சோழகர், சோழகனார், சோழதரையர் , சோழங்கர் , சோழங்க நாடார் , சோழங்கதேவர் என்பது கள்ளர் பட்டங்களாகும். இந்த பட்டம் உடைய கள்ளர் மரபினர்கள் சோழமண்டலத்தில் சிறப்புடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
சோழகன்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகநத்தம்:- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகன் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகன்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகநத்தம்:-தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகன் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகம்பட்டி:- திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் வெம்பனூர் ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் , வெள்ளஞ்சார் ஊராட்சியில், சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் வளவம்பட்டி ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகன்பட்டி:- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் திருநெடுங்குளம் ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில், தளிஞ்சி ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்
சோழகம்பட்டி:- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், நொடியூர் ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்
சோழகம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சோழகனார்வயல்:- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டத்தில் கழனிவாசல் ஊராட்சியில் உள்ள சோழகனார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரின் பெயரில் அமைந்த சிற்றூர்.
தமிழ் அகராதி தரும் விளக்கம்
சோழகோன் எனும் பட்டம் சோழரிடத்தில் உயர் அதிகாரிகளாக பணியாற்றியவர்களில் சிலருக்கு அளிக்கப்பட்ட பட்டமாகும். இப்பட்டமானது பிற்காலத்தில் சோழகன் என திரிந்துள்ளது.
கிபி 1036 ஆம் ஆண்டை சேர்ந்த எசாலம் செப்பேட்டில் முதலாம் ராஜேந்திர சோழனின் அதிகாரிகளில் ஒருவராக உத்தம சோழகோன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கிபி 1213 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மடத்துக்கோயில் கல்வெட்டில், மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் உதயப்பெருமாள் சோழகோனார் எனும் அதிகாரி குறிப்பிடப்படுகிறார்.

பாண்டியனின் அதிகாரி நித்த வினோத வளநாட்டு மாத்தூர் கிழவன் சோழகோன் என்பவர் பற்றிய கல்வெட்டு.
நித்த வினோத வளநாடு என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பகுதியாகும். (கண்டியூர், திருவிடைமருதூர், மாத்தூர்) இன்றும் இந்தப்பகுதியில் சோழகர் பட்டமுடையவர்கள் கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர். ஒரு கல்வெட்டு பாண்டியகுலபதி நாட்டு, நித்த வினோத வளநாட்டு கண்டியூர் ஆயிரத்தளி பள்ளிப்பீடம் காளிங்கராயனில் வீற்றிருந்து" மாறவர்மன் வீரபாண்டியன் ஆணையிட்டதாக இது குறிப்பிடுகிறது.
சோழர்களின் முக்கிய அதிகாரிகளாக விளங்கிய சோழகர்கள் பற்றிய குறிப்பு பல கல்வெட்டுகளில் வருகின்றன. சோழகர்கள் பெரும்பான்மையாக தஞ்சை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் காணப்படுகின்றனர்.
இவர்களில் செங்கிளி நாட்டு சோழகர்கள் பற்றிய தொடர்ச்சியான வரலாற்று சான்றுகள் கிடைக்கின்றன. இன்று செங்கிளி நாடு செங்கிளை கள்ளர் நாடாக உள்ளது.
செங்கிளி நாடானது தஞ்சை புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்து கள்ளர் நாடாகும். கிபி 1835 ல் வெளியிடப்பட்ட " Alexander east india Magazine" எனும் நூலில் ,தஞ்சையில் இருந்த கள்ளர் நாடுகளில் செங்கிளி நாடும் ஒன்றாகும். இது நொடியூரை தலைமையாக கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கிளை நாடு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகாவில் செங்கிளி நாட்டில் அமைந்துள்ள நொடியூர் சிவன் கோயில் பழமையான பல கல்வெட்டுகளை கொண்டுள்ளது. இக்கோயிலில் கிடைக்கும் பழமையான கல்வெட்டு கிபி 1226 ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். இக்காலத்தில் மூன்றாம் ராசராசன் சோழ நாட்டை ஆட்சி புரிந்து வந்துள்ளார்.
