செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

1500 ஆண்டுகளுக்கு முன்பு வரைப்பட்ட ஜல்லிக்கட்டு குகை ஓவியம்


அணைப்பட்டி ஏறுதழுவுதல்


கல்லூத்து மேட்டுப்பட்டி ஓவியம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து நிலக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் கல்லூத்து மேட்டுப்பட்டி மற்றும் அணைப்பட்டிக்கும் இடையே அமைந்துள்ள மலைக் கணவாயில் குறுக்குப் பாறை எனும் குகைத்தளம் உள்ளது. இக்குகை கிழக்கு மேற்காக சுமார் 100 அடி நீளமும் 2 – 5 அடி உயரத்திலும் உள்ளது. மேலும் தரைப்பகுதியில் இருந்து 10 அடி உயரத்தில் உள்ளது. இக்குகை அருகே செல்லும் மலைப்பாதை தொன்மையானது. இப்பாதை திண்டுக்கல் பகுதியில் இருந்து இராசபாளையம் வழியாக குற்றாலம் செல்லக்கூடியது. ஆகையால் காலகாலமாய் மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி வணிகர்கள் இப்பாதையில் வருவதுண்டு.


உசிலம்பட்டி கல்லூத்து அருகேயுள்ள மேட்டுபட்டி முழுக்க கள்ளர்கள் வாழும் ஊர். இந்த ஊரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் அனைப்பட்டி, விளாம்பட்டி, சித்தர்கள்நத்தம், குண்டலப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, அம்மையநாயக்கனூர் மல்லியம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் காவல் உரிமை பெற்று இருக்கிறார்கள் மேட்டுபட்டி கள்ளர்கள்.

இங்குள்ள ஓவியங்களில் ஒன்று திமில் உள்ள மாடு ஒன்றை மனிதன் ஒருவன் அடக்க முயலும் காட்சி போல உள்ளது. அது இன்று நடைமுறையில் இருக்கும் ஏறு தழுவல், ஜல்லிக்கட்டு போன்ற வடிவத்தை ஒத்து காணப்படுகிறது. பாரம்பரியமாக இன்றும் இந்தப்பகுதியில் கள்ளர்களே ஏறு தழுவல், ஜல்லிக்கட்டு நடத்திவருகிறார்கள்.

இந்த இடத்தின் பெயர் சித்தர் மாலை, இந்த மலைக்கும் தொடர்புள்ள நாகமலை , சமணர்மலை (கீழகுயில்குடி). தற்போது சித்தர் மலை தொல்லியல்துறை கட்டுபாட்டில்  உள்ளது, அங்கு இருக்கும் கோவில், அந்த ஊரில் வசிக்கும் கள்ளர்கள் பொறுப்பில் உள்ளது. அந்த கோவில்கள்

மதுரை மாவட்டம்

கல்லூத்து கோயில் 
பெருமாள்பட்டி கோயில் 
நல்ல ஒச்சான்பட்டி கோயில் 
பாறைபட்டி கோயில் 
மகலிங்கபுதூர் கோயில் 
கலியாணிபட்டி கோயில்  
போலக்கபட்டி கோயில் 


திண்டுக்கல் மாவட்டம்

மேட்டுபட்டி கோயில் 
அணைபட்டி கோயில் 
நடக்கோட்டை கோயில் 
வாடிபட்டி கோயில் 
சித்தாதிபுரம் கோயில் 

சித்தர்கள்நத்தம் கோயில் 


இந்தக் குகையில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. அவற்றில், மனித உருவங்கள் வெவ்வேறு நிலையிலும், கூட்டமாகவும், தனியாகவும், விலங்குகளுடனும் வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களில் சில பெண் உருவங்களாக காட்டப்பட்டுள்ளது. அது போல அடையாளம் காண இயலாத ஓவியங்களும், சில குறியீடுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன.

அதுபோல குதிரை மீது அமர்ந்திருக்கும் ஒருவனை தரையில் இருந்து நீண்ட வேல் கம்பு போன்ற ஆயுதத்தால் தாக்க முற்படுவது போல உள்ளது. அதனருகே மற்றொரு குதிரை வீரன் தாக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இது வழிப்பறி போன்ற நிகழ்வினைக் காட்டுவதாக உள்ளது. மற்றொரு ஓவியத்தில் வீரன் ஒருவன் புலி போன்ற விலங்கின் மீது பயணிப்பது போல உள்ளது.

இங்குள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வெறு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள தொன்மையான ஓவியங்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்ததாக தெரிகிறது. அதுபோல பிற்காலங்களிலும் தொடர்ந்து வரையப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாகவே உள்ளது. சில இடங்களில் உருவங்களுக்குள் வண்ணப்பூச்சு காணப்படுகிறது. இங்கு வரையப்பட்ட ஓவியங்களில் விலங்கு உருவங்கள் எளிமையாகவும் நேர்த்தியான வடிவங்களையும் கொண்டுள்ளது.

அமைவிடம் - குறுக்குப்பாறை
ஊர் - க. மேட்டுப்பட்டி - அணைப்பட்டி
வட்டம் - நிலக்கோட்டை
மாவட்டம் - திண்டுக்கல்
ஓவியம் இருப்பிடம் - அணைப்பட்டி
ஓவியத்தின் பெயர் - பெருங்கற்கால மனிதர் மற்றும் பிற உயிரினங்கள்
ஓவியத்தின் வகை - பாறை ஓவியங்கள்
வண்ணம் - வெள்ளை
ஆட்சி ஆண்டு - பெருங்கற்காலம் மற்றும் பிந்தைய காலங்கள்


 அணைப்பட்டி_ஆடல்பெண்

 அணைப்பட்டி_ஆயுதவீரன்

 அணைப்பட்டி_ஆயுதத்துடன் ஆயுதவீரன்

 அணைப்பட்டி_இரண்டு-மனித-உருவங்கள்


 அணைப்பட்டி_இரண்டு-மனித-உருவங்கள்

 அணைப்பட்டி_குகைக்கு-வெளியே-உள்ள-தோற்றம்

 அணைப்பட்டி_குகைத்தோற்றம்

 அணைப்பட்டி குகையின் உட்புறத் தோற்றம்

 அணைப்பட்டி_குகையின்-வெளித்தோற்றம்

 அணைப்பட்டி குகையின் வெளித்தோற்றம்


அணைப்பட்டி குதிரைப் பயணம்


அணைப்பட்டி_குதிரை-மீதேறி-வருபவன்



அணைப்பட்டி சண்டைக்காட்சி



அணைப்பட்டி_நடனக்காட்சி



அணைப்பட்டி_பூ-அலங்கார-ஓவியம்

 அணைப்பட்டி மனிதஉருவம்


 அணைப்பட்டி மனித உருவமும் குறியீடும்

 அணைப்பட்டி மனிதன் மற்றும் விலங்கு

 அணைப்பட்டி விலங்கின் மீது பயணம்

 அணைப்பட்டி_விலங்கின்-மேல்-மனிதன்

அணைப்பட்டி விலங்குகளும் குறியீடுகளும்



ஆய்வு : உசிலை ராஜா

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்