வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கள்ளர் பாளையங்கள் / ஜமீன் - கள்ளர் சிற்றரசு ஆட்சி - கள்ளர் சிற்றரசுகள் - கள்ளர் சிற்றரசர்கள் - கள்ளர் பாளையங்கள் வரலாறு - ஜமீன்கள் வரலாறு - தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் - பாளையக்காரர் முறை - பாளையம் - பாளையங்கள் வரலாறு - பாளையக்காரர்கள் வரலாறு.

பாளையக்காரர்கள் / பாளையக்காரர்கள் வரலாறு / பாளையம் / பாளையக்காரர் / Polygar / Polygar History 


விஜயநகர அரசு ஆட்சிக்கு முன்பே கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான்புதுக்கோட்டை பல்லவராயர், சூரைக்குடி தொண்டைமான், கட்டலூர் பெரம்பூர் அரசு மற்றும் தஞ்சை பகுதியில் மிகவும் பழமையான சிற்றரசுகளாக இருந்த ராஜேந்திரசோழவளநாடு பொய்யூர் கூற்றத்துப் பாப்பாக்குடி நாடு, சிறுநெல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் விஜயதேவர் என்பவர்களால் ஆட்சி செய்யப்பட்டதையும் ஶ்ரீ ஜெயங்கொண்டநாதசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் உள்ள தெற்காசியாவை கட்டியாண்ட மும்முடிச்சோழன் ராஜராஜ சோழனுக்கும், பாப்பாநாட்டு விஜயாத்தேவரும் சிவலிங்கத் திருமேனிக்கு முன் இவர்களது சிற்பம் வழிபாட்டை பெறும் சிறப்பை பெற்றுள்ளது(தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் : புலவர் இராசு, பக்கம் 134). 

The Rajah of Pudukkottai and several rich Zamindars of Southern Tamil Nadu belong to the Kallar caste.




விஜய நகர பேரசு அமைவதை எதிர்த்த கள்ளர் மறவர்

கல்வெட்டின் தொடக்கத்தில் விஜய நகர அரசர்கள் பெற்ற போர் வெற்றிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன

" துலுக்கர் மொகரந் தவிர்த்தான்" "துலுக்க தளவிபாடன்"
" எம்மண்டலமும் ஈழமும் திறைக் கொண்ட இராசாதிராசன்";
" கள்ளர் மறவர் குறும்பறுத்து வேழமும் முத்தும் வாரி வழங்கும் வீரப்பிரதாபன் " 




(கள்ளர் மரபினரின் புதுக்கோட்டை அரசர்  தொண்டைமான் அரண்மனை)

15 ஆம் மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் விஜயநகர அரசு ஆட்சிக்கு முன்பே தமிழகத்தில் ஆங்காங்கு சிற்றரசர்களாக இருந்தவர்களையும் மற்றும் தெலுங்கு மொழி பேசக்கூடிய வடுகா சமூகங்களிலிருந்து வந்தவர்களையும் பாளையக்காரர்களாக அமர்த்தப்பட்டனர். 



சோழமண்டல பகுதியில் உள்ள கள்ளர் மரபினரின் அரசுகள்.

1) பாப்பாநாடு : விஜயதேவர் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

2) பாளையவனம் :  வணங்கமுடிப் பண்டாரத்தார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

3) சிங்கவனம் :  மெய்க்கன் கோபாலர் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

4) புனல்வாசல் : மழவராய பண்டாரத்தார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

5) நெடுவாசல் :  பன்றிகொண்டார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

6) பாதரங்கோட்டை :  சிங்கப்புலியார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

7) கல்லாகோட்டை : சிங்கப்புலியார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

8) கந்தர்வகோட்டை : அச்சுதப்பண்டாரத்தார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

9) சில்லத்தூர் : பன்றிகொண்டார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

10) மதுக்கூர் :  கோபாலர் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

11) சேந்தங்குடி : வணங்காமுடி வகுவடையார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

12) உக்கடை : தேவர்  பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

13) பூண்டி : வாண்டையார் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

14) அய்யம்பேட்டை சாவடி : நாயக்கர் பட்டமுடைய கள்ளர் மரபினராலும்.

15) வல்லம் : வல்லத்தரசு பட்டமுடைய கள்ளர் மரபினராலும். (இன்று இடிந்த கோட்டைகள் மட்டுமே உள்ளன். வல்லத்தரசு பரம்பரை மக்கள் மட்டுமே பல குடும்பமாக உள்ளனர்)


Zamindar of Kallakottai - Rajah VRBR Dorai Raja Singapuliyar Avl

Zamindar of Gandarvakkottai - Raja Ramachandra Durai Pandarathar Avl.


