கி.பி. 1943 ஆம் ஆண்டு தான் விவசாயிகள் சங்கம் தஞ்சைப்பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் நரசிங்கபுரம் கொள்கைவீரர் பி. வெங்கடேச சோழகர் ஆவார்கள்.
பிற்படுத்தப்பட்ட தெருக்களில் வெங்கடேச சோழகர் செங்கொடியை உயர்த்திப் பிடித்தார்.
1952 தேர்தலில் நீடாமங்கலம் தொகுதியில் கட்சி சார்பாக நிற்கும் தோழர் வெங்கடேச சோழகருக்கும் தஞ்சை தொகுதியில் பூதலூர் ஸ்டேசன் மாஸ்டராக இருந்து கட்சி தொடர்பால் வேலை நீக்கம் செய்யப்பட்ட தோழர் எல்.இராமலிங்கம் என்பவருக்கும் நின்றார்கள். அப்பொழுதே சாதி அரசியல் இருந்தது காங்கிரஸ் சாமிநாதன் என்ற கள்ளர் சாதிகாரரை நிறுத்தியதால் இ.பொ.க. பூதலூர் தோழர் எல்.இராமலிங்கம் என்ற கள்ளர் சாதிக்காரரை நிறுத்தியது.
ஆலத்தூரில் நிலப்பிரபு சாம்பசிவஐயர் ரௌடிகளை அழைத்து வந்து தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கி, தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த தெருவைச் சுற்றி முள்வேலி வைத்தார்.
பெரும் நிலப்பிரபுவு மான குன்னியூர் சாம்பசிவ அய்யரை எதிர்த்து, கம்யூனிஸ்ட் தலைவர் வெங்கேடச சோழகர் போட்டியிட்டார்.