திங்கள், 27 மார்ச், 2023

சோழன் செங்கணான் தெண்கொண்டார்


“களவழி நாற்பது பாடப்பெற்றவனும்”, "தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கண் செம்பியர் கோன்" என்று புகழப்படும், செம்பியன் மரபில் வந்த, சுபதேவச் சோழனும் கமலபதி ராணியும் பெற்றெடுத்த, வீரக்கழல் கட்டிய கால்களை உடைய செங்கண் சோழன், தென்னூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.

சோழநாட்டுத் தலைநகராகிய உறையூருக்குத் தெற்கில் நேரி என்னும் ஊர் இருந்தது. எனவே உறையூர்க் கோட்டையின் தெற்குப்புற வாயில் நேரிவாயில் “தென்னூர்” எனப்பட்டது. சோழர் தலைநகரின் தெற்குப்புறத்தில் உள்ள ஊர் என்பது இதன் பொருள்.

"தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்" 
"வட மன் நீடு புகழ்ப் பூழியன், தென்னவன், கோழிமன்,
அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே "

பூழியன் - பாண்டியன். கோழிமன் - உறையூர்க் 
கிறைவன். அடல்மன் - போர்வேந்தன்

வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டியனாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை பொருந்திய கோச்செங்கட்சோழ மன்னன் என்றும், தென்னவராயன், தென்கொண்டான், தென்னாண்டான், தின்ன(வலிமை)ப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, பூழியர்பிரான் என்று புகழ படுகிறான்.

தெண்கொண்டார், தென்னவராயர்,  என்ற பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் சோழமண்டலத்தில் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். கள்ளர்களின் பூழிநாடான், பூழியர்பிரான், பூழிராயன், அம்பர்த்தேவர் பட்டங்களும் மேலும், இன்னும் சில பட்டங்கள் கோச்செங்கட் சோழ மாமன்னரோடு தொடர்பு உடையவைகளாக உள்ளன.

எட்டுத் திருமால் ஆலயங்களையும், திருவானைக்கா முதல் திருஅம்பர் வரை காவிரிக்கரை நெடுக எழுபது சிவாலயங்களை எழுப்பிய இம்மாமன்னனை

‘‘இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்துலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன்’’

என்று திருமங்கையாழ்வார், தம் பாசுரங்களில் குறிப்பிடுகின்றார்.

மேலும் இம்மாமன்னன், ‘‘

செங்களுன்
செங்கண்மால்
செங்கண் சினமால்
கோச்சோழன்,
தென்றமிழன், 
வடபுலக்கோன் சோழன்,
தென்னாடன் குடகொங்கன்,
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்
புனல்நாடன்
அம்பர்த்தேவர்

என்றெல்லாம் புகழப்படுகிறான்.

கழுமல வெற்றியைப் பாராட்டும் களவழி நாற்பது என்ற நூல், இவனைப் "புனல் நாடன்”, “நீர் நாடன்”, “காவிரி நாடன்” என்றும், 

கொங்கரை அட்ட களத்து' எனவும், வஞ்சிக்கோ அட்ட களத்து' எனவும் கூறி, இவன் வென்றது கொங்கு நாட்டாராகிய சேரரையும் வஞ்சிமா நகரின் வேந்தணுகிய கணக்கால் இரும்பொறையும் என்பதையும் அறிவிக்கின்றது. 

கொங்கரையர், கொங்குதிரையர், கொங்குராயர், வஞ்சிராயர், அத்திரியர், அத்திராயர், அத்தியரையர் போன்ற கள்ளர் பட்டங்கள் இதனோடு தொடர்புடையதாக இருக்கலாம். அத்தி என்பது சேர இனத்தவரைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்று.


வேற்படை, வாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை உடைய கோச்செங்கணானின் வீர வரலாறு:

அழுந்தை, வெண்ணி, கழுமலம் முதலிய இடங்களில் போரிட்டுப் பகையரசர்களை வென்றவன்.

சங்க காலப் புலவர் பொய்கையார் பாடிய, ‘களவழி நாற்பது’ என்னும் அற்புதமான நூலினுள் பொதிந்து கிடக்கிறது. மேலும் புறநானூற்றின் எழுபத்து நான்காம் பாடலும் இப்பெருவேந்தனின் வரலாற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. வரலாறு வாழ்த்துவது போன்றே, புராணமும் போற்றிப் புகழ்பாடும் புகழ்ச் சரிதத்திற்கு உரியவன் கோச்செங்கணான்.

செங்கணா னின் போராற்றல் பற்றியும் ‘‘விறல் மன்னர் திறல் ஒழிய வெம்மாவுய்த்த செங்கணான்’’ என்றும் ‘‘படை மன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன்’’ என்றும் திருமங்கையாழ்வார் கூறுகிறார்.

