வெள்ளி, 24 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ முதலாம் பராந்தக சோழத்தேவர்


மதுரை கொண்ட கோப்பரகேசரி முதலாம் பராந்தகன் சோழத்தேவர்

கிபி.907 முதல் கிபி.953 வரை கிட்டதட்ட 46 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி! 

முதலாம் ஆதித்தனின் மகன். இவரது தந்தை இராசகேசரி என்பதால் இவர் பரகேசரி என்னும் பட்டத்துடன் ஆட்சிக்கு வருகிறார். ஏறக்குறைய 48 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளார்.


முதலாம் பராந்தகருக்கு பல மனைவியர். நான்கு பிள்ளைகள். இராஜாதித்தன், கண்டராதித்தன், உத்மசீலி, அரிஞ்சயன்.

சிறந்த உள்ளாட்சி நிர்வாகம், குடவோலை முறை, அற்புதக் கலைப்படைப்பான கோவில்கள் அதில் வடிக்கப்பட்ட அற்புதமான உள்ளங்கையளவு குறுஞ்சிற்பங்கள், வீரநாராயண ஏரி, சோழவாரிதி போன்ற எண்ணற்ற ஏரிகள் வெட்டி சிறப்பான நீர் மேலாண்மை, தில்லை சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தமை, வீரநாராயணன், வீரசோழன், சங்கிராம ராகவன், இருமுடிசோழன், பண்டிதவற்சலன் என எண்ணற்ற சிறப்புப் பெயர்களையும் கொண்டார்.

பராந்தக சோழரின் மூன்றாம் ஆட்சி முதலே அவர் மதி(து)ரை கொண்டு கோப்பரகேசரி என பெருமையுடன் அவரது கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறார். அதாவது ஆட்சிக்கு வந்த சிறிது காலத்துக்குள்ளாகவே இப்படையெடுப்பு அவசியமாகியிருக்கிறது. ஆதித்த சோழர் காலத்திலேயே பல்லவர்களுடனான தொடர்ச்சியான போர்களினால் வலிமை குன்றியிருந்த பாண்டியர்கள் ஆதித்த சோழன் மறைந்த பின் இழந்த பெருமையை மீட்டெடுக்க மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் எனும் பாண்டியன் தலைமையில் படையெடுக்கத் துணிய தனது சிறப்பான வீரத்தாலும் வியூகத்தாலும் வெற்றிப் பெற்று பாண்டியர் தலைநகரமான மதுரையை கைப்பற்றி 'மதுரை கொண்ட கோப்பரகேசரி' எனும் சிறப்புப் பெயர் கொண்டார் பராந்தக சோழர். கள்ளர்களின்   பாண்டிராயர்  பாண்டியராயர் என்ற பட்டங்கள் குறிப்பிடத்தக்கது. ஆனால் கள்ளர்களின் பாண்டியர் என்ற பட்டம் பாண்டிய மன்னர்களின் தளபதிகளின் சந்ததியினர் ஆவார்கள்.

அவரது கல்வெட்டுகளில் அனைத்திலுமே மதுரையை வெற்றிக் கொண்டதும் பாண்டியரை வீழ்த்தியதும் பிரதானமான விஷயமாக இருக்கையில் அவர் பாண்டியர்களுக்கு உறவினராக இருத்தல் கூடுமோ என்ற ஐயப்பாட்டிற்கே இடமில்லை என்பதை அறியலாம். பாண்டியர்களுடன் உறவு ஏற்பட்டிருந்தற்கு நேரிடையான எந்த ஆதாரமும் இல்லாததால் யூகங்கள் கொண்டு இக்கருத்தை வலியுறுத்துதல் ஆகாது. 

விஜயாலயன் காலம் முதல் மூன்றாம் இராசேந்திரன் வரை அதாவது கிட்டதட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக சோழர்களுக்கு பிரதான எதிரியாக பாண்டியர்கள் விளங்கியுள்ளனர் என்பதும் பாண்டியர்கள் வலிமை குன்றி இருந்த காலத்திலும் அவர்களுக்கு எதிரான சிறிய வெற்றிகளைக் கூட தங்கள் மெய்க்கீர்த்தியில் சோழமன்னர்கள் பெருமையுடன் குறிப்பிட்டுக் கொண்டதையும் காணும்போது பரம வைரிகளாகவே பெரும்பாலும் இருந்துள்ளதை கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். அடுத்தடுத்த பாண்டியர்களுடனான போர் வெற்றிகளைப் பற்றி பேச வேண்டியிருப்பதால் இந்தக் குறிப்புரை அவசியமாயிற்று!