சிங்கவனம் விஜயரகுநாத மெய்க்கன் கோபாலர்

பாளையவனம்  வணங்கமுடிப் பண்டாரத்தார்

சில்லத்தூர் ரெங்கசாமி பணிபூண்டார்


கூனம்பட்டி ஜமீன்தார் எஸ். பன்னீர் செல்வம் மேற்கொண்டார்


உக்கடை ஜமீன்


பூண்டி வாண்டையார் 




விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவி அமைத்த பாளையப்பட்டு எனும் புதிய முறை ஆகும். "பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது.


விஜயநகர பேரரசர்களில் முக்கியமான அரசரான குமார கம்பனன் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்தார். கேரளா ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என்று துங்கபத்ரா ஆற்றுக்குத் தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த பேரரசை ஏற்படுத்தினார். பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடுகள் பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. மண்டலத்தின் ஆளுநர் மண்டலேஸ்வரர், பாளையக்காரர் அல்லது நாயக் என்று அழைக்கப்பட்டார். விஜயநகர அரசு விரிந்து பரந்திருந்ததால் பேரரசை பாளையம் எனும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார்.

தமிழ்நாட்டுப் பகுதிகள் மதுரை, தஞ்சாவூர் மற்றும் செஞ்சி என்ற மூன்று நாயக்க அரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. தஞ்சை நாயக்கர் (1532 ), செஞ்சி நாயக்கர் (1508 ) ,மதுரை நாயக்கர் (1529 ).

விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். சில பாண்டிய நாட்டுப் பகுதிகளை அபகரித்துக் கொண்ட வீரசேகர சோழன் என்ற சிற்றரசனை அடக்கும்படி நாகம நாயக்கர் பணிக்கப்பட்டார். பாண்டிய நாடு விசயநகரப் பேரரசின் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட அரசாகும். வீரசேகரனை வென்ற நாகம நாயக்கர் மதுரையைத் தான் ஆள விரும்பினார். நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மாமன்னர் கிருஷ்ண தேவராயரின் பெரிய விசுவாசியாக விளங்கினார். எனவே தன தந்தை கைப்பற்றிய மதுரையை அவரிடமிருந்து மீட்டு கிருஷ்ண தேவராயர் வசம் ஒப்படைத்தார். விசுவநாத நாயக்கரின் நேர்மையையும் விசுவாசத்தையும் கண்டு மகிழ்ந்த மாமன்னர் கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரை மதுரை மற்றும் அதைச் சுற்றிய தமிழ்நாட்டுப் பகுதிகளின் ஆளுநராக நியமித்தார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.

விசுவநாத நாயக்கரின் படையை நடத்திய அரியநாத முதலியார் விசுவநாதருடன் இணைந்து தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் தங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதற்கிடையில் விசுவநாதரின் மகனும் வாரிசுமான கிருட்டிணப்ப நாயக்கர் தொடர்ந்து மதுரைப் பகுதியின் ஆளுநரானார். அரியநாதர் மதுரை நாயக்கர்கள் ஆண்ட அரசை படிப்படியாக விரிவு படுத்தினார். தொடர்ந்து பண்டைய பாண்டிய அரசு மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது.


அரியநாத முதலியார் பாளையங்களையும் பாளையக்காரர் முறையையும் நிருவியவராவார். தமிழகத்தில் பாளையக்காரர் முறை என்பது 16 ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசை ஆள்வதற்கு பயன்பட்டது. பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பின்படி (quasi-feudal organization of regions) மதுரை நாயக்க அரசு பல பாளையங்களாக அல்லது சிறு பகுதிகளாகப் (small provinces) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரர் என்ற குறுநில முதன்மையரால் ஆளப்பட்டது. இந்த அமைப்பின்படி மதுரை நாயக்க அரசு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்களை அரியநாதர் விசுவநாத நாயக்கர் மற்றும் இவருடைய மைந்தன் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 50 ஆண்டுக்காலம் நிர்வாகித்தார்.


தஞ்சை நாயக்கரால் (1532 ) "தஞ்சை சீமையில் வீரமிக்க கள்ளர் மற்றும் மறவர்களை கட்டுபடுத்துவதற்காக பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சைவள நாட்டின் அனைத்து பாளையங்களும் கள்ளர்களின் வசமே உள்ளது. - Hemingway, Tanjore gazetter( ஆண்டு :1906)


"தஞ்சைவள நாட்டில் மொத்தம் 13 ஜமீன்கள் உள்ளது. தஞ்சை தாலுகாவில் ஒரு பாளையமும் , பட்டுக்கோட்டை தாலுகாவில் மீதம் உள்ள 12 பாளையங்களும் உள்ளது. இந்த பாளையங்களின் மன்னர்களாக , ஜமீன்களாக கள்ளர்கள் மற்றும் அவர்களோடு இரத்த வழி தொடர்புடைய இனத்தார்கள் உள்ளனர்.

