திங்கள், 11 மார்ச், 2019

மழவராயர் வரலாறு - மழவர் - மழவராயர் - Mazhavarayar History (Malavarayar)


மழவராயர் என்பது கள்ளர் பட்டங்களில் ஒன்று 

தமிழ் அகராதி 





கள்ளர்களில் மழவாரயன் மரபினர் வாழும் பகுதியில் 

புனல்வாசல் ஜமீன் "மழவராய பண்டாரத்தார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்ட ஒரு ஜமீன் ஆகும்.

மழவராயர் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள மழவராயர்  பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

மழவராயர் தெரு :- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், பனங்குளம்   ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பகுதி.

மழவராயர் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில் ஒக்கநாடு மேலையூர் ஊராட்சியில் அமைந்துள்ள  மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

மழவராயர் தெரு :- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், மாங்காடு  ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

மழவராம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை வட்டம், களமாவூர் ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

மழவராயநல்லூர் :- திருவாரூர் மாவட்டம், கோட்டூர் வட்டத்தில் உள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

மழவராயம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயில் வட்டத்தில் குளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள மழவராயர்  பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.இவ்வூர் உடைய மழவராயன்பட்டி என அழைக்கப்படுகிறது.

மழவராயம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம்,  அன்னவாசல் வட்டத்தில் வெள்ளஞ்சார் ஊராட்சியில் உள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

மழவராயன்பட்டி :-  புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாண்டான்விடுதி ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

மழவராயன்பட்டி :-  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், மாஞ்சான்விடுதி  ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

மழவராச்சி தோப்பு :- தஞ்சாவூர் மாவட்டம்,   ஒரத்தநாடு வட்டத்தில் பாச்சூர் ஊராட்சியில் அமைந்துள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் பெயரில் அமைந்ழ சிற்றூர்.

மழவராச்சி தோப்பு :- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை  ஊராட்சியில் உள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.


உடையான்மழவராயன்பட்டி : -கந்தர்வக்கோட்டை பகுதியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.



தற்கால மழவராயர்கள் அனைவரும் கள்வர் குடியினரே......


சென்னை பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை ( அரசு ஆவணம்)


கள்ளர் குடியினருக்கு மழவராயன் என்ற பட்டத்தை தவிர  மழவன், மழுவாளி, மழுவாடி என்ற கள்ளர் பட்டங்களும் உள்ளன. 

இன்றும் கள்ளர்களில்  மழவர்களோடு தொடர்புடைய

இளம்பூண்டார், 
அதியமார், 
கோவலர் 

பட்டம் தங்கியவர்கள் சோழபாண்டிய மண்டலத்தில் சிறப்போடு வாழ்கின்றனர். 

மதுரை வெள்ளூர் நாடு நாட்டு கள்ளர்களை  11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது.  அதில் மழவராயன் கரையும் ஒன்று.


விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் (மழவராயர்) மட்டுமே வசித்துவருகின்றனர். ஆய்வாளர் ஐயா. இராம. சம்பந்த மூர்த்தி மழவராயர் அவர்கள் ஊத்துக்காடை சேர்ந்தவர்.

பாண்டியநாட்டில் மழவராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும், மறவர்களிலும் மழவராயர்கள் குடும்பங்களும் உண்டு.

மேலும் மழவராயர் பட்டம் தாங்கிய கள்ளர் குடியினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிள்ளுக்கோட்டை, கீரனூர், முதுகுளம், அரையன்பட்டி. 

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டம் நெல்லுப்பட்டு, பஞ்சநதிக்கோட்டை, தெக்கூர், காட்டுக்குறிச்சி, செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, ஒக்கநாடு மேலையூர்.

கல்விராயன்பேட்டை, பீமன்பட்டி, புங்கனூர், தத்தனூர், சீதாப்பட்டி, கண்டலூர், புதுக்குடி, கூடநாணல், களமாவூர் முதலிய ஊர்களிலும் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.

