வெள்ளி, 31 மார்ச், 2023

சோழ பாண்டிய மண்டலத்தில் கள்ளர் அரையர்களின் பட்டப் பெயரில் உள்ள கள்ளர் குடியினர் வாழும் ஊர்கள்


தமிழகம் பல மண்டலங்களாகவும், வளநாடுகளாகவும், நாடுகளாகவும், ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.


மண்டலங்களும், அவற்றிற்குட்பட்ட வளநாடுகளும் அரசன் பெயராலும், அவன் பட்டப் பெயராலும் வழங்கப்பட்டன.

சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள், இராசராசன் காலம் முதல் வழக்கத்திற்கு வந்தது. அவ் வளநாடுகள் ஒன்பதும், முதல் இராராசனின் பட்டப் பெயரால் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை போல் பட்டப் பெயரால் அமைந்துள்ள, அதே பட்டங்கள் உடைய கள்ளர் இன மக்களே பரம்பரை பரம்பரையாக அதிகமாக வாழ்ந்து வருவதும், அந்த ஊர்களில்லெல்லாம் கள்ளர்களே முதன்மையானவர்களாகவும், அம்பலகாரர்களாகவும் , பட்டையர்களாகவும் உள்ளனர்.
சோழவள நாட்டில் கள்ளர் மரபினரின் வம்சங்களும் ஊர்ப்பெயர்களும் :-

தெற்காசியாவை கட்டியாண்ட சோழப்பேரரசின் தலைநகராக விஜயாலய சோழன் காலம் முதல் முதலாம் இராசராசன் காலம் வரை கோலோச்சியது தஞ்சை மாநகர். சோழப்பேரரசின் காலம் முதல் தற்காலம் வரையிலும் பெரும் பேரோடும் புகழோடும் விளங்கி வரும் சோழ வளநாட்டில் தஞ்சை, திருவாரூர்  திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகுந்து வாழும் சோழ தேச கள்ளர் மரபினர் ஆயிரக்கணக்கான பட்டங்களை கொண்டு தங்களுக்கென்று நாட்டு அமைப்புகளை உருவாக்கி சோழப் பேரரசின் சாதனைகளுக்கு வாழ்வியல் சான்றாக உள்ளனர்.  

சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாவும்,  படைதளபதிகளாகவும்,  படைவீரர்களாகவும்,  அரையர்களாகவும், நிர்வாக அதிகாரிகளாகவும் கோலோச்சிய கள்ளர் மரபினர் பிற்காலத்தில் தஞ்சைவளநாட்டில் 13 பாளையங்களாக பிரித்து தங்களது பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். தஞ்சையில் ஏற்பட்ட பல்வேறு அயலார் படையெடுப்புகளின் போது தஞ்சையை காத்தருளியவர்கள் கள்ளர்களே. தஞ்சையில் இருக்கும் 13 ஜமீன்களில் தற்போது 11 ஜமீன்கள் கள்ளர் மரபினர் என ' கள்ளர் சரித்திரம் (1923)' எழுதிய பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்  குறிப்பிட்டுள்ளார். 

சோழவளநாட்டின் தெற்கு எல்லையான புதுக்கோட்டை சமஸ்தானத்தை பல்லவராயர்கள், தொண்டைமான்கள் என கள்ளர் அரச மரபினர் நாடாண்டு வந்துள்ளனர்.  இது தவிர பல நிலக்கிழார்கள், ராவ் பகதூர்கள் என சோழ தேசத்தின் பெரும்பான்மை நிலப்பகுதிகளை தங்கள் வசம் கொண்டு பழங்கால சோழர் வரலாற்றுக்கு வாழ்வியல் சான்றாக வாழ்ந்து வரும் இம்மரபினர் தாங்கள் குடியமர்ந்த ஊர்களின் பெயர்களை தங்களது பழங்கால வம்ச பட்டங்களை கொண்டே உருவாக்கியுள்ளனர். கள்ளர்கள் பல்வேறு வம்சங்களாக வாழ்ந்து வருவது பற்றியும் ஆங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள சில தகவல்களை காணலாம்:-

" சோழவள நாட்டின் கள்ளர்கள் தங்களது வாழ்விடங்களை பல்வேறு நாடுகளாக பிரித்து கொண்டுள்ளனர். இவர்கள் நாட்டரையன், தென்கொண்டான், வாண்டையான், மெய்க்கொண்டான், மழவராயன், காடவராயன் என பல்வேறு பட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்"
(கிபி 1835, Alexanders East india and colonial magazine Pg: 226-227) 

" கள்ளர்கள் பல்வேறு உட்பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெயரை கொண்டு   வாழ்ந்து வருகின்றனர். தஞ்சிராயன், வன்னியன், சேர்வைக்காரன்,  மேனாட்ரையன், சிறுநாட்டரையன், சோழகன், சோழகங்கதேவர், காலிங்கராயன், வாண்டையார், தென்கொண்டார், அன்னவிசாரன், தொண்டைமான்,  இராசாளியார், பொன்பூண்டார், மழவராயர், காடவராயர், கிளாக்குடையான், பல்லவராயர், மாதுரார்,பன்னிக்கொண்டார் போன்ற பல்வேறு வம்சங்களாக கள்ளர்கள் வாழ்கின்றனர்"
( கிபி 1883 Manual of tanjore in madras presidency by venkasami row  pg 190-192)

"  கள்ளர்கள் பல்வேறு நாடுகளை கொண்டுள்ளனர்.  இவர்கள் வாழும் பகுதிகள் நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அம்புநாடு, விசங்கநாடு, சுந்தர நாடு, காசாநாடு, பாப்பா நாடு, வடமலை நாடு,  கீழவேங்கை நாடு, மருங்காநாடு, தெற்கத்திநாடு போன்றவை சிலவாகும். ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டோடு திருமணம் செய்வது கிடையாது.  ஒவ்வொரு நாட்டிலும் பல் வம்சங்களாக கள்ளர்கள் வாழ்கின்றனர். பல்வேறு வம்சங்களும் ஒணையர், சிங்கத்தார், முண்டுரார்,இருங்களர், வாணாதிராயர், சேண்டபிரியர், பல்லவராயர், திண்ணாப்பிரியர், சேதுராயர், கண்டியர், காலிங்கராயர், சேனைக்கொண்டார், நெடுவாண்டார் போன்ற பல்வேறு பட்டங்களால் குறிக்கப்படுகிறது"
(கிபி 1906 Tanjore gazetter pg 84-85)

" கள்ளர்கள் வெவ்வேறு நாடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களில் பல்வேறு பிரிவுகள் வெவ்வேறு பட்டங்களால் குறிப்பிடப்படுகிறது.  களத்தில் வென்றார், பல்லவராயர், மழவராயர், தொண்டைமான் , சோழங்கத்தேவன், சேதுராயர், சேர்வைக்காரர் போன்றவை கள்ளர்கள் பயன்படுத்தும் பட்டங்களில் சிலவாகும்"
(கிபி 1907 Trichinopoly gazetteer pg 106-107)

" கள்ளர்கள் பல்வேறு நாடுகளை கொண்டுள்ளனர், ஒவ்வொரு நாட்டு கள்ளர்களும் தங்களுக்கென்று நாட்டு கோயில்களை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வம்ச கள்ளர்கள் தனிப்பட்ட பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பட்டங்களில் சில:- மழவராயர், பல்லவராயர், ராங்கியர்,  மண்ணவேளார், ராஜாளியார், தென்னதிரையர், காலிங்கராயர், கலியரார், வலங்கொண்டார், காடுவெட்டியார், மாகாளியார், பன்றிக்கொண்டார், தொப்பையர், சம்பட்டியார், அடையவளஞ்சார், தொண்டைமான், வாண்டார், இருங்களர், கொப்பனன்,  காடவராயர், நாட்டரையர், பட்டுக்கட்டி, புன்னையர், கொண்டையர், நரங்கியர், காளியார், கோப்புலங்கியார், உலகங்காத்தார், சோழகர், தென்கொண்டார், திராணியார், வன்னியர், பாலாண்டார்,வாட்டாச்சியார், கச்சிராயர், தேவர், கலிதீர்த்தார், பேய்வெட்டியார், கோழிபெற்றார், மழுக்கர், மாங்குளர், புதுக்குட்டியார், மாலையிட்டார், நரியர், கோப்பர், ஆவந்தர், பெத்தாச்சியார், அச்சமறியார், பச்சையர், வாண்டையார், மனம்கொண்டார், மானங்காத்தார், சேப்ளார், அதிராயர், அங்கராயர், மங்களார், மண்டையர், தெத்துவாண்டார், தம்புரார், அரையர், சாமந்தர், முனையதிரியர், மாளுசுற்றியார், அகத்தியர், மயிலார், கருப்பட்டியார், கோனேரியார், மாகாளியார், தொண்டாம்புரையர், நெட்டையர்,  சேதுராயர், கடாரத்தரையர், செம்புலியார், வீரமுண்டார், மாதுரார், மழவர், கணியர், பஞ்சவராயர், பாண்டுரார், சோழத்தரையர், இளந்தரையர், வல்லத்தரையர், பம்பாளியார் "

( கிபி 1920 Manual of Pudukkottai state vol 1 Pg 109-112)

சோழவளநாட்டில் , கள்ளர் மரபினரின் வம்ச பட்டங்களால் அமைந்த ஊர்கள் மற்றும் பகுதிகளின் தொகுப்பை காணலாம்.  

