திங்கள், 20 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழத்தேவர்

ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளின கோப்பரகேசரிவர்மர் உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர்




"பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திலிருந்த செம்பியர்கோன்"

இராஜேந்திரசோழனைப் பற்றி ஒட்டக்கூத்தர் பாடிய பாடல் இது. இதை கேட்கும்போது இம்மன்னனின் பராக்கிரமம் புரியும். எத்தனையோ கோடி மனிதர்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்தாலும் காலம்கடந்து வரலாற்றில் இடம்பிடித்தவர் சிலரே. அந்த வெகுசிலரில் ஒருவர் பேரரசர் ராஜேந்திரசோழன். வாழ்நாள் முழுவதும் போரிலேயே கழித்தவர். தமிழரின் புகழை கடல்கடந்து ஒலிக்கச்செய்தவர்.

ராஜேந்திரனின் தாய் வானவன் மாதேவி, ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று பிறந்தவர் ராஜேந்திரர்.திருவாரூர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. இவரது இயற்பெயர் மதுராந்தகன் (மதுரைக்கு எமன்) இவரது தந்தை ராஜராஜனால் இவருக்கு அளிக்கப்பட்ட விருதுப்பெயர் "பஞ்சவன் மாராயன்". கி.பி.1012 ல் இளவரசனாய் பொறுப்பேற்று கி.பி.1014ல் கோப்பரகேசரி ராஜேந்திரனாய் பதவியேற்றார்.

இவரது மனைவிகள்:

1.முக்கோக்கிழானடிகள்
2.பாண்டிமாதேவி
3.வீரமாதேவி
4.திரைலோக்ய மாதேவி
5.பஞ்சவன்மாதேவி
6.அரிந்தவன்மாதேவி
7.நக்கன் செம்பியன்மாதேவி
8.பிருதிமாதேவி
9.வானவன் மாதேவி
இதில் வீரமாதேவி இவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறினார்.

இவரது மகள்கள் :

1.அருமொழிநங்கை
2.அம்மங்கை

மகன்கள்:

1.இராஜாதிராஜன்
2.இரண்டாம் ராஜேந்திரன்
3.ராஜமகேந்திரன்
4.வீரராஜேந்திரன்
5.இராஜராஜன்

இவரது குரு:

சர்வசிவபண்டிதர்

அனுக்கியர்:

1.ஐயாறன் செம்பொன்
2.சாத்தன் ராமதேவி
3.சூற்றி பஞ்சவன்மாதேவி
4.பரவை நங்கை

அதிகாரிகள் :

1.அரையன் ராஜராஜன்
2.கிருஷ்ணன் ராமன்
3.உத்தமசோழ பிரம்மராயன்
4.உத்தமசோழ பல்லவரையன்
5.பாண்டியன் சீவல்லபன்
6.வந்தியதேவர்
7.உத்தமசோழ மிலாடுடையான்
8.கங்கைகொண்டசோழ மிலாடுடையான்
9.சத்திரிய சிகாமணி கொங்காள்வான்
10.நக்கன் சந்திரன் ராசமல்ல முத்தரையர்
11.சோனகன் சாவூர் பரஞ்சோதி

வென்றநாடுகள்: 

( இதில் தொடர்புடைய கள்ளர் பட்டங்கள்)


1) இடைத்துறை நாடு (மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ரெய்ச்சூர் மாவட்டம்)
கள்ளர் பட்டம் : துறைகொண்டார்

2. வனவாசி – வானவாசி (மைசூர் மாநிலத்தின் வடமேற்குப் பகுதி)
கள்ளர் பட்டம் : வாணக்கர்

3. கொள்ளிப்பாக்கை ( ஹைதராபாத்திற்கு வடகிழக்கில் 45 மைல் தொலைவிலுள்ள குல்பர்கா)
கள்ளர் பட்டம் : தம்பாக்கியார்

4. மண்ணைக்கடக்கம் (மான்யகேதம், மால்கெட்)
கள்ளர் பட்டம் : மண்ணையார்

5. ஈழமண்டலம் (இலங்கை) ( பராந்தகசோழன் காலத்தில் பாண்டியன் ராசசிம்மன் ஈழத்தில் கொண்டுபோய் வைத்த பாண்டியரின் சுந்தரமுடியையும், இந்திர ஆரத்தையும் நூறு ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றுகிறார்)
கள்ளர் பட்டம் : ஈழம்கொண்டார், ஈழத்தரையர், ஈழத்திரியர், முடிகொண்டார்