மழவராயர் சுதந்திர போராட்ட வீரர்கள்

கல்வெட்டில்

அய்யன் மழவராயன்

வீரசிங்க மகாநாடு என்பது கள்ளர் நாடுகளில் ஒன்று,  வீரசிங்க மகாநாடு என்று அழைக்கப்படும் திருவெறும்பியூர்-உடையார் கோயிலில் திருவிழாவிற்காக களவழி நாட்டில் உள்ள எருமைக்குளம் கிராமத்தை, அய்யன் மழவராயனின் ஆலோசனையின் பேரில் அரசன் தேவதான-இறையிலி வழங்கினார். 




சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தைச் சேர்ந்த இடைக்காட்டூர் கோவில் கல்வெட்டில் அய்யன்‌ மழவராயர்‌ குறிப்பிடப்படுகிறார். களவழி நாடாள்வான்‌ கண்ணன்‌ கூத்தன்‌” என்ற கல்வெட்டுச்‌ சொற்‌ றொடர்க்கு ஏற்ப, இவ்வூர்த்‌ திருவிழாக்களில்‌ கள்ளர்‌ வகுப்பினர்க்கு “நாட்டரசன்‌” என்ற சொற்றொடரின்‌ காரணம்கூறித் திருநீறு வழங்கப்படுகிறது.   





மன்னார்குடி மழவராயநல்லூர் - கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் கி்பி 13 ஆம் நூற்றாண்டில் 
ஸ்ரீ மழவன், பல்லவராயன்




 கோட்டூர் கொழுந்தாளை மாரியம்மன் நன்கொடை அளித்தவர்கள் கள்ளர்களின்  மழவராயர், கனகாம்பாடியார், முதலியார், தென்கொண்டார் 



கிபி 1480 ஆம் ஆண்டு புதுக்கோட்டை கள்ளர் நாடான பாலையூர் நாட்டில் நெடுங்குடி கைலாசநாதர் திருக்கோயில் கல்வெட்டில் ஆலங்குடி மழவராயர்




பிள்ளான் விசையரையனும்,புறம்பன் வன்னியரையனும், ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே இருப்பது ஆளை பட வெட்டி மான்னிய ஆனி பண்ணிவித்தபடியாலே இக்குற்றத்துக்கு பெரிலே ஒரு மா நிலமாக(100 குழி) மூவற்கு மூன்று மா நிலம் (300 குழி) தெண்டமாக நியமித்து.....

விளக்கம்:


பிள்ளான் விசையரையனும், புறம்பன் வன்னியரையனும், ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டில் இருபது பேரை வெட்டி கொன்று பெரிய தவறு செய்ததால் இக்குற்றத்தின் பெயரில் 100 குழி நிலம் வீதம் மூவருக்கு 300 குழி நிலம் அபராதமாக(தண்டனையாக) குடுத்து.


இன்றும் அதே பகுதியில் காங்கேயர்/ வன்னியர்/ விசையரயர்/ மழவராயர் என்ற பட்டங்களையுடைய கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர். 

அம்புநாட்டு ரங்கசாமி மழவராயரால் அமைக்கப்பட்ட(15-07-1932)ல் சிலை ( கறம்பக்குடி)

ழவராயர் ஆசிரியம்‌
15 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டைமாவட்டம்‌, குளத்தூர் வட்டம், மடத்துக்‌ கோவில்‌ முதல்‌ பிரகாரம்‌ நுழைவு வாயில்‌ தூணில், மழவராயர் ஆசிரியம்‌ வழங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது. 


தேவாண்டான்‌ மழவராயர்‌ 

15 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டை மாவட்டம்‌ , குளத்தூர் வட்டம், குன்றாண்டார் கோவில் கல்வெட்டில் தேவாண்டான்‌ மழவராயர்‌ என்பர் குறிப்பிடப்படுகிறார். 




