ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

தமிழ்ப் பேரவைச் செம்மல், புலவர் பி. விருத்தாசலம் நாட்டார்




தஞ்சாவூர் என்றால் தமிழ் உணர்வாளர்களுக்கு நினைவுக்கு வருபவர் பி.விருத்தாசலம் நாட்டார். (மே 22, 1940- நவம்பர் 17, 2010) 

தஞ்சை, மேலத்திருப்பூந்துருத்தியில் பொ. பிச்சையா நாட்டார், தென்காவேரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். மிக எளிய விவசாயக் குடும்பம். தமிழ் மொழிக்காகப் பாடுபட்டார். தஞ்சை ’ந. மு வே. நாட்டார் திருவருள் கல்லூரி’யைத் தோற்றுவித்துத் தனித்தமிழ்ப் புலவர் கல்வியை 19 ஆண்டுகளாகக் கற்பித்து வந்தார். 

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராக இருந்து பல மாநாடுகளை நடத்தினார். தமிழியக்கம் என்னும் அமைப்பின் தலைவராக இருந்து மொழித் தொண்டு ஆற்றினார். "எல்லார்க்கும் கல்வி கொடு; எல்லாக் கல்வியும் தமிழில் கொடு" என்று முழங்கினார். 

தமிழீழத் தோழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த சில முன்னெடுப்பு முயற்சிகளை மேற்கொண்டார்.


திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி,பூண்டிப் புஷ்பம் கல்லூரியில் புகுமுக வகுப்பு, பின்னர் திருவையாற்று அரசர் கல்லூரியில் புலவர் பட்டம், தமிழாசிரியர் பயிற்சி, முதுகலையிலும் பட்டம் என தகுதிகளைப் பெற்று வளர்ந்தார். 

தங்கசாலையில் உள்ள தொண்ட மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை பெரம்பூரில் உள்ள சமாலியா மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்து, பின்பு தஞ்சையருகேயுள்ள உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் 28 ஆண்டுகளில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து சிறப்பித்துள்ளார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணித் தலைவராக இருந்து பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி தி.மு.க.தலைவர் களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றார்.

70 நாடுகளை உள்ளடக்கிய உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தலைவராகப் பொறுப்பேற்றார்.

பணி கிடைக்காமல் வாடிய தமிழாசிரியர்களுக்காக இயக்கம் நடத்தி அவர்களுக்கு உதவினார்.

1980 ஆம் ஆண்டில் ந. மு. வே நாட்டார் நூற்றாண்டு விழாவை முன்னின்று நடத்தினார்.

2007 ஆம் ஆண்டில் சில தமிழ் அமைப்புகளை இணைத்து பேரணி நடத்தி பன்னிரு திருமுறைகள் பாதுகாப்பு மாநாட்டை கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடத்தினார்.

தம் 28 ஆண்டு ஓய்வூதிய நிதியை க்கொண்டு தஞ்சை வெண்ணாற்றங்கரையில் 7.5 ஏக்கர்நிலம் வாங்கிக் கட்டடம் கட்டி அங்கு தனித்தமிழ் புலவர் படிப்பும் தமிழாசிரியர் பயிற்சி வகுப்பும் நடத்தினார்.

தமிழகத்துக் கல்லூரிகள் பலவும் பிலிட் என்னும் இளங்கலைத் தமிழ் இலக்கிய வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இணைத்துப் பயிற்றுவிக்கத் துணிந்தபொழுது தஞ்சாவூரில் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் பயில வாய்ப்பமைத்தார்.

இவர் எழுதிய  நூல்கள்

  1. கண்ணகி சிலம்பீந்த காரணம் (1986)
  2. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம் (1989)
  3. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும் (1989)
  4. சிந்தனைச்சுடர் (1993)
  5. தமிழ்க்குன்றம் (2007)
  6. சான்றோர் சிந்தனைகள் (2008)
  7. காவிரிக்கரை வேங்கடம் (2008)
  8. தமிழவேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டரைய்யாவும் (2008) கனவும் கற்பனையும் (2008)



பதிப்புப் பணி

தமிழ்ப்பொழில் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்

கரந்தைத் தமிழ்ச்சங்க மணிவிழா மலர்

தமிழவேள் நூற்றாண்டு விழா மலர்

கல்லூரி உயராய்வு மைய ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி (மருதம்)
ந. மு. வே நாட்டாரின் கட்டுரைகளை நூல்களாகப் பதிப்பித்தார்.

ந. மு. வே நாட்டார் எழுத்துக்கள் அனைத்தையும் தமிழ்மண் பதிப்பகம் சார்பில் 24 நூல்களில் வெளியிட பதிப்புக்குழுத் தலைவராக இருந்து உதவினார்.

இலக்கியப் பொழிவுகள்

திருச்சி வானொலியில் 1982 முதல் 2010 வரை பலமுறை பல்வேறு பொருண்மைகளில் பேசியுள்ளார்.

மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும் ஆய்வுரைகள் நிகழ்த்தினார்.

தமிழகத்தின் பல இடங்களில் நடந்த தமிழ்வழிக் கல்வி மாநாடுகளில் உரையாற்றினார்.

சிறப்புகள், விருதுகள்

தமிழக அரசின் உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவையில் இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் சார்பில் அமர்த்தம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது.



தலைவர் கலைஞர் அறக்கட்டளை நாட்டார் கல்லூரியில் நிறுவப்பட்டது. இவ்வறக்கட்டளையின் தலைவர்.

நாமக்கல் தமிழகப் பெருவிழாவில் 'தமிழ்ச் சான்றோர்' விருது. (2001) 

தமிழவேள்' உமாமகேசுவரனார் விருது (2002)

குறள் நெறிக் காவலர்' திருக்குறள் கழகப் பொன்விழா, புதுகை (2004). 

தமிழ்ப் பேரவைச்செம்மல்' மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (2009)

மாமன்னன் இராசராசன் விருது, இராசராசசோழன் சதய விழா (2009)

'உலகப்பெருந்தமிழர்' ,உலகத்தமிழர் பேரமைப்பு (2009)

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்