* கள்ளந்திரி 
* கள்ளபெரம்பூர்
* கள்ளிக்குடி
* கள்ளம்பட்டி
* கள்ளகுறிச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளர் தொடர்புடைய ஊர் பெயர்கள்:-

01) வாண்டையார் குடியிருப்பு: திருவரங்குளம் வட்டத்தில் உள்ள சிற்றூர். வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.

விருதப்பட்டி: இலுப்பூர் தாலுகாவில் உள்ள சிற்றூர். விருதராசர் விருதராசபயங்கரர் விருதலார், விருதுளார் முதலிய பட்டம் கொண்ட கள்ளர் அரையர்கள் ஆட்சி செலுத்திய ஊர்

02) விஜயபுரம்: அறந்தாங்கி தாலுகாவில் அமைந்த ஊர். அறந்தாங்கி தொண்டைமான் வழிவந்த பாலையவனம் ஜமீன் விஜய அருணாச்சல வணங்காமுடி பண்டாரத்தார் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஊர் விஜயபுரமாகும்.


03)அக்கல்நாயக்கன்பட்டி: விராலிமலை ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர். 16 ஆம் நூற்றாண்டில் பல்லவராயர் அரசி அக்காச்சி என்பவர் கள்ளர் குல வீரன் கச்சிராயனை அனுப்பி விஜயநகர குறுநில அதிகாரியான அக்கலராசா நாயக்கன் என்பவனை வெட்டி வீழ்த்தினார். அந்த விஜயநகர அதிகாரியின் பெயரில் உருவான ஊரே அக்கால்நாயக்கன்பட்டி.


04)அக்கச்சிப்பட்டி : கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள சிற்றூர். கள்ளர்குல பல்லவராய இளவரசி அக்காச்சியாரின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்றூர்

அங்குரார்பட்டி: குன்றாண்டார்கோயில் வட்டத்தில் அங்கரார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

05)அங்கரன்பட்டி: திருவரங்குளம் வட்டத்தில் அங்கரார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்


06)அங்குரார்குளத்துப்பட்டி: விராலிமலை வட்டத்தில் அங்குரார் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்.


07)அடப்பன்காரசத்திரம்: இது புதுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒர் சிற்றூர். கிபி 1797 ல் புதுக்கோட்டை மன்னர் விஜய இரகுநாத தொண்டைமான் தன்னிடம் அடப்பக்காரராக வேலை செய்த கூத்தப்பன் என்பவரிடம் கொண்ட அன்பினால் அவரது பெயரால் அன்னதான சத்திரம் ஒன்றை புதுக்கோட்டை- ராமேஸ்வரம் மார்க்கத்தில் கட்டினார்.அதற்கு அடப்பகாரசத்திரம் என பெயரிட்டார். அதுவே பிற்காலத்தில் சிற்றூரானது.


08)அண்ணாவாசல்: புதுக்கோட்டை - மணப்பாறை வழித்தடத்தில் உள்ளது இவ்வூர். இவ்வூரில் அரையர்களாக இருந்த கள்ளர் மரபினர் அண்ணவாசல்ராயர் எனும் பட்டத்துடன் இன்றும் புதுக்கோட்டை பகுதியில் வாழ்கின்றனர்.


09)அம்மாச்சத்திரம்: புதுக்கோட்டை- கீரனூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது இவ்வூர். கிபி 1730 ல் குளத்தூர் மன்னராக ராமசாமி தொண்டைமான் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்காக சத்திரம் ஒன்ற கட்டினார். அதற்கு தனது மனைவியான முத்தழகம்மாளின் நினைவாக அம்மாள்சத்திரம் என பெயரிட்டார். பிற்காலத்தில் அதுவே அம்மாசத்திரம் என பெயரானது. இன்றும் அம்மாசத்திரத்தில் பழைய சத்திரத்தை காணமுடியும்.


10)அம்புராப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.அம்பர்கொண்டார் அம்பராண்டார் அம்பர்த்தேவர் முதலிய பட்டங்கள் கொண்ட கள்ளர்களின் அடையாளமாக இவ்வூர் அமைந்துள்ளது.


11)ஆண்டவராயபுரம்: ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஊர். பாலையவனம் ஜமீன்கள் ஆண்டவராயர் எனும் குடும்ப பட்டத்தை பயன்படுத்தி வந்தனர்.


12)ஆண்டவராயர்சமுத்திரம் : அறந்தாங்கி வட்டத்தில் பாலையவன ஜமீன்களான ஆண்டவராய பண்டாரத்தார்கள் காலத்தில் அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட சிற்றூர்


13)ஆதொண்டைகுடியிருப்பு: திருவரங்குளம் வட்டத்தில் உள்ள சிற்றூர். ஆதொண்டையர்/ தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர்களால் அதிகாரம் செலுத்தப்பட்ட ஊர்.


14)ஆலங்காடு : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள ஒர் சிற்றூர். ஆலங்காட்டில் அதிகாரம் செய்த கள்ளர் அரையர்கள் ஆலம்பிரியர், ஆலத்தரையர், ஆலங்கொண்டார் முதலிய பட்டங்களுடன் அப்பகுதியில் வாழ்கின்றனர்.


15)ஆர்சுத்திவிடுதி: புதுக்கோட்டை வட்டத்தில் கள்ளர் குல ஆர்சுத்தியார்கள் வாழும் சிற்றூர்.


16)ஆவுடையாப்பட்டி: திருவரங்குளம் வட்டத்தில் உள்ள சிற்றூர். புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு தனது வீரத்தால் அடித்தளம் இட்ட ஆவுடை ரகுநாத தொண்டைமான் பெயரால் உருவாக்கப்பட்ட கிராமம்.


17)இரும்பாநாடு : கீழாநிலைக்கோட்டை பகுதியில் உள்ள ஒர் சிற்றூர். இரும்பர் பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் வாராப்பூர் நாட்டில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.


18)இருங்களன்விடுதி: கறம்பக்குடி வட்ட சிற்றூர். இங்கோளர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் கிராமம்.


19)உலகங்காத்தான்பட்டி: புதுக்கோட்டை குன்றாண்டார்கோயில் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். உலகங்காத்தார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊராகும்.


20)கங்கம்பட்டி: குன்றண்டார்கோயில் வட்டத்தில் உள்ள சிற்றூர். கங்கரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய சிற்றூர்.


21)கல்லாக்கோட்டை( கள்ளர்க்கோட்டை): கந்தர்வகோட்டை தாளுகாவில் உள்ள ஒரு ஊர். கள்ளர்கள் மிக அடர்த்தியாக வாழும் பகுதி. கள்ளர்களின் தலைவர்களான சிங்கமபுலியார் வழியனர் இப்பகுதியின் ஆட்சியாளர்களாக, ஜமீன்களாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.


22)கல்லாலங்குடி: ஆலங்குடி தாலுகாவில் உள்ள ஒர் பகுதி. பெயருக்கு ஏற்றாற்போல முழுக்க முழுக்க கள்ளர்கள் மிகுதியாக வாழும் ஒர் பகுதி.


23)கள்ளர்க்கோட்டை: ஆவுடையார்கோயில் வட்டத்தில் கள்ளர்கள் மிகுந்து வாழும் சிற்றூர்.


24)கள்ளம்பட்டி : பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒர் சிற்றூர். முன்னொரு காலத்தில் கள்ளர்களின் ஆதிக்கம் இருந்ததை குறிக்கிறது.


