வியாழன், 29 ஆகஸ்ட், 2019

அ. அதிசயம் மண்கொண்டார்


விடுதலைப் போராட்ட வீரர் காரைக்கால் வ.பொன்னையா


அரங்கசாமி நாயக்கர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர்கள் சிலரும் சேர்ந்து, "பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிகை' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தனர். விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளோடு, தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இப்பத்திரிகையில் இடம்பெற்றன. இக்கட்டுரைகளை நூல் வடிவாக்கி வெளியிட்டோர் அரங்கசாமியின் நண்பர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களுமாகிய, காரைக்கால் வ.பொன்னையா மற்றும் திருநள்ளாறு, தேனூர் பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுமாவர். இந்நூல் பொறையாறு, "ரத்னா விலாஸ் பிரஸ்' என்ற அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டு 3.2.1944-இல் வெளியிடப்பட்டது. "குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம்' என்பது நூலின் பெயர்.

காரைக்கால் அம்மையார் மேல்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேஷ் பொன்னையா இவரின் பேரன்  ஆவார்.

சோழபாண்டி மாரியப்பர் மல்லிக்கொண்டார்



சோழபாண்டி என்னும் ஊர், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி வட்டத்தில் உள்ளது. மன்னார்குடி - முத்துபேட்டை வழித்தடத்தில், மன்னார்குடியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில், பாமணி ஆற்றின் கீழ்புறம் அமைந்துள்ளது.

நடுத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, கோலியர் தெரு என நான்கு தெருக்கள் உள்ளன. கடுக்காகாடு என்ற சிற்றூரும் சோழபாண்டியில் உள்ளது. 

சோழபாண்டி கிராமத்தில், பெருமளவில் நிலம், தோப்பு முதலியவற்றைச் சொந்தமாகக் கொண்டவர்  A .R . மாரியப்பர் மல்லிக்கொண்டார். 


இவர் சிங்கப்பூர் கள்ளர் மகாஜன சங்கத்தின் தலைவராக இருந்தவர் (1925 ). 

இவர் தனது சொந்த கிராமத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது மனைவியின் பெயரில் 1927 ஆம் ஆண்டு சோழபாண்டி மீனாட்சி மாரியப்பர் மல்லிக்கொண்டார் தொடக்க பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். ஏழைகளுக்கு பல உதவிகள் அளித்தார்.




சோழபாண்டி கிராமத்தில் ராஜாளியார் பட்டம் உடையவர்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்கு மாணிக்க ராஜாளியார் என்ற மிராசுதாரரும் வாழ்ந்தார். 

ராஜாளியார் வீட்டு திருமண பத்திரிகை 




ஐயா. மாரியப்பர் மல்லிக்கொண்டார் வாரிசுகள் (மகள்கள்), இன்றும் அங்கு வாழ்கின்றனர். இவர்களே  பள்ளி நிருவாகம், மில் நிருவாகம் கவனத்துகொள்கின்றார். தற்போது பள்ளியின் 91 ஆம் ஆண்டு விழா நடந்தது.

ஆப்கானிய இந்து அரச வம்சம்




சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்கள் ‘கொற்கை’,  ‘வஞ்சி’,  தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி .… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. 



4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். 

சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம். பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) 


இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். 

அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை. சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். 

எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)

தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. 

மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம். தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை - திரு. பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

திரு. பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள் கூறியது போல் அங்கு தமிழ் பெயரில் ஊர்கள் மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. அங்கு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு. முன்தோன்றி மூத்த குடியாகிய கள்ளர்கள் பெயரில் ஒரு அரசாட்சியே நடந்துள்ளது. அதாவது மேலே உள்ள வரைபடத்தில் உள்ள பாண்டி, கொற்கை என்ற பகுதியில் இந்து அரச வம்சம் ஆட்சி செய்துள்ளது.

ஆப்கானிய இந்து அரச வம்சம் கள்ளரால் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது. இந்தியாவில் ஆரம்பகால இடைக்கால காலத்தில் காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாரா (நவீனகால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானின் கடைசி இந்து வம்சங்களில் இந்து ஷாஹி (879-1026) ஒன்றாகும். காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாராவில் இரண்டு வம்சங்கள் இருந்தன: க்ஷத்திரிய வம்சம் மற்றும் அதை மாற்றிய பிராமண வம்சம். இருவரும் ஷாஹி என்ற தலைப்பைப் பயன்படுத்தினர்.

இந்து ஷாஹி வம்சத்தின் நிறுவனர் கள்ளர் (சி 843-50) அபு ரிஹான் அல்பெருனியின் பட்டியலிலிருந்து மட்டுமே அறியப்படுகிறார். அவரது உயர்வுக்கு வழிவகுத்த துல்லியமான சூழ்நிலைகள் இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கின்றன. அவர் காபூல் ஷாவின் அமைச்சராக இருந்தார் (பாரசீக வரலாற்றாசிரியர்கள் துர்க் ஷாஹி ஆட்சியாளர்கள் என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் காபூல் அவர்களின் தலைநகரம்) செல்வத்தைக் கண்டறிந்து, அரேபியர்கள் / பெர்சியர்களின் கைகளில் தோல்வியை சந்தித்த அவரது செல்வாக்கற்ற மன்னர் லகதுர்மனை (துர்க் ஷாஹி) பதவி நீக்கம் செய்தார். 

வெளிப்படையாக இது ஒரு சொட்டு இரத்தமும் இல்லாமல் செய்யப்பட்டது. பஞ்சாபியில் கள்ளர் என்ற சொல்லுக்கு உண்மையில் உப்புத்தன்மை அல்லது உமிழ்நீர் என்று பொருள், மேலும் இது உள்ளூர் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் உப்பு மண்ணைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. நிறைய இடங்கள் பஞ்சாபில் கள்ளர் என்று அழைக்கப்படுகின்றன, அவற்றில் சில உப்பு மண்ணின் காரணமாக இருக்கலாம், ஆனால் மற்றவை ஆட்சியாளரையும் குறிக்கலாம். உப்பு வீச்சு அவரது பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்று நாம் முடிவு செய்யலாம்.

இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு தற்போது மஜார்-ஈ-ஷெரிப் என்று வழங்கும் இடத்தில் கிடைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 

According to the inscription, “the ruler Veka occupied by eight-fold forces, the earth, the markets and the forts. It is during his reign that a temple of Siva in the embrace with Uma was built at Maityasya by Parimaha (great) Maitya for the benefit of himself and his son”.

என்று இருக்கிறது என்று இதனை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Coin of the Shahi king Spalapati Deva, circa 750-900.
Obv: Bull, symbol of Shiva. Rev: King mounted on a horse.

இந்த வமிசத்தைச் சார்ந்த ஸ்பலபதி தேவர் அச்சடித்த நாணயத்தை மேலே பார்க்கிறீர்கள்.



இதே வம்சத்தை சார்ந்த சமந்த தேவரின் நாணயம் இது


Gold dinar of Kushan king Kanishka II with Lord Shiva (200–220 AD)


கள்ளர் செய்தான்



பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடையே 'கள்ளர் செய்தான்' Kallar Seydan செய்தான் என்று ஓரிடம் இருக்கிறது. இங்கு பசுக்களுக்குக் காவலனான கிருஷ்ணனுக்கு ஒரு கோவில் இருந்தது என்று கண்டு பிடித்துள்ளார்கள் . 






சிவன் (ஒரு முகத்துடன் சிவலிங்கம்), ஆப்கானிஸ்தான்



விநாயகர்

5 ஆம் நூற்றாண்டின் பளிங்கு விநாயகர் ஆப்கானிஸ்தானில் உள்ள கார்டெஸில், இப்போது காபூலில் உள்ள தர்கா பிர் ரத்தன் நாத்தில் காணப்பட்டார். இந்த "மகாவிநாயகாவின் பெரிய மற்றும் அழகான உருவம்" ஷாஹி மன்னர் கிங்கலாவால் புனிதப்படுத்தப்பட்டது என்று கல்வெட்டு கூறுகிறது.




கள்ளர்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு நடப்பதுபோல், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் காளைகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.



The Shahs of Shahi Shahdom with their Throne Titles

1. Kallar I (841-898), Shah of Afghanistan from 850 till 898, Brahman, known as "the Fat", The Shield of India, Vanquisher of Invaders and the founder of Shahi Empire, poisoned by the vile Prince Jagattunga Rashtrakuta.

2. Behram (871-934), Shah of Afghanistan from 898 till 934, Kshatriya, known as "the Ironside", The Kindler of Sacred Flames of Agni, the Architect of Empire and Vanquisher of Foes to East and West, killed in the battle against Persians.

3. Kallar II (934-980), Shah of Afghanistan from 934 till 980, Kshatiya, known as "the Great", Skanda Incarnate, The Defender of Empire and Vanquisher of Foes from North and South, taken to lead the armies of Gods against Rakshasas and Asuras.


Srideva alias Surendra Vikrmadiyta Nandin of Gilgit (6th–7th century)
Patoladeva alias Vajraditya Nandin of Gilgit (6th–7th century)
Kallar alias Lalliya (c. 890–895)
Kabul Kamaluka (895–921)
Bhima (921–964),
Jayapala (964–1001)
Anandapala (1001 - c. 1010),
son of Jayapala Trilochanapala (ruled c. 1010 - 1021-22; assassinated by mutinous troops)
Bhímapála (died in 1022–1026)


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

Inscription throws new light to Hindu rule in Afghanistan
PRESS TRUST OF INDIA

——————————————————————————–

Kolkata, Jan 4: A stone inscription in Sanskrit, recovered from the city of Mazar-i-Sharif of northern Afghanistan a few years ago, has thrown new light on the reign of the Hindu Shahi ruler `Veka’ in that country.

The recovery and significance of the inscription, telling a story of the Hindu ruler Veka and his devotion to lord `Siva’, was told by leading epigraphist and archaeologist Prof Ahmad Hasan Dani of the Quaid-E-Azam University of Islamabad at the ongoing Indian History Congress here.

If historians, preferred to revise the date of the first Hindu Shahi ruler Kallar from 843-850 AD to 821-828 AD, the date of 138 of present inscription, if it refers to the same era, should be equal to 959 AD which falls during the reign of Bhimapala”, Dani said in a paper `Mazar-i Sharif inscription of the time of the Shahi ruler Veka, dated the year 138”, submitted to the Congress.

The inscription, with eleven lines written in `western Sarada’ style of Sanskrit of 10th century AD, had several spelling mistakes. “As the stone is slightly broken at the top left corner, the first letter `OM’ is missing”, he said.

According to the inscription, “the ruler Veka occupied by eight-fold forces, the earth, the markets and the forts. It is during his reign that a temple of Siva in the embrace with Uma was built at Maityasya by Parimaha (great) Maitya for the benefit of himself and his son”.

The inscription was brought from Mazar-i-Sharif, where the tomb of Hazrat Ali, son-in-law of Prophet Mohammed is located, to Pakistan and is currently housed at the Islamabad Museum, Dani said.

Dani said “the inscription gives the name of the king as Shahi Veka Raja and bestows on him the qualification of `Iryatumatu Ksanginanka’…. and (he) appears to be the same king who bears the name of Khingila or Khinkhila who should be accepted as a Shahi ruler”.

Dani further said “he may be an ancestor of Veka deva. As his coins are found in Afghanistan and he is mentioned by the Arab ruler Yaqubi, he may be an immediate predecessor of Veka deva…… Both the evidences of inscription and coins suggest that Veka or Vaka should be accepted as an independent ruler of northern Afghanistan.

“Thus we find another branch of the Shahi ruler in northern part of Afghanistan beyond the Hindukush. Veka is said to have conquered the earth, the markets and the forts by his eight-fold forces, suggesting that he must have himself gained success against the Arab rulers of southern Afghanistan”.

Dani observed that going by the findings it seemed that during the rule of the Hindu Shahi ruler Bhimapala there was a break in the dynasty — one branch, headed by Jayapala, ruled in Lamaghan and Punjab, and another branch, headed by Veka, ruled in northern part of Afghanistan.