6. பல்பழந்தீவு (மாலத்தீவு)
கள்ளர் பட்டம் : பழங்கொண்டார்

7. சாந்திமத் தீவு (அரபிக்கடற் தீவு)
கள்ளர் பட்டம் :

8. முயங்கி (மஸ்கி -நைசாம் ராஜ்ஜியம்)
கள்ளர் பட்டம் :

9. இரட்டபாடி ஏழரை இலக்கம் ( மேலைச் சாளுக்கிய நாடு - கர்நாடகம், மகாராஷ்டிரம்)
கள்ளர் பட்டம் : இரட்டப்பிரியர்

10. சக்கரக் கோட்டம் (பஸ்தரிலுள்ள சித்ரகூடம் - போபால்)
கள்ளர் பட்டம் :சக்கரநாட்டார் சக்கரப்பநாட்டாள்வார், 

11.மதுரை மண்டலம் ( பஸ்தரிலுள்ள சித்ரகூடம் )
கள்ளர் பட்டம் :

12. நாமணைக் கோணம் ( ஹைதராபாத்தில் உள்ளது)
கள்ளர் பட்டம் :

13. பஞ்சப்பள்ளி (ஹைதராபாத்தில் உள்ளது)
கள்ளர் பட்டம் : பஞ்சரமார்

14. மாசுனி தேசம் (பாகிஸ்தானில் உள்ளது)
கள்ளர் பட்டம் :

15. ஒட்டவிசையம் (ஒரிஸா)
கள்ளர் பட்டம் : ஓட்டம்பிடுக்கியார்

16. கோசலை நாடு (கோசலம் - மகா நதியின் கரையோரம்)
கள்ளர் பட்டம் :

17. தக்கணலாடம் ( வங்காளத்திலுள்ள ஹூக்ளி, ஹௌரா மாவட்டங்கள்)
கள்ளர் பட்டம் :

18. உத்தரலாடம் (மூர்ஷிதாபாத், பீர்பூம் மாவட்டங்கள் - வங்கம்)
கள்ளர் பட்டம் : உத்தமண்டார். உத்தாரப்பிரியர். உத்தாரப்பிலியர்

19.வங்காள தேசம் (பங்களாதேஷ்)
கள்ளர் பட்டம் : வங்கத்தரையர்

20. கடாரம் (மலேசியா) - கடாரம்கொண்டார், கடாரத்தலைவர், கடாத்தலையர், கடாரத்தரையர், கடாத்திரியர்


ஈழப்படையெடுப்பு

ராசேந்திர சோழர் ஈழ தேசத்தின் மீது படையெடுத்து ஈழமண்டலம் முழுவதையும் கைப்பற்றினார். ஈழப் படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர் தளபதிகள் ஈழத்தரையர், கண்டியர், சிங்களராயர் முதலிய பட்டங்களை பெற்றனர்.

கண்டியர்கள் வாழும் ஊர்கள்:-

தஞ்சை வட்டத்தில் முத்துவீரக்கண்டியன்பட்டி,நந்தவனப்பட்டி,மனையேறிப்பட்டி,ஆவாரம்பட்டி,புங்கலூர் ஆகிய ஊர்களிலும்

ஒரத்தநாடுவட்டத்தில் கக்கரை , பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு ஆகிய ஊர்களிலும்

மன்னார்குடி வட்டத்தில்
பைங்காநாடு, தலையாமங்கலம், எடமலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர், சோழபாண்டி ஆகிய ஊர்களிலும்

பட்டுக்கோட்டை வட்டத்தில்
ஆவிக்கோட்டை,பெரியகோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களிலும்

திருவையாறு வட்டத்தில்
திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம் முதலிய ஊர்களிலும்

புதுக்கோட்டை மாவட்டத்தில்
கீழக்கரைமீண்டார்க்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, கீழாத்தூர் முதலிய பல ஊர்களிலும் வாழ்கின்றனர்.

சிங்களராயர் வாழும் ஊர்கள்:- காடுப்பட்டி- புதுக்கோட்டை
பைங்காநாடு- மன்னார்குடி

ஈழத்தரையர்- திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர்.

மராத்திய தேச படையெடுப்பு

இராசேந்திர சோழத்தேவர் இடைத்துறை நாடு எனும் பகுதியின் மீது படையெடுத்தார். இப்பகுதி இன்றைய பம்பாய் மாகாணத்தில் உள்ள ரெய்ச்சூர் மாவட்டமாகும்.

