ஆசிரியர் A. தேவராஜ் அவர்களின் மகன் தான் தஞ்சை சோழகர் என்று அன்பாக அழைக்கப்படும் Ln.D.J. ஜெயசேகர் சோழகர். இவரது மனைவி ஆசிரியர் C. லில்லி ஜாஸ்மின்.
70 வயது இளைஞர், இவர் தனது தந்தையிடம் தனது 4 வயதில் இருந்து உடற்பயிற்சி பயின்றார். கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, 1970 ஆண்டில் இருந்து உடற்பயிற்சி மையம் மூலமாக பயிற்சி பெற்று வருகிறார்.
தற்போது தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை காவிரி நகரில் வசித்து வருகிறார்.
இவரது வியக்க வைக்கும் கட்டுக்கோப்பான உடற்கட்டு இளைஞர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற வேண்டிய ஒரு பெயர் தான் தஞ்சை சோழகர்.
தஞ்சை சோழகர் தரும் ஆரோக்கியமான வாழ்விற்கான வழிமுறை :
ஆரோக்கியம்நம் கையில் !
யோகா வேறு !! யோகாசனம் வேறு !!!
யோகா என்பது தியானம் !
மனதை ஒருநிலைப்படுத்துவது !!
மனதை அமைதியான நிலைக்கு
கொண்டு செல்லும் !!!
யோகாசனம் என்பது உடற்பயிற்சியை சார்ந்தது !
உடலை ஆரோக்கியமாக வைக்கச் செய்கிறது !!
உடல் உறுப்புகளை சீராக இயங்க வைப்பது !!!
"வியாதிகளை குறைக்கவும், நீக்கவும் செய்கிறது..."
{ படித்ததில் + கேட்டதில் = கிடைத்த அனுபவம் 10 % தான் } !
வருமுன் காப்போம் !!
வாழ்க நலமுடன் !!!
தஞ்சை சோழகர்
( Ln.D.J.Jayasekar Cholagar )