தஞ்சையின் மிகப்பெரிய கள்ளர் பாளையக்காரர் ( பண்டாரத்தார்கள்) கந்தர்வகோட்டை ஆகும். மொத்த பரப்பளவு 48,446 ஏக்கர்கள் ஆகும் - Hemingway, Tanjore gazetter( ஆண்டு :1906)


பாளையக்கார்கள் யாவரும் ஒரே குடியினர் அல்லது ஒரே மொழியினர் என்று கூறமுடியாது. திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்த பாளையக்காரர்கள் மறவர் குடியினராய் இருந்தனர். மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் கள்ளர் குடியினரும், திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நாயக்க (தொட்டியர்) இனத்தவரும் பாளையக்காரர்களாக விளங்கினார். தொட்டிய நாயக்கர்கள் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளும் பேசுபவர்களாக இருந்தனர். கி.பி. 1752- இல் தமிழகத்தில் ஏறத்தாழ 60 பாளையக்காரர்கள் இருந்தனர்.

18-ஆம் நூற்றாண்டின் கடைசியில் அவர்கள் 46 பாளையக்காரர்களாகக் குறைந்து காணப்பட்டனர். கி.பி. 17-18 - ஆம் நூற்றாண்டுகளில் தமிழகமெங்கும் பாளையப்பட்டு ஆட்சிமுறை இருந்தது. மதுரை நாயக்க அரசர்கள் காலத்திலும். பின்பு ஆர்க்காட்டு நவாப், தஞ்சை மராட்டியர் ஆட்சிக் காலங்களிலும் இத்தகைய ஆட்சி முறை பரவலாக இருந்தது. அடிக்கடி ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், மாற்றாரின் ஆட்சி, கலவரங்கள், போர்கள் ஆகிய காரணங்களாலும், நாயக்கர் ஆட்சியின் வலுவின்மை, மராட்டியர் போன்ற மற்ற மாநிலத்தவர் ஆட்சி ஆகியவற்றைச் சாதகமாகக் கொண்டும்,பாளையக்காரர்கள சிற்றரசர்கள் போன்று நிலை பெற்றனர். திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இத்தகைய பாளையக்கார்கள் அதிகம் இருந்தனர்.

கி.பி. 1801- இல் சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ், பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ஜமீன்தார்கள் எனப் பெயர் பெற்றனர். இம்முறையை அறிமுகப்படுத்திய பிறகு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி முறையும் திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டன. பாளையக்காரர் என்ற பெயர் மாற்றப்பட்ட போதும் ஜமீன்தார்கள் பல சலுகைகளை அனுபவித்தனர்.

தமிழகத்தில் எல்லா பாளையக்காரர்களும், அதாவது ஆங்கிலேயரிடம் நட்பாக இருந்த  பாளையக்காரர்களும் ஜமீன்தாராக மாற்றப்பட்டாலும், தமிழகத்தில் ஒரே சமஸ்தானமாக இருந்தது கள்ளர் குல தொண்டைமான் ஆட்சி செய்த புதுக்கோட்டை மட்டுமே.




புதுக்கோட்டை கள்ளர் பாளையம் தனி அரசாக உதயம் ஆனது. இரகுநாதராய தொண்டைமான் கி.பி. 1686-1730 வரை புதுக்கோட்டை ராஜ்ஜியத்தை அரசாண்டார். புதுக்கோட்டையில் இரகுநாதராய தொண்டைமான் அரசாண்டபொழுது திருச்சிராப்பள்ளி நாயக்கர் அரசா் இரங்ககிருஷ்ண முத்து வீரப்பா் ஆதரவுடன் (கி.பி.1682-1689) நமண தொண்டைமான் குளத்தூர் பகுதியின் (தற்போதைய குளத்தூர் தாலுகா) அரசராக விளங்கினார். கள்ளர் பாளையத்தில் புதுக்கோட்டை, குளத்தூர் மட்டும் தனி அரசாக இருந்தது. மதுரை தன்னரசு நாடு யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தது.

31 St Dec, கி.பி.1822ம் ஆண்டு கேப்டன் ஃப்ளாக் பர்ன் மண்ணின் மைந்தர்களான கள்ளர்குல தொண்டைமான்களின் சுயாட்சி உரிமை குறித்து தஞ்சை மராத்திய மன்னர் சரபோஜிக்கு தெளிவாக கடிதம் எழுதியுள்ளார். தொண்டைமான்கள் ஒரு ரூபாய் கூட வரி ஆங்கிலேயருக்கு செலுத்தவில்லை என்பதனை இதன் மூலம் நாம் அறியலாம்.

