ஞாயிறு, 26 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ விசயாலய சோழத்தேவர்


பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் கோப்பரகேசரி வர்மன் விஜயாலய சோழத்தேவரே ஆவார். 

விஜயாலயனின் தந்தை பெயர் ஒற்றியூரான் என்று முதலாம் பராந்தகசோழனினின் வேலஞ்சேரி செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

பிற்காலச்சோழர்களில் முதல் அரசனாக விஜயாலய சோழத்தேவர் அறியப்படுகிறார். (கி.பி.850 - 871)

இவரது மகனான முதலாம் ஆதித்தன் பதவியேற்ற ஆண்டு கி.பி. 871 என்பது உறுதி செய்யப்படுகிறது. ஆக இவ்வாண்டே விஜயாலரின் இறுதி ஆண்டாக இருக்கலாம். விஜயாலரின் ஆரம்ப ஆண்டு எது என்பதை உறுதியாகக் கூற சரியான சான்றுகள் இல்லை.


நடுகல் கல்வெட்டு ஒன்று விஜயாலரை தஞ்சை கோட்ட கோபரகேசரி என்கிறது.

சோழ மன்னர்கள் தங்களை பரகேசரி, இராஜகேசரி, என மாறி மாறி அழைக்கின்றனர். தந்தை பரகேசரி என்றால் மகன் இராசகேசரி.

முதல் பரகேசரியாக விஜயாலயன் கல்வெட்டிலும் செப்பேடுகளிலும் வருகிறார்.


" தஞ்சை கொண்ட பரகேசரி " என்ற பரகேசரிவர்மன் விசயாலய சோழ தேவன் என்பர்.  பிற்காலச் சோழர் பேரரசைத் தோற்றுவித்த முதல்வன். இவன் முத்தரையரை வென்று தஞ்சாவூரைக் கைக்கொண்டான்; அங்குத் துர்க்கைக்குக் கோவில் கட்டினான் என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இவனது ஆட்சி காவேரி கரையின் உறையூரில் இருந்த தொடங்கியதை"  திருவாலங்காடு செப்பேடு" உறுதிப்படுத்திக்கிறது. தனது சட்டபூர்வமான மனைவியை கைப்பற்றியது போல தஞ்சை கைப்பற்றினான் என்று இந்த செப்பேடு கூறுகிறது. 


பழையாறை அல்லது பழையாறு சோழர்களின் 5 தலைநகரங்களின் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்நாளில் சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2 வது தலைநகராக மாறியது.

திருப்புறம்பயம் போர், பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள்  தஞ்சை  மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டு வந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. 


இவர்களும்  சோழர்களைப்  போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல்,  பாண்டியர்களுடனோ   பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன. முத்தரையர் எந்த குடியினர் என்று அறிய  இங்கே சொடுக்கவும் (click here) கள்வர் கள்வன் முத்தரையன்

கி . பி 840 இல் விஜயாலய சோழனுக்கு பழையாறையில் தான் வசித்து வந்தான். பின்னர் பாண்டியருக்கும், பல்லவருக்கும் ஏற்பட்ட போரில் பல்லவருக்கு துணையாக விஜயாலய சோழன் பாண்டியனுக்கு எதிராக சண்டையிட்டார். அந்த போரில் பல்லவர்கள் பெற்ற வெற்றியின் பலனாக சோழர்களுக்கு தஞ்சையும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் விஜயாலய சோழனுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அது முதல் சோழர்களின் பொற்காலம் தொடங்கிற்று. பின்னர் சுந்தர சோழன் காலத்தில் தஞ்சைக்கு தலைநகர் மாற்றப்படும் வரை பழையாறை சோழர்களுக்கு தலைநகராக விளங்கியது .

பழையாறை இன்றும் கள்ளர் குடியினரே உள்ளனர். பழைசைநாடர் பழைசையுடையார், பழையாற்றரையர் என்ற கள்ளர் பட்டங்களே இதனை உணர்த்தும். கள்ளர்களுக்கும்  பழையாறைக்கும்மான தொடர்பை அறிய  இங்கே சொடுக்கவும் (click here)👉பழையாற்றரையர்





பரகேசரி விஜயாலயன் போர் வெற்றிகள்!





பரகேசரி விஜயாலய சோழரால் வித்திடப்பட்ட பிற்காலச் சோழர்கள் பெரும் வல்லரசாக உருவாக பல போர்கள் செய்ய வேண்டியிருந்தது. பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருந்த போதே தங்களது சிற்றரசை தக்க வைத்திட விஜயாலயன் நிறைய போர்களில் ஈடுபட்டு தன்னுடம்பில் தொண்ணூற்றாறு விழுப்புண்களை பெற்றிருந்தமையை பிற்காலத்தில் இயற்றப்பட்ட ஒட்டக்கூத்தரின் மூவருலா மூலம் அறிகிறோம். 

