ஞாயிறு, 19 மார்ச், 2023

சோழர் அரசு காப்பான் ஆலியர்கோன்

 


பேரரசர் முதலாம் இராஜராஜசோழதேவரின் பேரனும் , பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழதேவரின் மகனுமான வீர ராஜேந்திரசோழன் ஆட்சி காலத்தில் கி.பி.1069 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளானூர் சிவாலயத்தின் அர்த்த மண்டபத்தை கட்டிய சிறுவாயில் கள்ளர் நாட்டின் தலைவரான முடிகொண்ட சோழ நாடாழ்வான் என்பவர் தன்னை ஆலியர்கோன் என்றும்

"செம்பியர்கோன் முடி காப்பான்'

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செம்பியர் என்பது சோழரை குறிக்கும்.கோன் என்றால் அரசர் என்று பொருள்.முடி என்பது மணிமகுடம் என்ற கிரீடத்தை குறிக்கும். காப்பான் என்றால் காவல்காரன் என்று பொருள்.

சோழ அரசின் கீரடத்தை காப்பவன் என்று கூறியது மூலம் இவர் சோழ அரசர் வீர ராஜேந்திரனின் படைத்தளபதி என்பது தெரியவருகிறது.

ஆலியர்கோன் என்று குறிப்பிட்டதன் மூலம் சிறுவாயில் கள்ளர் நாட்டின் தலைவரான் இவர் ஆலிநாட்டுக்கு அரசனாகவும் இருந்துள்ளார்.







1) INSCRIPTIONS IN THE PUDUKKOTTAI STATE - TRANSLATED INTO ENGLISH - PART 1 - EARLY PALLAVA AND COLA INSCRIPTION புத்தகம் பக்கம் எண் 94.

2) MANUAL OF THE PUDHUKOTTAI STATE - VOLUME 2 PART 1 புத்தகம் பக்கம் எண் 600.

தொகுப்பு : அரவிந்த் தொண்டைமான்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்