புதன், 29 மார்ச், 2023

கள்ளர்களின் முன்னோன் முதற் கரிகால சோழன் (கி.மு. 120 - கி.மு. 90)


ஒளிபொருந்திய வாளினை உடையவன், ஈன்ற அணிமையினையுடைய பசுக்களைக் கவர்ந்து வரும் வீரர்களுக்குத் தலைவனாக விளங்குபவன், திரண்ட போரினை மேற்கொண்டு அதன்கண் வெற்றியும் பெறுபவனான சோழன் என்று புகழப்படும் சோழர்களில் உறந்தை, வல்லம், குடந்தை, பருவூர், பெருந்துறை முதலிய பல இடங்களில் சோழ மரபினர் இருந்து ஆட்சி புரிந்தனர்.

இக்குறிப்புகளால், தொடக்க காலமுதல் ஏறக்குறைய இரண்டாம் கரிகாலன் காலம் வரை சோழநாட்டில் சோழ மரபினர் பலர் பல இடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர். அவருள் மண்ணாசை கொண்ட ஒருவர் மற்றவரை வென்றடக்க முயன்றனர்.

அதில் “சென்னி” மரபினர் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர். "கிள்ளி" மரபினர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோணாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டனர்.

சென்னி மரபினர் வழிவந்த கள்ளர் போர் மரபினரே சென்னியாண்டான், சென்னிராயன், சென்னித்தலைவர், சென்னிநாடன், சென்னிகொண்டான் என்ற பட்டங்களையும், கிள்ளி மரபினர் வழிவந்த கள்ளர் கிள்ளியார் கிள்ளிகண்டார், கிள்ளிகொண்டார், கிள்ளிநாடர், கிள்ளியாண்டார் என்ற பட்டங்களையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இந்த பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் சோழமண்டலத்தில் வாழ்ந்து வருகின்றனர். சென்னி கட்டு என்பது தலைக்காவலை (பிரதானக்காவல்) குறிக்கும்.

இதில் முதற் கரிகாலன் ‘சென்னி’ மரபைச் சேர்ந்தவன், முதற்கரிகாலன் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டிருந்தான், பிறகு குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான். அழுந்தூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் அருகில் தேரழுந்தூர் என்னும் பெயருடன் விளங்கிவருகிறது. கள்ளர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்களின் முன்னோனாக கரிகாலனையே கூறுவர்.

இமயம் சென்ற கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்பதும், வெண்ணிக் குயத்தியாரால் பாடப்பெற்றவன் முதற் கரிகாலன் என்பதும், ஆராய்ச்சியாளர் கணக்குப்படி, முதற்கரிகாலன் ஏறத்தாழ இரண்டாம் கரிகாலனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்டவன் ஆவன். ஆகவே, அவன் காலம் ஏறத்தாழ, கி.மு. 120 - 90 எனக் கொள்ளலாம்.

வெண்ணிவாயிலில் நடந்த பெரும் போரில் முதற்கரிகாலன் வேந்தரையும் பதினொரு வேளிரையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். அவரே பிறிதொரு செய்யுளில், “அரசர் ஒன்பதின்மர் ‘வாகை’ என்னும் இடத்தில் கரிகாலனோடு நடத்திய போரில் தோற்றனர்” என்று குறித்துள்ளார்.

இக்கரிகாலன் பதினோரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தரையும் (சேர பாண்டியர்) வெண்ணி வாயில் என்ற இடத்திற் பொருது வென்றான்.

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் கோயில்வெண்ணி என்னும் பெயருடன் இன்றுள்ள ஊர்தான் சங்ககால வெண்ணி. இதனைத் திருவெண்ணி என்றும் குறிப்பிடுவர். இக்காலத்தில் இங்குள்ள சிவன்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனின் பெயர் வெண்ணிக்கரும்பர். “நித்தவினோத வளநாடு’ பூண்டி மண்டலம் தான் வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம்.

கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம். கல்வெட்டில், “நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய” என காணப்படுகிறது. மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார் மேலாண்மைக்கு உட்பட பகுதியாகும்.

கரிகால சோழன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் அரசர் ஒன்பதின்மரைப் போரில் புறங்காட்டி ஒடச் செய்தான். கரிகாலன் குதிரைப் படையுடன் சென்று இந்த ஊரைத் தாக்கியிருக்கிறான். அப்போது ஒன்பது மன்னர்கள் யானைமீதேறி வெண்கொற்றக் குடையுடன் வந்து கரிகாலனை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களால் கரிகாலனை எதிர்த்து நிற்க முடியவில்லை. தம் கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

இவனுடைய தானைத் தலைவன் திதியன் என்பவன். அவனிடம் பண்பட்ட போர்த் தொழிலில் வல்ல கோசர் என்னும் வீரர் இருந்து வந்தனர். இக்கரிகாலன் சேர அரசனான பெருஞ்சேரலாதன் என்பானுடன் வெண்ணிப்பறந்தலை யிற் போர் செய்தான். போரில் கரிகாலன் விட்ட அம்பு சேரலாதனது மார்பைத் துளைத்து ஊடுருவி முதுகினின்றும் வெளிப்பட்டது. அம்முதுகிற் பட்ட புண்ணைப் புறம் புண்ணாகும் என்று நாணிச் சேரன் தன் கையிற் பிடித்த வாளுடன் வடக்கிருந்து. பட்டினி கிடந்து உயிர் விட்டனன்.

அடங்காப்பிரியன் என்ற கள்ளர் பட்டம் கரிகாலன் சோழனை குறிக்கும் என்பர், பின் நாளில் அடங்காப்பிரியர் என்று உரு மாறி அடங்காபிடாரி யானதாக சிலர் குறிப்பிடுவர்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்