சேரமான் கணைக்காலிரும்பொறை, சோழன் செங்கணானுடன் கழுமலம் என்னுமிடத்தில் பொருது (போரிட்டு) தோற்றபோது, அவன் சிறைசெய்யப்பட்டான்; அவனைச் சிறைமீட்கப் பொய்கையார் என்ற புலவர் பாடியது “களவழி “. களவழி நாற்பது போர்க்களத்தைக் குறித்துப் பாடப்பட்டது

சோழன் போர் புரிந்த களத்திலே நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு மடியும் பயங்கரக் காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும் போர்க்களக் காட்சி; இவைகளை இக்களவழிப் பாடல்களிலே பேசுகிறது.

கழுமலப் போரில் கலந்துகொண்டவர்கள், சேரமான் கணக்கால் இரும்பொறையும், சோழன் செங்களுனும் ஆவர். சேரமான் 'கணக்கால் இரும்பொறை, சேரருள் ஒரு பிரிவினரால் இரும் பொறை மரபில் வந்தவனுவன். பரந்த சேரநாட்டைச், சேர வேந்தர்கள் இரு கிளேயினராய்ப் பிரிந்து ஆண்டுவந்தனர். பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் வழிவந்த சேரர், வஞ்சிமா நகரைத் தலைநகராகக்கொண்ட சேரநாட்டு உட் பகுதியையும், அந்துவஞ்சேரல் இரும்பொறை வழி வந்தோர், தொண்டியைத் தலைநகராகக் கொண்ட சேர நாட்டுக் கடற் கரைப் பகுதியையும் ஆண்டு வந்தனர்.

சேரமான் கணக்கால் இரும்பொறை சிறந்த வீரனவன்; அவன்பால் ஒரு பெரிய படையும் இருந்தது. வேற்படைப் பயிற்சி பெற்றிருந்த அப்படையை வென்று அழிப்பது எவராலும் ஆகாது; அப்படையோடு என்றும் பாசறைக்கண் வாழ்வதையே அவன் விரும்புவன். அப்பெரும் படையை அடக்கி ஏவல் கொள்ளத்தக்க உடல் வன்மையும் அவனிடம் பொருந்தியிருந்தது. ஒருநாள், அவன் யானைப் படையைச்சேர்ந்த ஒரு யானை மதம் பட்டுவிட்டது. அதன் அழிவு வேலைகளால், அப்பாசறையே நடுங்கிவிட்டது; அதைப் பிடித்து அடக்கும் ஆற்றல் அங்கிருந்த வீரர் ஒருவர்க்கும் இல்லை. அச்செய்தி கேட்டான் இரும்பொறை விரைந்து பாசற்ைக்குச் சென்ருன். அடங்காது அலைந்து திரிந்துகொண்டிருந்த அம்மத யானையை அடக்கிப் பிடித்து, அதன் கட்டுத் தறியில் பிணித்தான். அத்துணை அஞ்சாமையும், அதற்கேற்ற உடல் வன்மைபும் உடையவன் இரும்பொறை.

கணக்கால் இரும்பொறையை வென்று கைப்பற்ற வேண்டும், அவனுக்குரிய கழுமலக்கோட்டையைப் பாழ்செய்தல் வேண்டும், இருவரும் செயல்களால் சோழர்களின் வெற்றிப் புகழை விளங்கக் காட்டுதல் வேண்டும் என்ற ஆசையுடையவன் அச்செங்களன். அவ்வாசை கொண்ட அவன், அதை முடிக்க வேண்டுமேல், பகைவனின் பெரிய படைகளையும், படைத்தலைவர் பலரையும் வெல்ல வல்ல வீரன் ஒருவனே தன் படைக்குத் தலைவய்ை அமைதல் வேண்டும் என்று உணர்ந் தான். அதனல், போரூர் சென்று பழையனைத் தன் படைக்குத் தலைமை தாங்குமாறு வேண்டிக் கொண்டான். அவனும் அதற்கு இசைந்து, தன் யானைப் படையோடு வந்து சோழர் படைத் தலைமையை ஏற்றுக்கொண்டான்

சேரமான் கணக்கால் இரும்பொறை, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முகலாய படைத் தலைவர்களோடு கழுமல நகர்க்கோட்டையில் காத்திருந்தான். அக்கால அரசியல் சூழ்நிலையும் அவனுக்கு ஏற்றதாகவே அமைந்திருந்தது. அதுவே சோழன் செங்களுன் அவன் மீது போர் தொடுக்கக் காரணமும் ஆயிற்று.

கழுமலப் போரில் கலந்துகொண்ட இருதிறத்துப் படைத் தலைவர்கள் எழுவராவர். அத்தி, ஏற்றை, கங்கன், கட்டி, நன்னன், பழையன், புன்றுறை என்பன அவர்தம் பெயர்கள். இவருள் பழையன் ஒருவனே சோழர் படைத் தலைவனய்ப் பணியாற்றினன். ஏனைய அறுவரும் சேரர்படை முதல்வர்களே. சேரர் படைத் தலைவர் அறுவரே என்ருலும், அவருள் வரலரறு உணரத்தக்க சிறப்புடையான் கட்டி ஒருவனே.