இடைத்துறை நாட்டை கைப்பற்றிய கள்ளர் தளபதிகள் துறையாண்டார் எனும் பட்டத்தை பெற்றனர்.

இப்பட்டமுடைய கள்ளர்களின் பெயரிலேயே ஒரத்தநாடு வட்டத்தில் துறையாண்டார்க்கோட்டை எனும் ஊரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மண்ணைக் கடக்க படையெடுப்பு


கர்நாடகாவில் உள்ள மண்ணைக்கடக்கம் எனும் பகுதி மீது படையெடுத்த ராசேந்திர சோழன் இப்படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர் தளபதிகளுக்கு மண்ணையார், கடக்கம்கொண்டார் (கொடிக்கமுண்டார்) , ஆகிய பட்டங்களை அளித்தார்.

மண்ணையார்கள் தஞ்சையில் நாஞ்சிக்கோட்டை, அதினாம்பட்டு, விளார் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழ்கின்றனர்.

கொடிக்கமுண்டார்கள் ஒரத்தநாடு வட்டத்தில் பனையக்கோட்டை, சின்னப்புலிக்குடிகாடு, நாகை வட்டத்தில் சொக்கநாதபுரம் முதலிய ஊர்களில் வாழ்கின்றனர்.

சக்கரக்கோட்ட படையெடுப்பு:

வேங்கி நாட்டின் வடபால், விசாகபட்டினத்திற்கு வடமேற்கே, வத்ச நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது சக்கரக்கோட்டம். இப்படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர் தளபதிகள் சக்கரநாட்டார் எனும் பட்டத்தை பெற்றனர். இப்பட்டமுடைய கள்ளர் மரபினர் இன்றும் மன்னார்குடி வட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

வங்காளப் படையெடுப்பு :

வங்காள தேசத்தில் உள்ள தக்கணலாடம், உத்தரலாடம் ஆகிய பகுதிகளை கைப்பற்றிய ராசேந்திர சோழத்தேவர், படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர் தளபதிகளுக்கு அளித்த பட்டம் இலாடராயர். இப்பட்டமுடைய கள்ளர்கள் மன்னார்குடி வட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கடாரம் படையெடுப்பு :

மலேயாவின் மேற்கு கரையில் தென்பகுதியில் இன்று கெடா என்ற பெயருடன் அமைந்துள்ள இப்பகுதியை ராஜேந்திர சோழத்தேவர் கைப்பற்றினார். இப்படையெடுப்பில் பங்கேற்ற கடாரத்தரையர்கள் கள்ளர் வம்சத்தினர் இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நாட்டு பாச்சிக்கோட்டையில் வாழ்ந்து வருகின்றனர்.

சுமத்திரா படையெடுப்பு :

ராசேந்திர சோழத்தேவர், சுமத்திரா எனும் சுவர்ணத்தீவில் உள்ள ஸ்ரீவிசயம் எனும் ராச்சியத்தை கைப்பற்றினார். இப்படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர் தளபதிகள் ஸ்ரீவிசயத்தேவர், விசயராயர் முதலிய பட்டங்களை பெற்றனர்.

விசயராயர்
பட்டமுடைய கள்ளர் மரபினர் ஒரத்தநாடு வட்டத்தில் பஞ்சநதிக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை முதலிய ஊர்களிலும்

தஞ்சையில் விளார், முனியூர், அவளிநல்லூர் முதலிய ஊர்களிலும்

மன்னார்குடி வட்டத்தில் சேரங்குளம் மற்றும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்களம்பூர், வாண்டாக்கோட்டை முதலிய ஊர்களிலும் பெருமளவில் வாழ்கின்றனர்.

விசயத்தேவர் பட்டமுடைய கள்ளர்கள் பாப்பாநாடு வட்டத்தில் பரவலாக வாழ்கின்றனர். பாப்பாநாடு ஜமீன்தார்கள் விசயத்தேவர் பட்டமுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து படையெடுப்பு :

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியான மாபப்பாளம் ராஜேந்திர சோழனால் கைப்பற்றப்பட்டது. இப்படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர்கள் பப்பாளியார் எனும் பட்டத்தை பெற்றனர். இப்பட்டமுடைய கள்ளர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், வெள்ளைவெட்டன்விடுதி, பசுமலை, சத்தியமங்கலம் முதலிய பகுதிகளிலும் மன்னார்குடி வட்டத்தில் எடகீழையூர் முதலிய ஊர்களிலும் வாழ்கின்றனர்.