“The northern branch must have come to an end by the conquest of Alptigin in the second half of tenth century AD”, he said.


குறிப்பு : இன்று தமிழகத்தில் வாழும் கள்ளர்களுக்கும், ஆப்கானில் ஆட்சி செய்த கள்ளர்கள் ஓரே கால்வழியினர் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. சிந்து சமவெளியில் எப்படி தமிழர்களுக்கான தொடர்புகள் இருக்கலாம் என்ற ஆய்வை போல, இதுவும் ஆய்வுக்கு உட்பட்டதே.



ஆய்வாளர் சிங்கார வேலன் தேவர்


முக்குலத்தோர் சமுதாய மாணவர்களை அரசுப்பணியில் அணி அணியாக அனுப்பி வைக்கும், முக்குலத்தோர் கல்வி மையத்தின் முத்திரை பதித்த சாதனைக்கு சொந்தக்காரர்,  வருவாய் ஆய்வாளர் சிங்கார வேலன் தேவர்.  

அரிட்டாபட்டி மலையாண்டி தேவருக்கும், தனலக்ஷிமி அம்மாளுக்கும் மகனாக பிறந்த சிங்காரவேலன் இன்று தாம் பிறந்த இனத்திற்கு நன்றி உணர்வோடு முக்குலத்தோர் மாணவர்களை அரசு பணிகளில் சிகரம் தொட வைக்கிறார்.

2004 ம் ஆண்டு முக்குலத்தோர் கல்வி மையத்தை MET என்ற பெயரில் இவர் தொடங்கி ரிசர்வ் லைனில் உள்ள கிரெளன் மெட்ரிக் பள்ளியில் சிறிய அளவில் நடத்தி வந்தார் .

ஆரம்ப கட்டத்தில் காவல் துறையினருக்கான பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டது .பின்னர் ஒத்தக்கடை அக்ரி (ரகுபதி )என்பவர் மூலமாக அங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன .

அதனை தொடர்ந்து ''ஜல்லிக்கட்டு நாயகன் பி .ஆர் .ராஜசேகர் தமது இல்ல வளாகத்தில் சமூக மாணவர்கள் படிக்க இடத்தை ஒதுக்கி தர அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட சிங்காரவேலன் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு டி.என் .பி .எஸ் .சி தேர்வு எழுத பயிற்சி அளித்தார் .

தொடர்ந்து இங்கு படித்தவர்கள் 500 பேர் காவலர்களாக ,10 பேர் காவல் துறை உதவி ஆய்வாளர்களாகவும்,30 முதல் 40 பேர் குரூப் 2 தேர்விலும்  தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் . குரூப் 4 தேர்வில் 27 பேர் ,காவலர் பணியில் 148 ,வி .ஏ.ஓ தேர்வில் 15 பேர் என தொடர்ந்து இங்கு பயிலும் நம் சமுதாய மாணவ, மாணவிகளும் சாதனை படைத்து வருகின்றனர் .

தம் வாழ்வில் மாற்று சமுதாயத்தினரால் ஏற்பட்ட வழக்கின் காரணமாக பாதிப்படைந்த நிலைதான், அரசு துறையில் நம் சமூகத்தின் பங்களிப்பை அதிகப்படுத்தவேண்டும் என்பதை தமது லடசியாமாக எடுத்து கொண்டார். அரசுப்பணியில் இருந்தாலும் தாம் பிறந்த இனத்திற்கு முகமூடி அணியாமல் முக்குலத்தோர் சமுதாயம் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் இவரை

நமது முக்குலத்தோர் சமுதாயம் வாழ்த்த 9843058867 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாழ்த்துங்கள்

மின்னஞ்சல் --malainagu21@ gmail .com

குறிப்பு - இங்கு தரப்படும் எந்த பயிற்சிக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது இவரின் தனிச்சிறப்பு

தகவல் : கள்ளர் முரசு

புதன், 28 ஆகஸ்ட், 2019

நாட்டார் தம்மம்



எட்டுவழி, ஆறுவழி, தங்க நாற்கரம், தேசிய, மாநில, மாவட்ட, ஊராட்சிச் சாலைகள், விமான ஓடுதளச்சாலைகள் என இப்போது சாலைவசதிகள் உலகம் முழுக்க கண்ணைப் பறிக்கின்றன.

ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ரப்பர் சக்கரங்கள் வருமுன், இரும்புப் பட்டைகள் பொருத்தப் பட்ட மரச் சக்கரங்களால் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் சாலைகளின் நிலை என்ன?

தொண்டியிலும் மாமல்லையிலும் கொற்கையிலும் புகாரிலும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட் கள் குன்றெனக் குவிக்கப்பட்டி ருந்தை சங்கத் தொகுப்புகளி லும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் படிக்கின்றோமே அந்தப் பொருட்களை எந்தச் சாலைகளில் துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தார்கள், கொண்டுசென்றனர்.

பாதைகளை, அக் காலத்தில் ஒற்றையடிப் பாதை, வண்டிப்பாதை, அத்தம், அதர்சுரம், இட்டுச்சுரம், நெறி, வழி, இட்டுநெறி பெருவழி, காட்டுப் பெருவழி, தடம் கைவதி, வதி என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள்!

பெருவழிச் சாலைகளில் பயணிகளும், வணிகர்களும் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஆங்காங்கே காவல்களையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை பெருவழிகள் ஆற்றோரங்களில் அமைக்கப் பட்டன. 

கொடையளித்த ஊர்களுக்கு, நிலங்களுக்கு நான்குமால் காட்டுகின்றபோது கல்வெட்டுகளிலும், பட்டயங்களிலும், சுவடிகளிலும் இந்தச் சாலைகள் இடம்பெறுகின்றன.