சேர நாட்டிற்குக் கிழக்கிலும், சோனுட்டிற்கு மேற்கி லும், பாண்டி நாட்டிற்கு வடமேற்கிலும், அதாவது இம் மூன்று நாட்டு எல்லைகளும் ஒன்றுசேரும் இடத்தில், சிறுநிலப் பகுதியைத் தம் உடமையாகக் கொண்டு கொங்கர் என்ற இனத்தவர் வாழ்ந்திருந்தனர். சேர, சோழ, பாண்டியர் களைப் போலவே அவர்களும் மறவர் மரபில் வந்தவராவர். அவர்கள் ஆனிரை ஒம்பும் தொழில் மேற்கொண்டிருந்தனர். கோவை மாவட்டத்தையும், சேலம் மாவட்டத்தின் தென் பகுதியையும் கொண்டு, கொங்கு நாடு என அழைக்கப்பெற்ற அக்கொங்கர் வாழ் நாடு, நீர்வளம் அற்ற வன்னிலமே வாய்ந்த மேட்டு நிலமாம். அதனல், கொங்கர், தம் ஆனிரை களுக்கு வேண்டிய தண்ணிரைப் பெறுவதற்காக, ஆங்காங்கே எண்ணிலாக் கிணறுகளைத் தோண்டி வைத்திருந்தனர். ஆனிரைகளை எத்திசையில் கொண்டு செல்ல விரும்பு கின்றனரோ, அத்திசையில் கொங்கர் சிலர், ஆனிரை செல் வதற்கு முன்பாகவே சென்று, கணிச்சி போன்ற கல் உடைக் கும் கருவிகளின் துணைகொண்டு, கற்களைத் தீப்பொறி சிதறு மாறு உடைத்து, சிறிது சிறிதாக அகழ்ந்து, ஆழ்ந்த கிணறு களைத் தோண்டி வைப்பர். அக்கிணறுகளும், மேல் நீரும் மிக்க நீரும் உடையவாகாமல், ஆழ் நீரும், அற்று அற்றுக் கசியும் குறை நீருமே உடையவாகும். அந்நீரை நீண்ட கயிறுகளில் சிறு முகவைகளைக் கட்டி இட்டு முகந்து ஆனிரை களுக்கு ஊட்டுவர்.'

ஆனிரை வளர்க்கும் அருந்தொழில் மேற்கொண்டு வாழ்ந்த கொங்கர், சிறந்த கொற்றம் உடையவராயும் விளங்கினர். சிறந்த வாட்போர் வீரராய் வாழ்ந்தனர். அரிய பெரிய கோட்டைகளையும் அழிக்கவல்ல பெரிய பெரிய குண்டுக் கற்களை வீசவல்ல கல்கால் கவணை என்ற கருவிகளை யும் அவர்கள் பெற்றிருந்தார்கள். கொங்கரின் இப்போர்ப் பண்பு, ஒளிறுவாள் கொங்கர்”, ஆர் எயில் அலைத்த கல்கால்கவணை நார் அரி நறவின் கொங்கர்' எனப் புலவர் களால் பாராட்டப்பெற்றுள்ளன.



இவ்வாறு ஆனிரை ஒம்பும் தொழில் மேற்கொண்டு ஆற்றல்மிக்க மறவராய் வாழ்ந்த கொங்கர், அவ்வப்போது, தம் அண்டை நாடுகளாய சேர, சோழ, பாண்டிய நாடுகளுள் புகுந்து, அந்நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிவந்து, தம் ஆனிரைச் செல்வத்தை வளர்த்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். அதனால், அச் சேர, சோழ, பாண்டியர் மூவருமே கொங்கரைத் தம் பகைக்குலத்தவராகக் கொண்டு, அவாை அழித்து ஒட்டுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற சேர மன்னன், அவரை வென்று, அவர் நாட்டைத் தன் நாட் டோடு இணைத்துக்கொண்டான். கிள்ளி வளவன் என்ற சோழர்குலப் பேரரசன், கொங்கரை வென்று புகழ்பெற்ருன்



சோழன் செங்களுன் சோளுட்டு அரியணையில் அமர்ந் திருக்கும் காலத்திலும், கொங்கர் சோளுட்டுள் புகுந்து கொள்ளையிட்டனர். அதனால் அவரை அழிக்க வேண்டும் என்ற ஆர்வம், செங்களுன் உள்ளத்தில் உருப்பெற்றது

சேரன் கணக்கால் இரும்பொறை, அக்கொங்கரைத் தன் படைத் துணைவராகக் கொண்டான். இச்செயல் செங்களுன் சினத்தை அதிகப்படுத்தி விட்டது. உடனே கழுமல நகர் நோக்கிச் சோழர் படை புறப்பட்டுவிட்டது. பழையன், சோழர் படைக்குத் தலைமை பூண்டதோடு, அவனுடைய வேழப் படையும், வேற் படையும், சோழர் படைக்குத் துணைப்படையாய் வந்தன.

கழுமல நகரை அடுத்திருந்த திருப்போர்ப்புறம் என்ற இடத்தில், இருதிறப் படைகளும் எதிர்த்துப் போரிட்டன. சோழர் படையில் பழையன் ஒருவனே களம் புகுந்தான்.

