செவ்வாய், 31 ஜனவரி, 2023

கல்லாக்கோட்டை பாளையம் | கல்லாக்கோட்டை ஜமீன்

கல்லாக்கோட்டை  அரையர்கள்  சிங்கப்புலியார் 



ஸ்ரீ  விஜய ரகுநாத திருமலை சிங்கப்புலியார்



கல்லாக்கோட்டை நாடு சிங்கப்புலியார் என்ற கள்ளர் குடியினரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர்கள் சிங்கப்புலியார் என்றும், சிங்கம்புடையார் என்றும் குறிக்கப்படுகின்றனர்.








இவர்களது சின்னம் (Emblem) சிங்கம் மற்றும் புலியாக உள்ளது. அது இவர்களின் பட்டத்தை பிரதிபலிக்கிறது. இந்த மன்னர்களின் கொடியில் முருகனின் வேல் மற்றும் மயில் கொண்டுள்ளது. 

சிங்கம்புடையார் அரையர்கள் பல்லவராயர், தொண்டைமான் மன்னர்களுக்கு படைத்துணையாக வந்தவர்களாகவே இருக்கவேண்டும். புதுக்கோட்டையில் குடியேறிய பல்லவராயர், தொண்டைமான் மன்னர்கள், அங்கே முதலில் எட்டு குப்பங்கள் அமைத்தார்கள். அதில் கள்ளக்கோட்டை குப்பம் அரையர்கள் சிங்கம்புடையார் ஆவார்கள்.

சிங்கம்புடையார் அல்லது சிங்கப்புலியார் என்பதில் சிங்கம் என்பது பல்லவ (தொண்டைமான்) கொடியும் + புலி என்பது பல்லவராயர் கொடியும் + புடையார் என்பது துணைவந்தவர்கள் என்பதையும் குறிக்கலாம் என்பது கருத்து. இவர்கள் பற்றிய முழு வீர வரலாறு கிடைக்காமல் கால ஓட்டத்தில் மறைந்துவிட்டன.

1483 திருமயம் நெய்வாசல் சிவன் கோயில் கல்வெட்டு படிக்காப்பளர்

19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு




கல்லாகோட்டை மன்னர்களுக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒத்தவீடு அருகில் தின்னகுலம் கிராமத்தில் ஒரு மாபெரும் அரண்மனை இருந்தது என்றும், அங்கிருந்து தான் ஆட்சி செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது.



இந்த தூணில் உள்ள சிற்பங்கள் போரில் வீரர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன




கல்லாக்கோட்டை பகுதில் உள்ள பள்ளிபடை ஐநூறு ஆண்டுகள் பழமையானது. போரில் இறந்த கல்லாக்கோட்டை மன்னரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளிப்படை மொத்தம் இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, 70 பெரிய பெரிய தூண்கள் கொண்டது ஆகும். இந்த தூணில் உள்ள சிற்பங்கள் போரில் வீரர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

புதுக்கோட்டை, கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை முதலியவற்றின் மன்னர்கள் உதிரத்தாலும், கல்யாணங்களினாலும் சம்பந்தமுடையராவர். தனித்தனியாகத் தங்களுக்குள் இராச்சியமும் ஏற்படுத்திக்கொண்டனர்.


கல்லாகோட்டை நாட்டின் திருவிழா அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவில் திருவிழா ஆகும். ஒத்தவீடு கிராமம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முதல் மரியாதை பெறுகின்றனர். 


கல்லாக்கோட்டை அம்பலக்காரராக கள்ளர் குடியின் மாளுசுத்தியார் பட்டம் உடையவர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மன்னர் இராஜா சிறீ இராயரகுநாத தொண்டைமான் அவர்கள் ஜமீன்தார் சிங்கப்புலியார் மகள் ஸ்ரீமதி ராணி ஆயி சாகிப் அவர்களை 1721 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.

கல்லாக்கோட்டை மன்னர் சிங்கப்புலியார் மகள் ஸ்ரீமதி ராஜ் குமார் ராணி மதுராம்பாள் ஆயி அவர்கள். இவர் புதுக்கோட்டை மன்னர் ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் (1825-1839) மகன் ஸ்ரீ ராஜ்குமார் திருமலை தொண்டைமான் மன்னரை திருமணம் செய்துகொண்டார்.

கல்லாக்கோட்டை மன்னர் ஸ்ரீ ரெங்கசுவாமி சிங்கம்புலியார் துரை ராஜா அவர்கள், புதுக்கோட்டை மன்னர் ஸ்ரீ ப்ரஹதாம்பா தாச ராஜா ராமச்சந்திர தொண்டைமான் (1839 – 1886) மகள் ஸ்ரீமதி ராஜ்குமாரி கமலாம்பாள் ராஜாமணியை திருமணம் செய்துகொண்டார்.