24)கள்ளம்பட்டி : அன்னவாசல் வட்டத்தில் கள்ளர்கள் மிகுந்து வாழும் ஒர் சிற்றூர்.


25)கள்ளர் நத்தம் : திருவரங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். கள்ளர்கள் மிகுந்து வாழும் பகுதி.


26)களபம்: கறம்பக்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர்.தொண்டைமான்களின் அம்புநாட்டில் உள்ள ஒர் பகுதி. யானைப்படைகளை வைத்து பயிற்சி அளித்து வந்த தொண்டைமான்கள் யானையின் பெயராலேயே உருவாக்கிய ஊர் களபம். களபம் என்பதன் பொருள் இளம் யானை ஆகும்.


27)கலியரான்விடுதி:கறம்பக்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். கலியரார் பட்டம் கொண்ட அம்புநாட்டுக் கள்ளர்கள் வாழும் ஊர்.


28)கலியராயர் தெரு: கறம்பக்குடி வட்டத்தில் கள்ளர் குல கலியராயர்கள் மிகுந்து வாழும் சிற்றூர்.


29)கடம்பராயன்பட்டி: இலுப்பூர் தாலுகாவில் உள்ள ஒர் சிற்றூர். கடம்பராயன் பட்டம் கொண்ட கள்ளர்கள் மிகுந்து வாழும் ஊர்.


30)கண்டியப்பட்டி: கறம்பக்குடி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் கிராமம்.


31)கண்டியன்காடு : விராலிமலை வட்டத்தில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


32)கண்டியன்தெரு: ஆதனக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்.கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழ்கின்றனர்.


33)கண்ணமுன்டாம்பட்டி:குன்றாண்டார்கோயில் வட்டத்தில் கன்னமுடையார், கன்னகொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


34)கதவம்பட்டி: இலுப்பூர் தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூர். கதவம் என்பது காவல் என்பதோடு தொடர்புடைய பெயர்.கதவாடியார் பட்டம் கொண்ட கள்ளர் அரையர் ஆட்சி செலுத்திய ஊர். கதவாடியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.


35)கருப்புடையான்பட்டி: புதுக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள சிற்றூர். கருப்புடையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.


36)கரும்பிரான்கோட்டை:திருவரங்குளம் வட்டத்தில் உள்ள ஒர் சிற்றூர். கரும்பிரார் பட்டம் கொண்ட கள்ளர்கள் கோட்டை கட்சி ஆட்சி செலுத்திய ஊர்.


37)கருப்பட்டிப்பட்டி: கறம்பக்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். வாராப்பூர் நாட்டு கருப்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் கிராமம்.


38)கரும்பன் தெரு : திருவரங்குளம் வட்டத்தில் கரும்பர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


39)கறம்பக்குடி: கறம்பக்குடி தாலுகாவின் தலைமை ஊர். கறம்பையர், கறம்பக்கொண்டார், கறம்பைராlயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய ஊர்.


40)கள்ளர்க்குறிச்சி: மணமேல்குடி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். கள்ளர்கள் இப்பகுதியில் மிகுந்து வாழ்வதால் கள்ளர்குறிச்சி என்றே பெயர் பெற்றுள்ளது.


41)காலிங்கராயன்பட்டி: குன்றாண்டார் கோயில் வட்டத்தில் உள்ள ஒர் கிராமம். காலிங்கராயன் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.


42)காடவன்பட்டி : புதுக்கோட்டை குடுமியான்மலை பகுதியில் உள்ள ஒர் சிற்றூர். கள்ளர் பட்டங்களில் சிலவான காடவர், காடவரார், காடவராயர் பட்டங்களின் அடையாளமாக இவ்வூர் அமைந்துள்ளது.


43)காடவராயன்பட்டி: குன்றாண்டார்கோயில் வட்டத்தில் கள்ளர் குல காடவராயர்கள் வாழும் சிற்றூர்


44)கிள்ளனூர்: புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயில் பகுதியில் உள்ள இவ்வூர். கிள்ளிக்கொண்டார் / கிள்ளியாண்டார் எனும் பட்டம் கொண்ட கள்ளர் மக்கள் இவ்வூரில் வாழ்கின்றனர்.


45)கிள்ளிக்குடி; இலுப்பூர் தாலுகாவில் உள்ள சிற்றூர். கிள்ளியாண்டார், கிள்ளிக்கொண்டார் பட்டங்களோடு தொடர்புடையதாக இவ்வூர் பெயர் அமைந்துள்ளது


46)கிள்ளுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயில் பகுதியில் உள்ள இவ்வூர். கிள்ளியாண்டார், கிள்ளிக்கொண்டார் பட்டங்களோடு தொடர்புடையதாக இவ்வூர் பெயர் அமைந்துள்ளது.


47)கீழையூர்-ஆலங்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். இவ்வூரில் அதிகாரம் செலுத்திய கள்ளர் அரையர்கள் கீழரையர், கீழையாண்டார் பட்டங்களுடன் அப்பகுதியில் வாழ்கின்றனர்.


48)குளந்திரான்பட்டு : கறம்பக்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். குளந்தைராயர் பட்டம் கொண்ட அம்பு நாட்டுக்கள்ளர் வாழும் ஊர்.


49)கூழையர்காடு:திருவரங்குளம் வட்டத்தில் கூழையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

கரடியான்குளம் : திருமயம் வட்டத்தில் கரடியார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

50)கூழையான்விடுதி: புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள சிற்றூர். கூழியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

கோழியன் தெரு: திருவரங்குளம் வட்டத்தில் கோழியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

51)கொங்குடிப்பட்டி: இது இலுப்பூர் தாலுகாவில் அமைந்த ஒரு சிற்றூர். கொங்குதரையர், கொங்கரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் மிகுந்து வாழும் பகுதியில் அமைந்த சிற்றூர்.


52)கொங்கரக்கோட்டை : கறம்பக்குடி வட்டத்தில் கொங்கரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


53)கொங்கதிரையன்பட்டி: குன்றாண்டார்கோயில் வட்டத்தில் கொங்கத்திரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


54)கொங்கன்குடியிருப்பு :அறந்தாங்கி வட்டத்தில் கொங்கர்,கங்கர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்


55)கொடும்பாளூர்: புதுக்கோட்டை - மணப்பாறை வழிதடத்தில் அமைந்துள்ளது இவ்வூர். இவ்வூரை ஆட்சி செய்த கள்ளர்கள் இன்றும் கொடும்பூரார், கொடும்பாளூராயர் பட்டத்துடன் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை பகுதிகளில் வாழ்கின்றனர்.


56)கொண்டையார் தெரு: கறம்பக்குடி வட்டத்தில் கொண்டையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.


57)கொத்தம்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள ஒர் சிற்றூர். இவ்வூரில் அதிகாரம் செய்த கள்ளர் அரையர்கள் கொத்தம்கொண்டார்/ கொத்தமுண்டார் எனும் பட்டப்பெயர்களோடு வாராப்பூர் நாட்டில் வாழ்கின்றனர்.


58)கோபாலப்பட்டி: கறம்பக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். கோபாலர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


59)சம்பட்டிவிடுதி: இந்த ஊர் வாராப்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஊர். வாராப்பூர் நாட்டு கள்ளர்களான சம்பட்டியார்களின் அடையாளமாக சம்பட்டிவிடுதி என பெயர்பெற்றுள்ளது. கள்ளர்குல சம்பட்டியார்கள் இங்கு வாழ்கின்றனர்.


60)சம்பட்டிப்பட்டி: புதுக்கோட்டை வட்டம், கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர். சம்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

சம்புரான்பட்டி: ஆலங்குடி வட்டத்தில் உள்ள சிற்றூர். சம்புரார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.

61)சின்னபாண்டுரார்பட்டி:விராலிமலை வட்டத்தில் பாண்டுரார் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்.


62)சித்துபாண்டுரார்பட்டி:விராலிமலை வட்டத்தில் பாண்டுரார் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்


63)சின்னையா சத்திரம்: புதுக்கோட்டை-வடவாளம் வழித்தடத்தில் உள்ளது. கிபி 1790 ல் திருமலைராய தொண்டைமான் இங்கு வழிப்போக்கர்களுக்கான சத்திரம் அமைத்தார். அதுவே பிற்காலத்தில் சின்னையா சத்திரம் என ஊர் பெயராக மாறியது.