சேரநாட்டின் உட்புகுந்து, அச்சேரர்க்குரிய கழுமலக் கோட்டையைக் காத்துநின்ற படைத் தலைவர் அறுவரையும் வென்று, அவர் படைகள் ஆறினையும் அழித்து வெற்றி கண்டான் சோழர் படைமுதலி பழையன்.

சோழர் படை கழுமலக் கோட்டையையும் சுற்றி வளைத்துக்கொண்டது என்ற செய்தியைக் கேட்டுக் கலக்கமும் கடுஞ்சினமும் கொண்டு களம் நோக்கிப் புறப்பட்டான் கணக்கால் இரும்பொறை. களம் புகுந்தவன், அத்தனே அழிவிற்கும் சோழர் படைத் தலைவன் பழையன் பேராற்றலே காரணமாம் என்பது அறியவே, அவன் சினமெல்லாம் பழையன் மீது பாய்ந்தது. அகத்துள அவ்வளவு படையையும் அவன்மீது ஏவிஞன். கொங்கரின் பெரிய படையையும், படைத் தலைவர் அறுவரையும் வென்ற போர் நிகழ்ச்சிகளால் களைத்திருக்கும் அந்நிலையில், சேரனும், அவன் படையும், புதிய பலத்தோடு வந்து தாக்கவே, பழையன் நிலை கலங்கிவிட்டான். அந்நிலையில் வந்து பாய்ந்த ஓர் அம்பு, அவன் ஆருயிரைப் போக்கிவிட்டது. வெற்றி வீரன் களத்தில் வீழ்ந்துவிட்டான்.

சோழன் செங்களுன் உலவிக் கொண்டிருந் தான். அம்மலர் வனத்தின் வனப்புக்களைக் கண்டு மகிழ்ந்து வந்தவன் ஒரிடத்தில் மயிற் கூட்டங்கள், தம் தோகைகளை விரித்து ஆடிக்கொண்டிருப்பதைக் கண்ணுற்றன். கார் மேகத்தின் வரவுகண்டு பெற்ற களிப்பால் அம்மயில்கள் ஆடும் நடனத்தில் தன் நெஞ்சைப் பறிகொடுத்து விட்டான். அது சிறிது நேரமே. சிறிது நாழிகைக் கெல்லாம் ஒரு பெரும் புயற்காற்று எழுந்தது. மரக்கிளைகள் மளமளவென ஒடிந்து வீழ்ந்தன. ஒ’ என்ற பேரிரைச்சல் எழுந்தது. அவ்வளவே, மயில்களின் மகிழ்ச்சி எங்கோ மறைந்து விட்டது; அவற்றின் உள்ளத்தில் அச்சம் குடிபுகுந்து கொண்டது; உடனே மூலைக்கு ஒன்முக ஒடத் தொடங்கி விட்டன.

அந்நிலையில் ஒடோடி வந்தான் ஓர் ஒற்றன். கொங்கரை வென்று அழிக்கக் கருதிய தன் கனவை நினைவாக்கிய பெருவீரன், சேரன் படைத் தலைவர் அறுவரை ஒருவளுகவே நின்று வென்ற உரம் உடையான் உயிரிழந்தான் என அறிந்து ஆற்ருெளுத் துயர் கொண்டான். அத்துயர், மறுகணமே அடங்காச் சினமாய் மாறிற்று. அவன் கண்கள் சினத்தால் சிவந்தன; அவன் வாயி லிருந்து வெளிப்பட்டது ஒரு வஞ்சினம். என்மீது படை கொண்டு எழுந்த மலை நாட்டு மாவீரரின் மனைவியர், புயல் கண்டு அஞ்சி ஒடும் இம்மயிற்கூட்டம்போல், தம் கணவரை இழந்த கொடுமை கண்டு அலறித் துடித்து அழும்படி செய்யேனுயின், என் அரசு அழிக’ என அறிவித்து விட்டு, பழையன் உயிர் போக்கிய கணேயனைக் கட்டிப் பிடித்துச் சிறையில் அடைத்துச் சீரழியச் செய்வேன் என வஞ்சினம் உரைத்து வாளெடுத்துக் களம் புகுந்தான்.

சோழன் செங்களுனே களம் புகுந்துவிட்டான் என்ப தறிந்த சேரனும் பெரிய தேர் ஏறிப் போர்க்களம் புகுந்தான். இருவர்க்கும் இடையே பெரும்போர் நிகழ்ந்தது.

