செவ்வாய், 31 ஜனவரி, 2023

பாலையவனம் ஜமீன் | பாலையவனம் பாளையம்

பாலையவனம் நாட்டின் கள்ளர் குல சிற்றசர்கள் "வணங்காமுடி பண்டாரத்தார்கள்"
பாலைவனம் ஜமீன்


அறந்தாங்கி பகுதியின், பாலையவனம் நாடு கள்ளர் குல அரையன் வணங்காமுடி பண்டாரத்தார் என்ற பட்டம் உடைய ஸ்ரீமான் மன்னர் இராமச்சந்திர விஜய அருணாசல வணங்கமுடிப் பண்டாரத்தாரால் ஆட்சி செய்யப்பட்டது. பாண்டி மன்னர்களை 'வணங்காமுடி' என்று சொல்வது மரபு.

பாலைவனம் அல்லது பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.








பாலையவன ஜமீன்தார்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த அரண்மனையின் மிச்சங்கள் அறந்தாங்கி செல்லும் வழியில் பாலையவனத்தில் உள்ளது! 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட எழில்மிகு அரண்மனை தனது கடந்த கால நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டு மௌனத்துடன் உள்ளது.


கந்தர்வகோட்டை ஜமீன் பண்டாரத்தார்கள் , பாலையவனம் ஜமீன்களின் பங்காளிகள் ஆவார்கள்.

பாலையவனம் பண்டாரத்தார் பற்றிய கல்வெட்டு ஒன்று சுனையக்காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு சுனையக்காட்டில் உள்ள கிணற்றில் (சுனை) உள்ளது. தரையோடு அமைந்த செம்பராங்கல்பாறையில் இந்தக் கிணறு எடுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிணற்றின் நீர்மட்டம் மழைக் காலத்தைப் போன்றே வெயில் காலத்திலும் சமநிலையில் உள்ளதே இதன் சிறப்பாகும். இதனால், இதைச் சுனை என்று மக்கள் அழைக்கின்றனர். பிரபவ ஆண்டில் இந்தக் கிணற்றை விஜய அருணாசல வணங்காமுடி பண்டாரத்தார் பிரதிஷ்டை செய்தார் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

இதன் காலம் கி.பி. 1687 ஆகும். இது பாலையவனம் பண்டாரத்தார் வரலாற்றை அறிய உதவும் ஓர் அரிய கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.


சிற்றம்பலக் கவிராயர் இயற்றிய இலக்கியங்களில் ஆண்டவராயன் கோவை, ஆண்டவராயன் கட்டளைக் கலிப் பா, ஆண்டவராயனின் மகன் குழந்தைத்துரை பற்றிய பால கவி, ஆண்டவராயன் வண்ணம், ஆண்டவராயன் காமகவிருத்தம் ஆகியவை பாலையவனம் ஜமீன்தார்களைப் பற்றியதாகும். ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தின் மீது சிற்றம்பலக் கவிராயர் பாடிய இலக்கியங்களுக்காக அவரிடமிருந்து பரிசில்கள் பெற்றுள்ளார்.


மேலும், நற்பவளக்குடியில் மேற்கொண்ட ஆய்வின் போது இரண்டு புதிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று கல்லில் எழுதப்பட்டு ஐயப்பன் கோயில் வளாகத்தில் கிடத்தப்பட்டுள்ளது. இது அறந்தாங்கி அரசுபிச்சா தொண்டைமான் பற்றியதாகும்.

கி.பி. 1418 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டு, அறந்தாங்கி அரசு உடையா பிச்சா தொண்டைமான், காடவராய பட்டனுக்கு கூத்தனூர் வயலில் ராசகரம் (அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி) கழித்துக் கொடுத்த நிலம் பற்றிக் கூறுகிறது. இது பிச்சா தொண்டைமான் பற்றிய இரண்டாவது கல்வெட்டு ஆகும்.








இவர் அறந்தாங்கி பகுதியை ஆட்சி செய்த வணங்கமுடி தொண்டைமான்கள் வம்சாவளியை சேர்த்தவர்கள்.
வணங்காமுடி எனும் பட்டத்தை அறந்தாங்கி தொண்டைமான்கள் பெற்ற விதம் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் தசரா விழா காலத்தில் தஞ்சை மன்னரை அனைத்து குறுநில தலைவர்களும் நேரில் கண்டு வணங்கி வரும் வழக்கம் இருந்ததாகவும், ஆனால் அறந்தாங்கி தொண்டைமான் தஞ்சை மன்னரை சந்திக்க தான் செல்லாமல் தன்னுடைய பிரதிநிதியை அனுப்பி வைத்ததால், மன்னருக்கு தலைவணங்காதவர் எனும் குறிக்கும் விதமாக வணங்காமுடி என பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வணங்காமுடி எனும் பட்டம் அறந்தாங்கி தொண்டைமான்களால் கிபி 1600 களில் இருந்தே பயன்படுத்தப்படுவதை அவர்களின் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. இன்றும் பாலையவன ஜமீன்களால் வணங்காமுடி பட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது

இந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமான், பாலையவன ஜமீன் குடும்பத்தார் என்றும் முற்காலத்தில் தொண்டைமான் பட்டத்தை பயன்படுத்திய இந்த ஜமீன்தார்கள் தற்போது வணங்காமுடி பண்டாரத்தார் எனும் பட்டத்தை மட்டும் பயன்படுத்துவதாக (List of inscriptions and sketches of dynasties of southern india, robert sewell :1884) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பெரும்புகழ் பெற்ற பாளையவனம் நாட்டின் இறுதி மன்னர் ஸ்ரீமான் மன்னர் அ. துரையரசன் வணங்காமுடி பண்டாரத்தார். இவரின் கீழ் 52 கிராமங்கள் இருந்தன (13984 ஏக்கர்).

