திங்கள், 19 ஆகஸ்ட், 2019

பெ.ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய பர்மா பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்





P.N. Kuppusami Kadarathalivar
பெ.ந. குப்புசாமி கடாரத்தலைவர்

மயன்மார், யங்கோன், பர்மா பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்

பர்மாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுச் சங்கிலி இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது. சங்கத் தமிழனும், பிற்காலச் சோழர்களும் தடம் பதித்த மண் பர்மா. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இந்நாட்டிற்கு உரிமையுடன் தமிழர்கள் சென்று வந்தனர். பர்மாவில் ஈட்டிய செல்வத்தில் அரண்மனைகள் போல தமிழகத்தில் பல வீடுகள் எழுந்தன.


ஜெனரல் நிவின் தலைமையில் அதிரடியாக ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் விளைவாக, ஒரே நாளில் தமிழர்களின் வாழ்க்கை வரைபடம் சரிந்து பாதாளத்தில் வீழ்ந்தது.  அதிகார வர்க்கத்திற்கும் தம் வியர்வைத் துளிகளால் பதிவு செய்தனர். அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்காமல்,  பொருளாதாரப் பாதையில் முழுமையாகப் பயணிக்க முடிவெடுத்ததுதான்.


பண்பாட்டுத் தளத்தில் தமிழர்கள், தமிழ்த் தெய்வங்களுக்கான கோயில்கள்  அமைத்துள்ளனர். அதில் முதன்மையன கோவில் பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்.


மலேசியா முருகன் கோயில் போல பர்மா தமிழர்களோட அடையாளம் என்று சொல்லலாம், இக்கோயிலை பல வருடங்கள் பழமையான தமிழர் வழிப்பாடு குலதெய்வ கோயில் இது. பர்மாவில் அழகான ,செழிப்பான ஒரு விவசாய கிராம் தான் 'பிலிகான்" , கள்ளர்க அதிகம் வாழும் கிராமம் இது , விவசாயம் தான் மூலத்தொழில். 

குழந்தைகள் படிக்க அரசு பள்ளிக்கூடம் இல்ல , ஆனா சுய முயற்சி தமிழ் பள்ளி உண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துளியும் பிறமொழி கலப்பின்றி அழகான தமிழ் பேசுகிறார்கள்.

கோயிலை பற்றி சில சிறப்புகள் 

Add caption
முணியான்டி கோயில் தமிழர்த்திரு " பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர் " அவர்களால் 1861 ஆண்டில் கட்டப்பட்டது.



(மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘பூர்வதேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது. கள்ளர்களில்  கடாரத் தலைவர் மற்றும் கடாரங்கொண்டான் என்ற பட்டம் உடையவர்கள் இன்றும் பெரும் சிறப்போடுவாழ்கின்றனர்)




அங்காளம்மன் கோயில் தமிழர்த்திரு " விரையா மழவராயர் " அவர்களால் கட்டப்பட்டது.

முணியான்டி, அங்காளம்மன் என இரு கோயில்களும் அருகாமையிலே உள்ளது. வருடத்தோரும் ஒரே நாளில் இரு கோயிலுக்கும் திருவிழா நடக்கும் , 1000  திற்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பூக்குழி இறங்குவார்கள்.  

தமிழர்கள் மட்டுமின்றி பர்மா ,சீனர் போன்ற பிற இனத்தாரும் , பர்மா அரசு அமைச்சர்கள் வரை பெரிதும் நம்பிக்கையோடு வணஙங்குவார்கள், பூக் குழி இறங்குவார்கள் , ஐயா வுக்கு பலிக்கொடுத்து வழிப்படுவாங்க , நம்பிக்கையோடு கேட்டால் வேண்டுதல்கள் கண்டிப்பா நிறைவேறும் என பேர் போகும் தெயவம் இது.  பர்மா அரசு அமைச்சர்களே எதாவது பிரச்சனைனா இங்க வந்து தேங்காய் உடைச்சுட்டு போவார்கள். 

திருவழா 10 நாட்கள் நடைப்பெறும், 365 நாளும் நீங்க எப்ப போனாலும் தலைவாழ இலைப்போட்டு உபசரிப்பாங்க, அது
இரவு 2 மணியானாலும் சரி , அந்த கிராமத்துக்கு போனாலே அவங்க கேட்கும் முதல் கேள்வி " சாப்பிடீங்களா? மொதல கை கழுவுங்க ,சாப்பிட்ட பிறகு பேசலாம் " இதுதான். ஒரே வரில சொல்லனும்னா பழங்கால தமிழரை நீங்க அங்கே காணலாம்.