64)சின்னபாண்டுரான்பட்டி: புதுக்கோட்டையில் லட்சுமணப்பட்டி பகுதியில் உள்ள ஒர் சிற்றூர். கள்ளர் பட்டங்களில் ஒன்றான பாண்டுரார் என்பதன் அடையாளமாக இவ்வூர் உள்ளது.


65)சிறுநாட்டான்வயல்: அறந்தாங்கி தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூர். சிறுநாடர், சிறுநாட்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய ஒரு சிற்றூர்.


66)சுக்கிரர் தெரு: திருவரங்குளம் வட்டத்தில் உள்ள சிற்றூர். சுக்கிரர், சுக்கிராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.


67)சுக்கிரர்பட்டி: கறம்பக்குடி வட்டத்தில் சுக்கிரன் பட்டம் கொண்ட கள்ளர்கள் மிகுந்து வாழும் ஊர்.


68)சூரியர்விடுதி: கறம்பக்குடி வட்டத்தில் சூரியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


69)சாமந்தன்வயல்: திருமயம் தாலுகாவில் உள்ள ஒர் சிற்றூர். சாமந்தன் பட்டம் கொண்ட வல்லநாட்டுக்கள்ளர்களால் ஆட்சி செய்யப்பட்ட ஒர் சிற்றூர்.


70)சாளுவர் குடியிருப்பு: திருவரங்குளம் வட்டத்தில் சாளுவர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


71)சாளுவன்விடுதி : கறம்பக்குடி வட்டத்தில் சாளுவர் பட்டமுடைய கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


72)செம்படவயல்: திருவரங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். செம்படையர் பட்டம் கொண்ட கள்ளர் ஆட்சி செய்த சிற்றூர்.


73)சோணாடாம்பட்டி:குன்றண்டார்கோயில் வட்டத்தில் உள்ள சிற்றூர். சோணாடர் , சோணாடுகொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


74)சோழகம்பட்டி: கந்தர்வகோட்டை வட்டத்தில் நொடியூர் ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


75)சோழகம்பட்டி: அன்னவாசல் வட்டத்தில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


76)சோழகம்பட்டி: புதுக்கோட்டை வட்டாரத்தில் வளவம்பட்டி ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


77)சோழகம்பட்டி : கந்தவர்வகோட்டை வட்டத்தில் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் கள்ளர் குல சோழகர்கள் வாழும் சிற்றூர்.


78)சேதுராப்பட்டி : திருமயம் வட்டத்தில் உள்ள சிற்றூர். சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


79)சேதுராவயல்:குன்றாண்டார்கோயில் வட்டத்தில் சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்


80)சேப்ளார்தோப்பு : விராலிமலை வட்டத்தில் சேப்ளார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


81)சேப்பிளாம்பட்டி: அரிமளம் வட்டத்தில் சேப்பிளார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


82)சேர்வைக்காரன்பட்டி : குன்றாண்டார் கோயில் வட்டத்தில் சேர்வை பட்டமுடைய கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


83)தளிஞ்சி: புதுக்கோட்டை குடுமியான்மலை பகுதியில் உள்ள சிற்றூர். புதுக்கோட்டை பகுதியில் பகுதியில் வாழும் தளிஞ்சிரார் பட்டம் கொண்ட கள்ளர்கள் இவ்வூரில் ஆட்சி செலுத்திய அரையர்களாவர்.


84)திருமலைராய சமுத்திரம்: புதுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள ஒர் சிற்றூர். புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத ராய தொண்டைமான்(1730-1769) அவர்களின் தந்தை திருமலை ராய தொண்டைமானால் நீர்நிலை அமைக்கப்பட்டு அதை சுற்றி மக்கள் குடியேற்றப்பட்டனர். இதற்கு திருமலைராய சமுத்திரம் என பெயரிடப்பட்டது.


85)திருமலைராயபுரம்:குன்றாண்டார்கோயில் வட்டத்தில் திருமலை தொண்டைமான் பெயரில் உருவாக்கப்பட்ட சிற்றூர்.


86)திருவாட்சியார் குடியிருப்பு : அறந்தாங்கி வட்டத்தில் திருவாட்சியார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


87)துரையரசபுரம்: அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். பாலைவன ஜமீன், முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் துரையரசன் அவர்களின் பெயரால் அமைந்துள்ள சிற்றூர்


88)தென்னன்குடி: இலுப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். தென்னவர், தென்னர், தென்னராயர் முதலிய பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் வாழ்ந்து பெயர்பெற்ற ஊர்.


89)தென்னிதரையன்பட்டி: புதுக்கோட்டை - குன்றாண்டார்கோயில் வழிதடத்தில் அமைந்துள்ள சிற்றூர். இது தென்னிதிரையன் பட்டம் கொண்ட விசங்கி நாட்டு கள்ளர்கள் வாழும் ஊர்.


90)தெம்மாண்டார்ப்பட்டி: குன்றாண்டார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஊர். தெம்மாண்டார் பட்டம் கொண்ட விசங்கி நாட்டு கள்ளர்கள் வாழும் ஊர்.


91)தொண்டைமான்குடியிருப்பு : திருவரங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.


92)தொண்டைமான்களத்துவீடு: அன்னவாசல் வட்டத்தில் உள்ள சிற்றூர். தொண்டைமான் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்றூர்.


93)தொண்டமான்ஊரணி : புதுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள சிற்றூர். இப்பகுதியில் புதுக்கோட்டை மன்னரால் ஊரணி அமைக்கப்பட்டு அதை சுற்றி மக்கள் குடியேற்றப்பட்டனர். இதற்கு தொண்டைமான்ஊரணி என பெயரிடப்பட்டது.


94)தொண்டைமான்விடுதி:புதுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள பகுதி. தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.


95)தொண்டாம்புரியர் தெரு: கறம்பக்குடி வட்டத்தில் உள்ள சிற்றூர். தொண்டாம்புரியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.


96)தொண்டைமான்புஞ்சை: கறம்பக்குடி வட்டத்தில் உள்ள சிற்றூர். தொண்டைமான் மன்னர் பெயரால் உருவாக்கப்பட்ட சிற்றூர்.


97)தொண்டைமான்நல்லூர் : விராலிமலை வட்டத்தில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


98)தொண்டைமான் ஏந்தல்: ஆவுடையார்கோயில் வட்டத்தில் தொண்டைமான் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டு அவரது பெயரிடப்பட்ட சிற்றூர்.


99)தொண்டைமான் குடியிருப்பு : அறந்தாங்கி வட்டத்தில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்.


100)தேவர் வயல் : அறந்தாங்கி வட்டத்தில் அமைந்த சிற்றூர். தேவர் பட்டம் கொண்ட கள்ளர்கள் மற்றும் மறவர்கள் வாழும் பகுதி.


101)தேவர்ப்பட்டி: அறந்தாங்கி வட்டத்தில் கள்ளர் மறவர் வாழும் சிற்றூர்.


102)தேவர்குடியிருப்பு:அறந்தாங்கி வட்டத்தில் கள்ளர் மறவர் வாழும் சிற்றூர்.


103)நமணசமுத்திரம்: புதுக்கோட்டை- திருமயம் வழிதடத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். குளத்தூர் மன்னரான நமண தொண்டைமான் காலத்தில் நீர்நிலை அமைக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.அவரது பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் நமணசமுத்திரமாகும்.


104)நரியன்கொல்லை: கறம்பக்குடி வட்டத்தில் உள்ள சிற்றூர். நரியர், நரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய சிற்றூர்.


105)நரங்கியப்பட்டு : கறம்பக்குடி வட்டத்தில் உள்ள சிற்றூர். நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


106)நரங்கியம்பட்டி: குன்றாண்டார் கோயில் வட்டத்தில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்.


107)நரங்கியம்பட்டி: புதுக்கோட்டை வட்டாரத்தில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


108)நாட்டார் தெரு: திருவரங்குளம் வட்டத்தில் நாட்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.


109)நாட்டரயன்காடு: விராலிமலை வட்டத்தில் நாட்டரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


110)நாவிளங்கியான்காடு : விராலிமலை வட்டத்தில் நாவிளங்கியார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


111)பல்லவராயன்பத்தை: புதுக்கோட்டை - கறம்பக்குடி வழித்தடத்தில் உள்ளது. அம்பு நாட்டு கள்ளர்களான பல்லவராயர்கள் வாழும் ஊர். பல்லவராயர்களின் அடையாளத்தோடு பல்லவராயன்பத்தை என பெயர்பெற்றது.


