக அமைந்துள்ள வண்டலூரே அவ்வண்டை என்றும் காலஞ் சென்ற திரு. வி. கனகசபைப் பின்ளே, முதலிய வரலாற்று அறிஞர்கள் கருதினர். அவர்கள் அங்ஙனம்  கருதினமைக்குக் காரணம் பல்லவ மரபினனுய்த் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்ததும், தொண்டை மண்டல சதக நூலார் அவனேத் தொண்டை நாட்டினனாக பாடியுள்ளது மாகும். ஆணுல், பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்கள் அவ்வண்டை என்ற ஊர் தொண்டை நாட்டிலுள்ள வண்டலூர் அல்ல வென்றும், அது சோழ மண்டலத்தில் திருநறையூர் நாட்டைச் சார்ந்த ஊர் என்றும், அந்த ஊர்க் கல்வெட்டுக்களில் "வண்டாழஞ்சேரி என்று வழங்குகின்றதென்றும், அந்த வண் உாழஞ்சேரியே இப்பொழுது வண்டுவாஞ்சேரி” என மருவி வழங்குகின்றதென்றும் கருதுவர். அதற்குச் சான்ருக இவர் குறிப்பிடும் 


கல்வெட்டு : " ஸ்வஸ்தி ரீ கோ. இராஜகேசரிவன்மரான திரி புவன சக்கரவர்த்திகள் ரீ குலோத்துங்க சோழ தேவருக்கு யாண்டு நாற்பத்து மூன்று,சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூர் ஆழ்வார்குச் சோழ மண்டலக் குலோத் துங்க சோழ வள நாட்டுத் திருகறையூர் காட்டு வண்டாழஞ் சேரி புடையான் வேளான் கருணுகரளுரான தொண்டைமாளுர் தேவியர் அழகிய மணவாளனி மண்டை யாழ்வார் வைத்த திருதுந்தா விளக்கு. ’’






இதில் குறிப்பிப்பெற்றுள்ள கருணுகரரான தொண்டைமானார் தான் கருணுகரத் தொண்டைமான் என்பது பேராசிரியர் அய்யங்கார் அவர்களின் கருத்தாகும்.  அமைச்சர் குலம் போன்ற உயர் பதவியிலுள்ள மகளிரை "ஆழ்வார்’ என்று வழங்குதல் அக்காலத்து வழக்கு என்பதற்கும் கல்வெட்டுக்களிலிருந்து சான்றுகளையும் எடுத்துக் காட்டி உறுதி செய்வர். வண்டுவாஞ் சேரி என்ற அந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ள திருநறையூர் என்பதும், நாச்சியா கோவில்" என்று வழங்கும் அந்த ஊருக்கும் திருச்சேறைக்கும் இடையில் உள்ள ஊரே என்பதும் அறியத் தக்கவை. 


கருணுகரத் தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான். கலிங்கத்துப் பரணி இவனே,


"தொண்டை யர்க்கரசின் முன்வருஞ் சுரவி

துங்க வெள்விடை யுயர்த்தகோன்
வண்டை யர்க்கரசு பல்லவர்க்கரசு 
மால்க ளிற்றின்மிசை கொள்ளவே.”

(சுரவி-காமதேனு ; துங்க-துய்மையான ; வெள்விடைவெண் மையான எருது ; களிறு-யானை.) என்ற தாழிசையில் குறிப்பிடுகின்றது. 


அண்ணன் காஞ்சியிலிருந்து கொண்டு தொண்டை நாடுமுழுவதையும் ஆண்டு கொண்டிருந்ததால் பல்லவர்க்கரசு என்று குறிப்பிடப்பெற்துள்ளான். குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனுய் அமைந்த கருணுகரன் வண்டை நகரின் கண் இருந்து சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்ததால் 'வண்டையர்க்கரசு என்று சுட்டப்பெறுகின்றன். தம்பியைப் போலவே தமையனும் பேரரசனை குலோத்துங்கனுக்கு உட்பட்ட பல சிற்றரசர் களுள் ஒருவளுய், நெருங்கிய நண்பனாய், இருந்து வந்தான் என்று ஊகம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. இந்த நட்புக் காரணமாகவே குலோத்துங்கன் பாலாற்றங்கரையில் பரி வேட்டையாடியபின் தன் பரிவாரங்களுடன் காஞ்சியில் வந்து தங்கியிருந்தனன் என்று கருத இடம் உண்டு. ஒருதாய் வயிற்றுப் பிறந்த சகோதர்களுள் மூத்தோனிருப்பவும் இளையோன் அரசிய வில் தலைமை வகிக்க நேர்ந்தது, 


"ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் 

மூத்தோன் வருக என்னது அவருள் 
அறிவுடை யோனறு அரசும் செல்லும்" 

என்ற ஆன்றோர்  கருத்துப்படி ஒக்குமென்றே கொள்ளல் வேண்டும். கலிங்கப் போரின் வெற்றிக்கு முக்கிய வில் விசையாகத் திகழ்ந்தவன் கருணுகரத் தொண்டைமானே என்பதைக் கலிங்கத்துப் பரணி உறுதி செய்கின்றது. சோழப் படைகளால் அழிக்கப்பட்டன போக எஞ்சி நின்ற கலிங்கப் படைகள் நாற்புறமும் சிதறியோடி ஒழிந்தன. தொண்டைமான் வாகை சூடிக் குலோத்துங்கன வந்தடைகின்றன். இதனைக் கவிஞர் பெருமான்,


கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக்

கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச் 
சுடர்ப்படைவாள் அபயனடி அருளி ணைடுஞ்
சூடினுன் வண்டையர்கோன் தொண்டைமானே’"

(சயத்தம்பம்-வெற்றித்துரண் ; கரி.யானை ; தனம்-செல்வம் : அபயன் -குலோத்துங்கன் ) என்ற தாழிசையால் இச் செய்தியை நமக்கு அறிவிக்கின்றர். முதற் குலோத்துங்கனது 42-ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற ஆலங்குடிக் கல்வெட்டில் இக்கலிங்கப் போரின் விவரம் குறிப்பிடப்பெற்றுள்ளது. 


"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)

அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
யிருபணை வேழ முந்தவே!

வண்டை வளம்பதி பாடிரே
மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
பல்லவர் தோன்றலைப் பாடிரே - பாடல் . 534

"கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் 
நாட்டிக் கடகரியும் வயமாவும் தனமும் கொண்டு 
சுடர்க்கதிர்வாள் அபயனடி அருளி னோடும் 
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே." 

இத்தகைய வீரப் புகழ் வாய்ந்த கருணாகரத் தொண்டைமானை ஈன்ற பெருமை சோழநாட்டு வண்டாழஞ்சேரி என்னும் சிற்றுாருக்கு உரியது. அவ்வூர்ப் பெயர் வண்டை என மருவி வழங்கிற்று. ஆதலால், கலிங்க மெறிந்த கருணாகரனை வண்டையர் கோன் தொண்டை மான் என்று தமிழ்க் கவிதை புகழ்ந்து மகிழ்ந்தது. 7. கலிங்கத்துப்பரணி, 471


தஞ்சை வாண்டையான் குடியிருப்பு, புதுக்கோட்டை வாண்டையான் பட்டி – வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்கள் மட்டும் வாழும் ஊர் ஆகும். 



புதுக்கோட்டை தொண்டமான் மன்னரின் படையில் இருந்த பூண்டி வாண்டையார்கள், வாளு உடையார் என்றும் அழைக்கப்பட்டார்கள். 

ராஜ்ஜியத்தில் உடை வாளுடன் இருக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்கள். வாண் மறவர் - போரிற் சிறந்த வாள் வீரரும் (வாண் - வாள்).


  
முழுமையாக அறிய இங்கே சொடுக்கவும் (click here)👉 வாண்டையார் வரலாறு 



தமிழ் லெக்சிகன்படி வாண்டையார் பட்டமானது கள்ளர்களுக்கு மட்டுமே உருத்தானது!!!

வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர். 

இப்பட்டமுடைய கள்ளர் மரபினர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும்பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை,கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், பூண்டி, கோனூர், திருபுவனம்,வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.

இதைப்பற்றிடாக்டர் ரா.பூங்குன்றன், தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநர் ஓய்வு, இவர்களை அந்நாளைய முடியாட்சின் அரசில் பணி புரிந்து புகழ்பூத்த பெருங்குடியினராகவும் உலகத்தின் மூத்தவர்களாகவும், பெருமையுடன் நம்மை குறிப்பிடுகிறார். (தமிழக வரலாற்றுக்

கண்ணோட்டங்கள் பக்கம் 63 வரிகள் 27-29)
சிலையெழுபது
கருணாகரத் தொண்டைமானின் பெருமையை பற்றி கம்பர் பாடியது சிலையெழுபது (கம்பர் எழுதினாரா என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை).