நிக்கோபர் தீவுகள் படையெடுப்பு:

இராசேந்திர சோழன் படையெடுப்பில் கைப்பற்றப்பட்ட பகுதிகளுள் மாணக்கவாரம்( நிக்கோபர் தீவுகள்) என்பதும் ஒன்றாகும். இப்படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர்கள் மாணக்கவாரர் எனும் பட்டத்துடன், திருக்காட்டுப்பள்ளிக்கருகில் பூண்டிமாதா கோயில் முதலிய ஊர்களில் வாழ்கின்றனர்.

பன்னை படையெடுப்பு :

இராசேந்திர சோழன் சுமத்திரா தீவின் கீழக்கரையில் அமைந்துள்ள பன்னை எனும் பகுதியையும் கைப்பற்றினார். இப்படையெடுப்பில் பங்கேற்ற கள்ளர்கள் பன்னையார் எனும் பட்டத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

அருமண தேசப் படையெடுப்பு :

இராசேந்திர சோழத்தேவர் வென்ற நாடுகளில் ஒன்றான அருமண தேசம் கடாரநாட்டுக்கு அருகில் உள்ளது. இப்படையெடுப்பில் பங்கேற்று வென்ற கள்ளர் தளபதிகள் அருமண நாட்டார் என பட்டம் பெற்றனர். அருமண நாட்டார்கள் ஒரத்தநாடு வட்டம் கண்ணுகுடி , மன்னார்குடி வட்டம் பைங்காநாடு முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.



ஒரு அரசனின் செயல், அவரது படைவீரர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும். குறிப்பாக போர்க்களத்தில் வெளிப்படும் ஒரு அரசனின் சாகசமே, அவரது வீரர்களுக்கு ஒரு உந்துகோலாக அமைந்து, அப்போரை முழுமையாக வெல்லமுடியும். செயல் திறன்மிக்க ஒரு படைத்தலைவன் வாய்க்கப்பெற்றால்தான், அப்படை தொடர்ந்து முன்னேறும்.

அம் மகா கீர்த்திபெற்றவர்களுள் ஒருவர்தான்

இராஜேந்திரசோழத்தேவர். 

ஒட்டதேச போர்க்களம்.. 

கடும் யுத்தம்.. 

இராஜேந்திரர் வீற்றிருந்த யானையை நோக்கி, 

ஒரு ஒட்டதேச மதம் கொண்ட யானை ஒன்று புயல் வேகத்தில் முன்னேறி வந்தது... அதை சர்வ அலட்சியமாக எதிர்கொண்ட இராஜேந்திரர், தான் அமர்ந்திருக்கும் யானையை கொண்டே அந்த மதயானையை தூக்கி அடித்து தலைகீழாய் புரட்டி வதம் செய்தார். தலைவனின் எண்ணவோட்டத்தை செயல்படுத்திய அந்த சோழ யானை எத்துணை பயிற்சிபெற்றதாய் இருத்தல் வேண்டும். இந்நிகழ்வை நேரடியாக களத்தில் கண்ட ஒவ்வொறு வீரனின் உந்து சக்தி பல மடங்கு அதிகரித்திருக்குமே. இனி இப்படையை தடுப்பார்
உண்டோ. 


திருவலங்காடு செப்பேடு... செய்யுள் 121

*தத்ர மத்தகஜம் கஞ்சித் அபிதாவந்தம்*
*உன்முகம் அகாதயத்ஸ்வயம் தேவ.*
*ஸ்லாரூடேனைவா ஹஸ்தினா.*

தன்னை நோக்கி ஓடிவரும் மதங்கொண்ட யானையை தேவன் ( இராஜேந்திரன்) , தான் அமர்ந்திருக்கும் யானையை கொண்டே வதம் செய்தார்

"வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர் " , "இந்நிலமன் சீரங்கராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை" என்ற வரிகள் கள்ளர்கள் யானையை பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதை நாம் அறிந்ததே.


இராஜேந்திரரின் பட்டத்தரசி


பழைய வட ஆற்காடு மாவட்டம் பெரும்புலிவாக்கம் எனும் ஊரிலுள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று பின் வரும் விஷயங்களை விளக்குகிறது.







