கிபி 1801 ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பாளைக்காரர் அந்தஸ்தில் இருந்த குடும்பத்தினர் ஜமீன்தார்களாக மாற்றப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் ஐமீன்தார் கனகய நாயக்கர் ஆரியபட்டியே சேர்ந்த பிறமலைக்கள்ளர் இருவருக்கு கிராமக்காவல் உரிமை வழங்கியுள்ள செய்தி ஒரு செப்பு பட்டயத்தில் இடம்பெற்றுள்ளது.
கிபி 1845 ல் வழங்கப்பட்ட இந்த செப்பேட்டில் ஜமீன்தார் கனகய நாயக்கர் உட்பட 8 நாயக்கர் சமுதாயத்துடன் ஆரியபட்டியே சேர்ந்த மதுரைக்கோட்டை கருத்தவீரத்தேவர் மகன் குமாரத்தேவன் மற்றும் இராசத்தேவன் மகன் சின்ன வீரத்தேவன் ஆகிய இரண்டு பிறமலைக்கள்ளர்களுக்கு கிராமகாவல் பொருப்பை கொடுப்பதாக செய்தி உள்ளது. இவர்களுக்கு காவல் கூலியாக வீடு ஒன்றுக்கு 3 குறுணி தானியம் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் இரவு நேரத்தில் காவலை மீறி மாடு களவு போனால் 7 பொன்னும், நிலத்தில் மேய்ந்தால் 5 பொன்னும் அபராதமாக கொடுக்க வேண்டும் என்ற தகவலும் இந்த செப்பு பட்டயத்தில் தெளிவாக உள்ளது.
இந்த செப்புப்பட்டயம் திண்டுக்கல் நிலக்கோட்டையில் ஒரு பள்ளர் சமூகத்தவர் வீட்டில் வைத்திருந்தனர். இதனை ஆய்வாளர் கு.சேதுராமன் வெளிக்கொண்டு வந்தார்..