சேரர் யானைப்படையால் சிறந்து விளங்கினர் என்ருல், சோழர் தேர்ப்படையால் சிறந்தவர். அவர் தேர்ப்படை பகைவரும் பாராட்டும் பெருமை வாய்ந்தது. அத்தேர்ப் படைப் பெருமையால் ஒரு சோழ மன்னன், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி எனப் பெயர் சூட்டிப் பாராட்டப் பெற்றுளான். சேரநாட்டு யானைப் படையின் பெருமை கண்ட சோழன் செங்களுன், அதைப் பாழாக்கத் தன் தேர்ப்படையின் துணை வேண்டினன். பகைவர் பார்த்த அள விலேயே பயந்து பின்னிடச் செய்யவல்ல பேருருவம் காண்ப வர் கருத்தைக் குலைக்கும் காட்சி, காற்றெனக் கடுகி ஒடும் விரைவு ஆகிய இவை யத்தனையும் ஒருங்கே வாய்ந்த தேர்ப் படை கொண்டுவந்து சேரரைத் தாக்கினன். தேர்ப்படையின் திண்மை கண்டு திகைப்புருது முன்சென்று தாக்கினர். ஆனால், தான் அழிவுருது, பகைவர் படையைப் பாழாக்கவல்ல அத் தேர்ப் படையும், சேரர்களின் களிற்றுப் படையால் நிலை குலைந்தது. முடிவில், சேரர் படை பாழாக, சோழர் படையே வெற்றி கண்டது என்ருலும், சேரரை அவ்வளவு எளிதில் வெற்றி கொள்ள முடியவில்லை சோழரால். சேரரை வெல்ல, சோழர் தம் தேர்ப் படையின் பெரும்பகுதியை இழக்க வேண்டிய தாயிற்று. சேரர் களிற்றுப் படைமுன், சோழர் தேர்ப்படை ஆற்றல் இழந்து அழிந்தது. சோழர்க்குத் தோற்ற சேரர் களின் யானைப்படை, தன் ஆற்றலைத் தொடக்கத்திலேயே இழந்துவிடவில்லை. பகைவர் தேர்ப்படையைப் பாழாக்கிய பின்னரே அது அழிந்தது.

பொறையின் களிற்றுப் படையைச் செங் களுன் வெற்றி கொண்டான். ஆனால், அவ்வெற்றி எளிதில் வாய்த்துவிடவில்லை. களம்பல கண்டு, நாடு பல வென்று, வேந்தர் பலரின் வீறுகளை அழித்துப் புக்ழ் மாலை சூடிய அவன் வேற்படை களம் புகுந்த பின்னரே வெற்றித் திருமகள், தன் அருள் நோக்கை அவன்பால் திருப்பினள். களம்புகுந்த அவ் வீரர்களும், புகுந்தவுடனே வெற்றி கண்டாரல்லர். வேழப் படையுடன் நெடும்பொழுது வெஞ்சமர்புரிந்தனர்.

வேற்படைக்குத் துணையாகத் தேர்ப்படை களம் புகுந்தது. களிறுகள் பல கூடிப் பலமுறை தாக்கினும் தகர்ந்து அழிவுருத் திண்மை வாய்ந்த தேர்கள் எண்ணிலாதன வேல்வீரர்களை ஏற்றிக் கொண்டு வேழப்படை நோக்கி விரைந்தன. வன்மையிற் சிறந்த வேல்வீரர்கள், தேர்மீதிருந்தவாறே, தம் கைவேலை உரங்கொண்டளவும் ஓங்கி, வேழங்களின் முகம்நோக்கி எறிந் தனர். வேல்களும், குறி பிழையாமல் விரைந்து, வேழங் களின் நுதலில் பாய்ந்து, அவற்றைப் பிளந்து புண்ணுக்கின. அக்கணமே, களிறுகள், உயிரிழந்து வீழ்ந்தன. குடைகளையும் கொடிகளையும் வெட்டித் துண்டாக்கி வெற்றி நகை நகைத்தனர்

கழுமலக் கோட்டையை வளைத்துப் போரிட்டான். கணக்கற்ற வீரரை வீழ்த்தினன். வெற்றி கண்டான். எடுத்த சூளையும் முடித்தான். கணவரை இழந்த சேர நாட்டுச் செல்வியர் சிந்தை நொந்து, செய்வதறியாது, அலறிப் புடைத்துக்கொண்டு ஓடோடி வந்து, களம் புகுந்து ஒலம் இட்டனர். அக்காட்சி கண்டு களித்தது செங்களுன் உள்ளம். என்னே அப்போர் வெறி.

ஆனல், இறுதியில் செங்களுன் நினைத்தது நிகழ்ந்துவிட்டது. தன் படைவன்மையால், படைவலி இழந்துபோகத், தேரும் அழிந்துபோகத் தனித்து நின்ற கணக்கால் இரும்பொறையின் கையில் விலங்கிட்டுக் கைப்பற்றிக்கொண்டான். கழுமலக்கோட்டை சோழர் உடைமை ஆயிற்று. செங்களுனை, வெற்றி மாலை சூட்டிச் சிறப்பித்தார்கள்.

அந்தக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில், சேர நாட்டுக் கொற்றவனே அடைத்த பின்னரே, செங்களுன் உள்ளம் சினம் ஆறிச் சிறிதே அமைதியுற்றது.

புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை விடுதலை செய்ய கேட்கிறார்.

புலவர் பாடிய செந்தமிழ்ப் பாக்கள்மீது கொண்ட பற்றுள்ளத்தால், கணையன் தன் குலப் பகைவர்க்குத் துணை புரிந்தவன், தன் படைத் தலைவன் பழையனைக் கொன்ற பெரிய பகைவன் என்பதையெல்லாம் மறந்து, அவனே விடுதலை செய்ய முன் வந்த செங்களுன் தமிழ் உள்ளம் கண்டு உலகம் அவனைப் பாராட்டிற்று.

குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்தான் சேரமான், வெற்றிப் புகழ் பெற விரும்பி களம் புகுந்த அவன், தோற்றுச் சிறைபட்டமைக்குப் பெரிதும் நாணினன். ஒரு நாள் நீர் வேட்கை மிகவே, சிறைக் காவலரை விளித்து உண்ணு நீர் தருமாறு வேண்டினன். சேரமான் சிறந்த பேரரசனே எனினும், அவர் கண்களுக்கு அவனும் ஒர் சிறைக் கைதியாகவே புலப்பட்டான். மேலும் தங்கள் பெரும் படைத்தலைவன் பழையனைக் கொன்றமைக்குப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற காழ்ப்பு உள்ளமும் அவர் களுக்கு இருந்தது. அதனல், அவன் வேண்டியதைக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அவ்வாறு தாராது போவது: தம் கடமையில் தவறியது ஆகுமே என்பதை உணர்ந்தனர். அதனால், அவன் கேட்டபோதே தாராது, காலம் தாழ்த்தித் தந்தனர்; தரும்போதும் அரசன் என்ற மதிப்பு இன்றித் தந்து இழிவு படுத்தினர்.

காவலர் கொடுமையைக் கண்டான் கணையன். 'நட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று' என நினைக்கும் நல்லுள்ளம் உடையான் அவன். அவ்வுள்ளுணர்வு உடையவனே உயர்ந்தோனவன். அந்நீர் நஞ்சினும் கொடிதாகக் காட்சி அளித்தது அவன் கருத்துக்கு. அதனல், உண்ணு நீர்க் கலத்தை ஒருபால் ஒதுக்கி வைத்துவிட்டான். போர்க்களம் புகுந்து போரிட்டு, மார்பிலும், முகத் திலும் வீரப்புண் பெற்ற வெற்றி வீரர்க்கே, வானுலக வாழ்வில் இடம் உண்டு. பாணர்க்கும் புலவர்க் கும் வாரி வாரி வழங்க வேண்டிய நான், அவ்வாறு வழங்கிய என் கைகளால், இச்சிறை காவலரை அல்லவோ இரந்து நின்றேன்; என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிற்று அவ்வுள்ளம். அவ்வுள்ள உணர்ச்சிக்கு உருவளித்தது அவன் கை. அக்கருத்தெல்லாம் ஒன்று திரண்டு ஒர் அழகிய பாட்டாக இடம் பெற்றது ஏட்டில். ஏடு அவன் கையில் கிடந்தது. இறந்து வீழ்ந்தது அவன் உடல்.

சேரன் இறந்து வீழ்வதற்கும், செங்களுன் பொய்கையா ரோடு சிறைக்கோட்டம் புகுவதற்கும் சரியாக இருந்தது. இருவரும் ஒடோடிச் சென்று, சிறைக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தனர்.

மன்னன் மனம் மாறியது. போர் போர் என எப்போதும் போர் வெறிகொண்டு வாழ்ந்த செங்களுன் சிந்தை தெளி வடைந்தது. மான மிக்க மன்னன் மறைவிற்குக் காரண மாகிய தன் கொடுமைதிர, அந்நாள் முதல் நல்லற நெறியில் நிற்கத் துணிந்தான். இறைவன் திருக்கோயில் கொண்டிருக் கும் இடம்தோறும் கோயில் அமைக்கும் பணியினை அன்றே தொடங்கினன்.


இறைப்பணி : -

அம்பர், வைகல், நன்னிலம் முதலான இடங்களில் கோயில் எடுத்தவன் கோச்செங்களுனே என்று, சுந்தரரும், சம்பந்தரும் பாடிய தேவாரப் பாடல்களும் சான்று பகர் கின்றன.

கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர்.


கோச்செங்கட் சோழன் கட்டிய கோயில்கள் அதனுடன் தொடர்பு உடையவையாக உள்ள பல கள்ளர் பட்டங்கள்.