"நின்ற ஊர்ப் பெருவழிக்கு வடக்கே....
ஈகைக்கு போன பெருவழிக்கு தெற்கே...,
வழுவூரில் நின்று வடக்கு நோக்கிப் போகிய...
திருவரங்க நல்லூர் நின்று தெற்கு நோக்கிப் போன விலக்குப் பெருவழிக்கு மேற்கும், அல்லியூருக்கு போன விலக்குப் 
பெருவழிக்கு வடக்கும் கோட்டாறுக்கு போகிற 
பெருவழிக்கு கிழக்கும்... " 

என்று ஒரே கல்வெட்டில் மூன்று ராஜ பாட்டைகள் இடம்பெற்றுளது.

தஞ்சைப் பெருவழி, கருர் பெருவழி, வீரநாராயணன் பெருவழி, ஆதன் பெருவழி, சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி, அதியமான் பெருவழி, என மன்னர்கள் பெயரிலும் சோழ மாதேவி பெருவழியென மகாராணி பெயரிலும் பெருநெடுஞ்சாலைகள் விளங்கியுள்ளன. திருச்சி 320 கி. மீ என இப்போது தொலைவைக் குறிப்பிட்டு நடுகற்கள் ஊன்றுவதைப் போல "அதியமான் பெருவழி
நாவற்தரவளம் 27 காதம்! "எனச் செதுக்கி சாலையோரம் கல் நட்டிருக்கிறார்கள்! 27 காதம் எனில் 291 கீ. மீ. 

தரவளம் எனில் பயணியர் தங்கிச் செல்லும் விடுதிகள் உள்ள ஊர்.

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விக்கிரம பாண்டியன் திருவண்ணா 'மலையை 'சுற்றி கிரிவலச் சாலையமைத்து "விக்கிரமப் பாண்டியன் திருவீதி "எனப் பெயரிட்ட கல்வெட்டு இருக்கிறது.

பெருவழிகளில் நீர்நிலைகளை உருவாக்கி, சத்திரங்களைக் கட்டி, சோலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். பயணிகள், வணிகர்கள் தங்கள் வண்டிகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு, குளித்து, சமைத்து சாப்பிட்டு, காளைகளுக்கும், குதிரைகளுக்கும் களைப்பைப் போக்கி உறங்கிச் செல்வதற்கு இவை தானமாக வள்ளல்களாலும் அரசர்களாலும் செய்யப்பட்டன.

ஆறாவயல் முனியய்யா கோயில் இறக்கத்தில் "நாட்டார் தம்மம் "என்று பெயர் வழங்கும் ஊருணி இப்போதும் ஊராட்சியின் பராமரிப்பில் உள்ளது. எனது பால்ய காலம் வரை இந்த ஊருணியின் மேல்கரையில் சத்திரமும் நிழல் தந்த மரங்களும் இருந்தன.

மதுரையில் இருந்தும், புதுக்கோட்டையில் இருந்தும், ராமேஸ்வரத்திற்கான பெருவழியில் சென்ற பயணிகள் ஓய்விற்காக செம்பொன்மாரி நாட்டார் அமைத்துக் கொடுத்தது இந்த "நாட்டார் தம்மம்". (இது தர்மத்தின் திரிபு)

நன்றி :
முனைவர் குழந்தைவேல்.
ஐந்தாம் தமிழ் 
மாநாட்டு மலர்!

ஆய்வு  : ஆறாவயல் பெரியய்யா

பாடலாசிரியர், கவிஞர் சினேகன் கொடும்புரார்



அவரது இயற் பெயர் செல்வம், அவரது குடும்ப பட்ட பெயர் கொடும்புரார் (  கொடும்பாளூர் ராயர் )


கட்டிப்புடி வைத்தியர் சினேகனின் இன்னொரு முகம்!


சினேகனைப் பற்றித் தெரியாத 10 விஷயங்கள்!

பிக் பாஸில் இருக்கும் வாழ்வு பற்றி சினேகன் பாடல் ஒன்றை உருக்கமாகப் பாடினார்...

'இந்த வாழ்க்கையும் ஒரு பாடம்தான்
இங்கு வாழ்வதும் ஒரு வேடம்தான்
அவனவன் முகத்திரை
அவனவன் கிழித்திடும் 
அழகிய போர்க்களம்தான்
பொய்களும் மெய்களும் 
பொசுக்கென வெளிப்படும் 
அதிசய குருகுலம்தான்
இந்த பூமி மேடை சுழலும் வரை 
இந்த நாடகம் முடியாது’

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அசராமல் அசத்திய சினேகனைப் பற்றித் தெரியாத 10 விஷயங்களை நாம் இந்த மானிட்டர் வழியே படிப்போம்.

1. சினேகன் வாழ்க்கையில் நிறைய அடிபட்டவர். கல்லூரி சென்று படிக்கவில்லையென்றாலும், பட்ட அறிவைவிட அவர் பட்டறிவுதான் அதிகம்.

2. பிக் பாஸ் வீட்டுக்குள் கவிஞர் சினேகனைப் பார்த்தவுடனே இவர்தான் தலைவர் ஆவார் என்று நினைத்தேன். அதேபோல் முதல் வாரமே தலைவரானார். அதற்குக் காரணம், அவரிடம் உள்ள ஈடுபாடுதான். எதையும் முன்னின்று செய்யக்கூடியவர். தெரிந்தது தெரியாதது என்று தயக்கமோ கூச்சமோ இன்றி துணிச்சலாகச் செயல்படுவார். திரையுலகில் பிரபலமாகாத அறிமுகக் காலத்திலேயே படப் பாடல்களின் சி.டி வெளியிடும் நிகழ்ச்சி, வெற்றி விழாக்கள் போன்ற மேடைகளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். அந்த ஆளுமை அவரிடம் இருக்கிறது.

3. சினேகன் இந்த உயரத்துக்கு எளிதாக வந்துவிடவில்லை. பல்வேறு சிரமங்களையும் போராட்டங்களையும் அவமானங்களையும் கடந்துதான் செல்வமாக இருந்தவர் இன்று சினேகனாக வளர்ந்திருக்கிறார். ஒருமுறை சந்திக்கும்போது, ’ஊரில் அண்ணன்களுக்காக வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.





4. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் புதுக்கரியப்பட்டி எனும் செம்மண் கிராமத்திலிருந்து தஞ்சாவூருக்கு தினமும் வேலைக்கு வந்து செல்வார். அவர் வேலை பார்க்கும் ரேடியோ மெக்கானிக் கடைக்குப் பக்கத்தில் அலுவலகம் வைத்திருந்த தஞ்சை இரா.செழியன் மூலமாக கவிஞர் வைரமுத்துவிடம் வந்து சேர்ந்தார்.

5. 'பூவுக்குள் யாரோ கிச்சுக்கிச்சு மூட்டியது' என்ற பாடலில் மலர்ந்து சிரிக்கும் பூக்கள் பற்றி சொல்லியிருப்பார். இசையமைப்பாளர் பரத்வாஜ் மெட்டமைக்கும்போது உடன் இருந்து டம்மி வார்த்தைகளை நிரப்பிக்கொண்டிருந்த நேரமது. அப்போது இயக்குநர் சேரன் ‘பாண்டவர் பூமி’ படத்துக்காக பரத்வாஜ்ஜிடம் வரும்போது அறிமுகமாகிறார் சினேகன். அப்போதைய நிலைபடி மெட்டமைக்க நீங்க எழுதுங்க. பாடல் வேறு ஒருவரை வைத்து எழுதிக்கொள்கிறோம் என்கிறார் சேரன். இவரும் உற்சாகமாக எழுதுகிறார். நமக்கு பாடல் எழுத வாய்ப்புத் தரமாட்டார் என்று எண்ணாமல், நிறைய எளிய வார்த்தைகளில் உத்வேகத்துடன் எழுதி எழுதிக் காட்டுகிறார். சினேகனின் ஈடுபாட்டைப் பார்த்த சேரன் 'உன்னைப் பாடலாசிரியர் ஆக்கிக்காட்டுகிறேன்' என்று அவரையே பாடல் எழுதச் சொல்கிறார். அப்படி உருவானதுதான், '

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்... 

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்’ என்று சினேகனை அடையாளப்படுத்தியது. இதே படத்தில் ‘தோழா தோழா’ பாடலும் பெண்களிடத்தில் மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து சேரனின் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படங்களிலும் பாடல் எழுதினார் சினேகன்.



6. ’பலனை எதிர்பார்க்காமல் உழைக்கும் எந்த உழைப்பும் பழுதடைந்து போவதில்லை' என்பது சினேகனின் வாழ்க்கையில் மிகப் பெரியதாக இருந்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். ’ஐந்தெழுத்து மந்திரத்தை அறிய வைத்த என் தாயே’ என்ற வரியைக் கேட்ட விஜயகாந்த் ‘என்னய்யா அந்த ஐந்தெழுத்து மந்திரம்’ என்று அவருக்கும் பிடித்துப்போனது. 

அவர் நடித்த ‘ராஜ்ஜியம்’ படத்தில் போராடி இடம் பெற்றதுதான் 'தமிழன் தமிழன் இவன்தான் தமிழன் தலைவன் தலைவன் இவன்தான் தலைவன்...' பாடல். பிறகு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் கட்சி பொதுக்கூட்டங்களில் இந்தப் பாடல் ஒலித்தது.

7. சில சமயம் சினேகன் வித்தியாசமாகச் செய்து சர்ச்சைகளிலும் சிக்குவார். இயக்குநர் ஹரி இயக்கிய ‘சாமி’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் எழுதிய 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா?' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதோடு சர்ச்சையையும் கிளப்பியது. தனது பாடல்களை கவிதையாக எழுதி அந்தப் புத்தகத்துக்கு ‘புத்தகம்’ என்று வித்தியாசமாகத் தலைப்பு வைத்தார்.

8. மலேசியாவில் வெளிவரும் ‘நயனம்’ வார இதழில் ’அவரவர் வாழ்க்கையில்...’ தொடர் எழுதினார். அது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. அப்படிதான் மலேசிய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அங்கிருந்த டைனமிக் பவுண்டேஷன் மூலம் நிறைய விளக்க வகுப்புகள் நடத்தியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் ’கட்டிப்பிடி வைத்திய’த்தில் பங்குபெற்றபோதும், உயர்திரு 420 படத்தில் கதாநாயகனாக நடித்தபோதும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

9. பாடல் எழுத இவர் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தபோது இயக்குநர் பாலா `சேது’ பட வேலைகளில் இருக்கிறார். அவரிடம் வந்து வந்து பாடல் வாய்ப்புக் கேட்கிறார். அப்போது பாலாவிடம் இணை இயக்குநராக இருந்த அமீர் அதற்கான சூழல் அங்கு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு சினேகனைத் தனியாக அழைத்துச் சென்று, ’இங்கே வாய்ப்புக் கிடைக்கிறதோ இல்லையோ நான் எடுக்குற படத்துல வாய்ப்புத் தருகிறேன்’ என்று சொல்லி அனுப்புகிறார். அதேபோல் அமீர் இயக்கிய 'மௌனம் பேசியதே' படத்தில் 'ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள’ பாடலை எழுத வைக்கிறார். தொடர்ந்து ராம், பருத்திவீரன்,யோகி என்று தொடர்கிறது. யோகியில் நடிக்கவும் பாடவும் வாய்ப்பளித்தார் அமீர். சடையனாக சென்னை மொழியில் நன்றாக நடித்திருந்தார். அதுதான் சினேகனை கதாநாயகனாக நடிக்க வைத்தது.

10. ஆடுகளம் படத்துக்காக பாடல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சினேகன் எழுதிய 

’அடிவெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா, உன்ன வெயிலுக்குக் காட்டாம வளத்தாங்களா...’ 

என்கிற பல்லவியைப் படித்தவுடன் துள்ளிக் குதித்து பாராட்டினாராம் இயக்குநர் வெற்றிமாறன். 

கழுகு படத்தில் ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அதைக் காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்’ என்று எழுதி இருப்பார். பரபரன்னு இயங்கும் சினேகன் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கிறார் என்றால், பிக் பாஸுக்குப் பிறகு அவர் தன் வாழ்க்கையில் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார்!

- சிவராஜ் (ஆனந்த விகடன்)

வரம் கொடுக்கும் வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள்!



