புதன், 28 ஆகஸ்ட், 2019

வேதரண்ய உப்பு சத்தியாகிரக நாயகன் நடராஜன் மூவரையர்



இந்திய தேசம் முழுவதும் விடுதலை தாகத்தில் இருந்த போது, அதனை அகிம்சை என்ற ஆயுதத்தின் மூலமாக, ஆங்கில ஏகாதிபத்தியத்தை, மகாத்மா காந்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை 20வருடங்களுக்கு மேலே, பல்வேறு கட்டங்களாக, அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக மேற்கொண்டு வந்தார். அப்படிபட்ட அகிம்சை போராட்டத்தின் பெரும்பகுதியான உப்பு சத்தியாகிரகம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க மகாத்மா காந்தியின் போராட்டமாகும்.

உப்பு சத்தியாகிரகம்:-

ஆங்கில ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்திய மக்களின் மீது திணிக்கப்பட்ட உப்பிற்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, இந்தியர்களின் நிலத்தில் உள்ள உப்பு, இந்தியர்கள் பயன்படுத்த எதற்கு வரி செலுத்த வேண்டும் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காந்தி அவர்கள் தன்னுடைய சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு 240 கிலோமீட்டர் கடந்து செல்லும் வழியெல்லாம் மக்களை திரட்டி குஜராத் தண்டி கடற்கரையில் உப்பை எடுத்து பதிவு செய்தார்.

வேதாரண்யம் salt March:-

காந்தியடிகள் தண்டியில் ஏற்படுத்திய நடைபயண புரட்சியை போல், தமிழ்நாட்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான இராஜாஜியின் தலைமையில் வேதாரண்ய கடலில் உப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாயகன் சி.நடராஜன் மூவரையர்:-

கள்ளர் இனத்தில், சோழ தளபதிகளாக மூவராய கண்டன்,மூவரையர் சேனைப் பெருமள் என்ற பெயர்களுடன் பல போர்களில் சோழர்களுக்கு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்தவர்கள். 

அப்பேற்பட்ட மூவரையர் மரபில் உதித்த நாயகர் நடராஜன் மூவரையர், தன்னுடைய தாய் நாட்டின் விடுதலைக்காக களம் கண்டு உயிர் நீத்துள்ளார்.

வேதாரண்ய போராட்டத்தில் மக்களை திரட்டிச் சென்று, போராட்டத்தில் மிகத் தீவிரமாக மூவரையர் செயல்பட்டார்.

இதன் விளைவு வேதாரண்ய போராட்டத்தை தலைமை தாங்கிய இராஜாஜிக்கு 6மாதம் சிறை தண்டனை வழங்கிய ஆங்கில அரசு.

மூவரையரின் தீவிரத்தை அறிந்து, காலவரையறை இல்லாமல் பிரிவு IPC 143ந் 17(1) பிரிவுப்படி கைது செய்தது. திருச்சி மத்திய சிறையில் குற்றவாளி எண்:9802 அடைக்கப்பட்டார்.

சிறையில் சித்தரவதைகளுக்காளான மூவரையர் 2வருடங்கள் கழித்து நிமோனியா என்கிற நுரையீரல் கோளாரால் அவதிப்பட்டு வந்தார். நோயின் வேகம் அதிகரித்ததன் காரணமாக சிறையில் இருந்து செப்டம்பர் 5 1932ஆம் வருடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் காப்பாற்றும் எண்ணம் சிறிதும் இல்லாத சிறை நிர்வாகத்தின் நடவடிக்கையால் அடுத்த நாளே செப்டம்பர் 6ஆம் தேதி தாய் நாட்டின் விடுதலையை கண்ணில் பாராமலே தன்னுடைய 36வது வயதில் மூவரையரின் உயிர் பிரிந்தது.

இந்திய விடுதலை போராட்டத்தில் மிதவாதிகள்,தீவிரவாதிகள் என இருவிரிவாக பிரிந்து வெள்ளையர்களை எதிர்த்தனர்.

இதில் இரண்டு பிரிவிலும் கள்ளர் பெருமக்களின் தியாகம் இன்னும் எவ்வளவு,எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தார்கள் என்பது அந்த மாயோனுக்கும்,கொற்றவைக்குமே வெளிச்சம்.

தென்புலத்தார் கடன் நீத்தல் என்கிற வள்ளுவன் வாக்கிற்கேற்ப முன்னோரை வணங்குவோம், அவர்தம் புகழை திருப்புகழ் போல் பாடுவோம்.

பெயர் : நடராஜன் மூவரையர்
ஊர். : படகச்சேரி, பாபநாசம் 
மாவட்டம். : தஞ்சை 
மாநிலம். : தாய்த் தமிழ்நாடு

நன்றி
Trichy jail reports 1930 to 1932
Ministry of culture 
Records of Home department during freedom struggle 

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்