மூன்றாம் ஆட்சியாண்டிலேயே மதிரை கொண்ட பட்டத்தை பெற்றாலும் தொடர்ந்து மேலும் சில ஆண்டுகள் பாண்டியர்களுடனான போர்கள் தொடர்ந்திருப்பதை பல்வேறு கல்வெட்டுகளால் அறிகிறோம். இறுதியாக வெள்ளூர் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் படையெடுத்து வந்த மூன்றாம் இராசசிம்மனையும் அவனுக்குத் துணையாக வந்த இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபன் அனுப்பிய இலங்கைப்படையின் சேனாதிபதி சக்க சேனாபதி என்பவனையும் சோழப்படைகள் தோற்றோடச் செய்து பாண்டியர்கள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி தற்காலிகமாக வைத்தது. இச்செய்திகளை கல்வெட்டுகளிலும், உதயேந்திரம் செப்பேட்டு வரிகளிலும், இலங்கை அரச வம்சத்தை விளக்கும் நூலான மகாவம்சத்திலும் காணலாம் (கல்வெட்டுச் சான்று இணைக்கப்பட்டுள்ளது). பராந்தகரது பாண்டிய நட்டின் மீதான ஆதிக்கத்தை காட்டும் வகையில் அவரது கல்வெட்டுகள் பாண்டிய நாட்டில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது. அவரது மைந்தரான இராஜாதித்தர் பாண்டிய நாட்டில் குடுமியான்மலை கோவிலுக்கு அளித்த நிவந்தம் குறித்த ஒரு கல்வெட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பராந்தக சோழன் பாண்டியனை வெள்ளூரில் வென்ற பின் மதுரை மாநகரில் பட்டாபிஷேகம் செய்துக் கொள்ள விழைய அதற்குள்ளாக பாண்டியன் தனது முடியையும், இந்திரன் அளித்தாக நம்பப்பபடும் ஆரத்தையும் இன்ன பிற அரச சின்னங்களையும் இலங்கை மன்னன் நான்காம் உதயன் என்பவன் இடம் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அளித்த செய்தி சோழனை எட்டியது. அதனை திருப்பி அனுப்பும்படி கேட்டு பராந்தகன் தூதுவர்களை இலங்கை அனுப்பியும் பயன் தராததால் இலங்கை மேலான படையெடுப்பை முன்னெடுத்தான் பராந்தக சோழன். இலங்கை போரில் பராந்தகன் பெரும் வெற்றியடைந்து தனது கல்வெட்டுகளில் மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி எனக் குறிப்பிடத் தொடங்கினாலும் அவனால் பாண்டிய சின்னங்களை கைப்பற்ற இயலவில்லை. கள்ளர்களில் மட்டுமே இன்றும் ஈழங்கொண்டர். ஈழமுண்டார் ஈழ்த்தரையர் பட்டமுடையவர்கள் உள்ளனர்.  

இலங்கை மன்னன் அவற்றை எடுத்துக் கொண்டு மலைகள் சூழ்ந்த இலங்கையின் தென்கீழ் பகுதியான ரோகண நாட்டிற்கு சென்று மறைந்துக் கொண்டான். பராந்தகனால் கைப்பெற்ற முடியாமல் போன அந்த பாண்டிய சின்னங்களை பின்னாளில் தென்கிழக்காசியாவை ஒரு குடையின் கீழ் ஆண்ட ஒப்பற்ற பெரும் வீரன் ராஜேந்திர சோழனால் தான் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பராந்தகனது மற்றுமோர் போர் வெற்றி வாணகப்பாடி நாட்டை வல்லத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த வாணகோவரையர்களுக்கு எதிரானதாகும். பல்லவர்களுக்குக் கீழ் அடங்கிய சிற்றரசாக இருந்த வாணகோவரையர்கள் பல்லவர் ஆட்சிக்குப் பின் சோழர் மேலாண்மையை ஏற்காமல் இருந்தனர். எனவே பராந்தகன் தனது நண்பனும் சிற்றரசனுமான கங்க மன்னன் இரண்டாம் பிருதிவீபதியுடன் இணைந்து வாணர்களை வென்றார். போரில் உதவிய பிருதிவீபதிக்கு மாவலிவாணராயன் எனும் பட்டத்தை பரந்தகர் அளித்தார். இச்செய்தி சோழசிங்கபுரத்தில் உள்ள அவரது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருந்தாலும் திருப்புள்ளமங்கை கோவிலில் அவரது ஆறாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டிலேயே மாவலிவாணராயன் அளித்த நிவந்தம் கூறப்பட்டிருப்பதால் அவரது ஆறாவது ஆட்சியண்டிற்கு முன்னதாகவே அவர் வாணர்களை வென்றிருக்க வேண்டும். கள்ளர்களில் மட்டுமே இன்றும் வாணக்கர், வாணதிரையர், வாணதிரியர், வாணகம்பாடியார் பட்டமுடையவர்கள் உள்ளனர்.  