கிராமத்தின் ஆரம்பத்தில் பிள்ளையார் கோயில், குளம், சிவன் கோயில், மத்தியில் பெருமாள் கோயில், கிராம எல்லை முடிவில் அய்யனார் போன்ற காவல் தெய்வங்களின் கோயில்களுடன் வியப்பூட்டுகிறது  வரகூர். 

17- ஆம் நூற்றாண்டில் பூபதி ராஜபுரம் என்ற வரகூர் கிராமம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தாலும் ராஜராஜசோழன் காலத்தில் 11ஆம் நூற்றாண்டின் முன் பகுதியில் ராஜேந்திர சிம்ம வளநாடு என்ற பெரிய பிரிவின் கீழ் இருந்த குருக்கை நாடு என்ற பகுதியில் இருந்ததாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

கந்தர்வப் பெண்ணான சந்திரலேகை, கன்வமுனிவரின் சாபத்தால் மானிடப் பெண்ணாக பிறந்து, சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். இவளின் பெயரால் சந்திரலேகை என்று பெயர் வழங்கியது. பின்னர் செந்தலை என்ற வழக்குச் சொல்லில் அழைக்கப்பட்டது. கி.பி. 871-901 வரை ஆட்சி புரிந்த ஆதித்த சோழன் காவிரிக்கரைப் பகுதி எங்கும் இருபுறமும் இரு நூற்றுக்கு மேற்பட்ட கோயில்களை எழுப்பினான். இம்மன்னன் வைதீக மார்க்கத்தை நிலை நிறுத்தியவன். அந்தணர்களையும், வேதங்களையும்
பாதுகாத்தவன். 

சோழர் ஆட்சியில் இங்கே அந்தணர்களும் படை வீரர்களும் அதிகாரிகளுமான கள்ளர் சமூகத்தினரும் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



கள்ளர்களில் நாயக்கர் பட்டம் உள்ளவர்கள் இங்கே வாழ்கின்றனர்.

பூபதிராஜபுரம் என்ற வரகூரில் கோயில் கொண்டுள்ள மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணர் (ஸ்ரீநிவாஸப் பெருமாள்) ஸ்ரீலட்சுமி  தேவியை தம் இடது தொடைப் பகுதியில் அமர்த்தி அணைத்துக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். உத்ஸவமூர்த்தி ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவியுடன் விளங்குகின்றார். 

மூலவரும் உத்ஸவரும் சிற்ப முறைப்படி, சோழர் காலத்து திரு உருவங்களாகும். பராந்தக சோழனால் நிர்மாணிக்கப்பெற்று வழிபடப் பெற்ற பெருமான் வரகூர் ஸ்ரீலட்சுமி நாராயணர் என்று கருத முடிகிறது. சோழர் காலத்தில் கருவறை பீடம் கருங்கல்லாலும் சுவர்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டவை. 

இத்தகைய பெருமைக்குரிய தலத்திற்கு, ஆந்திர தேசத்திலிருந்து வந்து பெருமாளை வழிப்பட்டுப் பேறு பெற்றவர் ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகள் ஆவார். கண்ணபிரானின் அருள் விளையாட்டில், உள்ளத்தை பறிகொடுத்த ஸ்ரீநாராயண தீர்த்தர், ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கினி என்ற அரிய அபிநய கிரந்தத்தை, வரகூர் கோயிலின் திருச்சந்நிதியில் இயற்றினார். 

ஸ்ரீநாராயண தீர்த்தரும் தஞ்சை நாயக்க மன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப் பெற்று மிலட்டூரில் தங்கியிருந்தார். அச்சுதப்ப நாயக்கர் பெயரால் வரி நீங்கிய கிராமமாக மிலட்டூர் பாகவதமேளா இசை விற்பன்னர்களுக்கு அளிக்கப் பெற்றதால் மிலட்டூருக்கு அச்சுதபுரம் என்ற பெயரும் உள்ளது. 

மிலட்டூரிலிருந்து ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகள் தல யாத்திரையாகப் புறப்பட்டு, காவிரி ஆற்றின் கிளையான குடமுருட்டி ஆற்றின் தென்கரையாக வரும் பொழுது நடுக்காவேரி என்ற இடத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் இரவு தங்கினார். அவருக்கு கனவில் ஒரு அந்தணக் கிழவர் தோன்றி,  "ஏ.. தீர்த்தா! காலையில் நீ விழித்த உடன் உன் முன் தோன்றும் விலங்கினை தொடர்ந்து செல். அது மறைந்த இடத்தில் தங்கி கண்ணனை பூஜிப்பாயாக!  உன் தீராத வயிற்றுவலி நீங்கிவிடும்'  என்று கூறி மறைந்தார். 

அதிகாலையில் விழித்தவுடன் கனவில் கண்டபடி தன் முன்னே காணப்பட்ட வெண்ணிற வராஹத்தை (பன்றியை) ஸ்ரீநாராயண தீர்த்தர் பின் தொடர்ந்து சென்றார். வராஹம் நடுக்காவேரிக்கு 5 கி.மீ.தூரத்தில் மேற்கே உள்ள வரகூர் வந்தடைந்து அக்ரஹாரத்தின் மத்தியில் உள்ள ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் நுழைந்து மறைந்தது. 

வராஹ ரூபத்தில் வந்து தனக்கு வழிகாட்டியது; பகவான்தான் என்று ஸ்ரீநாராயண தீர்த்தர் உணர்ந்தார். அவரும் கோயிலுக்குள் சென்று ஸ்ரீலட்சுமி நாராயணரை வழிபட்டார். தன்னை வாட்டிய ரோகம் நிவர்த்தியானதை உணர்ந்தார். அங்கு கூடி இருந்தவர்களுக்கும் வராஹ ரூப தரிசனத்தின் அற்புதத்தை கூறினார். அற்புதமான கீர்த்தனங்களை பாடினார்.

