சோழங்கதேவர் சுதந்திரப் போராட்ட வீரர்
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், திரணிபாளையம் அமிர்தலிங்கேஸ்வரர் கோயில் அர்த்த மண்டப கல்வெட்டில் சன்ன சோழங்க தேவர், அவருடைய தம்பிகள் தம்பிக்கு நல்லான், ஈச்சுரமுடையான் ஆகிய மூவரும் சேர்ந்து இவர்கள் பிறந்த ஊரான வட பாதியில் இவர்களுக்கு இருந்த 500 குழி புஞ்சை நிலத்தை இவ்வூர் அந்திரவேதீஸ்வரமுடைய நாயனார் கோயிலுக்கு தேவதானமாகக் கொடுத்துள்ளனர். இலால்குடி பகுதியில் சோழங்கத்தேவர் பட்டமுடைய கள்ளர் குடும்பங்கள் இன்றும் உள்ளன.
மகம்மதிய மன்னரானவர் கண்தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர்
'செங்கற் கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா' எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர்.
துண்டராயன்பாடிக் கோட்டையிலிருந்து சோழங்க தேவ அம்பலகாரர்க்கும் . அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழாக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அராசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச்செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் பதிலுக்கு அழித்துவிட்டார்கள் கூழாக்கியார்கள்.