இக்கோயிலில் கிடைக்கும் கிபி பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் பலபத்ர சோழகன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டளவில் செங்கிளி நாடு எனும் கள்ளர் நாட்டை சேர்ந்த வேதாண்டி சோழகன் என்பவரும் கிருஷ்ணராய சுவாமி என்பவரும் , பெரிச்சி சோழகன் என்பவரை வெட்டிக் கொன்று விட்டனர். இதற்காக இவ்விருவரும் நொடியூர் சிவன் கோயிலுக்கு 30 பொன் அளிக்க ஒப்புக்கொண்டு நாட்டார்கள் முன்னிலையில் ஒலை அளித்துள்ளனர். செங்கிளி நாட்டின் சார்பாக இந்த தானத்தை உறுதி செய்தவர்களில் பலபத்ர சோழகன் என்பவரும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவர் செங்கிளி நாட்டில் முக்கியதொரு பொறுப்பில் இருந்துள்ளதை கல்வெட்டு உணர்த்துகிறது.
பலபத்ர சோழகர் பற்றி கிபி 1923 ல் எழுதப்பட்ட கள்ளர் சரித்திரம் நூலில் நமு வேங்கடசாமி நாட்டார் பினுவருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"பலபத்திரன் கோட்டை என்பது ஐயனார்புரத்தின் மேற்கே முக்கால் நாழிகை யளவில் உள்ள விண்ணனூர் பட்டியில் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முன்னிருந்த பலபத்திரச் சோழகரால் கட்டப்பட்டது".
" கள்ளர் சிற்றரசர்களாய் இருந்த போது கட்டிய கோட்டைகளில் பலபத்திரகோட்டை என்ற ஊரும் ஒன்றாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
பலபத்திர சோழகன் பற்றி குறிப்பிடும் பழமையான ஒலைச்சுவடி ஒன்றை நாட்டார் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
" வாலிகொண்டாபுரம் சீமை வெண்பா னாட்டில் கூரையூரைச் சேர்ந்த வடவின்னம் பூண்டியிலுக்கும் இருசப்ப நாயனார், முத்துக் கருப்ப உடையார் நாங்களிருவரும் ஏரிமங்கல நாட்டில் விண்ணனூர்ப்பட்டியிலிருக்கும் பலபத்திரச் சோழகனார் குமாரர் குஞ்சான் சோழகனார்க்கு மேன்காவர் பொருப்பு முறிகொடுத்தப்படி ,முறியாவது வடவிண்ணம் பூண்டி மாகாணத்தில் ராயத்துடையார் கிராமம் உட்பட்ட நம்முடைய கிராமம் 12 . இந்த பன்னிரண்டு கிராமத்துக்கும் வருடம் ஒன்றுக்குப் பொறுப்பு கெட்டி 12 பொன் கொடுத்துக்கொண்டு வருவோமாகவும். இந்த மேன்காவல் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலே இருப்பீராகவும்"
செங்கிளி நாட்டில் அதிகாரியாக இருந்த பலபத்ர சோழகனார் குடும்பம் பிற்காலத்தில் அங்கிருந்து குடியேறி 20 கிமீ தொலைவில் உள்ள ஏரிமங்கல நாட்டை சேர்ந்த விண்ணனூர்பட்டியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியின் காவல் பொறுப்பு முதலிய உயரிய அந்தஸ்து பெற்று விளங்கியுள்ளனர்.
செங்கிளி நாட்டின் அம்பலமாக சோழகர்களே இன்றும் உள்ளனர். இவர்களின் பெயரிலேயே முரட்டு சோழகம்பட்டி எனும் ஊர் அமைந்துள்ளது. கிபி 1920 ஆம் ஆண்டு எழுதப்பட்ட " Manual of pudukkottai vol 1" எனும் நூலில் கள்ளர் நாடுகளில் ஒன்றாக செங்கிளி நாடு திகழ்வதாகவும், இந்த நாட்டில் சோழகர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி பதினேழாம் நூற்றாண்டில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட கள்ளர் குல சோழகர்கள் இன்றும் அதே பகுதியில் தனிப்பெருமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இராசரத்தின சோழகர் பற்றிய இரங்கற்பா