தைமாசமானா பொங்கலை பெரிய விழாவா கொண்டாடுவார்கள், குறிப்பா மஞ்சவிரட்டு சிறப்பாக நடைபெறும். கோயில் நிர்வாகம் வெளியே சென்று நன்கொடை பெறுவதில்லை . அம்மனுக்கும் ஐயாவிற்கும் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து விளைந்த அரசியை வச்சிதான் வர பக்தர்களுக்கு பசியாத்துவாங்க. விருப்பமுள்ளவர்கள் கோயில் உண்டியில் போடலாம். 

வருசம் முழுவதும் 24×7 சாப்பாடு போடுற ஒரே கோயில் இது தான் .. நடுராத்திரி போனாலும் வந்துருக்கும் ஆள் எண்ணிக்கை மட்டும் சொல்லிட்டுங்க .. உடனே அடுப்புல அரசி பருப்பு வேகும் .. இதற்காகவே சமைக்க , பரிமார ஆட்களை ஊதியம் வழங்கி வச்சிருக்கு கோயில் நிர்வாகம்.

இங்கு கள்ளர்களின் கடாரம்கொண்டான் , கடாரத்தலைவர், சோழகர், சோழங்கதேவர், ஈழம்கொண்டான், கோபாலர், கண்டியர், மழவராயர், சேர்வை, வாண்டையார் மேலும் பல பட்டம் உடைய கள்ளர்கள் உள்ளனர். 


ஊதுவர்த்தி கம்பெனி உரிமையாளர் "திரு.மனோகரன் கோபாலர் " அவர்கள் .. உழைப்பால் உயர்ந்தவர். பர்மா போல ஒடுக்குமுறை அதிகமுள்ள நாட்டில் வணிகத்தில் வெற்றிபெற பலப்போராட்டங்களை சந்தித்துள்ளார்.

இதேபோல் சென்னையில் வாழ்கின்ற பர்மா தமிழர் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு மேல் கள்ளர் இனத்தவர்கள் சென்னை மாதாவரம் அருகில் அன்னை சிவகாமிந கரில் வசிக்கிறார்கள். அங்கு பர்மா பீலிக்கான் முனீசுவரர் கோவில் உள்ளது. அங்கும் மிகப்பெரிய அளவில் திருவிழா நடைபெறும் அதுமட்டுமின்றி சிறப்பு பெற்ற ஸ்ரீவல்லடிகாரன் கோவிலும் உள்ளது தமிழனத்தின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டை காப்பதற்க்கு கள்ளர் இனத்திற்க்கு நிகர் எவரும்மில்லை என்பது பெருமையாக இருக்கிறது.








இவர் தான் கோயில் தர்மகர்த்தா வின் கொள்ளு பேரன் திரு.குமரசாமி மழவராயர் அவர்களின் வாரிசு






































































பர்மா தமிழர்களின் அடையாளம் "பீலிகான் அருள்மிகு முனியாண்டி - அங்காளம்மன் கோயில் " நிர்வாகம் தலமை தாங்கி நடத்திய மஞ்சுவிரட்டு விழா. 

தமிழர் பண்பாட்டு விழாவான மாட்டு பொங்கலை முன்னிட்டு பீலிகான் கிராமத்தில் 155 ஆவது ஆண்டாக இந்த மஞ்சு விரட்டு நடைப்பெற்றது. பீலிகான் முனியாண்டி கோயில் தர்மகர்தா தெய்வத்திரு "குப்புசாமி கடாரத்தலைவர் " அவர்களின் வாரிசு "திரு பாலகிருஷ்ணன் கடாரத்தலைவர் "அவர்களுக்கு மரியாதை செய்யபட்டு அவரது தலைமையில் விழா தொடங்கப்பட்டது.

கோயில் காளைகள் கிராமத்தார்களின் காளைகள் மற்றுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள பர்மிய விவசாயிங்களின் காளைகளும் உட்சாகமாக பங்கேற்று 100 முதல் 150 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதாக நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பர்மா காவல்துரையின் ஒத்துழைப்பிலும் பீலிகான் கிராமத்தார்களின் நல் உள்ளத்தாலும் பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி மிகச்சிறப்பாக நடக்கிறது.


திரு பாலகிருஷ்ணன் கடாரத்தலைவர்





























பர்மா ஊடகங்கள் பலவும் இச்செய்திகளை வெளியிட்டது தமிழர் பண்பாட்டு அடையாளங்களை நாடறிய செய்ய உதவியது . அதில் ஏற்தழுவுதல் மஞ்சிவிரட்டு பற்றிய வரலாறு பெருமைகளை பர்மிய மொழியில் விளக்க எனக்கும் சிறு வாய்ப்பு கிடைத்தில் பெரும் மகிழ்ச்சி.

மனம் நிறைவான நாள் ... பீலிகான் கிராமம் ஒற்று மொத்த பர்மா தமிழர்களுக்கே பெருமை சேர்க்கிறது என்ற புகழ் ஓங்குக.








ஆய்வு : திருமதி. சாரதாதேவி நாச்சியார்

நன்றி  :
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
இரா. குறிஞ்சிவேந்தன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்