பராந்தக சோழன் வைதும்பர்களையும் வென்றதாக உதயேந்திரம் செப்பேடு விளக்குகிறது. தற்போதைய ஆந்திரத்தின் ரேணாண்டு பகுதியை வைதும்பர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கலாமெனவும் வாணர்களுக்கு துணையாக சோழர்களுக்கு எதிரான போரில் கலந்துக் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. கள்ளர்களில் மட்டுமே இன்றும் வைதும்பர், வைதுங்கர், வைதும்பராயர்,  பட்டமுடையவர்கள் உள்ளனர்.   வைதும்பர்கள் வெற்றியோடு தொடர்புடைய ஒன்று.


அடுத்ததாக பராந்தகரின் 34ஆம் ஆட்சியாண்டு திருவொற்றியூர் கல்வெட்டொன்றில் பராந்தகனது படைத்தலைவர்களுள் ஒருவனான சிறுகுளத்தூர் மாறன் பரமேசுவரனான செம்பியன் சோழியவரையன் என்பவன் சீட்புலி நாட்டை வென்று நெல்லூரையும் அழித்து திரும்பும் போது நிவந்தமாக நொந்தா விளக்கு எரிக்க சாவா மூவா பேராடுகள் 90 அளித்த செய்தியை விளக்குகிறது. தென்குமரி முதல் நெல்லூர் ஜில்லாவின் வட எல்லை வரை சோழநாட்டின் ஆதிக்கத்திற்குட்பட்டு பராந்தகனது ஆட்சியின் கீழ் இருந்ததை அறியலாம். கள்ளர்களில் மட்டுமே இன்றும் சோழரையர், சோழதிரியர், சீட்புலியார், சிலுப்பியார்  பட்டமுடையவர்கள் உள்ளனர்.   இந்த போர் வெற்றியோடு தொடர்புடைய ஒன்று.

வெற்றிகளையே சுவைத்து வந்த பராந்தகனது இறுதி ஆட்சியாண்டுகளில் அவரது முதிர்ந்த பிராயத்தில் பெரும் சறுக்கல் ஒன்றும் ஏற்பட்டது. இரட்டை மண்டலத்து கன்னர தேவன்(மூன்றாம் கிருஷ்ணன்) சோழநாட்டின் மீது கங்க மன்னன் பூதகன் மற்றும் பல சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து ஒன்பதாண்டுகள் திரட்டிய பெரும்படையுடன் படையெடுத்து வர தக்கோலம் எனுமிடத்தில் பெரும் போர் நடைபெற்றது. கள்ளர்களில் மட்டுமே இன்றும் தக்கோலர் தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார், கங்கர் கங்கநாட்டார், கங்கநாடர், பட்டமுடையவர்கள் உள்ளனர்.   இந்த போர் வெற்றியோடு தொடர்புடைய ஒன்று.

சோழர்களின் படைக்குத் தலைமை வகித்தது பட்டத்து இளவரசரும் பெரும் வீரருமான இராஜாதித்தர் ஆகும். போரில் சிறப்பாக சோழ வீரர்கள் போரிட்டாலும் கங்க மன்னன் பூதுகன் என்பவன் எய்த அம்பினால் இராஜாதித்தர் யானை மேலேயே போர்க்களத்தில் வீரமரணம் அடைய இரட்டை மண்டலத்தார் வெற்றிப் பெற்று தொண்டை மண்டலத்தையும் திருமுனைப்பாடி நாட்டின் பகுதிகளையும் அடுத்த ஐந்தாண்டுகளில் கைப்பற்றினர். இழந்த பகுதிகளை பின்னாளில் இரண்டாம் பராந்தகரான சுந்தர சோழர் ஆட்சிக் காலத்திலேயே அவர்தம் வீரப்புதல்வர் ஆதித்த கரிகாலரால் மீட்கப்பட்டது என்பது வரலாறாகும்..!