112)பணங்கொண்டாவிடுதி: திருமயம் வட்டத்தில் பணங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

பல்லவராயர் தெரு: கறம்பக்குடி வட்டத்தில் கள்ளர் குல பல்லவராயர்கள் வாழும் பகுதி.

113)பணிகொண்டான்பட்டி: அன்னவாசல் வட்டத்தில் பணிகொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


114)படியன்கோட்டை: மணமேல்குடி வட்டாரத்தில் உள்ள சிற்றூர். படியான் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய சிற்றூர்.


115)பாச்சிக்கோட்டை: ஆலங்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். இவ்வூரில் முற்காலத்தில் கோட்டை இருந்ததாக செவிவழி தகவல். இவ்வூரில் அதிகாரம் செலுத்திய கள்ளர் அரையர்கள் பாச்சிக்கொண்டார், பாச்சிராயர், பாச்சுண்டார் பட்டங்களுடன் வாராப்பூர் நாட்டில் வாழ்கின்றனர்.


116)பாலையூர்: ஆலங்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். அறந்தாங்கி தொண்டைமான்களின் பூர்வீக பூமியான இவ்வூரை ஆட்சி செய்த கள்ளர் அரையர்கள் பாலையூரார், பாலையரார், பாலையாண்டார் முதலிய பட்டங்களுடன் இப்பகுதியில் வாழ்கின்றனர்.


117)பாலாண்டாப்பட்டி:குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். பாலாண்டார் பட்டம் கொண்ட கள்ளர்களின் பெயரால் அமைந்துள்ள ஊர் இதுவாகும்.


118)பாப்புடையான்பட்டி : குன்றாண்டார் கோயில் வட்டத்தில் பாப்புடையார், பாப்புடையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


119)பிரகதாம்பாள்புரம்: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூர். புதுக்கோட்டை மன்னர்களின் குலதெய்வமான பிரகதாம்பாளின் பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு ஊராகும்.


120)புள்ளான்விடுதி: ஆலங்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர்.இவ்வூரில் அதிகாரம் செலுத்திய கள்ளர் அரையர்கள் புள்ளராயர், புள்ளவராயர் முதலிய பட்டங்களுடன் இப்பகுதியில் வாழ்கின்றனர்.

மதயானைப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள சிற்றூர். மதயானைகளை தொண்டைமான் மன்னர்கள் அடக்கி பெயர் பெற்றதை புதுக்கோட்டை வரலாறு உரைக்கிறது. யானைகள் பயிற்றுவித்து போர்யானைகளாக மாற்றும் வித்தையில் தொண்டைமான்கள் சிறந்து விளங்கினர். யானைகளுக்கு பயிற்சி அளிக்கும் இடம் பிற்காலத்தில் இப்பெயர் பெற்று இருக்கலாம். மதப்பிரியர், மதப்பிலியர் முதலிய பட்டங்கொண்ட கள்ளர்கள் இவ்வூரோடு தொடர்புடையவராவர்.

121)பூலான்பட்டி : கொடும்பாளூர் ஊராட்சியில் பூலார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


122)பூனையர்குடியிருப்பு : அரிமளம் வட்டத்தில் பூனையர் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்.


123)பெருங்கொண்டான்விடுதி: புதுக்கோட்டை வட்டாரத்தில் பெருங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


124)பொன்னன்விடுதி: கறம்பக்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். பொன்னங்கொண்டார், பொன்னம்பூண்டார் பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய சிற்றூராகும்.


125)பொத்தையன்குடியிருப்பு : மணமேல்குடி வட்டத்தில் பொத்தையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


126)மழவராம்பட்டி: விராலிமலை வட்டத்தில் உள்ள சிற்றூர். மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.


127)மண்ணவேளம்பட்டி : விராலிமலை வட்டத்தில் மண்ணவேளார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


128)மணவாளன் குடியிருப்பு :அறந்தாங்கி வட்டத்தில் மணவாளர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


129)மரவம்பட்டி : கந்தர்வகோட்டை வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். மறவர்கள் அதிகாரம் செலுத்திய சிற்றூர்.


130)மறவன்பட்டி: கறம்பக்குடி வட்டத்தில் உள்ள சிற்றூர். மறவரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் இப்பகுதியில் வாழ்கின்றனர்.


131)மறவமதுரை: பொன்னமராவதி தாலுகாவில் உள்ள சிற்றூர். மறவர்களின் ஆதிக்கம் இருந்ததை குறிக்கும் வண்ணம் இவ்வூர் உள்ளது.


132)மங்காத்தேவன்பட்டி: கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள ஒர் சிற்றூர். கள்ளர்களின் பட்டமான மங்காத்தேவர் என்பதன் அடையாளமாக அமைந்துள்ள ஊர்.


133)மங்களத்துப்பட்டி : புதுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். மங்களார் பட்டம் கொண்ட புதுக்கோட்டை கள்ளர்கள் அரையர்களாக ஆட்சி செய்த சிற்றூர்.


134)மழவராம்பட்டி: அன்னவாசல் வட்டத்தில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் வாழும் சிற்றூர்.


135)மழவராயன்பட்டி: ஆலங்குடி தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். சோழ மன்னர்களால் குடியமர்த்தப்பட்ட கள்ளர் குல மழவராயர்கள் வாழும் ஒர் சிற்றூர்.


136)மழவராம்பட்டி: கறம்பக்குடி வட்டத்தில் மழவரார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.



137)மழவராயர் தெரு: திருவரங்குளம் வட்டத்தில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.


138)மட்டையம்பட்டி: பெருங்களூர் ஊராட்சியில் மட்டையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


139)மேனாட்ராயர் குடியிருப்பு: திருவரங்குளம் வட்டத்தில் மேனாட்ரயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


140)முண்டன் குடியிருப்பு: அறந்தாங்கி வட்டத்தில் முண்டர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


141)மாங்காடு: ஆலங்குடி தாலுகாவில் உள்ள ஒர் சிற்றூர். இவ்வூரில் அதிகாரம் செலுத்திய கள்ளர் அரையர்கள் மாங்காடர், மாங்காட்டார் பட்டங்களுடன் இப்பகுதியில் வாழ்கின்றனர்.


142)மாங்காட்டார்கொல்லை:திருவரங்குளம் வட்டத்தில் மாங்காட்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


143)மார்த்தாண்டபுரம்:ஆவுடையார்கோயில் வட்டத்தில் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் காலத்தில் அவரது பெயரில் உருவாக்கப்பட்ட சிற்றூர்.


144)மாகாளிஏந்தல்: இது ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் உள்ள ஒர் சிற்றூர். மாகாளியார் பட்டம் கொண்ட கள்ளர்களால் அதிகாரம் செய்யப்பட்ட ஊராகும். மாகாளி பட்டம் கொண்ட கள்ளர்கள் இதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கின்றனர்.


145)மாகாளிதெரு: மாகாளியார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.


146)மாதுரார்களம்: அன்னவாசல் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். மாதுரார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


147)மாதுரார்பட்டி : விராலிமலை வட்டத்தில் மாதுராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்


148)ரங்கம்மாள் சத்திரம்: புதுக்கோட்டை - கீரனூர் வழித்தடத்தில் உள்ள ஒர் சிற்றூர். விஜய ரகுநாதராய தொண்டைமான் கிபி 1730-1769 காலகட்டத்தில் புதுக்கோட்டை மன்னராக இருந்தவர். இவரது மனைவியார் ரங்கம்மாள். இவரால் இப்பகுதியில் சத்திரம் கட்டப்பட்டது. இவரது பெயரிலேயே ரங்கம்மாள் சத்திரம் என பெயர் பெற்றது. மன்னர் இறந்தபின் புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் இவர் உடன்கட்டை ஏறி உயிர்விட்ட கற்புக்கரசி என்பது குறிப்பிடத்தக்கது.


149)ரகுநாதபுரம்: இது கறம்பக்குடி பகுதியில் உள்ள ஊர். புதுக்கோட்டை மன்னர் ரகுநாத ராய தொண்டைமான் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட ஊர், அவரது பெயரையே தாங்கி நிற்கிறது.


150)ரகுநாதப்பட்டி:அரிமளம் வட்டத்தில் ரகுநாத தொண்டைமான் பெயரால் அமைக்கப்பெற்ற சிற்றூர்.