அ. துரையரசன் வணங்காமுடி பண்டாரத்தார் அவர்கள் 1922 ஆம் ஆண்டில் பாளையவனம் பாளையக்காரர் சர் விஜய அருணாச்சல வணங்காமுடி பண்டாரத்தார் குடும்பத்தின் கடைசி மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர். இவர் மனைவியர்கள் சகத்தாம்பாள் அம்மையார், தர்பாம்பாள் அம்மையார், மகன்கள் துரை வணங்காமுடி பண்டாரத்தார், தாமரை செல்வம் வணங்காமுடி பண்டாரத்தார். இவர் குருகுலத்தில் மற்றும் உள்ளூர் கிராமப் பள்ளியில் பயின்றார்.


மழை இல்லாமல், வறுமையாலும் மக்கள் அடையும் துன்பம்கண்டு மனம்வாடி, பல உதவிகள்புரிந்து, ஏழை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்தில் நல்ல நிலைமை அடைய வேண்டும் என்று விரும்பினார்.


தந்தை பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்டார், திராவிடர் கழகம் மூலம் அவரது ஆதரவாளராக ஆனார்.

அந்த நாட்களில் காங்கிரஸ் கட்சி ஜமீன்தார்கள் மற்றும் நில உரிமையாளர்களால் தலைமையில் நடத்தப்பட்ட ஆதிக்க அரசியல் கட்சி ஆகும். ஆனால் இவர் திராவிடர் கழகத்தில் தனது சொத்து மற்றும் செல்வத்தை அதன் வளர்ச்சிக்காக பயன்படுத்தினர்.


அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் 1962, 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தென்மேற்கு பருவமழை மழையளவு குறைவான காரணத்தால் அறந்தாங்கி பின்தங்கிய இடங்களில் ஒன்றாக கருதப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்னர், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கான திட்டங்கள் எதுவும் இல்லாத நிலமை காரணமாக, இப்பகுதியில் கணிசமான வளர்ச்சி இல்லை. அத்தகைய சூழ்நிலையில் இவர் இந்த தொகுதியியில் நிறைய முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார்.


இவரது காலப்பகுதி "கோல்டன் சகாப்தம்" என்று அறந்தாங்கி வரலாற்றில் கருதப்பட்டது.

இவரது சாதனைகள் :

1) 1971 நவம்பர் 22 ஆம் தேதி அறந்தாங்கி நகரத்திற்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

2) அரசு பொது மருத்துவமனை கட்டப்பட்டது.

3) வேலைவாய்ப்பின்மையை குறைக்க நூற்பு ஆலைகள் கட்டப்பட்டது.

4) பேருந்து, மின்சாரம், குடிநீர் வசதி ஆகியவை கடலோர பகுதிகள் உட்பட பெரும்பாலான இடங்களுக்கு கொண்டு வரப்பட்டன.

5) பாலையவனம் ஆண்டவராயர் நினைவு நடுநிலைப் பள்ளி





வாரி வழங்கும் தொண்டைமான் இளந்திரையன், அறந்தாங்கி தொண்டைமான் வழி வந்த, இவர் தனது சொந்த நிலத்தை ஏழை மக்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். துரைராசபுரம் கிராமத்தை மக்களுக்கு வழங்கினார், இது மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாகும்.

வாரி வாரி வழங்கும் கொடை வள்ளல் அ. துரையரசன் வணங்காமுடி பண்டாரத்தார் 10 ஏப்ரல் 1998 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு வானுலகம் புகுந்தார்.






ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 11 நாள் மண்டகப்படிதாரர்கள்:-

மூன்றாம் நாள்:- புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்காக அரசூர் கிராமத்தார்கள் (கள்ளர் மரபினர்)

நான்காம் நாள் :- கோபாலர் கட்டளை சிங்கவனம் ஜமீனுக்காக பில்லுக்குடி கிராமத்தார்கள் (கள்ளர் மரபினர்)

ஆறாம் நாள் :- வீரசேகரன் சேர்வைக்காரர், மறவனேந்தல்(கள்ளர் மரபினர் - சேர்வை பட்டம்)

ஒன்பதாம் நாள் :- பாலையவனம் ஜமீனுக்காக கரத்திக்கோட்டை, விச்சூர் சேர்வைக்காரர்கள் (கள்ளர் மரபினர் - சேர்வை பட்டம்)

பத்தாம் நாள் :- சிறுமருதூர் சேர்வைக்காரர் குடும்பத்தார் (கள்ளர் மரபினர் - சேர்வை பட்டம்)




அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் ஆடிப்பெருந்திருவிழா தேரோட்டத்தில் கோவில் மரபுபடி பாலைவன ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைப்பது வழக்கம். பாலைவனம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த முன்னால் செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குனரும், ஜமீன் தாமரை செல்வம் பரிவட்டத்துடன் தேரை வடம் பிடித்து துவக்கி வைப்பார்.
































































நன்றி.
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. இ. பரத் கூழாக்கியார்