கம்பர் எழுதிய சிலையெழுபது ( வில் வீரர்களின் சிறப்புப் பற்றி எழுதிய நூலாகும்), 


ஏரெழுபது (ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றி எழுதிய நூலாகும்)  


ஆனால் இன்று பள்ளி இனத்தவர்கள் வன்னியர் என்பது எங்களை தான் குறிக்கும் எழுதிவருகின்றனர். 


மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1338 ஆம் ஆட்சி காலத்தில் பள்ளி நாட்டவருக்கு பன்னாட்டான் தம்பிரான் என்று வழங்கியதாக கூறுகின்றனர். அதனால் சிலையெழுபது குறிப்பிடும் பண்ணாடர் என்பதே பன்னாட்டார் என்றும், அது பள்ளி நாட்டவர் என்றும், அதனால் கருணாகர தொண்டைமான் பள்ளி சாதியை சேரந்தவர் குறிப்பிடுகிறார்கள்.

பண்ணாடர் என்பதற்கு பள்ளிநாட்டார் என்று எந்த தமிழ் அகராதியும் விளக்கமளிக்கவில்லை. மேலும் பன்னாட்டார் என்பதற்கும் பல விளக்கங்கள் உள்ளன. தொண்டிமாநகர் கடற்கரைத் தெருவுக்குப் பெயர் ‘பன்னாட்டார் தெரு’ என்பதாகும். பல நாட்டவரும் வந்து தங்கி வணிகம் செய்த தெரு.

பன்னாட்டார் என்பது மன்னார் வளைக்குடாவின் கிழக்குக் கரையில் வாழ்ந்து வந்த மீனவரின் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகும் என்று சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் பக்கம் 69 ல் குறிப்பிடுகிறார். பன்னாட்டவர், பன்னாட்டு முதலிகள் என்று கல்வெட்டில் காணப்படுகின்றன. இவையெல்லாம் பள்ளி சாதியனரை குறிப்பிடுபவையல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.


ஆனால் வன்னியர் என்பது யார் என்பதற்கு (அன்று குறிப்பிட்ட சாதியாக குறிக்கவில்லை, அது ஒரு பட்டமே)















19 ஆம் நூற்றாண்டுகளில் வன்னியர் என்ற தனி சாதி இல்லை. பல சாதிகளில் பயின்று வரும்  பட்டம். வன்னியர்  பட்டம் பள்ளி சாதியினர் மட்டும் குறிக்காது.


வன்னியர் பட்டம் உடைய கள்ளர்கள்  விசங்கிநாட்டுக்கள்ளர்களோடு தொடர்புடையவர்கள் (கொள்வினை, கொடுப்பினை). வன்னியர்களிலே பண்டாரத்தார் வன்னியர், கோட்டயபுரம் வன்னியன் என இருபிரிவுகள் இருந்துள்ளது. 

வன்னியம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டத்தில் , வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

வன்னியம்பட்டி :-தஞ்சாவூர் மாவட்டம்,  பூதலூர் வட்டத்தில் செங்கிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

வன்னியன்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், அரையப்பட்டி ஊராட்சியில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்


நல்லவன்னியன்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம்,   அம்மாப்பேட்டை வட்டத்தில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


மன்னார்குடி பகுதி வடுவூர் நாட்டில்  வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகம். இங்குள்ள கள்ளர்கள் வாழும் தெருக்கள் பெயர்.

வன்னியர் தெரு 
காகா வன்னியர் தெரு 
செருக்க வன்னியர் தெரு 
குஞ்சான் வன்னியர் தெரு 
எழுவநாச்சி வன்னியர் தெரு

தஞ்சை தெற்கில் தெலுங்கன் குடிகாடு பட்டம் உள்ள கள்ளர்கள் அதிகம் உள்ளனர். 

இங்கு பள்ளி இனத்தவர்களான படையாச்சிகள் இல்லை.


பம்பப்படையூர், வலங்கைமான், பட்டம், ஏரி போன்ற பகுதில் பள்ளி இனத்தவர்களான படையாச்சிகள் அதிகம் உள்ள பகுதி. இங்கும்  வன்னியர் பட்டம் உள்ள கள்ளர்கள் அதிகம் உள்ளனர்.

மேலூர் நடுவிநாட்டுக் கள்ளர்களில் ஒரு வகையறாவின் பெயர்:-





(வன்னியன் குல வகையறா பங்காளிகள்)




வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்