அங்குள்ள அர்த்த மண்டபத்திலுள்ள தூண் ஒன்றில் காணப்படும் அந்தக் கல்வெட்டில் முதலாம் இராஜேந்திர சோழரின் முப்பதாம் ஆட்சியாண்டில் அவரது பட்டத்தரசியான செம்பியன் மாதேவி என்பவர் பெரும்புலிப்பாக்கத்து திருஅகத்தீஸ்வரமுடையாருக்கு நாள் ஒன்றுக்கு திருவமுதுக்காக ஆறு நாழி அரிசி கொடை அளித்ததைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி அந்த இராணிக்கு மலையன் குந்தவை எனும் பெயரும் இருந்துள்ளதைக் குறிப்பிடுகிறது.

சோழ வம்சத்தில் நான்கு குந்தவைகள் பற்றி மட்டுமே அதிகமாக ஆய்வாளர்கள் பேசி வந்த நிலையில் ஐந்தாவது குந்தவையாக மலையன் குந்தவை எனும் அரசியாக இராஜேந்திரரின் பட்டத்தரசி செம்பியன் மாதேவியார் அறியப்படுகிறார்.


திருவிந்தளூர் செப்பேட்டின்படி, இராஜராஜன், இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன் மற்றும் வீர இராஜேந்திரனைப் பெற்ற தாயார், சுத்தமல்லி, பவித்திரமாணிக்கம் என்றழைக்கப்பட்ட முக்கோக்கிழானடிகள் என்பவர்.

பட்டத்துக்கு வந்தவர்களின் தாயாராக இருந்ததாலேயே, இவரே முதலாம் இராஜேந்திரரின் பட்டத்தரசியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கருதுவர். .

இவர் பற்றிய தகவல்கள், விழுப்புரம் பிரம்மதேசக் கல்வெட்டு, காஞ்சி கச்சபேஸ்வரர் துர்க்கை சன்னிதி கிழக்குச் சுவர் கல்வெட்டு, மேலப்பழுவூர் கல்வெட்டு போன்றவற்றில் காணப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில், இவர் பெயரில், சுத்தமல்லி என்ற பெயரில் ஊர்களும் உண்டு.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையில் தடிமாலிங்கி என்னும் ஊரில் இராஜேந்திரன் சுத்தமல்லீஸ்வரமுடையார்என்ற பெயரில் கற்றளி எழுப்பியுள்ளார்.




திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் எனும் கிராமத்திலுள்ள புவன மாணிக்க பெருமாள் ஆலய கருவறைத் தூண் ஒன்றில் உள்ள உருவம் இது. சாதாரணமாக கோவில்களில் செதுக்கப்படும் சோழ அரசர்களுடைய உருவத்தை போலவே (வேறு சில கோவில்களில் செதுக்கப்பட்டிருப்பதை போலவே) ஒத்து இருப்பதால் இது இக்கோவிலில் திருப்பணிகள் செய்திட்ட சோழ அரசர் ஒருவரது வடிவமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது அல்லது யாரேனும் முனிவராகவும் இருக்கலாம்.


இக்கோவிலில் ஆதித்த சோழர் முதல் ராஜேந்திர சோழர் காலம் வரை கல்வெட்டுகள் உள்ளன. ராஜராஜர் ஆரம்பக் கால கல்வெட்டுகள் முதல் அவரது கடைசி ஆட்சியாண்டு வரையுள்ள கல்வெட்டுகள் காணக் கிடைப்பதாலும், ராஜராஜர் பெயர் தாங்கிய 'ராஜராஜர் கிணறு' இக்கோவில் வளாகத்திலேயே அவரது பணிமகன் ஒருவரால் அமைக்கப்பட்டுள்ளதாலும் இது ராஜராஜருடைய உருவமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஈரோட்டிலிருந்து கொடுமுடி செல்லும் சாலையில் ஒத்தக்கடை எனும் இடத்திற்கருகே வலதுபுறம் திரும்பி காங்கேயம் செல்லும் பாதையில் நொய்யல் ஆற்றங்கரையில் இராஜேந்திர சோழர் கால நடுகல் 

பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட என இராஜேந்திர சோழரின் மெய்க்கீர்த்தி தாங்கிய நடுகல்








இராஜேந்திர சோழரின் வட இந்தியப் படையெடுப்பின் போது பாலர்களை வெற்றிக் கொண்டு, கங்கையுடன் வெற்றிப் பரிசாகக் கொண்டு வரப்பட்ட விநாயகர் இவர்.