முத்தரையர் வசமிருந்த தஞ்சையை வெற்றிக் கொண்டதே விஜயாலயனின் பெருமைமிகு தனி வெற்றியாகக் கருதப்படுகிறது. 'தஞ்சைக்கோன்' எனவும் 'தஞ்சை நற்புகழாளன்' எனவும் விஜயாலயன் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறான்.  தஞ்சைக்கோன் தஞ்சைராயர், தஞ்சிராயர் இன்றும் கள்ளர்களின் பட்டமாகவே உள்ளது. 


தஞ்சையை வென்ற பின் அங்கு எண்திசைகளிலும் காவல் தெய்வமான நிசும்பசூதனியின் சிலைகளை நிர்மாணித்ததை திருவாலங்காடு செப்பேடுகள் விளக்குகின்றன. கன்னியாகுமரி கல்வெட்டொன்றும் விஜயாலயரின் இந்த போர் வெற்றிகளை சிறப்பாக விளக்குகின்றன.

தஞ்சையில் உள்ள சோழர்களின் குலதெய்வம் நிசும்பசூதனியின் கோயிலின் குடமுழுக்க செய்து வழிபாடு செய்து வருபவர் கள்ளர்குடியில் பிறந்த பழுவேட்டரையர் மரபில் உதித்த ஐயா. விக்கிரமகர்ண பழுவேட்டரையர்.


ஒருபுறம் பல்லவப் பேரரசும் மறுபுறம் பாண்டியப் பேரரசும் விளங்கியதால் போர்களில் இரண்டு தரப்புகளில் ஒருவரோடு இணைந்தே தன் சிறு படையுடன் விஜயாலயன் கலந்துக் கொண்டார் எனலாம். பெரும்பாலும் பல்லவர்களுடன் இணைந்தே அவர் பாண்டியர்களுடன் போர் நிகழ்த்தியிருப்பது அறிய முடிகிறது. இதில் திருப்புமுனை போராக அறியப்படுவது திருப்புறம்பியத்தில் நடந்த பெரும் போராகும். ஒருபுறம் பல்லவர்களுக்கும் அவர்களுக்குதவிட கங்க மன்னன் முதலாம் பிருதிவீபதி மற்றும் சோழர்கள் இணைந்துக் கொண்டு வரகுண பாண்டியனின் பெரும்படையுடன் போர் புரிந்தனர். போர்க்களத்திலேயே பிருதிவீபதி வீரமரணம் அடைய பல்லவர், சோழர் கூட்டணி பெரும் வெற்றியை ஈட்டுகிறது. போரில் துணையிருந்ததற்கு நன்றிக்கடனாக அந்தப் பகுதி முழுதும் தங்களுக்கு அடங்கி ஆளும் பொறுப்பை அளிக்கிறார் பல்லவ வேந்தர் அபராஜிதவர்மர். 


உயிரிழந்த பிருதிவீபதிக்கு பள்ளிப்படையும் அங்கேயே அமைக்கப்படுகிறது. 


இப்போரில் விஜயாலயருடன் அவருடைய மைந்தரான ஆதித்த சோழரும் பங்கெடுத்திருக்கக் கூடும். வலுவான அடித்தளத்தை இந்த போர் சோழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த போர் வெற்றியே சோழர்கள் வல்லரசாக அமைய அடிகோலியது எனலாம். அடுத்த சிறிது காலத்திலேயே பசித்திருந்த புலியாம் ஆதித்த சோழன் பல்லவனையும் தோற்கடித்து சோழர்களை பேரரசாக உருவாக்கியமை குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.




திருவலங்காடு செப்பேடுகள்

44வது செய்யுள் .. விஜயாலர் அறிமுகமாகின்றார்..

44 வது செய்யுள் விஜயாலர் தோற்றத்தையும்..

45வது செய்யுள் அவர் தஞ்சையை கைப்பற்றியதையும்,

46 வது செய்யுள் நிதும்பசூதனிக்கு கோவில் எழுப்பியதையும் கூறுகிறது..

44 வது செய்யுள்..

ஸமஜனி விஜயாலய ததீயே மஹதி குலே மஹிநிநீய
விக்ரம ஸ்ரீ.. அஹமஹமிகயா ப்ராணம சசுஞ்சு சஷிபதி.
மௌலி விகட்டிதாங்க் ரீபிட..

சோழர் குலத்தில் விஜயாலயன் என்னும் பெரு வீரன்
பிறந்தான்.. அவன், தேடிவந்து வணங்கும் அரசர்களின்
மகுடத்தால் தீண்டப்பட்ட பாத பீடத்தை உடையவன்..

45 வது செய்யுள்..

ஸத்ருஞ்சிங்விசித்ராம் அலகாபி ராமாம் வ்யாப்தாம்பராம் ஆத்மவதூ மிவாஸௌ - தஞ்ஜாபுரீம்
ஸௌத ஸீதாங்க ராகாம் ஜக்ராஹ ரந்தும் ரவி வம்ஸதீப..

சோழர் குலத்தின் தீபம் போன்ற அவர், தன் சொந்த மனைவியின் கரங்களை பற்றுவது போல், தஞ்சையை
கைப்பற்றினார்... 


( தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றி, மீண்டும் அதை சோழத் தலைநகராக்கிய செய்தி, இந்த செய்யுள் மூலம்
உறுதிசெய்யப்படுகிறது..)

