திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்நாடான தந்தி நாட்டிலிருந்து முதன் முதலில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வான திரு.M.M.சந்திரகாசன் காங்கேயர். நத்தமாங்குடி என்ற சிறு கிராமம், கூழையாறும் நந்தையாறும் ஒன்று சேர்ந்து கொள்ளிடம் நதியில் சங்கமாகுமிடம். இங்கு திரு முத்துக்குமார் காங்கேயருக்கும் வள்ளிநாயகம் திருமட்டிக்கும் நன்மகனாய் 25/03/1922 ல் பிறந்தார் சந்திரகாசன் காங்கேயர் பிறந்தார்.
ஐந்து வயதில் தனது சிற்றூர்த் தொடக்கப் ப்ள்ளியில் கல்வி பயின்று, ஐந்து முதல் எட்டாம் வகுப்புவரை ஓரத்தூர் டி.பி. செல்லசாமி அய்யர் பள்ளீயிலும், 10ம் வகுப்பினை லால்குடி கழக உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பினை (பி.ஏ) திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரியிலும் பயின்றார்.
1943ம் ஆண்டு தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழக அரசுப்பணியாளர் தேர்வும் எழுதி அதிலும் தேர்வடைந்து 7/4/19944ல் இளநிலை உதவியாளர் எனும் அரசுப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக உச்ச நிலை அடைந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலராகவும் பணியாற்றி 31/01/1980ல் ஓய்வு பெற்றார்.
தனது சமுதாயச் சிந்தனைகளை வளர்ச்சியடைய வைத்தவர்கள் முன்னாள் அமைச்சர் திரு புரவலர் அன்பில் தருமலிங்கம், திரு. ந.ப. மாணிக்கம் ஏற்றாண்டார், திரு கோதண்டபாணி மூவரையர் என்று தனது மலரும் நினைவுகள் நூலில் குறிப்பிடுகிறார்.
மனைவி குளித்தலை திரு இரத்தினச் சோழகர் மகள் ஞானாம்பாள், இவர்களுக்கு இளங்கோவன் , டாக்டர் கருணாநிதி, மதிக்குமார் என்ற மூன்று மகன்களும் வாசுகி என்ற மகளும் உண்டு.
தனது அரசுப்பணி ஓய்வின்பின் சமூகத்தொண்டில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல் முண்ணேற்றத்திற்கு அரும்பாடு பட்டுள்ளார். இராசராசன் கல்வி பண்பாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டினை நாம் அனைவரும் உனர்ந்து அவர் வழியில் செயல் ஆற்றிட வேண்டும்.
இராசராசன் கல்விப் பன்பாட்டுக் கழகம் 16/03/1986ம் ஆண்டு நிருவப் பட்டு, 16/07/1986ல் பதிவு செய்யப்படது. 66 அங்கத்தினர்களை மட்டுமே கொண்டிருந்த இக் கழகத்தின் தலைவராக ஒருமனதாக 12/07/1987ம் ஆண்டு திரு சந்திரகாசன் காங்கேயர் தேர்வு செய்யப்பட்டார். இத் தேர்வுக்குபின் காங்கேயரின் முயற்ச்சியால் அங்கத்தினர்களின் என்னிக்கை வளர்ந்தது.
1986 - 1987 66 ஆக இருந்த அங்கத்தினர்களின் என்னிக்கை
1987 - 1988 266
1988 - 1989 682
1990 - 1991 1236
1991 - 1992 1700
1992 - 1993 2130
1993 - 1994 2401
1994 - 1995 2741 ஆக உயர்ந்தது.
உறுப்பினர்களின் சேர்க்கை விரிவடைந்து கழகத்தின் நிதி நிலையும் கணிசமாக உயர்ந்தது.