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார்கோவில் கிள்ளுக்கோட்டை ஶ்ரீ வன துர்கை அம்மன் ஆலயத்தில் தொடரும் மழவராயர்களின் அறப்பணிகள்

ஶ்ரீ கள்வர் கள்வன் என பெரும்பிடுகு முத்தரையர் தன்னை குறித்துள்ள கல்வெட்டுள்ள கிள்ளுக்கோட்டையில்


1729 ஆம் நூற்றாண்டில் மன்னர் ரகுநாத ராய தொண்டைமான் மழவராயர் மகள் ஸ்ரீமதி முத்துவீராயி ஆயி அவர்களை மணந்தார். 




யாழ்ப்பாண வைபவமாலை (கி.பி.1736) என்ற நூலில் மழவன் என்று கள்ளரை குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளர் சாதியை சேர்ந்த அம்பலகாரனாகிய மழவனையும்.







Alexander's East India and Colonial Magazine: 1835, ஆண்டு எழுதப்பட்ட புத்தகத்தில்







1861 ஆண்டு திரு.வீரயா மழவராயர் அவர்களால் கட்டப்பட்ட பிலிகான் அங்காளி கோயில் (பர்மா)





A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883




(Trichy Gazetteer, Hemingway,1906).







மழவராயர் என்ற பட்டம் உடைய குடிகள் சோழமண்டலத்தில் செல்வ சிறப்போடு வாழ்வதை நாம் இன்றும் காணமுடிகிறது. 





பூதலூர்  "கொடைவள்ளல் திரு.க.சந்திரசேகரன் மழவராயர்" 


👉  மலையக மக்களுக்காக போராடிய ப.ரெங்கராஜ் மழவராயர்



👉 கும்பகோணம் ஐயா ஓ.வடிவேலு மழவராயர்



👉 மாமனிதர். M.R. சுவாமிநாத மழவராயர்




சிங்கப்பூரில் 1962 ல் Jnr Mr Singapore  மற்றும் ல் 1967 Mr Singapore  
திரு S.R. சந்திரன் மழவராயர் 




சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா 2015 திரு எஸ்ஸார் சந்திரன் மழவராயர் அவர்கள்  







வரலாற்று   ஐயா. இராம. சம்பந்த மூர்த்தி மழவராயர் 




கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு தலைவராக அதிமுக வேட்பாளர்  
M.R.S. கார்த்திக் மழவராயர் 




மழவராயர்  

மழவரென்ற சொல்லுக்கு வீரர், இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம். மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு (மழபாடி) எனப்பட்டது என்பர்







மழவர்கள் என்போர் தனிக்குடியல்ல, எல்லாப் பழங்குடியிலும் இருந்த இளம் வீரர்களை குறிக்கும் சொல் என்றும், குறிப்பாக தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள் இப்பெயரில் அறியப்பட்டனர் என்று சில ஆய்வாளர்கள் கூறுவர். மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது.  

மழவராயர் என்னும் பட்டம் வீரர்களுக்கு அரசர் அல்லது தலைவர் என்று பொருள்படும். இவர்கள் சோழகளுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர். சோழர்களின் படைத்தலைவர்களாயிருந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.

இலக்கியரீதியாகவும் இரு பழங்குடிகளாக களவர், மழவர் அடையாளம் காணப்படுகிறார்கள். மூவேந்தர்களில் மூத்தவராக அறியப்படும் பண்டையனாகிய பாண்டியனை, ஆகோள் மூதூர் கள்வர் என்று அகநானூறில் பாண்டிய மன்னரை பசுக்களை கவர்ந்து செல்லும் கள்வர் தலைவர் என்று அகநானூறு குறிப்பிடுகிறது. கிபி 50ல் வாழ்ந்த மதுரை கணக்காயர் “கள்வர் பெருமகன் தென்னன்” என்று பாண்டிய மன்னனை கள்வர் தலைவர் என்று பாடியுள்ளார்.



"திருந்தியஅடியுடைய கள்ளர் தலைவது மழவர் தேயத்தை வணங்கச் செய்த பெரிய கொடையுடைய புல்லியின் விழா வுடைய " என்ற சங்க இலக்கிய வரிகள் மழவர்களும் கள்ளரில் ஒரு பிரிவினரே என்பதை உணர்த்தும்..