46 வது செய்யுள்..

அத ப்ரதிஷ்டாப்ய நிஸும்ப ஸுதனீம் ஸுராஸுரை..
அர்ச்சித பாத பங்கஜாம்..சதுஸ்ஸமுத் ராம்பர ஸோபினீம் புவம் பபார மாலாமிவ தத்ப்ரஸாதத..

தஞ்சையை கைப்பற்றிய பிறகு, தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்பட்ட பாதங்களையுடைய
நிசும்பசூதன் என்னும் அசுரனை வதம் செய்த, துர்க்கையாம் நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தார்.
( இந்த செய்யுள் மூலம், தஞ்சையில் உள்ள நிதும்பசூதனி ஆலயத்தை எடுப்பித்தவர் விஜயாலயர்
என உறுதி செய்யப்படுகிறது..)

47 வது செய்யுளில், விஜயாலரின் மகனும், பிற்கால சோழத்தை ஸ்தாபித்த மாவீரர் ஆதித்தன் அறிமுகமாகிறார்.




விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்திய பிறகு நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது. புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலை மீதுள்ள விசயாலய சோழீச்சரம் என்னும் கற்கோயில் இவன் பெயரால் அமைந்தது. தெலுங்குக் குல காலபுரம்’ என்று நார்த்தாமலை அழைக்கப்பட்டிருக்கிறது . விஜய நகர தளபதி அக்கல் ராஜா’ என்ற தெலுங்கன், நார்த்தாமலை பகுதியை   ‘விசெங்கி நாட்டுக் கள்ளர்’களை வெற்றி பெற்று கைப்பற்றினான், பிறகு கச்சிராயன் என்ற கள்ளர் வீரரினால் கொல்லப்பட்டான்.நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம், மாரியம்மன் கோயில்களில் இன்றும் கள்ளர்களின் திருப்பணிகள் நடைபெறுகின்றன





திருச்சிராப் பள்ளிக் கல்வெட்டொன்று ‘விசயாலயன் தன் பெயர்க் கொண்ட விசயாலயச் சதுர்வேதி மங்கலம்’ என்னும் சிற்றுரைப் பிரம்மதேயமாக விட்டான்” என்று கூறுகிறது. வடஆர்க்காடு கோட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துரரில் இவனது நான்காம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று இருந்ததென்பது பிற்கால விக்கிரம சோழன் கல்வெட்டால் தெரியவருகிறது. அதனால், இவனது ஆட்சி தொண்டை நாட்டின் ஒரு பகுதி வரை பரவியிருந்தது எனலாம். ஆயினும் இவ்வரசன் பல்லவ வேந்தனுக்கு அடங்கி இருந்தவன்; எனினும், தன் ஆட்சியாண்டைக் குறிக்கும் உரிமை பெற்றிருந்தான்.

வரகுண பாண்டிய மன்னன் காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ முத்தரையர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழர், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி அவர் புகுந்து சென்றவிடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தார்.

இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.



அணியன் என்பான் ஆநிரைகளை கவர்ந்து செல்ல அவற்றை மீட்பதற்காக நடைபெற்ற பூசலின் போது இறந்து பட்ட கற்பூண்டி நாட்டு அத்தியூரைச் சேர்ந்த கரம்பை முக்கன் என்பான் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு வழி அறிந்து கொள்ளலாம்.

தஞ்சை கொண்ட கோப்பரகேசரி வர்மனது கல்வெட்டு

வீர சோழபுரத்தைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டொன்று பிற்கால பேரரசு சோழர்களின் முதல் அரசனாக அறியப்படும் விஜயாலய சோழனது ஆட்சியினைக் குறிப்பிடுகிறது. 

விஜயாலய சோழனது மூன்றாவது ஆட்சி யாண்டினைச் சேர்ந்த இக்கல்வெட்டில் விஜயாலயன் தஞ்சை கொண்ட கோப்பரகேசரி பன்மராக குறிப்பிடப்பட்டுள்ளான். விஜயாலயன் அரசேறிய காலத்தினை கி. பி. 850 எனக் கொண்டால் இக்கல்வெட்டின் காலம் கிபி 853 ஆகக் கொள்ளலாம். இன்று இந்த நடுகல் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இறந்த வீரன் உருவம் கையில் வில் மற்றும் அம்பினை ஏந்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

"தஞ்சை கொட்ட கொப்பரகெ

கு யாண்டு

3வது கற்பூ

ண்டி நாட்டு அ

த்தியூர் கரம்

பை கலி

துடன் மு

க்கன் அணிய

ன் தொறு

கொள

தொறு மீட்

டு பட்டான்"

இதில் ஆநிரைகளைக் குறிப்பதற்கு தொறு எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


நன்றி


இந்தியத் தொல்லியல் துறை

வரலாற்றறிஞர் திரு.வை.சதாசிவ பண்டாரத்தார்.

வரலாற்றறிஞர் திரு.நீலகண்ட சாஸ்திரியார்.

உயர்திரு. உதயா சங்கர்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்