மன்னர் ஸ்ரீ ரெங்கசுவாமி சிங்கம்புலியார் மகன்கள் மற்றும் மகள்கள் :

1) மகள் ஸ்ரீமதி பிரஹதாம்பாள் ராஜாயி அவர்கள், இவர் புதுக்கோட்டை மன்னர் ஸ்ரீ ராஜ்குமார் திருமலை தொண்டைமான் மகன் ஸ்ரீ திருமலை பாலசுப்பிரமணிய தொண்டைமான் (சாகிர்தார்-1863) மன்னரை திருமணம் செய்துகொண்டார். 

2) மூத்த மகன் ஸ்ரீ விஜய ரகுநாத திருமலை சிங்கப்புலியார் (1873). இவரது மனைவி ஸ்ரீ திருமலை பாலசுப்பிரமணிய தொண்டைமான் மன்னரின் மகள் ஸ்ரீமதி பிரஹதாம்பாள் அம்மணி ராஜாயி அவர்கள்.

3) இளைய மகன் ஸ்ரீ முத்து விஜய சிங்கப்புலியார் 

4) மகள் ஸ்ரீமதி மதுராம்பாள் ராஜாயி, கந்தர்வகோட்டை மன்னரின் மனைவி ஆவார். இவர்க்கு இரண்டு மகன், இரண்டு மகள். இவரது மகன் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பண்டாரத்தார், கல்லாக்கோட்டை மன்னர்க்கு தத்து கொடுக்கப்பெற்று ஸ்ரீ பாலசுப்பிரமணிய ரகுநாத ரங்கஸ்வாமி சிங்கப்புலியார் என்று பெயர் சூட்டப்பெறுகிறார்.



மன்னர் ராஜ்குமார் VRBR துரை ராஜா சிங்கப்புலியார், ராணி கமலாம்பாள் அம்மணி ராஜாயீ. ராணி ஆவார்கள் ஐந்து இந்திய மொழிகளில் புலமை பெற்றவராக இருந்தார்.

இவர்கள் மகள் மட்டும் மகன்கள் 

1) ராஜகுமாரி மீனாம்பாள் V R தொண்டைமான், கணவர் ராஜ்குமார் விஜயரகுநாத தொண்டைமான் Ex.MLA மற்றும் மகன் ராஜ்குமார் கார்த்திக் VR தொண்டைமான் Ex.MLA. 

2) ராஜ்குமார் VR திருமலை துரை ராஜா (தற்போதைய கல்லாக்கோட்டை பாளையக்காரர்) திருமலை துரைராஜா திருமணமானவர் குழந்தை இல்லை.

3) ராஜ்குமார் VR ராமச்சந்திர துரை ராஜா (தற்போதைய கந்தர்வகோட்டை பாளையக்காரர்)

4) ராஜ்குமார் V R ராஜகோபால துரை ராஜா இவர் மகன் ஆதித்ய துரைராஜா.



Rani Kamalambhal Rajaee - Rani of pudukkottai with Rani of Travancore


From left to right Zamindar of Gandravakkottai - Raja Ramachandra Durai Pandrathar, Zamindar of Pithapuram, Zamindar of Kallakkottai - Raja VRBR Dorai Rajah Singapuliyar, Raja of Sivagangai – Shri.Vijayareghunatha Gowri Vallabha Doraisinga Shanmuga Raja.


From left to Right Rajkumar Vijayaragunatha Thondaiman and Rajkumar Radhakrishna Thondaiman of Pdukkottai with his brother-in-law Rajkumar VRBR Dorai Rajah Singappuliar Zamindar of Kallakottai


Rajkumar V R B R Dorai Rajah Singappuliar zamindar of kallakottai with Radha Devi ilayarani of Travangore Princiely state at Kaudiyar palace,Travangore.


The last pictuer of Rajkumar V R B R Dorai Rajah Singappuliar zamindar of kallakottai with his family, he succumbed to prostrate cancer on 24th Feb 1972 at the age of 54 years.


Rajkumar V R B R Dorai Rajah Singappuliar zamindar of kallakottai with H H Radha Devi ilayarani of Travangore,Rajamatha H H Sethu Parvathi bhai of Travangore, H H Brahadambadas Rajagopala Thondaiman of Pudukkottai at the state Banaquet Hosted in Kaudiyar Palace Travangore.


H H Maharaja Marthanda Varma of Travangore with Rani Kamalambal Ammani Rajayee Shaiba Zamindarini of Kallakottai


Left to Right Pandale ,Founder of pandalae hospital she was the foster mother of H H Radha Devi of Travangore,H h Ilayarani of Travangor Radha Devi and Rani Kamalambal ammani Rajayee zamindarini of Kallakottai and few mwmbbers of Pandale - Travangorefamily.


The sons and daughter of V R B R Dorai Rajah Singappuliar and Rani Kamalambal Ammani Rajayee - Rajkumari Meenambal V r thondaiman She was the wife of Rajkumar Vijayarugunatha Thondaiman Ex. M L A and mother of Rajkumar Karthik V R Thondaiman Ex. M L A,Rajkumar V R Rajagopala Dorai Rajah,Rajkumar V R Ramachandra Dorai Rajah he was the present zamindar of Gandarvakottai and Rajkumar V R Thirumalai Dorai Rajah he was the present Zamindar of Kallakottai.