இந்தச் சிலை தற்சமயம் கங்கைக் கொண்ட விநாயகர் எனும் பெயரிலேயே குடந்தை நாகேஸ்வர சுவாமி கோவிலில் உள்ளது. கும்பகோணம் கீழ்க்கோட்டம் என்னும் பெயருடைய நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் கங்கையும் ஈழமும் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன் உத்திராபத போரில் மகிபாலனை வென்ற போது நினைவு சின்னமாக கொண்டுவரப்பட்ட கணபதி சிலை


இரண்டு கங்கை கொண்ட சோழீஸ்வரங்கள்.

ஒன்று எதிலும் வெற்றியைத் தவிர வேறெதுவும் கண்டிராத ராஜேந்திர சோழர் கட்டியது மற்றொன்று அவரது கங்கை வெற்றியை நினைவு கூறும் வகையில் அவரது குருவான ஈசான சிவபண்டிதர் கட்டியது


சோழர்களின் கோவில் திருப்பணிகள் ஈடு இணையற்றவை. பல செங்கல்தளிகளை கற்றளிகளாக மாற்றியதோடல்லாமல் பல கோவில் விமானங்களுக்கும் பொற் கூரை வேய்ந்து சிறப்பித்துள்ளனர். தில்லைக்கு பராந்தகன் காலத்திலேயே பொன் வேய்ந்து அழகு பார்த்த சோழர்கள் பல்வேறு கோவில்களுக்கு பொன்னையும், விலைமதிப்பில்லா நவரத்தினங்களையும் அள்ளிக் கொடுத்துள்ளனர். எத்தனை போர் வெற்றிகள் பெற்றாலும் செருக்கின்றி ஈசன் முன் தான் சிறியோனே எனும் உயர்ந்த நெறியுடன் வாழ்ந்துள்ளனர்.

ராஜராஜர் தான் கட்டிய தஞ்சை பெரிய கோவில் விமானத்தை பொன் வேய்ந்து கொண்டாடியது போல் திருவாரூர் தியாகராஜர் கோவிலும் ராஜேந்திர சோழர் காலத்தில் பொன்னால் வேயப்பட்டுள்ளதை கல்வெட்டாதாரங்கள் மூலம் காண்கிறோம். ராஜேந்திரரின் மகன்களான ராஜாதிராஜர், இரண்டாம் ராஜேந்திரர் காலத்திலும் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் போன்ற பல பகுதிகள் பொன்னால் வேயப்பட்டு திருப்பணி நடைபெற்றுள்ளதை கல்வெட்டு செய்திகளால் அறிய முடிகிறது. பின்னாள் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழனும் பாண்டியரையும், சேரரையும் வென்று கொண்டு வந்த பொக்கிஷங்கள் கொண்டு திருவாரூர் கோவிலை பொன்னால் வேய்ந்ததை அறிகிறோம்.



‘சிவபாதசேகரன்’ என்றழைக்கப்பட்ட முதலாம் இராஜராஜரின் திருமகனாரும் இந்தியத் துணைக்கண்டத்தின் இணையற்ற பெருவீரருமான முதலாம் இராஜேந்திரர் ‘சிவசரணசேகரன்’ என்றழைக்கப்பட்டமையை வலஞ்சுழியில் கல்வெட்டின் மூலம் அறியலாம். வணிகக்குழுக்கள் அரசர்களின் பெயரோடு தங்களை இணைத்து அழைத்துக் கொண்டமையை ‘ராஜராஜப் பெருநீரவியோம்’ என்ற சொல் வழக்கு உணர்த்தும். இக்கல்வெட்டின் வழி இராஜேந்திரர் பெயரையும் வணிகக்குழுக்கள் பயன்படுத்தியுள்ளமை தெரியவருகிறது. தங்கள் வாழிடத்திற்கு இராஜேந்திரரின் ‘சிவசரணசேகரன்’ எனும் மிக அரிய விருதுப் பெயரை ஸ்ரீவல்லவபுரத்து நகரத்தார் கொண்டிருந்தனர்.

