புதுக்கோட்டை தொண்டைமான், சூரைக்குடி தொண்டைமானை தங்களுடைய முன்னோர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். வரலாறு மற்றும் மானுடவியல் ஆய்வாளர் நிக்கோலஸ் டிரிக்ஸ் இருவரும் ஒரே மரபினரே என்று குறிப்பிட்டுள்ளார்.
கிபி1311ல் டெல்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியின் முதன்மை தளபதி மாலிக் கபூர் ஒட்டு மொத்த இந்தியாவையும் கில்ஜியின் காலடி கொண்டு வந்தான். அதில் பாண்டிய நாடும் அடக்கம், கிபி. 1310 வாக்களில் பாரதம் போற்றிய பாண்டிய மன்னர்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் தங்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தால் மாலிக் கபூரால் மதுரையை இழந்து டெல்லி சுல்தான் ஆட்சிக்கு ஆட்சாரம் போட்டுவிட்டு தென்காசிக்கும், திருவாடனைக்கும் தப்பி சென்று சிறு பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.
கிபி1320ல் டெல்லி சுல்தானாக துக்ளக் வம்சத்தினர் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்களுடைய பிரதி நிதிகள் மதுரையில் துக்ளக் ஆட்சி நடத்தினர்.
ஆனால் இதனை ஏற்காத கள்ளர்களின் ஒரு பிரிவினர், அவர்கள் வாழ்ந்த அப்போதைய மதுரை எல்லையில் அதாவது இன்றைய புதுக்கோட்டை எல்லையான காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் பாண்டியர்களுக்கு எல்லை அரையர்களாக இருந்த சூரைக்குடி தொண்டைமான்களும், அவர்தம் கள்ளர் குலத்தவர்களும் மதுரை சுல்தானுக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர்.
சூரைக்குடி கள்ளர் படைகள் மதுரை சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட, பொன் அமராவதி நாடான விராச்சிலை, கோட்டையூரில் சுல்தான் படைகளையும், ஊர்களையும் தாக்கி சூரையாடி பெரும் சேதத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதிகான் தலைமையில் மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான்,ஆசாம் கான், முவாசம் கான் மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை தீக்கிரையாக்கி முற்றிலுமாக அழித்து தரைமட்டமாக்கிறார்கள்.
கிபி1359ல் தொடர்ந்து சுல்தானுக்கு கட்டுப்படாமல் இருந்த சூரைக்குடி தொண்டைமானையும் அவர்தம் கள்ளர் பற்றையும் அழித்து வாள் முனையில் இன்றைய காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன் அமராவதி நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச் சொல்லுகிறார்.
அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக்கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை சுழட்டிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும் அழித்துவிட்டோம்.
இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழட்டினால் சூரைக்குடி கள்ளர் பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான், இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.
இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக வெட்டியுள்ளனர். அந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளரான உயர் திரு.சாமிநாத அய்யர் படி எடுத்து வைத்துள்ளார்.
இந்த பகுதிகளின் பாடிக்காவல் உரிமையும், நீதி பரிபாலனம் உரிமை அனைத்தும் மதுரை சுல்தான் கட்டுப்பாட்டிற்கு சென்றது, அந்த சமயத்தில் கிபி1369ல் காத்தூர் கோட்டை காரணவரும், அந்த ஊர் கிராமத்தாரும் நெடுஞ்சாலைகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவம் சுல்தானின் புதுக்கோட்டை பிரதிநிதிக்கு சென்றது, வழிப்பறியில் ஈடுபடாமல் இருக்க நாட்டு கூட்டம் கூட்டி சத்தியம் செய்ய வழியுறுத்தப்படுகிறது.
Manual of Pudhukottai state Vol.2
இதனால் கிபி1369 கார்த்திகை மாதத்தில் காரணவர்கள் கண்டதேவி நாட்டு கூட்டத்தில் வன்னியர் (கள்ளர் தலைவர் - வன்னியர் கள்ளர் பட்டம்), கள்ளர்களும் ( கள்ளர் மக்களும்), புறத்தூர் பட்டர், வித்துவான்கள், பாடகர் மற்றும் காரணவர்களின் எதிரியான அறந்தாங்கியார் ( அறந்தாங்கி தொண்டைமான்) மற்றும் அங்கு உள்ள மனிதர்கள் முன்னிலையில் வழிப்பறியில் ஈடுபட மாட்டோம் என சத்தியம் ஏற்கிறோம் என்று உறுதி மொழி ஏற்கிறார்கள்.
அப்படி அவர்கள் செய்த சத்தியத்தை மீறினால் கீழ்க்கண்ட தண்டனைகள ஏற்கிறோம் என உறுதியளிக்கின்றனர்
1.எங்கள் மீசை தாடிகளை மழிக்கிறோம்
2.எங்கள் பெண்களை எதிரிகளுக்கு அளிக்கிறோம்
3.எங்கள் எதிரிகளுக்கு அடிமையாகக்க கடவுகிறோம்
4.பிராமனர்களை கங்கையில் கொண்ற பாவத்தை ஏற்கிறோம்
5.எங்களை பெண் உருவமாக வடித்து கீழ்சாதிகள் ஆன பாணர், புலவர், பள்ளர், பறையர்களின் சிறுவர்களின் காலில் கட்டி எங்கள் தேசத்திலும், பிற தேசத்திலும் சுற்றட்டும்.