151)ரகுநாதப்பட்டி: பொன்னமராவதி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். புதுக்கோட்டை மன்னர ரகுநாத தொண்டைமான் காலத்தில் அமைக்கப்பட்ட சிற்றூர்.


152)ராக்கன்பட்டி: கறம்பக்குடி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். ராக்கன், ராக்கசர் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய சிற்றூர்.


153)ராயரகுநாதசமுத்திரம்: திருமயம் தாலுகாவில் அமைந்துள்ள சிற்றூர். புதுக்கோட்டை மன்னர் ராய ரகுநாததொண்டைமான்(1769-1789) காலத்தில் நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு அவரது பெயரால் அமைக்கப்பட்ட ஊராகும்.


154)ராஜாளிப்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊர். ராஜாளியார் எனும் பட்டம் கொண்ட கள்ளர்கள் அப்பகுதியில் வாழ்கின்றனர். ராசாளியார் எனும் பட்டத்தால் அமைந்த பெயரினை கொண்ட ஊர்.


155)ராமச்சந்திரபுரம் : பனங்குடி பகுதியில் உள்ள ஒரு சிற்றூர். புதுக்கோட்டை மன்னரான ராமச்சந்திர தொண்டைமான் பெயரால் உருவாக்கப்பட்ட ஊராகும்.


156)ராமச்சந்திரபுரம்: திருவரங்குளம் வட்டத்தில் புதுக்கோட்டை மன்னர் இராமச்சந்திர தொண்டைமான் பெயரில் உருவாக்கப்பட்ட சிற்றூர்.


157)ராங்கியம்: புதுக்கோட்டை திருமயம் பகுதியில் உள்ள ஒர் ஊர். அம்புநாட்டு கள்ளர்களில் ஒரு பிரிவனரான ராங்கியர்கள் தலைமையிலான படைப்பற்று இப்பகுதியில் செயல்பட்டு வந்தது. ராங்கியர்களின் அடையாளமாக ராங்கியம் என பெயர் பெற்றது.


158)ராங்கியன்விடுதி:கறம்பக்குடி தாலுகாவில் உள்ள சிற்றூர். அம்புநாட்டு கள்ளர்களான ராங்கியர்கள் வாழும் ஒர் கிராமம்

வலங்கொண்டான்விடுதி: கறம்பக்குடி தாலுகாவில் உள்ள வாராப்பூர் நாட்டை சேர்ந்த சிற்றூர். வலங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.

159)வல்லத்திரான்கொல்லை: கறம்பக்குடி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். வல்லத்தரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.


160)வளவம்பட்டி: கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள ஒரு பகுதி. வளவர் பட்டம் கொண்ட கள்ளர்கள் இப்பகுதியில் வாழந்து வருகின்றனர்.


161)வன்னியன்விடுதி: திருவரங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் அதிகாரம் செலுத்திய சிற்றூர்.


162)வன்னியம்பட்டி:கந்தர்வகோட்டை வட்டத்தில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்


163)வல்லத்திராக்கோட்டை: புதுக்கோட்டை- அறந்தாங்கி வழித்தடத்தில் அமைந்துள்ள வல்லநாட்டை சேர்ந்த ஊர். புதுக்கோட்டை கள்ளர்களின் பட்டங்களில் ஒன்றான வல்லத்தரையரின் அடையாளமாக வல்லத்திராக்கோட்டை எனும் ஊர் உள்ளது.


164)வாணாதிராயன்பட்டி: விராலிமலை வட்டத்தில் வாணாதிராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


165)விஜயரகுநாதபுரம்: இது புதுக்கோட்டை - அறந்தாங்கி வழித்தடத்தில் அமைந்துள்ள ஊராகும்.கிபி 1826ல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான் 20 வீடுகள் கொண்ட அக்ரஹாரத்தை உருவாக்கி அதற்கு தனது தம்பியான விஜயரகுநாத தொண்டைமான் பெயரால் விஜயரகுநாதபுரம் என பெயரிட்டார்.


166)விஜயரகுநாதப்பட்டி: கறம்பக்குடி வட்டத்தில் விஜயரகுநாத தொண்டைமான் மன்னர் பெயரில் உருவாக்கப்பட்ட ஊர்.


167)விசலூர்: புதுக்கோட்டை கிள்ளுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஊர். கீழ செங்கிளி நாட்டில் வரும் கிராமம். விசுரார், விசல்கொண்டார், விசல்நாடர், விசலாண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் புதுக்கோட்டை பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் விசலூர் பகுதியில் ஆட்சி செய்த அரையர் வழினர் ஆவர்.


168)வங்காரம்பட்டி: விராலிமலை வட்டத்தில் வங்கராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


169)வடுகப்பட்டி : கந்தர்வகோட்டை வட்டத்தில் வடுகராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


170)வாண்டாக்கோட்டை: இது வல்லநாட்டை சேர்ந்த கள்ளர்கள் கிராமங்களில் ஒன்று. வாண்டார், வாண்டையார் எனும் கள்ளர் பட்டங்களின் அடையாளமாக இவ்வூரின் பெயர் அமைந்துள்ளது.


171)வாண்டாம்பட்டி:புதுக்கோட்டை வட்டம், கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர்.வாண்டார், வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


172)வாண்டான்விடுதி: கறம்பக்குடி தாலுகாவில் உள்ள ஊர். வாண்டராயர், வாண்டார், வாண்டையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.


173)வாணாதிராயன்பட்டி: இலுப்பூர் தாலுகாவில் உள்ள சிற்றூர்.வாணாதிராயர் பட்டம் கொண்ட கள்ளர் குல அரையர்கள் வாழ்ந்த ஊர்.


174)அகமுடையபுதூர்: பொன்னமராவதி வட்டத்தில் அகமுடையார்கள் மிகுந்து வாழும் சிற்றூர்.


175)அகம்படியானேந்தல் : மணமேல்குடி வட்டத்தில் அகமுடையார்கள் வாழும் சிற்றூர்.




பட்டி

1. அங்கராயன் பட்டி - அங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
2 . ஆரமுண்டான்பட்டி – ஆரமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் ( தஞ்சாவூர், புதுப்பட்டி ஊராட்சி)
3 . இராசாளிப் பட்டி - இராசாளியார் பட்டம் உடைய கள்ளர்கள் ( விராலிமலை, தஞ்சாவூர் பகுதி )
4 . இராயமுண்டான்பட்டி – இராயமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் ( தஞ்சாவூர், ஏரிமங்கல நாடு பகுதி )
5 . உலகங்காத்தான்பட்டி – உலகம்காத்தார் பட்டம் உடைய கள்ளர்கள் ( கள்ள(ர்)குறிச்சி பகுதி )
6 . உலங்காத்தான்பட்டி - உலங்கத்தார் பட்டம் உடைய கள்ளர்கள் ( கள்ள(ர்)குறிச்சி பகுதி )
7 . ஏத்தொண்டான்பட்டி – ஏத்தொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
8 . ஏற்றாண்டார் பட்டி - ஏற்றாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி, நடராசபுரம்)
9 . ஓசையன்பட்டி - ஓசையார், ஓசையர் பட்டம் உடைய கள்ளர்கள்
10 . கடம்பராயன் பட்டி - கடம்பராயர் பட்டம் உடைய கள்ளர்கள் ( புதுக்கோட்டை)
11 . கண்டியன்பட்டி – கண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள் (அம்புகோயில், புதுக்கோட்டை)
12 . கருப்பட்டிப் பட்டி - கருப்பட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் (அம்புகோயில், புதுக்கோட்டை)
13 . கல்விராயன்பட்டி - கவிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர், ஆலக்குடி)
14 . கலியராயன்பட்டி - கலியராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் )
15 . காங்கெயன்பட்டி - காங்கெயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் )
16 . காடவராயன்பட்டி - காடவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை, புனல்குளம் வட்டம்)
17 . காவாலிப் பட்டி - காவாலியார் பட்டம் உடைய கள்ளர்கள் (ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர்)
18 . குச்சிராயன்பட்டி - குச்சிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
19 . சம்புரான்பட்டி - சம்புராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை,ஆலக்குடி)
20 . சாணூரன்பட்டி - சானூரர் பட்டம் உடைய கள்ளர்கள்
21 . சாதகன்பட்டி – சாதகர் பட்டம் உடைய கள்ளர்கள்
22 . சாளுவராயன்பட்டி - சாளுவர் பட்டம் உடைய கள்ளர்கள்
23 . சுரக்குடிப்பட்டி - சுரக்குடியார் ,செம்பிய முத்தரையர்பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர், ஏரிமங்கலநாடு)
24 . சேதிராயன்பட்டி - சேதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
25 . சேதுராப்பட்டி - சேதுராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி, திருவரங்கம் )
26 . சோழகன்பட்டி - சோழகர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தராக்கோட்டை)
27 . திராணிபட்டி – திராணியார் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை, பெருங்களூர்)
28 . துண்டுராயன்பட்டி - துண்டுராயர் (துண்டீரராயர்)பட்டம் உடைய கள்ளர்கள்
29 . தென்னதரையன் பட்டி - தென்னதிரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
30 . தொண்டைமான்பட்டி – தொண்டைமான் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி திருவெறும்பூர்)
31 . நரங்கியன்பட்டி - நரங்கியர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தராக்கோட்டை)
32 . பல்லவராயன்பட்டி - பல்லவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (மதுரை, தேனி, கந்தர்வகோட்டை
33 . பாண்டியராயன் பட்டி - பாண்டியராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
34 . பாண்டுராயன்பட்டி - பாண்டுராயர் பாண்டுரார் பட்டம் உடைய கள்ளர்கள் 
35 . பாப்பரையன்பட்டி - பாப்பு வெட்டியார், பாப்பு ரெட்டியார், பாப்பரையர் பட்டம் உடைய கள்ளர்கள்