பராந்தக சோழரின் மூத்த புதல்வரான இராஜாதித்தர் தக்கோலம் எனும் இடத்தில் இரட்டை மண்டலத்து கன்னர தேவனுடனான பெரும் போரின் போது பூதுகன் எனும் கங்க மன்னன் எய்த அம்பால் யானை மேல் அமர்ந்து போரிடும்போதே வீரமரணம் அடைந்துள்ளார். எனவே அவரை யானை மேல் துஞ்சிய தேவர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டதை பல கல்வெட்டுகள் கூறுகின்றன. திருச்சியில் உள்ள திருவெள்ளறை புண்டரிகாக்ஷ பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டொன்றில் அவரது மனைவி அளித்த நிவந்தத்தில் யானை மேல் துஞ்சிய தேவர் என அழைக்கப்பட்டிருப்பதை இணைப்பில் காணலாம். குடந்தை கீழ்கோட்டம் எனப்படும் நாகேசுவரர் கோவிலிலும் இவ்வாறு குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிற்கால சோழர்களில் விஜயாலய சோழரின் மகனும், பிற்கால சோழப் பேரரசை நிறுவியவருமான ஆதித்த சோழருக்கு கோதண்ட ராமர் எனும் சிறப்புப் பெயர் உண்டு. போர்க்களத்தில் வில் வித்தையில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் பெற்றார் என்றுக் கூறுவர். பொக்கிஷம்பாளயத்தில் உள்ள அவரது பள்ளிப்படை கோதண்டராமேஸ்வரம் என்றே அழைக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது.

ஆதித்த சோழரின் மகனான பராந்தக சோழன் காலத்தில் ராமாயணம் அழியாத ஆவணங்களாக கற்றளிகளில் ஆவணப்படுத்தப்பட்டன. பராந்தகர் காலக் குறுஞ்சிற்பங்கள் புகழ் பெற்றவை. திருப்புள்ளமங்கை, திருச்சென்னம்பூண்டி போன்ற சிவாலயங்களிலும் ராமாயணத்தின் நிகள்வுகளை கையளவு குறுஞ்சிற்பங்களாக வடித்து பொது மக்களும் காணும்படி செய்தார் பராந்தக சோழர். வாலி வதம், வாலியின் மரண படுக்கை, வாலி-சுக்ரீவன் யுத்தம், ராமர் பட்டாபிஷேகம், ராமர்-சீதை திருமணம், என ராமாயணத்தின் பல்வேறு காட்சிகள் எழிலுற பல்வேறு கோவில்களில் செதுக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.



சிவாலயங்களிலேயே இப்படி என்றால் வைணவ ஆலயங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. பராந்தகரின் சிறப்புப் பெயரால் மதுராந்தகம் என்றே அழைக்கப்படும் இவ்வூரிலுள்ள கோதண்ட ராமர் கோவில் ராமர்-சீதைக்கான தனி ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இங்குள்ள சோழர் காலத்துக் கல்வெட்டுகள் திருவையோத்திப் பெருமாள் (அயோத்தி) என்று ராமரைக் குறிப்பதோடு பிற்கால சோழர்கள் பலரும் எண்ணற்ற நிவந்தங்களை இக்கோவிலுக்கு வழங்கியுள்ளனர்.

இதே போல் செப்புப் படிமங்களாகவும் ராமர், சீதை, அனுமன் சிலைகள் எண்ணற்றக் கோவில்களுக்குத் தரப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் லெக்ஷ்மி நாராயணர் கோவிலுக்கு முதலாம் குலோத்துங்கன் ராமர்-சீதை சிலைகளை செப்புப் படிமங்களாக எடுப்பித்தது கல்வெட்டாதாரங்கள் மூலம் நாம் அறியலாம். கம்பர் காலத்திற்கு பல ஆண்டுகள் முன்னிருந்தே ராமாயணம் தமிழகத்தில் பிரபலமாயிருந்ததையும் நாம் காணலாம்.



நன்றி
இந்தியத் தொல்லியல் துறை
வரலாற்றறிஞர் திரு.வை.சதாசிவ பண்டாரத்தார்.
வரலாற்றறிஞர் திரு.நீலகண்ட சாஸ்திரியார்.
மகாவம்சம் நூல்.
உயர்திரு. உதயா சங்கர்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்