          
அதில் தொண்டைமான் மன்னர் மண்ணின் மைந்தர், சுயமாக ஆள்பவர், படைகளை வைத்துகொள்ள உரிமை, வரிவசூலித்துக்கொள்ளுதல், தொண்டைநாட்டின் அரசியல்,பொருளாதார விவகாரங்களில் அவர்களே முடிவு எடுத்துக்கொள்ள உரிமை உள்ளது நாங்கள் தலையிடமாட்டோம்.

தொண்டைமான்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எங்களை (ஆங்கிலேயரை) வணங்கவேண்டிய தேவையில்லை.

தஞ்சை கள்ளர் பாளையங்கள்

ந.மு.வேங்கடசாமி நாட்டார் "கள்ளர் சரித்திரத்தில்" 13 கள்ளர் ஜமீன்கள் பெயர்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1903-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது. இக்கொள்கையை நிலை நறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து4-வது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் ‘பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்னபட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்’ (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ள கள்ளர் ஜமீன்கள்:


1) பாப்பாநாடு : இராமலிங்க விஜயதேவர்

2) பாளையவனம் :  இராமச்சந்திர விஜய அருணாசல வணங்கமுடிப் பண்டாரத்தார்.

3) சிங்கவனம் : சவ்வாஜி விஜயரகுநாத மகாராஜா மெய்க்கன் கோபாலர்

4) புனல்வாசல் : அப்புசாமி மழவராய பண்டாரத்தார்

5) நெடுவாசல் : விஜயரகுநாத முத்தையன் பன்றிகொண்டார்.

6) பாதரங்கோட்டை : விஜயரகுநாத பாலாஜி சிங்கப்புலியார்.

7) கல்லாகோட்டை : விஜயரகுநாத அரங்கசாமி சிங்கப்புலியார்.

8) கந்தர்வகோட்டை : அச்சுதப்பண்டாரத்தார்

9) சில்லத்தூர் : விஜயரகுநாத அரங்கசாமி பன்றிகொண்டார்

10) கோனூர் : சீனிவாசராயர்

11) மதுக்கூர் : சவ்வாஜி விஜயரகுநாத பாலாஜி கனகசபை கோபாலர்

12) அத்திவெட்டி : துரைசாமி ஆகாசம் சேர்வைக்காரர்

13) சேந்தங்குடி : விஜய ரகுநாத அருணாசல வணங்காமுடி வகுவடையார்.

என்னும் பதிமூன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றையவெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில் கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே.


தஞ்சாவூர் பகுதியில் சிற்றரரசர்களாக இருந்த இவர்களை,  நாயக்கர் காலத்திலும், மராட்டியர் காலத்திலும் பாளையக்காரர்களாக மாற்றப்பட்டு பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்களாக மாற்றப்பட்டனர்.

நெடுவாசல் ஜமீன்தார் கள்ளரின் பன்றிகொண்டார் பட்டம் உடையவர்கள், இவர்கள் அம்புநாட்டு கள்ளர் குடிகளுள் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள், அம்புநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து நெடுவாசல் பகுதியில் ஆட்சி செலுத்தி, அப்பகுதியின் ஜமீன்தார்களாக மாறினர்.

புதுக்கோட்டை மன்னர் கிபி 1848 ல் நெடுவாசல் ஜமீன்தாரின் மகளை திருமணம் செய்துள்ளார். இவரிடம் 15 கிராமங்களில் 9532 ஏக்கர் அளவுக்கு நில உடைமையாளராக இருந்துள்ளதை கிபி 1879 ல் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மராட்டியர் "மோடி" ஆவணங்களில் தஞ்சை கள்ளர் பாளையங்கள்


முக்கிய கலெக்டர் கிண்டர்ஸலி சாயேப் கேட்டதாவது:

பாளையம்பட்டு என்று 13 இருக்கிறதே, அவையெல்லாம் முற்காலம் முதற்கொண்டு இருக்கிறதா?


கைலாவாசீ ம.கா.Sri.Sri.பிரதாபசிம்ம ராஜா காலத்தில் _ ஸர்கேல்_நானாஜி ஜகதாப் என்றிருந்தார். அவரால் தென்தேசத்தை ஸாதித்தார். பிறகு அப்பக்கத்திலுள்ளவர்கள் "கள்ளர்கள்" அவர்களுடைய சச்சரவு சம்பவிக்காமலிருக்குபடி பட்டுக்கோட்டையில் குதிரைச்சிப்பாய்களை வைத்து ஜாக்கிரதை செய்திருந்தார். அதற்குப்பிறகும் இராஜ்யத்தின் எல்லை இருப்பதால் அங்கே சிலருக்கு பாளையம்பட்டு என்று செய்துகொடுத்து வந்தார்.

இந்த பாளையக்காரர்கள் பூமியின் போர்க்குடிகள்! ஸர்காரில் யோக்கியமான "கத்திவேலை " தெரிந்தவர்களையும் நியமித்திருக்கிறார்.



வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்