தீர்த்தர் அக்கோயிலின் பெருமையை உணர்ந்து அங்கேயே தங்க, அவர் முன் ஸ்ரீநிவாஸப் பெருமான் கண்ணபிரானாகக் காட்சியளித்தார்.  ருக்மணி- பாமா சகிதமாக கண்ணபிரான் காட்சியளித்தபோது பாமா தேவியார், தீர்த்தருக்கு அபயம் அளித்து பகவான் கோபிகைகளுடன் லீலை புரிந்ததைப் பாடும்படி கேட்டார். அதன்படி, ஸ்ரீநாராயண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கினி கிரந்தத்தை கோயில் சந்நிதியிலேயே பாடினார்.



தீர்த்தருக்கு வராஹம் காட்சியளித்த பிறகு அவ்வூர் வரஹாபுரி என்றாகி பின்னர், "வரகூர்'  என்று  அழைக்கப்படுகிறது. தஞ்சை மராட்டிய மன்னன் அமரசிம்மன் அவையில் கி.பி.1785-இல் இசை விற்பன்னராக இருந்து, வரகூர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் மீது பல அரிய கீர்த்தனங்களைச் செய்தவர் வரகூர் ஸ்ரீஆனைபாகவதர் என்பவர். பின்னர் வரகூர் கோபால பாகவதர் என்பவர் இருந்தார்.

குழந்தை பாக்கியம் இல்லாதோர் சுவாமியின் பாதத்தில் வெள்ளி காப்பு ஒன்றை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். பிறகு குழந்தை பிறந்தவுடன் அந்த காப்பை காணிக்கையாக செலுத்தி விடுகின்றனர். என்ன வரம் கேட்டாலும் உடனே கொடுத்துவிடுவார் இந்த பகவான்.  உறியடித் திருவிழாவை நேரில் கண்டால் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

வழித்தடம்:  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கண்டியூர், நடுக்காவேரி மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பழமார்நேரி வழியாக வரகூர் செல்லலாம். 

தினமணி கட்டுரை
23.02.2018
பொ. ஜெயச்சந்திரன்

வேதரண்ய உப்பு சத்தியாகிரக நாயகன் நடராஜன் மூவரையர்



இந்திய தேசம் முழுவதும் விடுதலை தாகத்தில் இருந்த போது, அதனை அகிம்சை என்ற ஆயுதத்தின் மூலமாக, ஆங்கில ஏகாதிபத்தியத்தை, மகாத்மா காந்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை 20வருடங்களுக்கு மேலே, பல்வேறு கட்டங்களாக, அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக மேற்கொண்டு வந்தார். அப்படிபட்ட அகிம்சை போராட்டத்தின் பெரும்பகுதியான உப்பு சத்தியாகிரகம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க மகாத்மா காந்தியின் போராட்டமாகும்.

உப்பு சத்தியாகிரகம்:-

ஆங்கில ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்திய மக்களின் மீது திணிக்கப்பட்ட உப்பிற்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, இந்தியர்களின் நிலத்தில் உள்ள உப்பு, இந்தியர்கள் பயன்படுத்த எதற்கு வரி செலுத்த வேண்டும் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காந்தி அவர்கள் தன்னுடைய சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு 240 கிலோமீட்டர் கடந்து செல்லும் வழியெல்லாம் மக்களை திரட்டி குஜராத் தண்டி கடற்கரையில் உப்பை எடுத்து பதிவு செய்தார்.

வேதாரண்யம் salt March:-

காந்தியடிகள் தண்டியில் ஏற்படுத்திய நடைபயண புரட்சியை போல், தமிழ்நாட்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான இராஜாஜியின் தலைமையில் வேதாரண்ய கடலில் உப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாயகன் சி.நடராஜன் மூவரையர்:-

கள்ளர் இனத்தில், சோழ தளபதிகளாக மூவராய கண்டன்,மூவரையர் சேனைப் பெருமள் என்ற பெயர்களுடன் பல போர்களில் சோழர்களுக்கு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்தவர்கள். 

அப்பேற்பட்ட மூவரையர் மரபில் உதித்த நாயகர் நடராஜன் மூவரையர், தன்னுடைய தாய் நாட்டின் விடுதலைக்காக களம் கண்டு உயிர் நீத்துள்ளார்.

வேதாரண்ய போராட்டத்தில் மக்களை திரட்டிச் சென்று, போராட்டத்தில் மிகத் தீவிரமாக மூவரையர் செயல்பட்டார்.

இதன் விளைவு வேதாரண்ய போராட்டத்தை தலைமை தாங்கிய இராஜாஜிக்கு 6மாதம் சிறை தண்டனை வழங்கிய ஆங்கில அரசு.

மூவரையரின் தீவிரத்தை அறிந்து, காலவரையறை இல்லாமல் பிரிவு IPC 143ந் 17(1) பிரிவுப்படி கைது செய்தது. திருச்சி மத்திய சிறையில் குற்றவாளி எண்:9802 அடைக்கப்பட்டார்.

சிறையில் சித்தரவதைகளுக்காளான மூவரையர் 2வருடங்கள் கழித்து நிமோனியா என்கிற நுரையீரல் கோளாரால் அவதிப்பட்டு வந்தார். நோயின் வேகம் அதிகரித்ததன் காரணமாக சிறையில் இருந்து செப்டம்பர் 5 1932ஆம் வருடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் காப்பாற்றும் எண்ணம் சிறிதும் இல்லாத சிறை நிர்வாகத்தின் நடவடிக்கையால் அடுத்த நாளே செப்டம்பர் 6ஆம் தேதி தாய் நாட்டின் விடுதலையை கண்ணில் பாராமலே தன்னுடைய 36வது வயதில் மூவரையரின் உயிர் பிரிந்தது.

இந்திய விடுதலை போராட்டத்தில் மிதவாதிகள்,தீவிரவாதிகள் என இருவிரிவாக பிரிந்து வெள்ளையர்களை எதிர்த்தனர்.

இதில் இரண்டு பிரிவிலும் கள்ளர் பெருமக்களின் தியாகம் இன்னும் எவ்வளவு,எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தார்கள் என்பது அந்த மாயோனுக்கும்,கொற்றவைக்குமே வெளிச்சம்.