Rajkumar V R Rajagopala Dorai Rajah of Kallakottai and Rajkumar V R Ramachandra Dorai Rajah of Kallakottai he was inherited by the zamin of Gandarvakottai,after the death of his unmarried paternal uncle Rajkumar Ramachandra Dorai pandarathar Ex. M L A.Both Rajkumars with their anglo-Indian nany and tutor Mrs.Demonte




Rajkumar V R Thirumalai Dorai Rajah ,The present zamindar of kallakottai with his elder sister Rani Meena V R Thondaiman Rajayee Ammani she was married to her maternal uncle Rajkumar Vijayaragunatha Thondaiman Ex.M L A,He was the youngest brother of H h Maharaja Rajagopala Thondaiman of Pudukkottai.Her son Rajkumar Karrthik V R Thondaiman is an Ex M L A of Pdukkottai.




Rajkumar V R B R Dorai Rajah Singappuliar and Rani Kamalambal Ammani Rajayee - Zamindar and Zamindarini of Kallakottai. The zamindar VRBR Dorai Raja Singapuliyar completed his deegre in Trichy and did his Law in Madaras and underwent training to Depty superintendent in police,but withdrawn after finishing his training because he wants to dedicate is rest of his whole life to the people of Kallakottai Zamin,and he felt that being a ruler,it would not set the right example if he saluted to this Britishsuperior officers.


This palace was built by Thirumalai Rangasami singappuliar in the year 1850 for his son Balasubramania Singappuliyar as a marragie gift.He was married Kamalambal Rajayee She was the sister of Pudukkottai Maharaja.


வெங்கடாசல சிங்கப்புலியார்(1787):-
தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி)|பக்கம் - 281/ Vol 1 



கிபி 1787 ல் வெங்கடாசல சிங்கப்புலியார் தனக்கு பாளையப்பட்டு ஏற்படுத்தப்பட்டதை பற்றி குறிக்கப்பட்டுள்ளது. சிங்கப்புலி எனும் பட்டம் கல்லாக்கோட்டை மற்றும் பாதரங்கோட்டை ஜமீன்களால் உபயோகிக்கப்படுகிறது.

கள்ளப்பற்று கல்லாக்கோட்டை பாளையம் :-
தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி)|பக்கம் - 422 / பகுதி 1



கல்லாக்கோட்டை பாளையம் கள்ளப்பற்றான , கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜய ரகுநாத முத்து விஜய சிங்கப்புலியார் காலத்தில் சிவன் ராத்திரியை முன்னிட்டு களச்சிக்காய் எனும் பருப்பு வகை நான்கு படி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சமஸ்தானத்திற்கு அளித்து இருக்கலாம். தஞ்சை சமஸ்தானத்திற்கும், கல்லாக்கோட்டை ஜமீனுக்கும் சமூகமான உறவு நிலவியுள்ளது.

தஞ்சை மன்னரை சந்தித்த கல்லாக்கோட்டை மன்னர் (1846) :-

தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி)|பக்கம் - 472/ Vol 1



கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜயரங்கநாத சிங்கபுலியார் அவர்களுடைய பிள்ளையுடன் தஞ்சை மன்னர் இரண்டாம் சிவாஜியை சந்தித்த போது ரூ 11 பணம் அன்பளிப்பாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மன்னருக்கும், கல்லாக்கோட்டை பாளையத்திற்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து வந்துள்ளது.

தஞ்சை மன்னரை சந்தித்த கல்லாக்கோட்டை மன்னர் (1846) :-


தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (இரண்டாம் தொகுதி)|பக்கம் - 33/ Vol 2 




கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜயரங்கநாத சிங்கபுலியார் அவர்களுடைய பிள்ளையுடன் தஞ்சை மன்னர் இரண்டாம் சிவாஜியை சந்தித்த போது ரூ 11 பணம் அன்பளிப்பாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மன்னருக்கும், கல்லாக்கோட்டை பாளையத்திற்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து வந்துள்ளது.

கல்லாக்கோட்டை/ கண்டர்க்கோட்டை( 1832) :-




கிபி 1832ல் கல்லாக்கோட்டை பாளையத்திற்கும், கண்டர்கோட்டை பாளையத்திற்கும் ஒரு விசயம் தொடர்பாக விவாதம்( வழக்கு) இந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதம் தொடர்பாக தஞ்சை மன்னரை நாடியிருக்கலாம்.

ஜமீன் சிங்கப்புலியார் அவர்கள், தமிழறிஞர்கள் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், டி. கே. சிதம்பரநாத முதலியார் போன்றவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

















































நன்றி: உயர் திரு . ரமேஷ் மனோகரன்
ஆய்வில் : சியாம் சுந்தர் சம்பட்டியார்
கள ஆய்வில் : உயர் திரு . R. பரத் கூழாக்கியார்