புதன், 28 ஆகஸ்ட், 2019

நாட்டார் தம்மம்



எட்டுவழி, ஆறுவழி, தங்க நாற்கரம், தேசிய, மாநில, மாவட்ட, ஊராட்சிச் சாலைகள், விமான ஓடுதளச்சாலைகள் என இப்போது சாலைவசதிகள் உலகம் முழுக்க கண்ணைப் பறிக்கின்றன.

ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ரப்பர் சக்கரங்கள் வருமுன், இரும்புப் பட்டைகள் பொருத்தப் பட்ட மரச் சக்கரங்களால் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் சாலைகளின் நிலை என்ன?

தொண்டியிலும் மாமல்லையிலும் கொற்கையிலும் புகாரிலும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட் கள் குன்றெனக் குவிக்கப்பட்டி ருந்தை சங்கத் தொகுப்புகளி லும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் படிக்கின்றோமே அந்தப் பொருட்களை எந்தச் சாலைகளில் துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தார்கள், கொண்டுசென்றனர்.

பாதைகளை, அக் காலத்தில் ஒற்றையடிப் பாதை, வண்டிப்பாதை, அத்தம், அதர்சுரம், இட்டுச்சுரம், நெறி, வழி, இட்டுநெறி பெருவழி, காட்டுப் பெருவழி, தடம் கைவதி, வதி என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள்!

பெருவழிச் சாலைகளில் பயணிகளும், வணிகர்களும் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஆங்காங்கே காவல்களையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை பெருவழிகள் ஆற்றோரங்களில் அமைக்கப் பட்டன. 

கொடையளித்த ஊர்களுக்கு, நிலங்களுக்கு நான்குமால் காட்டுகின்றபோது கல்வெட்டுகளிலும், பட்டயங்களிலும், சுவடிகளிலும் இந்தச் சாலைகள் இடம்பெறுகின்றன.

"நின்ற ஊர்ப் பெருவழிக்கு வடக்கே....
ஈகைக்கு போன பெருவழிக்கு தெற்கே...,
வழுவூரில் நின்று வடக்கு நோக்கிப் போகிய...
திருவரங்க நல்லூர் நின்று தெற்கு நோக்கிப் போன விலக்குப் பெருவழிக்கு மேற்கும், அல்லியூருக்கு போன விலக்குப் 
பெருவழிக்கு வடக்கும் கோட்டாறுக்கு போகிற 
பெருவழிக்கு கிழக்கும்... " 

என்று ஒரே கல்வெட்டில் மூன்று ராஜ பாட்டைகள் இடம்பெற்றுளது.

தஞ்சைப் பெருவழி, கருர் பெருவழி, வீரநாராயணன் பெருவழி, ஆதன் பெருவழி, சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி, அதியமான் பெருவழி, என மன்னர்கள் பெயரிலும் சோழ மாதேவி பெருவழியென மகாராணி பெயரிலும் பெருநெடுஞ்சாலைகள் விளங்கியுள்ளன. திருச்சி 320 கி. மீ என இப்போது தொலைவைக் குறிப்பிட்டு நடுகற்கள் ஊன்றுவதைப் போல "அதியமான் பெருவழி
நாவற்தரவளம் 27 காதம்! "எனச் செதுக்கி சாலையோரம் கல் நட்டிருக்கிறார்கள்! 27 காதம் எனில் 291 கீ. மீ. 

தரவளம் எனில் பயணியர் தங்கிச் செல்லும் விடுதிகள் உள்ள ஊர்.

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விக்கிரம பாண்டியன் திருவண்ணா 'மலையை 'சுற்றி கிரிவலச் சாலையமைத்து "விக்கிரமப் பாண்டியன் திருவீதி "எனப் பெயரிட்ட கல்வெட்டு இருக்கிறது.

பெருவழிகளில் நீர்நிலைகளை உருவாக்கி, சத்திரங்களைக் கட்டி, சோலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். பயணிகள், வணிகர்கள் தங்கள் வண்டிகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு, குளித்து, சமைத்து சாப்பிட்டு, காளைகளுக்கும், குதிரைகளுக்கும் களைப்பைப் போக்கி உறங்கிச் செல்வதற்கு இவை தானமாக வள்ளல்களாலும் அரசர்களாலும் செய்யப்பட்டன.

ஆறாவயல் முனியய்யா கோயில் இறக்கத்தில் "நாட்டார் தம்மம் "என்று பெயர் வழங்கும் ஊருணி இப்போதும் ஊராட்சியின் பராமரிப்பில் உள்ளது. எனது பால்ய காலம் வரை இந்த ஊருணியின் மேல்கரையில் சத்திரமும் நிழல் தந்த மரங்களும் இருந்தன.

மதுரையில் இருந்தும், புதுக்கோட்டையில் இருந்தும், ராமேஸ்வரத்திற்கான பெருவழியில் சென்ற பயணிகள் ஓய்விற்காக செம்பொன்மாரி நாட்டார் அமைத்துக் கொடுத்தது இந்த "நாட்டார் தம்மம்". (இது தர்மத்தின் திரிபு)

நன்றி :
முனைவர் குழந்தைவேல்.
ஐந்தாம் தமிழ் 
மாநாட்டு மலர்!

ஆய்வு  : ஆறாவயல் பெரியய்யா

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்