இராசராசன் கல்விப் பண்பாட்டு கழகத்தில் தனிக்குழுக்கள் அமைத்து சாதனை திரு சந்திரகாசன் காங்கேயர் எட்டு ஆண்டுகள் கழக மேம்பாட்டிற்காகவும், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் நிறைவெற்றப்பட்ட தீர்மாணங்களை நடை முறைப்படுத்தி வெற்றியும் கண்டார்.
தான் தலைமையேற்ற காலகட்டத்தில்
உறுப்பினர் சேர்க்கை குழு,
திருமணத் தகவல் தொடர்புக் குழு,
பண்பாட்டுக் குழு,
இராசராசன் செய்தி மலர்க்குழு,
நிதி மற்றும் கட்டக்குழு,
மண்டலக் குழு,
மகளீர் அணி போன்ற உள் அமைப்புகளை தோற்றுவித்து கழகத்தை நெறிபடுத்தினார்.
இதனுடன்
உறுபினர் பட்டியலும்,
ஆறாவது ஆண்டு விழா மலர்,
இலவச மருத்துவ முகாம்,
நூலகத் திறப்பு விழ
போன்ற நிகழ்வுகளையும் செயல்படுத்தி ந்ம் குல மக்களுக்கு அரும்பெரும் சேவைகள் பல செய்துள்ளார்.
ஒரு வலுவான சமுதாய அமைப்பின் பின்னனி இருந்தால் தான் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள குறைபாடுகளை அரசின் தனி கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வு அல்லது பரிகாரம் பெறமுடியும். நமது சமுதாயப் பெரியோர்களால் நிறுவப்பட்டு வந்த சங்கங்கள் எல்லாம் நகர, வட்டார, இடங்களில் தான் இயங்கி வந்தன. இவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அமைப்பு சமுதாய நலன் காக்க வேண்டும் என்று 15/12/1990ல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் நடந்த செயற்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
அதன் விளைவாக 14/04/1991 தமிழ் புத்தாண்டு நாள் அன்று தமிழ்நாடு கள்ளர் பேரவை தொடங்கப்பெற்றது. பின் இப் பேரவையை எல்லா மாவட்டங்க்களிலும் நிறுவ திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் தமிழ்நாடு கள்ளர் பேரவை 14/04/1991 முதல் 27/04/1997 வரை செயல்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, திருச்சி, புதுகை, போன்ற மாவட்டங்களில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் எம் இன மக்களை ஒன்று திறட்டி மாபெரும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளது.
பேரணிகளில் புரவலர் அன்பில் தர்மலிங்கம், திருவாளர்கள் அய்யாறு வாண்ைட்யார், தங்கமுத்து நாட்டார், துரை கோவிந்தவாசன், தியாகராச காடுவெட்டியார், காளிதாஸ் முடிபூண்டார், சோமசுந்தர தேவர், விஜயரெகுநாதப் பல்லவராயர் முதலாய சமுதாய பெரியோர்கள் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.
இவ்வாறு சிறப்புடன் செயல் பட்டுவந்த திரு சந்திரகாசன் காங்கேயர் 27/04/1997 நாளன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொருப்பில் இருந்து நிறுவனத் தலைவராகவும் திரு இராமச்சந்திரப் பல்லவராயர் மாநிலத் தலைவராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின் திரு சந்திரகாசன் காங்கேயர் நிறுவனத் தலைவராக செயல்பட்ட போதிலும் மாநில தலைவர்களின் கருத்து வேற்றுமையால் தமிழ்நாடு கள்ளர் பேரவையின் செயல்பாடுகள் தொய்வடைந்து விட்டது.
அளவற்ற அன்பு, மட்டற்ற மரியாதை ஆகிய பண்புகளை வளர்த்து விட்ட எம் குல மாமனிதனுக்கு ந்ன்றி சொல்லுவோம்
இத்திருவுருவ சிலையை நத்தமாங்குடியில் திறந்து வைத்தவர் கல்வி காவலர், பூண்டி சீமான் ஐயா.துளசி ஐயா வாண்டையார்