தென்புலத்தார் கடன் நீத்தல் என்கிற வள்ளுவன் வாக்கிற்கேற்ப முன்னோரை வணங்குவோம், அவர்தம் புகழை திருப்புகழ் போல் பாடுவோம்.

பெயர் : நடராஜன் மூவரையர்
ஊர். : படகச்சேரி, பாபநாசம் 
மாவட்டம். : தஞ்சை 
மாநிலம். : தாய்த் தமிழ்நாடு

நன்றி
Trichy jail reports 1930 to 1932
Ministry of culture 
Records of Home department during freedom struggle 

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

எம்.ரெங்கசாமி வன்னியர்

 



பெயர்: எம். ரெங்கசாமி வன்னியர்
பிறந்த தேதி: 12.4.1956
வயது: 62
பெற்றோர்: கோ. மருதய்யா வன்னியர், ஜெயலெட்சுமி
கல்வித் தகுதி: பி.எஸ்ஸி., பி.எல்.
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி ரெ. இந்திரா, மகன்கள் ரெ. மனோ பாரத், ரெ. வினோ பாரத்
முகவரி: மலையர்நத்தம், நல்லவன்னியன் குடிகாடு , பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
கட்சிப் பொறுப்பு: 1972 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அதிமுகவில் கிளைக் கழகச் செயலர், மாணவர் அணி, இளைஞர் அணி, ஜெயலலிதா பேரவை, விவசாய அணி போன்றவற்றில் பொறுப்பாளராகவும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலராகவும் இருந்தார். இவர், 2017 ஆம் ஆண்டில் அமமுகவில் இணைந்து,  தற்போது பொருளாளராக உள்ளார்.



பதவிகள்: 1996 - 2001 வரை ஒன்றியக் குழு உறுப்பினர் இருந்த இவர் பின்னர், தஞ்சாவூர் தொகுதியில் 2011 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல, 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவை உறுப்பினரானார்.  பின்னர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.



2019 ஆம் ஆண்டின் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர்


மதுரை நாயக்கருக்கு எதிராக சிறுகுடி நாட்டு கள்ளர்கள்


மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவான காலத்தில் இருந்தே மதுரையை சுற்றியுள்ள கள்ளர் நாடுகள் யாருக்கும் கட்டுப்படாத தன்னரசாக செயல்பட்டு வந்தனர். மேலும் நாயக்கர்களின் அதிகாரத்தை எதிர்த்து போரிட்டும் வந்துள்ளனர்.

இதில் சிறுகுடி நாட்டு கள்ளர்களின் எதிர்ப்பும் திருமலை நாயக்கருக்கு இருந்துள்ளது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. சேருங்குடி நாடு என்ற பெயரே நாளடைவில் சிறுகுடி என்று மாற்றம் அடைகிறது.

கிபி 1639ல் திருமலை நாயக்கருக்கு எதிராக செயல்பட்ட சடைக்கன் சேதுபதியை அடக்க ஒரு மிகப்பெரும் படையானது இராமப்பய்யன் என்ற படைத்தலைவன் மூலமாக அனுப்பப்பட்டது.

இராமப்பய்யன் மிகப்பெரிய படைதலைவன், அனைத்து விதமான போரில் திருமலை நாயக்கருக்கு வெற்றி வாங்கி கொடுத்தவன். அப்படி பட்ட தளபதி படையெடுத்து சிவகங்கை நோக்கி செல்கின்றான். திருப்புவனம் அருகே தனது படைத்தளங்களுடன் கூடாரம் அமைக்கிறான்.

மடப்புரம் மக்கள் அவரை ஒரு பிரதிநிதியாக எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் தங்கள் வாழ்க்கையையும் சொத்துக்களையும் பாதுகாப்பற்றதாக மாற்றிய கள்ளர்களுக்கு எதிரான தங்கள் குறைகளை இராமப்பையனுக்கு தெரியப்படுத்துகின்றனர்.
(The people of Madappuram waited on him in a deputation and represented to him their grievances against the Kallars who made their lives and properties insecure.)

கள்ளர்களுக்கு எதிராக கோபமடைந்த இராமப்பையன், கள்ளர் குடியிருக்கும் பகுதியான மத்தம் சிறுகுடிக்குச் சென்று அங்குள்ள கள்ளர்களை அழித்தார். (Indignant against the Kallars, Ramappaiyan went to Mattam Cirukudi, a Kallar settlement, and destroyed it.)

கள்ளர்கள் அந்த இடத்தில் அனுபவித்ததை நாயக்க மன்னருக்கு கொடுத்து விடுகிறான். மேலும் அரசு பரிந்துரையின் பேரில், கள்ளர் பழங்குடியினருக்கு எதிரான தனது செயற்பாடுகளுக்கு இராமப்பையன் முற்றுப்புள்ளி வைத்தான்.
(Kallars of the place represented to the Naick king what they had suffered and on royal intercession, Ramappaiyan put an end to his activitics against the Kallar tribe.)


அதன் பிறகு இராமப்பையன் திருப்புவனத்திற்கு திரும்பி ராம்நாடு செல்லும் வழியில் படைகளுடன் முன்னேறினான். சேதுநாடு மீது கொண்ட யுத்தத்தில் இராமப்பையன் வெற்றி கொண்டு சடைக்கன் சேதுபதியை கைது செய்வதாக வரலாறு விரிவடைகிறது.

திருமலை நாயக்கருக்கு எதிரான கள்ளர்களின் யுத்தம் மிகவும் தீவிரமாக அன்றைய காலத்தில் இருந்தது.

கிபி 1639ல் சிறுநாட்டு கள்ளர்களின் யுத்தத்திற்கு பிறகு மேல்நாட்டு கள்ளர்கள் என்று அழைக்கப்படும் பிறமலை நாட்டு கள்ளர்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை திருமலை நாயக்கருக்கு இருந்தது.

மதுரை நாயக்கர் அரசுகளுடனான கள்ளர்களின் யுத்தம் ராணி மங்கம்மா காலம் வரையிலும் தொடர்ந்தை வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆய்வு : அஜித் தேவர்

Reference book : Annals Of Oriental Research, vol.6 (1941-42)

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்