முக்குலத்தோர் சமுதாய மாணவர்களை அரசுப்பணியில் அணி அணியாக அனுப்பி வைக்கும், முக்குலத்தோர் கல்வி மையத்தின் முத்திரை பதித்த சாதனைக்கு சொந்தக்காரர், வருவாய் ஆய்வாளர் சிங்கார வேலன் தேவர்.
அரிட்டாபட்டி மலையாண்டி தேவருக்கும், தனலக்ஷிமி அம்மாளுக்கும் மகனாக பிறந்த சிங்காரவேலன் இன்று தாம் பிறந்த இனத்திற்கு நன்றி உணர்வோடு முக்குலத்தோர் மாணவர்களை அரசு பணிகளில் சிகரம் தொட வைக்கிறார்.
2004 ம் ஆண்டு முக்குலத்தோர் கல்வி மையத்தை MET என்ற பெயரில் இவர் தொடங்கி ரிசர்வ் லைனில் உள்ள கிரெளன் மெட்ரிக் பள்ளியில் சிறிய அளவில் நடத்தி வந்தார் .
ஆரம்ப கட்டத்தில் காவல் துறையினருக்கான பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டது .பின்னர் ஒத்தக்கடை அக்ரி (ரகுபதி )என்பவர் மூலமாக அங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன .
அதனை தொடர்ந்து ''ஜல்லிக்கட்டு நாயகன் பி .ஆர் .ராஜசேகர் தமது இல்ல வளாகத்தில் சமூக மாணவர்கள் படிக்க இடத்தை ஒதுக்கி தர அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட சிங்காரவேலன் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு டி.என் .பி .எஸ் .சி தேர்வு எழுத பயிற்சி அளித்தார் .
தொடர்ந்து இங்கு படித்தவர்கள் 500 பேர் காவலர்களாக ,10 பேர் காவல் துறை உதவி ஆய்வாளர்களாகவும்,30 முதல் 40 பேர் குரூப் 2 தேர்விலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் . குரூப் 4 தேர்வில் 27 பேர் ,காவலர் பணியில் 148 ,வி .ஏ.ஓ தேர்வில் 15 பேர் என தொடர்ந்து இங்கு பயிலும் நம் சமுதாய மாணவ, மாணவிகளும் சாதனை படைத்து வருகின்றனர் .
தம் வாழ்வில் மாற்று சமுதாயத்தினரால் ஏற்பட்ட வழக்கின் காரணமாக பாதிப்படைந்த நிலைதான், அரசு துறையில் நம் சமூகத்தின் பங்களிப்பை அதிகப்படுத்தவேண்டும் என்பதை தமது லடசியாமாக எடுத்து கொண்டார். அரசுப்பணியில் இருந்தாலும் தாம் பிறந்த இனத்திற்கு முகமூடி அணியாமல் முக்குலத்தோர் சமுதாயம் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் இவரை
நமது முக்குலத்தோர் சமுதாயம் வாழ்த்த 9843058867 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாழ்த்துங்கள்
மின்னஞ்சல் --malainagu21@ gmail .com
குறிப்பு - இங்கு தரப்படும் எந்த பயிற்சிக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது இவரின் தனிச்சிறப்பு
தகவல் : கள்ளர் முரசு