வியாழன், 23 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ கண்டராதித்த சோழத்தேவர்

கண்டராதித்த சோழத்தேவர் (கி.பி. 950 - 957)

பராந்தக சோழத்தேவரின் இரண்டாம் மகன். இவரது ஆட்சிக்காலம் ஒருவாறு யூகமாக உறுதி செய்யப்படுகிறது. ராசகேசரி என்னும் பட்டத்துடன் ஆட்சிக்கு வருகிறார். ஏழு ஆண்டு காலம் ஆட்சி செய்திருக்கலாம் என ஒரு சில சான்றுகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இவரது காலத்திய முக்கிய நிகழ்வுகள் ஏதுமில்லை. சிறந்த சிவபக்தர். இவர் பாடிய பதிகங்கள் ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இவரது மனைவி, வரலாற்று பிரபலமான செம்பியன் மாதேவியார்.

இவர்களது ஒரே மகன் உத்தமச்சோழன் என்னும் மதுராந்தகன்.

இவரது இறுதிக் காலம் பற்றி அறிய சான்றுகள் இல்லை.

மேற்கே எழுந்தருளிய தேவர் என இவர் குறிப்பிடப்படுவது இன்றளவும் ஆய்வுக்குரிய ஒன்று.


சிவபக்தியில் சிறந்தவராக அறியப்படும் பராந்தக சோழரின் இரண்டாவது மகனான கண்டராதித்த சோழர் தம் அரசை துறந்து மேற்கில் தல யாத்திரை செல்லும் போது மறைந்ததால் மேற்கெழுந்தருளிய தேவர் என அழைக்கப்படலாமென வரலாற்றறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார். வேறு சிலர் அவர் மேற்கில் நடந்த போரில் இறந்ததால் அவ்வாறு அழைக்கப்படலாமென்றும் கூறுகிறார்கள். இன்னும் சிலர் மேற்கு பகுதியில் கொல்லி மலை பகுதியில் அவர் மறைந்திருக்கலாமெனவும் கூறுகிறார்கள் என்றாலும் இதுவரை உறுதியான ஆதாரம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்றில் கண்டராதித்தரின் மனைவி செம்பியன் மாதேவியார் அளித்த நிவந்தக் கல்வெட்டில் அவர் மேற்கெழுந்தருளிய தேவர் என அழைக்கப்பட்டிருப்பதை இணைப்பில் காணலாம்.




சோழ மன்னர்களின் உருவம் இப்படித்தான், இவர்தான் என்று அடையாளம் காட்டி, நேரிடையான கல்வெட்டுச் சான்றுகளுடன் ஒரு சோழ மன்னர் இருக்கிறார். அவர்தான் கண்டராதித்தச் சோழத்தேவர். சிவஞானச்செல்வரும், தில்லை நடராஜர் மீது திருவிசைப்பா பாடியவரும், கோழிவேந்தன், தஞ்சையர் கோன், முதலாம் பராந்தகரின் இரண்டாம் மகன், செம்பியன் மாதேவியாரின் கணவன், உத்தமச்சோழரின் தந்தை, மும்முடிச்சோழர் ஸ்ரீகண்டராதித்தரின் திரு உருவம் இப்படித்தான்
இருக்கும்.


உத்தமச்சோழரின் 3ஆம் ஆட்சியாண்டு..

கும்பகோணம், திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரத்தில், செம்பியன் மாதேவியார் தனது கணவர் கண்டராதித்தர் பெயரால் கற்றளி ஒன்றை எழுப்புகிறார். அக்கோவில் இறைவனை வணங்கியவாறு கண்டராதித்தரின் திருஉருவத்தை சிற்பமாக வடிக்கிறார். எக்காலத்திலும் யாருக்கும் எந்த ஐயமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அச்சிற்பத்தின் கீழே இவர்தான் கண்டராதித்தர் எனத் தெளிவாக கல்வெட்டில் பொறித்தார்.

"ஸ்வஸ்திஸ்ரீ கண்டராதித்ததேவர் தேவியார்
மாதேவடிகளரான ஸ்ரீசெம்பியன் மாதேவியார்
தம்முடைய திருமகனார் ஸ்ரீமதுராந்தகதேவரான
ஸ்ரீஉத்தமச்சோழர் திருரராஜ்யஞ் செய்த ருளாநிற்க
தம்முடையா ஸ்ரீகண்டராதித்ததேவர் திருநாமத்தால்
திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி
எழுந்தருளுவித்து இத்திருக்கற்றளியிலேய்
திருநல்லமுடையாரை திருவடி தொழுகின்றாராக
எழுந்தருளுவித்த ஸ்ரீகண்டராதித்தர் இவர்"

கண்டராதித்தரின் மனைவியான செம்பியன் மாதேவியார், உத்தமசோழர் திருராஜ்ய செய்த கண்டராதித்ததேவர் பெயரால் எழுப்பப்ட்ட இக்கோவிலில் இறைவனை வணங்குகின்ற ஸ்ரீகண்டராதித்ததேவர் இவர்தான்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்