36 . பாலாண்டான்பட்டி - பாலாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (குளத்தூர், புதுக்கோட்டை)
37 . பூலான்பட்டி - பூலார் பட்டம் உடைய கள்ளர்கள் ( அம்புநாடு, சிவகங்கை, சேலம், மதுரை )
38 . மங்கத்தேவன் பட்டி - மங்கத்தேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தர்வக்கோட்டை)
39 . மங்கலத்துப் பட்டி - மங்கலத்தான், மங்கலதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (பெருங்கலூர், புதுக்கோட்டை))
40 . மலையப்பட்டி - மலையர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தர்வக்கோட்டை)
41 . மலைராயன்பட்டி - மலையமான், மலைராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
42 . மழவராயன் பட்டி - மழவராயன் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை)
43 . மாதரையன்பட்டி - மாதராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
44 . மாதவராயன்பட்டி - மாதவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (சிவகங்கை திருப்பத்தூர்)
45 . மாதைராயன்பட்டி – மாதைராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
46 . முத்துவீரக்கண்டியன்பட்டி (திருவையாறு)
47 . முதலிப்பட்டி - முதலியார் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை)
47. முனையதிரியன் பட்டி - முனையத்திரியர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம்)
48 . வல்லாண்டான்பட்டி – வல்லாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
49 . வல்லாளப்பட்டி- வல்லாளத்தேவன் பட்டம் உடைய கள்ளர்கள் (மேலநாடு, மதுரை)
50 . வன்னியன்பட்டி - வன்னியர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை, பெருங்குடி)
51 . வாணதிரையன்பட்டினம் - வாணதிரையன் பட்டம் உடைய கள்ளர்கள் (அரியலூர் , ஜெயங்கொண்டம்)
52 . வாணராயன்பட்டினம் - வாணரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
53 . வாலியன்பட்டி (வாலியப்பட்டி) – வாலியர், வாலிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி)
54 . வில்லவராயன்பட்டி – வில்லவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (பூதலூர், தஞ்சாவூர்)
55 . வெண்டையன்பட்டி - வெண்டர், வெண்டாதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர், ஏரிமங்கல நாடு)

55. கொங்கரையன்பட்டி - கொங்கரையர் பட்டம் உடைய கள்ளர்கள்

விடுதி



56 . ஆரிச்சுத்திவிடுதி - ஆர்சுத்தியார் பட்டம் உடைய கள்ளர்கள்
57 . இராங்கியன்விடுதி - ராங்கியர் பட்டம் உடைய கள்ளர்கள் (கறம்பக்குடி )
58 . இராசளிவிடுதி - இராசளியர் பட்டம் உடைய கள்ளர்கள்
59 . இருப்பைவிடுதி - இருப்பரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
60 . உஞ்சிவிடுதி - பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
61 . கரம்பைவிடுதி - கரம்பையார் , கரம்பைகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
62 . கலிராயன்விடுதி - கலிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
63 . காடுவெட்டிவிடுதி - காடுவெட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் , திருவோணம்)
64 . காரியான்விடுதி - காரியார் பட்டம் உடைய கள்ளர்கள்
65 . சம்பட்டிவிடுதி - சம்பட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள்
66 . சென்னிவிடுதி - சென்னிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் திருவோணம்)
67 . தளிகைவிடுதி - தளிகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (ஒரத்தநாடு, தஞ்சாவூர்)
68 . பணிகொண்டான் விடுதி - பணிகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
69 . பன்னிகொண்டான்விடுதி - பன்னிக்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
70 . போத்தன்விடுதி - போய்ந்தராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
71 . மணிகராயன்விடுதி - மணிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
72 . மேனாட்டுராயன்விடுதி - மேனாட்டரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
73 . வன்னியன்விடுதி - வன்னியன் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை - ஆலங்குடி)
74 . வெட்டன்விடுதி - வெட்டுவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை )


75 . வெள்ளைத்தேவன்விடுதி - வெள்ளதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் )
76 . வலங்கொண்டான்விடுதி - வலங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (கறம்பக்குடி )
77 . வாண்டான்விடுதி - வாண்டாப்பிரியர் பட்டம் உடைய கள்ளர்கள் (கறம்பக்குடி )

குடிகாடு

78 . நார்த்தேவன் குடிக்காடு - நார்த்தேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (குழந்தை வளநாடு, தஞ்சாவூர் )
78 . உறந்தராயன் குடிகாடு - உறந்தராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
79 . கண்டியங்காடு - கண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் மதுக்கூர் வட்டம் )
80 . சேதிராயன் குடிக்காடு - சேதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
81 . சோழகன் குடிகாடு - சோழகர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சை, திருவோணம்)


82 . தெலுங்கராயன் குடிகாடு - தெலுங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
83 . நல்லவன்னியவன் குடிக்காடு - நல்லவன்னியர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
84 . பழங்கொண்டான் குடிகாடு - பழங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
85 . புள்ளவராயன் குடிகாடு - புள்ளவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (மன்னார்குடி )
86 . பொய்கையாண்டார் குடிகாடு - பொய்கையாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
87 . பொய்யுண்டார் குடிகாடு - பொய்யுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சை, திருவோணம்)
88 . வீரமுண்டார் குடிகாடு - வீரமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
89 . வேங்கிராயன் குடிகாடு - வேங்கிராயர்

