மன்னார்குடி கோபால்சாமி தென்கொண்டார் கள்ளர் சமுதாயத்தின் மிகச்சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர். முதன் முதலாக மன்னார்குடி நகர் மன்ற தலைவராக செயல்பட்டு மன்னை நகரத்திற்கு சிறந்த சீர்த்திருத்தங்களை செய்தவர். 1962–ல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபால்சாமி தென்கொண்டார் வெற்றிபெற்றார்.
மன்னை இராசகோபாலசாமி ஆலயம் கள்ளர்குல மாமன்னன் இராசராசன் வழித்தோன்றல் முதலாம் குழோத்துங்கனால் கட்டப்பட்டது என்பதை யாவரும் அறிவர். இவ்வாலயத்தின் பங்குனி உற்சவ திருவிழா 18 நாட்களுக்கு நடைபெரும். இத் திருவிழா நாட்களில் வெண்ணெய்தாழி உற்சவத்தன்று இரவு நடக்கும் தங்கக்குதிரை வாகன மண்டகபடியை தொடர்ந்து விடியும் வரை கள்ளர் சமூக மண்டகப்படியாக ஏற்படுத்தினார்.
கள்ளர் சங்கத்தையும் தோற்றுவித்து அதன் தலைவராக வீற்றிருந்த பெருமை படைத்தவர் மன்னை கோபால்சாமி தென்கொண்டார். கள்ளர் குல மக்களை எல்லாம் ஒன்று திரட்டி மாபெரும் விழாவாக வெண்ணெய்தாழி உற்சவத்தன்று கள்ளர் மண்டகப்படியை ஏற்படுத்தி அதனை இன்று வரை கள்ளர் சங்கத்தால் செயல் படுத்த வித்திட்ட பெருமை இவருக்கு என்றென்றும் உண்டு.
கள்ளர் சமூகத்தை சார்ந்த படித்த இளைஞர் பலருக்கு இரயில்வேயில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், ஊட்டி போட்டோ தொழிற்சாலையில், திருவெறும்பூர் கனரக தொழிற்சாலையில் வேலைகள் கிடைத்திட பல்வேறு உதவிகளை நாகை பாராளுமன்ற உறுப்பினாராக இருந்த காலத்தில் செய்துள்ளார். தனது மண்டல அதிகாரத்திற்கு உட்பட்ட காரியங்களில் தன்னால் இயன்ற அளவு கள்ளர் சமூக மக்களின் உயர்வுக்கு பாடு பட்ட இன் உணர்வு மிக்க பழம்பெரும் அரசியல்வாதி தெங்கொண்டார் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
இவர் இராசகோபால் ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது தான் ஆலயத்தின் பழுதுகள் செய்யப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. மேலும் இவர் வீட்டுக்கருகில் இருந்த கமலாதேவி காளியம்மன் கோவில் நவராத்திரி விழாவையும் மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்திய பெருமையும் இவரயே சேரும்.
மன்னார்குடியோட வரலாற்றில் மறக்கவே முடியாத அரசியல்வாதிகள், கோபால்சாமி தென்கொண்டார், மன்னை நாராயணசாமி ஓந்திரியர் . கோபால்சாமி தென்கொண்டார் காங்கிரஸ்காரர், நாரயணசாமியோ தி.மு.க-காரர். ஆனா, அந்த வேறுபாட்டை ஊர் விஷயத்தில் என்னைக்கும் அவங்ககிட்ட பார்க்க முடியாது. கோபால்சாமி எதை எல்லாம் இந்த ஊருக்குக் கொண்டுவரணும்னு நினைச்சாரோ, அதை எல்லாம் கொண்டுவந்தவர் நாராயணசாமி. மன்னார்குடியில், கூட்டுறவு ஸ்தாபனங்களை வலுவா உருவாக்கியதில் இவங்க பங்களிப்பு மகத்தானது.
கோபால்சாமி தென்கொண்டார் இந்திரா காந்தியை அழைத்து வந்து காங்கிரஸ் கட்சி மாநாடு நடத்திய ஊர் மன்னார்குடி.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி கோபால்சாமி தென்கொண்டார் பேசும்போது...
நான் மன்னார்குடி நகரசபை தலைவராக பதவி வகித்தபோதுதான் எம்.ஆர்.ராதா அவர்கள் நடித்த ரத்தகண்ணீர், திரைப்படம் வெளிவந்தது, அந்த திரைப்படத்தில் குஷ்ட ரோகியாக நடித்த ராதா அவர்கள் ஒரு காட்சியில், சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டிருக்கும் ஜல்லி குவியல் மீது கால் தடுக்கி விழுந்து விடுவார், பின்னர்எழுந்து அவர் பேசும் வசனம்,,, ரோடுபோட ஆறுமாசம் முன்பே ரோட்டுல ஜல்லிகற்களை கொட்டிவிடுவான்கள் நாஷ்டி முனிசிபாலிட்டி, என்று முனிசிபாலிட்டியை, அந்த காட்சியில் திட்டுவார்கள்,
அவரது திட்டுக்கு பயந்தே, அன்றைக்கு நகரசபை தலைவராயிருந்த நான், ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட மறுநாளே சாலை பணிகளை உடனே விரைந்த போடச்சொல்லி அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன், அந்த அளவிற்கு எம்.ஆர்.ராதா அவர்கள் பேசுகிற வசனங்கள் நக்கலாக இருந்தாலும், மக்கள் பணியில் ஈடுபவோர் எந்த அளவிற்கு விரைந்து பணியாற்ற வேண்டும் என்பதையும், அவரது குறைகளை சுட்டிக்காட்டும் பாங்கும் என்னை பெரிதும் கவர்ந்த ஒன்றாகும் என்று பேசினார்

கோபால்சாமி தென்கொண்டார் - கமலாம்பாள் அறக்கட்டளை சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அறக்கட்டளையின் பொருளாளர் ஜி. ராஜீவ் நாராயணன் ஆவார்.