1)   தான்தோன்றியப்பர் கோவில், திருஆக்கூர் (தான்தோன்றிமாடம்) – பட்டம் தான்தோன்றியார்
2)   சேய்ஞ்லூர் - பட்டம் சேய்ஞலாளர், சேய்ஞலாளியர்
3)   இராமனதீச்சரம், திருக்கண்ணபுரம் - பட்டம் கண்ணரையர்
4)   மாணிக்கவண்னர் (இரத்தினகிரீஸ்வரர்) கோவில். திரு மருகல் - பட்டம் மருங்கராயர்
5)   திருப்பெரு வேளூர் - பட்டம் வேளுராயர், வேளுரர்
6)   கேடிலியப்பர் கோவில், கீழ் வேளூர் - பட்டம் வேளுராயர், வேளுரர்
7)   திருகைச்சினம் (கச்சனம்) - பட்டம் கச்சைராயர்
8)   அம்பர் மாகாளம் - பட்டம் அம்பர்கொண்டார் அம்பராண்டார் அம்பர்த்தேவர்
9)   வைகல் - பட்டம் வைகராயர்,
10) நன்னிலம்- பட்டம் நன்னியர், நன்னிராயர்
11) பனையூர் - பட்டம் பனையதேவர் பனையர்,
12) மாதூர் - பட்டம் மாதுராயர்
13) ஆவூர் பசுபதீச்சரம் - பட்டம் பசுபதியார், பசுபதியர்
14) தேவபுரீசுவரர் கோவில், தேவூர்   - பட்டம் தேவராயர். தேவாண்டார்
15) வெண்ணைப்பிரான் கோவில். சிக்கல் - பட்டம் சிக்கராயர்
16) திருத்தண்டலைநீள்நெறி - பட்டம் தண்டத்தலைவர், தண்டத்தலையர், தண்டநாயகர்
17) திரு மாத்தூர் - பட்டம் மாத்துளார், மாத்தூளார்
18) நறையூர் (மணிமாடம்) - பட்டம் நறயர்
19) செம்பொன்பள்ளி - பட்டம் செம்பொன்கொண்டார்
20) செம்பியிருப்பு - பட்டம் செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன்
21) பாம்புரம் - பட்டம் பம்பாளி, பாம்பாளி, வம்பாளி
22) களப்பாள் - பட்டம் களப்பாளன்
23) பழையாறுகீழ்தளி - பட்டம் பழையாற்றரையன், பழைசையாண்டான், பழையாறுகொண்டான், பழையாற்றான்
24) பழையாறுவடதாளி
25) பழையாறுதென்றளி
26) சங்காரண்யேசுவரர் கோயில், தலைச்சங்காடு   - பட்டம் சங்கரராயர்
27) தென்தலைசங்காடு
28) ஆனைக்கா
29) பெண்ணாகடம்
30) சாய்க்காடு
31) மண்ணிப்படிக்கரை
32) பெருமனை
33) தேரழுந்தூர்
34) துற்காட்சி
35) நாலூர்
36) ஆவூர்
37) குடவாயில்
38) இங்கன்
39) வீழிமிழலை
40) பனந்தாள்தென்றளி
41) பெருங்கடம்பனூர்
42) நாகைமலையீச்சரம்
43) நாகை மேலைக்காயாரோகணம்
44) வலிவலம்
45) கீலைவழி
46) கீழையிலரண்
47) நீணெறி
48) இராசசேரிபுரம்



கோச்செங்கட்சோழன் திருமாலுக்கும் சிவனுக்குமாய் மாடக்கோயில்களை எழுப்பவைத்தன எனலாம். திருநறையூர் மாடக்கோயில், திருநாங்கூர் மாடக்கோயில், அழகிய மணவாளப்பெருமாள் கோயில் முதலிய பெருமாள் ஆலயங்கள் கோச்செங்கணானால் கட்டப்பட்டவையே.




சங்ககாலத்துக் கோயில்களின் அமைப்பு முறையிலிருந்து கோச்செங்கணான் கோயில் அமைப்பு முறைகள் மாறுபட்டன. இப்புதுமையான அமைப்புமுறையில் செய்யப்பட்ட கோயில்கள் மாடக்கோயில்கள் எனப்பட்டன. கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் அமைக்கப்பட்டது. (66) படிக்கட்டுகள் அமைத்துச் செய்குன்றுபோல் கட்டப்பட்டதால், இவை யானை ஏற முடியாத நிலையில் அமைக்கப்பட்டன என்ற கதை தோன்ற வாய்ப்பானது. மாடக்கோயில் என்பது கோயில் கட்டடக்கலை வளர்ச்சியில் ஒரு படி.





காவிரிக்கரை நெடுக இவன் சிவ-வைணவ ஆலயங்களை எழுப்பியதன் கார ணம், ஆன்மிக நோக்கு மட்டுமல்ல. காவிரியில் வெள்ளம் வந்து அடிக்கடி சோழநாட்டு மக்கள் இன்னலுற்றனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு வி டும். மக்களும் பலியாக நேரும்.  அதுபோன்ற வெள்ளக் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக வந்து தங்கும் புகலிடங்களாகவும் பயன்படும் நோக்கி லேயே இச்சோழ மாமன்னன் தான் எழுப்பிய ஆலயங்களை மாடக்கோயில்களாக அமைத்துள்ளான். கஜபிருஷ்டம், தூங்கானை மாடம் என்றெல்லாம் இந்த ஆலயக் கட்டுமானத்திற்குப் பெயர் சொல்லப்படுகின்றன. ஒரு பிரமாண்டமான யானை படுத்திருப்பது போன்று தோற்றமளிக்குமாம் இத்திருக்கோயில்கள்.



கோச்செங்கணானின் சிலந்திக்கதை :

ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தொண்டர் புராணத்தில்தான் கோச்செங்கணானின் பிறப்புக்கதை முதன்முதலாகச் சொல்லப்படுகிறது. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து, இச்சோழவேந்தனைப் பாடிய சம்பந்தர், அப்பர், திருமங்கையாழ்வார், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து இவ்வேந்தனைப் பாடிய சுந்தரர், அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி என்போர் கூறாத இப்பிறப்புக் கதை சேக்கிழார் பெருமானுக்கு எங்கிருந்து கிடைத்திருக்க முடியும். சேக்கிழார் பெருமானின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு. கல்வெட்டுச் செய்திகளில் கூட கோச்செங்கணானைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைக் காணமுடியவில்லை. முன்னோர்களில் ஒருவனாக அப்பெருமான் அன்பில் செப்பேடுகளில் குறிக்கப்படுவதோடு சரி.