என தண்டனைகளை அவர்களே நிர்மாணிக்கிறார்கள்.
இந்த கல்வெட்டை முதன் முதலாக முன்னாள் உலக வராலாற்று ஆய்வகத்தின் உறுப்பினரும், இந்திய வரலாற்று ஆய்வாளரும் ஆன உயர்திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிவு செய்கிறார்.
அவருடைய பதிவில் சிறு, சிறு தவறுகள் இருந்ததை 08:04:86 ல் உஞ்சனை வட்டார கல்வெட்டு பகுதியில் திருத்தி படியெடுத்து புத்தகமாகவும் வந்தது. அந்த புது படியெடுத்த கல்வெட்டை அன்று தினதந்தி, தினமலர், தினகரன் நாளிதழ்களில் வெளி வந்தது.
மேலும் இதனை வரலாற்று ஆர்வலர் உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் நேரடியாக கண்டதேவிக்கு சென்று படி எடுத்து, புகைப்படத்தையும் அளித்துள்ளார்.
உன்மை இப்படி இருக்க சில கோமாளிகள் ஏதோ கள்ளர்கள் பொண்டாட்டியை ஒப்படைப்பதாக சத்தியம் செய்தார்கள் என்று வலைதளங்களில் கிறுக்கியுள்ளார்கள். மேலும் பள்ளி சாதியினர், வன்னியர் என்று இங்கு குறிக்கப்பட்ட சூரைக்குடி தொண்டைமானை பள்ளி சாதி என்று கூறிவருகின்றனர்.
தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்களும் என்று குறித்துள்ளது. இங்ஙனம் வன்னியர் என்பது ஒருமை அதை கூட புரிந்து கொள்ளாமல் அது ஜாதி பெயர் என ஒப்பாரி வைக்கின்றனர். இவர்கள் வன்னியர் என்பது சாதியாக மாறியது இந்த நூற்றாண்டில் என்பது நாம் அறிந்ததே. வன்னியர் என்ற பட்டம் இங்கு கள்ளர், மறவர், வலையர், பள்ளி என்ற பலதர சாதிகளுக்கு உள்ளது.
புதுக்கோட்டை தொண்டைமான், அந்த பகுதி விசங்கு நட்டு கள்ளர்களை நாய் சங்கிலியால் கொண்டுவந்தார் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால் தொண்டைமான் என்பது வேறு சாதி, கள்ளர்கள் வேறு சாதி என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ அதுபோல் உள்ளது பள்ளி சாதியினரின் கதை.
கல்வெட்டில் கள்ளர்கள் என்று குறிக்கப்பட்ட போது வன்னியர்கள் என்று ஏன் பன்மையில் குறிக்கவில்லை.....?
அதனால் தான் அய்யா கிருஷ்ணசாமி அய்யங்கார் சூரைக்குடி தொண்டைமானை கள்ளர் குடும்பம் என்றும் சூரைக்குடி கள்ளர்களின் தலைமையிடம் என்றும் பதிவு செய்தார்.
மேலும் பல கோமாளிகள் இதை கிபி16 ஆம் நூற்றாண்டு என்று பிதற்றுகிறார்கள். அவர்கள் ஹிஜிரா வருடத்தை பற்றிய புரிதல் இல்லாமல் பொய்யுரைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு நன்கு தெரியும் ஹிஜிரா வருடம் என்றால் என்னவென்று.
இப்போது ஹிஜிரா வருடம் 1440ல் உள்ளது. இந்த வருடக் கணக்கை சூரிச் பல்கலைகழக கணக்கீடில் வைத்து தான் கிபி 1369 என்று கணக்கீடு செய்துள்ளேன்.
இன்றும் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் கள்ளர்கள் அம்பலமாகவும்,நாட்டு சேர்வையாகவும் அனைத்து குடிமக்களுக்கும் நீதிபரிபாலனம் செய்தும் 150 க்கும் மேற்பட்ட கோவில்களில் சாமி கழுத்தில் உள்ள துண்டையே முதல் மரியாதையையாகவும், காளாஞ்சியமும் பெறுகிறார்கள்.
நன்றி
South Indian And Her Mohammadan Invaders by Honourable Mr.Krishnaswami Aiyangar
உஞ்சனை வட்டார கல்வெட்டுகள்
South Indian and her muhammadan invaders
Institute of oriental studies:Zurich university
திரு.சியாம் சுந்தர் சம்பட்டியார்
பதிவு நாள் : 09.12.2018
ஆய்வு : சோழ பாண்டியன் - ஏழுகோட்டை நாடு