நகரத்தார் பெருமக்களின் வாழிடங்கள் ‘புரம்’ என்ற பின்னொட்டுப் பெறுவதும், ‘தெரு’ எனும் பின்னொட்டுப் பெறுவதும் கல்வெட்டுகள் வழி வெளிப்படும் உண்மையாகும். சுந்தரசோழப் பெருந்தெரு, சுத்தவல்லிப் பெருந்தெரு எனப் பல சான்றுகளைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. அரசர்களின் அபிடேகப் பெயர்களைக் கொண்டிருந்தாற் போலவே, அவர்தம் விருதுப்பெயர்களையும் நகரத்தார் தம் வாழிடங்களுக்குச் சூட்டியுள்ளமை சிவசரணசேகரப் பெருந்தெருவால் வெளிச்சம் பெறுகிறதுு

கங்கைகொண்டசோழபுரம் சிவசரணசேகரன் 






திருவையாறு தென் கைலாயம், முதல் இராஜேந்திர சோழன் மனைவி பஞ்சவன் மாதேவியால் எடுக்கப்பட்ட திருக்கோயில் "வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்று நம்பிராட்டியார் பஞ்சவன் மாதேவி......யாற்று எடுப்பித்தருளுகின்ற திருக்கற்றளி தென் கயிலாயமுடையார் கோயில்`` முதல் இராஜேந்திர சோழன் அவரது ஆட்சியாண்டு முப்பத்தொன்றில் இக்கோயில் கட்டப்பட்டது. இறைவன் திருப்பெயர் பஞ்சநதிவாணன் என்றும் இறைவி திருப்பெயர் அஞ்சலை என்றும் அழைக்கப்படுகிறது.







திருவாரூர் கோவிலில் உள்ள ராஜேந்திர சோழர், பரவை நங்கையார் சிலை!


சிதம்பரம் கோயிலில் உள்ள முதலாம் ராஜேந்திரசோழரின் 24 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அணுக்கியார் நக்கன் பரவை நங்கையார் அக்கோயிலில் ஆனித் திருநாளில் இறைவனுக்குத் திருவமுது படைக்கவும் ஸ்ரீமாகேஸ்வரர்கள் 1000 பேருக்குச் சட்டிச் சோறு வழங்கவும்,திருவிழாவுக்கு தேவைப்படும் செலவுகளுக்கு இரண்டு காசுகளும் கொடுத்ததைக் கூறுகிறது.

மேலும் இவர் சிதம்பரம் அருகே குணமேனகைபுரம் என்ற பெயரில் வணிக நகரம் ஒன்றை ஏற்படுத்தி அங்கு வியாபாரிகள்,வெள்ளாளர்கள், சங்கரப்பாடியார், சாலியர், பட்டினவர் ஆகிய பெருமக்களையும், தச்சர், கொல்லர், தட்டார், கோலியர் உள்ளிட்ட கைவினைஞர்களையும் குடியேற்றினார்.

மேலும் சிங்களாந்தகன்_சாலை என்ற உணவுச்சாலையை ஏற்படுத்தி அங்கு நாடொறும் 25 பிராமணர்கள் உண்பதற்கும் ஏற்பாடு செய்தார் என்பதை அங்குள்ள கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.!

கல்வெட்டு

"உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழதேவர்க்கு யாண்டு ௨௰௪-வது உடையார் ராஜேந்திரசோழதேவர் அணுக்கி நக்கன் பரவை உடையார் திருச்சிற்றம்பலமுடையார் திருவானித் திருநாளில் உடையார் எழுந்தருளும் அற்றைக்கு வேண்டும் அழிவுக்கும் உடையார்க்கு அமுதுபடிக்கும் அமுது செய்தருளும்பொழுது ஸ்ரீ மாகேஸ்வரர்க்குச் சட்டிச்சோறு ஆயிரம் குடுக்கவும் பராக்கிரமச்சோழநல்லூர் பால் #குணமேனகைபுரமென்று ஏறின நகரத்துக்குப் பிரமாணப்படி கொண்ட நிலம்"

என்று அக்கல்வெட்டு நீண்டு செல்கிறது.

இவ்வணுக்கியார் தன் பெயரில் குணமேனகைபுரம் என்ற பெயரில் சிதம்பரம் அருகே ஒரு பெரிய வணிகநகரத்தை உருவாக்கியுள்ளார் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.

இதே கல்வெட்டில் தான் திருமாசித் திருநாளில் சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருத்தொண்டத்தொகை விண்ணப்பம் செய்வார்க்கு ஐந்து சாசு நிவந்தமாக வழங்கப்பட்ட குறிப்பும் உள்ளது.

 ஆடித் திருவாதி


சோழ பெருவேந்தர் இராசேந்திரசோழ தேவரின் ஜனன நட்சத்திரமான ஆடித் திருவாதிரையில் ஆரூர் வீற்றருளும் தியாகேசருக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள் குறித்த கல்வெட்டு ஆரூரான் சந்நிதியிலே அமைந்துள்ளது சிறப்பு. தன் தந்தையாரின் ஜனன நட்சத்திரமான ஐப்பசி சதயத்திற்க்கும் சேர்த்தே நிவந்தங்கள் அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. இராசராசரும் இராசேந்திரரும் ஒன்றாய் ஆரூரில் தியாகேசரை அவர் சன்னதியில் மனமுருக வழிபடும் காட்சி என் கற்பனை ஓவியம் வாயிலாக தமிழர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்..