சுபதேவர், கமலவதி என்ற பெயர்கள் முழுமையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன. சங்கச் சோழர்களின் பெயர்களோ, தூய தமிழ்ப் பெயர்கள். கிள்ளி, வளவன், சென்னி என்று அழகிய தமிழ்ப்பெயர்களுடன் வாழ்ந்த தமிழ் மன்னர்களிடையே சுபதேவன் திடீரென்று தோன்றியிருக்க முடியாது. வடமொழியாளர் கலப்பு மிகுதியும் தமிழகத்தில் தோன்றிய காலம் கி.பி. 300க்குப் பிறகே என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இரண்டாவது, சோழனின் முற்பிறப்புச் சிலந்திக் கதை அப்பரும் சம்பந்தரும் பாடிய கதையைச் சேக்கிழார் பெருமானும் தொடர்ந்து பாடியிருக்கிறார். இதன் உண்மை பற்றி ஆய்வது தேவையற்றது. ஏனெனில், இதுபோன்ற புராணக் கதைகள் நம் நாட்டில் பல்லாற்றானும் பெருகியுள்ளன. இவை புலவர்களின் கற்பனையில் எழுந்தவை என்பதினும் வேறு சொல்வதற்கில்லை.

திருநறையூர் மாடக்கோயிலைப் பாடிய திருமங்கையாழ்வாரோ இதற்கு மாறாக கோச்செங்கணானுக்கென்றே பத்துப் பாசுரங்கள், மொத்தம் நாற்பது வரிகள் பாடியுள்ளார். கோச்செங்கணான் சிவபக்தியுடைய அடியாராய் இருந்திருப்பானேயானால் அவனைத் திருமங்கையாழ்வார் இவ்வளவு கொண்டாடிப் பாடியிரார். பரமேச்சுர விண்ணகரத்தைப் பாடுகையில், பரம பாகவதனான பல்லவனைக் குறிக்கும்போதுகூட, பல வரலாற்றுச் செய்திகளை வரையாது வழங்கும் திருமங்கையாழ்வார், இவ்வளவு பெருமையுடன் போற்றவில்லை.


‘படைத்திறல் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே’ (73)
என்றுதான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் குறிக்கின்றார்.

ஆனால் கோச்செங்கணானைப் பாடும்போது,
‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ (74)

என்று கோச்செங்கணான் சேர்ந்த கோயிலுக்கு அனைவரும் வந்து சேருங்கள் என்று பெருவிருப்போடு அழைக்கின்றார்.

கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்று சேக்கிழார் கூறுகிறார். ஆனால் இதைப்பற்றி அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோருள் எவரும் தில்லையைப் பற்றிப் பாடும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதைப்பற்றி முதன்முதல் குறிப்பு காட்டுபவர் நம்பியாண்டார் நம்பியே.

‘வம்பு மலர்த் தில்லை ஈசனைச்
சூழ மறைவளர்த்தான்’ (75)
இதையேதான் சேக்கிழார் பெருமானும்,
‘திருவார்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளம்களிப்பத் தொழுதேத்தி உறையுநாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்’ (76)
என்று கூறுகிறார்.

முதலில் சமணர்களாய் இருந்து பிறகு சைவர்களான மகேந்திரவர்மப் பல்லவன், பாண்டியன் நெடுமாறன் போல் இக்கோச்செங்கட்சோழனும் முதலில் சைவனாய் இருந்து பிறகு திருமால் அடியவனாக மாறியிருக்கலாம் என்று பெரியவாச்சான் பிள்ளையவர்களின் வியாக்கியானத்தை அடியொட்டி வாதிடலாம். என்றாலும், கோச்செங்கட்சோழன் சமயப் பொறையுடைய மன்னனாக இருந்தான் என்பதே பொருந்தும். சைவமும் வைணவமும் தன் இரு கண்களாய்க் கொண்டிருந்தமையால்தான் அப்பெருமானைச் சைவர்களும் போற்றினர். வைணவர்களும் வாழ்த்தினர்.

செங்கணான் மாடக்கோயில்களைச் சிவபெருமானுக்கும் திருமாலுக்குமாய் எழுப்பி இரு சமயத்தையும் தன்னிரு கண்களெனப் போற்றி வாழ்ந்த பெருமன்னன் என்பதும் தெளிவாகக் காணக்கிடக்கின்றன.

நன்றி : 
புலவர் கா. கோவிந்தன், எம். ஏ., ( சபாநாயகர் தமிழ்நாடு சட்டப்பேரவை) - நூல் : கழுமலப் போர் 
தமிழக வரலாற்று ஆய்வாளர் இரா. கலைக்கோவன் 

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்