பட்டம் உடைய கள்ளர்கள் கள்ளர் பட்டங்களில் உள்ள மற்ற ஊர்கள்

90 . ஆர்சுத்திப் பட்டு - ஆர்சுத்தியார் பட்டம் உடைய கள்ளர்கள்
91 . ஓமாம்புலியூர் - ஓமாமரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
92 . கங்கைகொண்டான் - கங்கைநாட்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
93 . கச்சிராயன் மங்கலம் (கச்சமங்கலம்) - கச்சிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
94 . கண்டியன் பட்டு - கண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள்
95 . கண்டியூர் - இராசகண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள்
96 . கலிங்கராயன் ஓடை - கலிங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
97 . களத்தில்வென்றான் பேட்டை - களத்தில் வென்றார் பட்டம் உடைய கள்ளர்கள்
98 . காளிங்கராயன் ஓடை - காளிங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
99 . கொங்கராயநல்லூர் - கொங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
100 . கொடும்பாளூர் - கொடும்பாளுர்ராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
101 . கோனெரிராஜபுரம் - கோனெரிகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
102 . சாளுவன்பேட்டை - சாளுவர் பட்டம் உடைய கள்ளர்கள்
103 . செம்பியன் மணக்குடி - செம்பியதரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
104 . செம்பியன்களர் - செம்பியத்தரசு செம்பியதரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
105 . துண்டுராயன்பாடி – துண்டுராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
106 . தென்கொண்டானிருப்பு – தென்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
107 . தொண்டராயன் பட்டு – தொண்டராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
108 . நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்) – நாயக்கர் பட்டம் உடைய கள்ளர்கள்
109 . வாண்டையான் குடியிருப்பு – வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்கள்
110 . வாண்டையானிருப்பு – வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்கள்
111 . வேங்கிராயன் உக்கடை - வேங்கைராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
112 . செம்பியன்மாதேவி
113 . செம்பின் மணக்குடி
114 . சேதுராயநத்தம்
115 . சேதுராயபுதூர்
116 . சேதுவராயகுப்பம்
117 . சேதுவராயன் ஏந்தல்
118 . சேந்தன்குடி
119 . சேர்வைக்கட்டளை
120 . சேர்வைக்காரங்கட்டளை
121 . தொண்டைமாங்கணம்
122 . தொண்டைமாங்குலம்
123 . தொண்டைமாந்துளசி
124 . தொண்டைமான்
125 . தொண்டைமான் ஏந்தல்
126 . தொண்டைமானந்தம்
127 . தொண்டைமான்நல்லூர்
128 . தொண்டைமானூர்
129 . தேவர்கண்டநல்லூர்
130 . நாட்டார்மங்கலம்
131 . நாய்க்கர்பாளையம் (சாவடி நாய்க்கர்)
132 . பல்லவராயன்பேட்டை
133 . பூண்டிபானமங்கலம்
134 . பூலான்குடியிருப்பு
135 . பூவனைக்குடி
136 . மணவாளநல்லூர்
137 . மணவாளம்பேட்டை
138 . மழவங்க்ரனை
139 . மழவந்தாங்கல்
140 . மழவராய நல்லூர்
141 . மழ்வராயணேந்தல்
142 . மழவராயன் நல்லூர்
143 . மழவராயனத்தம்
144 . வல்லாண்டான் பட்டு
145 . வன்னிப் பட்டு
146 . வாண்டையாரிருப்பு
147 . பல்லவராயன்பத்தை

கோட்டை - கோட்டை என்று முடியும் பல ஊர்கள் கள்ளர் பட்டங்களிலும் , கள்ளர் அம்பலகாரர்கள் கீழ் இன்றும் உள்ளது.



148 . அத்திக்கோட்டை

149 . அருப்புக்கோட்டை
150 . அருமலைக்கோட்டை
151 . ஆத்திக்கோட்டை
152 . ஆதனக்கோட்டை
153 . ஆய்க்கோட்டை
154 . ஆவணக்கோட்டை
155 . இடைங்கான்கோட்டை
156 . ஈச்சங்கோட்டை
157 . உச்சக்கோட்டை
158 . உள்ளிக்கோட்டை
159 . எயிலுவான் கோட்டை
160 . ஒளிக்கோட்டை
161 . கக்கரக்கோட்டை
162 . கண்டர்கோட்டை - கண்டர் பட்டம் உடைய கள்ளர்கள்
163 . கந்தர்வக்கோட்டை
164 . கரம்பயன்கோட்டை
165 . கரமுண்டான் கோட்டை - கரமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
166 . கருக்காக்கோட்டை
167 . கரும்பூரான்கோட்டை - கரும்பூரார் பட்டம் உடைய கள்ளர்கள்
168 . கரைமீண்டார் கோட்டை – கரைமீண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
169 . கல்லாக்கோட்டை
170 . கள்ளிக்கோட்டை
171 . காசாங் கோட்டை
172 . காரிகோட்டை
173 . காரைக்கோட்டை
174 . கிள்ளிக் கோட்டை – கிள்ளிகண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
175 . கிள்ளுக்கோட்டை - கிள்ளியாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
176 . கீழாநிலைக்கோட்டை
177 . கீழைக்கோட்டை
178 . குன்னங் கோட்டை
179 . கூராட்சிகோட்டை
180 . சத்துருசங்காரக் கோட்டை
181 . சாக்கோட்டை
182 . சாய்க்கோட்டை
183 . சிறுகோட்டை
184 . சின்னபருத்திக்கோட்டை
185 . சுந்தரகோட்டை
186 . சூரக்கோட்டை
187 . செங்கோட்டை
188 . செஞ்சிக்கோட்டை
189 . சேண்டாகோட்டை
190 . சோணாகோட்டை
191 . தம்பிக்கோட்டை
192 . தர்மக்கோட்டை
193 . தளிக்கோட்டை
194 . தாமரங்கோட்டை
195 . தாமிரன்கோட்டை
196 . திருமக்கோட்டை
197 . திருமங்கலக்கோட்டை
198 . திருமலைக்கோட்டை
199 . தும்பதிக்கோட்டை
200 . துரையுண்டார்கோட்டை
201 . துறையாண்டார் கோட்டை

202 . தெற்குக் கோட்டை


203 . நடுவாக்கோட்டை
204 . நடுவிக்கோட்டை
205 . நம்பன்கோட்டை
206 . நள்ளிக்கோட்டை
207 . நாஞ்சிக்கோட்டை
208 . நாட்டரையர் கோட்டை – நாட்டரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
209 . நாயக்கர் கோட்டை
210 . நாயக்கான்கோட்டை - நாய்க்காவாடியார் பட்டம் உடைய கள்ளர்கள் (சுந்தர வளநாடு)
211 . நெடுவாக்கோட்டை – நெடுவாண்டையர் பட்டம் உடைய கள்ளர்கள்
212 . நெல்லிக்கோட்டை

212. நெம்மக்கோட்டை- களரி பட்டம் உடைய கள்ளர்கள்
213 . பஞ்சநதிக்கோட்டை
214 . பட்டுக்கோட்டை – (பட்டு ) மழவராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
215 . பத்தாளன்கோட்டை – பத்தாளியார் பட்டம் உடைய கள்ளர்கள்
216 . பரக்கலகோட்டை
217 . பரங்கிலிகோட்டை
218 . பரமக்கோட்டை
219 . பரவாக்கோட்டை
220 . பராக்கோட்டை
221 . பருதிக்கோட்டை
222 . பழங்கொண்டான் கோட்டை – பழங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
223 . பனையக்கோட்டை
224 . பாச்சிற்கோட்டை
225 . பாதிரங்கோட்டை
226 . பாலபத்திரன் கோட்டை
227 . பாளைங்கோட்டை
228 . பிங்கலக்கோட்டை
229 . புத்திகழிச்சான்கோட்டை
230 . புதுக்கோட்டை
231 . பெரண்டார்கோட்டை - பெரன்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (சுந்தர வளநாடு)
232 . பெரியக்கோட்டை - கோபாலர் பட்டம் உடைய கள்ளர்கள்
233 . பெரியபருத்திக்கோட்டை
234 . பொய்கையாண்டார் கோட்டை – பொய்கையாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
235 . பொய்யுண்டார் கோட்டை – பொய்யுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
236 . பொன்னவராயன்கோட்டை
237 . மகிழங்கோட்டை
238 . மண்டலகோட்டை - மண்டலார் பட்டம் உடைய கள்ளர்கள் (மண்டலார் பட்டம் தாங்கியோர் வாராப்பூர் நாட்டிலும் உள்ளனர்.)
239 . மயிலாடு கோட்டை
240 . மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
241 . மருதக்கோட்டை
242 . மல்லாக்கோட்டை
243 . மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
244 . மாங்கோட்டை
245 . மானரராயன் புதுக்கோட்டை
246 . மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
247 . மூவரையன்கோட்டை (மூவரையர் பட்டம் உடைய கள்ளர்கள்)
248 . மேலைக்கோட்டை
249 . வத்தானக்கோட்டை
250 . வரவுக்கோட்டை
251 . வாகோட்டை
252 . வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை) - வாட்டாச்சியார் பட்டம் உடைய கள்ளர்கள் ( வீரக்குடி நாட்டில் உள்ளது)
253 . வாழவந்தான் கோட்டை
254 . வாளமரங் கோட்டை - வாளமரர் பட்டம் உடைய கள்ளர்கள் (சுந்தர வளநாடு)
255 . வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
256 . வெட்டுவாகோட்டை
257 . வெண்டாக்கோட்டை
258. வடுவூர் புதுக்கோட்டை - விஜயதேவர் பட்டம் உடைய கள்ளர்கள்
259. பாச்சிற்கோட்டை - பாச்சிண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (வாராப்பூர் நாடு)
260. கோட்டையாண்டார்இருப்பு - கோட்டையாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
261. கடாரங்கொண்டான் - கடாரங்கொண்டான் பட்டம் உடைய கள்ளர்கள் ( திருவாரூர் )




262. வீரங்கொண்டார்கோட்டை - வீரங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்

ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்