அக்கல்வெட்டு வரிகள்:

"அய்யன் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்"



இராசேந்திர சோழன் காலத்தில் சமண, பௌத்த சமயங்களுக்கும் ஆதரவு நல்கப்பட்டன என்பதை விளக்கும் ஒரு கல்வெட்டின் விவரம்



ராஜேந்திர சோழத்தேவர் போரில், கோலராமமா கோயில் 




இந்த சிற்பம் ,ஒரு அரச குடும்பத்தினர் சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து வழிபாடு இயற்றுகிறார்கள்.இது ராஜேந்திர சோழனின் குடும்பம்தான். .இது ராஜேந்திரன் தன் தந்தைக்கு இறுதிக் கடன் இயற்றிவிட்டு, சம்பிரதாயப்படி தெற்கு வாசல் வழியே வந்த இடத்தில உள்ளது. இங்கு ஒரு மலையில் இருந்து இருவர் வெளியே வாருவது போன்ற சிற்பமும் உள்ளது.



திருவலஞ்சுழியில் உள்ள ராஜேந்திர சோழன் கல்வெட்டு செய்தியே நம் ராஜராஜ சோழ பெரு மன்னனை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அக் கல்வெட்டில் வரும் சொற்றொடர் " திலபருவதம் புக்கருளி " பொருள்; "எள் மலையில் புகுந்து வந்த "..இந்த வரிகள் தான் நம் ஆய்வுக்கு அடிப்படை. ஒரு ஆணும் பெண்ணும் ஒரு மலையில் இருந்து வெளிவருவதை....இவர்கள், வேறு யாரோ அல்ல..ராஜராஜனின் மைந்தன் ராஜேந்திர சோழனும், அவன் மனைவி வானவன் மாதேவியும் தான். இது எள் மலை என்பதை தெரிவிக்க மலைமேல் ஒரு எள் செடி இருப்பதையும் காணலாம்.





இவர்கள் இருவரும்தான் திலபருவதம் புகுந்து ராஜராஜனுக்கு இறுதி கடன் இயற்றிய பின், க்ஷேத்திரபாலரை பொற் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு இயற்றினார்கள். சடங்குகள் முடிந்து வெளிய வந்த தென் புற வாயிலில்தான் இந்த சிற்பம் உள்ளது....என்ன ஒரு அற்புதமான சிற்பம்.



திருவலஞ்சுழி. மாமன்னன் ராஜராஜ  சோழத்தேவர்



தன் தந்தை ராஜராஜ சோழனுக்கு சிலை அமைத்து நாள்தோறும் வழிபாடு இயற்ற வகை செய்த ராஜேந்திர சோழன் தானும் தந்தையை வழிபடும் விதமாக ,அமைக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் சிலை, ராஜராஜன் சிலைக்கு எதிரில் உள்ள சண்டிகேஸ்வரர் கோயில் கோஷ்ட்டதில் உள்ளது.





ராஜேந்திரசோழன் நுளம்பபாடியை வெற்றிகொண்டதன் நினைவாய் அங்குள்ள அழகிய ஏழு குதிரைகள் பூட்டிய சிலையை கவர்ந்து கொண்டு வருகிறார். 



இராஜேந்திர தேவரின் மறைவு:

1044 ம் ஆண்டுவரை உயிர் வாழ்ந்தார். செய்யாறு வட்டம் பிரம்மதேசத்தில் தன் வாழ்நாளின் இறுதியை கழித்தார். அவருடன் அவரது மனைவி வீமாதேவியும் சதியேறி உயிர்துறந்தார். அந்த அம்மையாரின் தாகசாந்திக்காக அவரது சகோதரர் மதுராந்தகனான பரகேசரி வேளார் என்பவர் தண்ணீர்பந்தல் வைத்து சடங்கை நிறைவேற்றியுள்ளார்.


நன்றி :  (வரலாற்று தகவல்கள்)

உயர்திரு. கோபால்  பாலகிருஷ்ணன் 
உயர்திரு. உதயா சங்கர் 
உயர்திரு. மாரிராஜன்
உயர்திரு. பார்த்தி

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்