வேங்கடத்தை ஆண்ட வலிமைமிக்க மன்னரான புல்லி அரசரை “கள்வர் கோமான் புல்லி” என்று கள்வர் தலைவர் என்று அகநானூற்றில் அறியப்படுகிறார். அதேபோல் மழவர் தலைவராக ஓரி வருகிறார்.

அதனை அகநானூறில் “மழவர் பெருமகன் மாவள் ஓரி” என மழவர் தலைவராக ஓரி அடையாளம் காட்டப்படுகிறார். மேலும் அகநானூறு 61ல் மழவர்களுக்கென்று தனி நாடு இருந்ததை மழபுலம் என கூறுகிறது. இளம்பூரணாரும் மழவர் நாடு என்றே சுட்டிக்காட்டுகிறார்.

மழவர்களே வெட்சி மற்றும் கரந்தை எனப்படும் ஆகோள் பூசல்களில் ஈடுபடும் வீரர்களாக வருகிறார். அம்மழவர்களை அடக்கிய களவர் தலைவர் “மழபுலம் வணங்கிய மாவண் புல்லி” என அகநானூறு உரைக்கிறது. 

மழவர் என்போர் இளையர் என தொல்காப்பியர் விளக்கம் கொடுக்கிறார். கள்வர் கோமான் புல்லி அகநானூறு 83ல் “இளையர் பெருமகன் "புல்லியாகவும் அறியப்படுகிறார். சோழனையும் "இளையர் பெருமகன் - தொகுபோர்ச் சோழன் அதாவது இளையர் பெருமகன் - ஈன்ற அணிமையுடைய பசுக்களைக் கவர்ந்து வரும் வெட்சி வீரர்களுக்குத் தலைவனான, தொகுபோர்ச் சோழன் - திரண்ட போரினை மேற்கொண்டு வெல்லும் சோழனது என்கிறார் அகநானூறு பாடலில் மதுரைக் கணக்காயனார்.

களவரும், மழவரும் தங்களுடைய வீரத்தால் இருவரும் மறத்தின் அடிப்படையில் மறவர் என அழைக்கப்பட்டனர். ஆகோள் பூசலில் ஈடுபட்ட பெரும்பாலான நடுகற்கள் களவர், மழவர் என்றே வழங்கப் பெருகிறது. 

களவர், மழவர் மறவர் என அழைக்கப்பட்டதன் இன்னொரு காரணமாக, முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் இரா பூங்குன்றன் அவர்கள் அகநானூறு இலக்கிய பாடல் மூலமாக விளக்குகிறார்:-

ஆகோள் பூசலில் மழவர்கள் வெட்சி மழவராகவும், கரந்தை மழவராகவும் நின்று போரிடுகிறார்கள். அப்பாடலில் மழவர்கள் நிரை கவர்ந்த போது மறவர்கள் அதனை மீட்டனர் என்று கூறுகிறது. மழவர் என்பதின் ழகரம் கெட்டு றகரமாக திரரிந்து மறவர் என வழங்கப் பெறுகிறது. ஆக மழவர் என்பதின் போலியாக மறவர் என்னும் சொல்லாடல் வருகிறது.

இன்றும் கள்ளர் மறவர் அகமுடையார் என்பவர்கள் ஒரே குடியினராகவே உள்ளனர். களவர், மழவர் (மறவர்) இருவரும் ஒரே புள்ளியில் வருகிறார்கள். 









ழவன் சேரம்பாடி
நீலகிரி
கூடலூர்
மழவராயநல்லூர்
திருவாரூர்
கோட்டூர்
மழவராயம்பட்டி
புதுக்கோட்டை
அன்னவாசல்
மழவராயன்பட்டி
புதுக்கோட்டை
திருவரங்குளம்
உடையமழவராயன்பட்டி
புதுக்கோட்டை
குன்னாண்டார்கோயில்
மழவராயனேந்தல்
சிவகங்கை
திருப்புவனம்
மழவரான்பட்டி
புதுக்கோட்டை
கறம்பக்குடி
மழவராம்பட்டி
புதுக்கோட்டை
விராலிமலை
மழவச்சேரி
திருவாரூர்
குடவாசல்



மழவராகிய கோவலரை 'ஸ்ரீ ஆயர்' என அழைக்கும் வழக்கம் இருந்தது.

'ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சிய்யான்------>சீயான்., என ஸ்ரீ ஆயரின் இருந்து சீயான் என இந்த சொல் திரிந்து வந்துள்ளது. இப்பெயரையே பிரமலைக்கள்ளர்கள் தாத்தாவின் அப்பாவுக்கு சீயான் என பயன்படுத்துகின்றனர். சேயோன் குறிஞ்சிக்கு கடவுள். தமிழ் அகராதி சேயோன் மருவி சியான் என்று ஆனது என்கிறது.









குறிஞ்சி நில மழவர்களின் இயல்பும் தொழிலும் பாடல் வரிகள்:


யானை தாக்கினும் அரவு மேல் செலினும்

நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் (135)
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த
புலிப் போத்து அன்ன புல் அணற் காளை
செல் நாய் அன்ன கருவில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு (140)

நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி

இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலை நவில் எறுழ்த்தோள் ஓச்சி வலன் வளையூஉப் (145)

பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை

முரண் தலை கழிந்த பின்றை....................(134-147)

விளக்கம்:


ஆண் யானைத் தன்னைத் தாக்க வந்தாலும், பாம்பு தன் மீது ஊர்ந்து சென்றாலும், நீலநிற வானத்தில் கடும் இடி இடித்தாலும், கருக்கொண்ட மகளிர் அவற்றிற்கு அஞ்சாத மறம் பூண்ட வாழ்வு. தம் வலிமையால் கொள்ளை கொண்டு உணவினைக் கொள்ளும் வாள் தொழிலையுடைய குடியில் பிறந்த, ஆண் புலி போன்ற புல்லிய தாடியையுடைய இளையர் (மழவர்) தன் வேட்டையைத்தேடி செல்கின்ற நாயைப் போல, தம் குறிக்கோளை மேற்கொண்ட கொடிய விற்களைக் கொண்ட தமது சகாக்களுடன் தமது சொல் கேளாத பகை மன்னனின் காவல் அமைந்த நிலத்தில் (இரவில்) போய், விடியற் காலத்தே அவர்கள் பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாகப் பேசி விற்பர். பிறகு தமது இல்லத்தில் சமைத்த நெல்லால் ஆன தோப்பிக் கள்ளைக் குடித்து வளப்பமுடைய(?) மன்றத்திலே வலிய ஆட்டுக்கடாவை அறுத்துத் தின்று, தோலை மடித்து போர்த்திய வாயையுடைய மத்தளத்தை அவர்கள் நடுவில் வைத்து முழக்கி, வில் பயிற்சி பெற்ற வலிய தோளை உயர்த்தி வலப்பக்கத்தில் வளைந்து பகற் பொழுதில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்ற, சோம்பியிராத குடியிருப்புகள் உள்ள பொருதலையுடைய இடங்களைக் கடந்து...].



மழவர் பெருமகன் அதியமான்



மழகொங்கம் காவிரியின் வடகரையில் உள்ளது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது. 






அதியமான் என்பது கள்ளர் பட்டமாக இன்றும் உள்ளது. திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று கள்ளர் நாடுகளில் ஒன்று கூத்தப்பெருமாநல்லூர் என்று அழைக்கப்பட்ட கூத்தாப்பல் நாடு. கல்வெட்டில் பாண்டிகுலாசினி வளநாட்டு மீகோழை நாட்டு கூத்தப்பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. கூத்தாப்பல் கள்ளர் நாட்டில் ஐந்து கரைகளில் முதல்கரை: அதியமார், மூன்றாவது கரை: மழவராயர் வருகின்றனர். அதியமான் பட்டம் உடையவர்கள்  திருவாரூர் பகுதில் அதிகமா வாழ்கின்றனர்.



சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார். உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார். இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார். மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. 

பழுவேட்டரையன் கண்டன் மழவன் என்பான் இராசராசசோழன் காலத்தில் அவன் கீழ் ஆண்ட குறுநில மன்னர்களில் முதன்மையானவன். இவன் பேரரசர் போன்று பெருந்தரம் அதிகாரிகளை நியமிக்கும் உரிமைபெற்றிருந்தான். 


பழுவேட்டரையர் கள்ளர் பட்டமாக இன்றும் உள்ளதே.  முனைவர். விக்ரம கர்ண பழுவேட்டரையர் பட்டம் உடையவர்.

கொல்லி மழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசசோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை இராசரரசசோழனின் தந்தை பராந்தகச் சோழனுடன் பங்கேற்று ஈழப்போரில் உயிர் துறந்தான். 

மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார். இவன் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன் 


உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன். இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.

மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள்.


சேர்வராயன்மலையில் ஏற்காடு வட்டம் கோயிலூர் கிராமத்தில் வாணீஸ்வரர் சிவன் கோயிலில், அர்த்தமண்டபம் முப்பட்டை குமுதத்திலுள்ள 13- ஆம் நூற்றாண்டைச் கல்வெட்டில், கற்கடமாராயன் என்ற மன்னனின் ஆட்சியில் முதன்மையானவராக இருந்த சகாத்தாரான மழவராயன் என்பவர், பெருமாமலை நாயினாருக்கு இரவும் பகலும் விளக்கு எரியும் வண்ணம், திருநுந்தா விளக்கு எரிக்க பிலாக்காடு என்ற இடத்தில் நிலம் கொடுத்த செய்தியை குறிக்கிறது.


 நிரை கவர்ந்த மழவர் கள்ளர்





தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.


இன்று தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் தொகையில் கள்ளர்கள் பரவலாக மட்டுமே உள்ளனர். அங்கு பள்ளி, மலையாளி (பழங்குடியினர்), ஆதிதிராவிடர்(எஸ்.சி) , கொங்கு வேளாளர் அதிகமான மக்கள் தொகையாகும். போயர், அருந்ததியர், குறவன் உள்ளிட்டவர்கள் பரவலாக வசித்து வருகிறார்கள். 

வேள்விக்குடி செப்பேடுகள் வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் தாய் மழவர் குடியில் பிறந்தவராவார். இவரை மழவேந்திரனின் மகள் (செப்பேட்டில் உள்ள சங்கத சுலோகத்தின் படி மளவேந்திரன்) அதாவது மழவ மன்னன் மகள் என்றும் இவரை பாண்டிய வேந்தன் இராஜசிம்மன் (மாறவர்மன்) மணந்தான் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டுகள் பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டன என்பதால் இவற்றின் காலம் கி.பி.770 என அறியமுடிகிறது







1) ..... ஸ்வஸ்திரு கோவிராஜகேசரி பன்மற்க்கு யாண்டு10 வது மழவரையன் சுந்தர சோழனேன் ....

2) .... மாறவர்மன் குலசேகரன் காலத்தில் வாழ்ந்த மழவராயன் தன்னை திருமாலிருஞ்சோலை நின்றான் மழவராயன் என்று அழைத்துக்கொண்டான்.

3) .... திருமாலிரும்சோலை நின்றான் ஆன மாவலி வாணதராயர் குமாரன்  சுந்தர தோளுடை மழவராயன் .....

4) .... மடப்புற இறையிலியாகப் பெறவேணுமென்று ஐயன் மழவ ராயர் நமக்குச் சொன்னமையில் இவ்வூர் சுவாமிகள் செல்வத் திருவாரூர்....

5) விருப்பன உடையார் பொ.ஆ 1384 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் கல்வெட்டில் பூதலூருடையான் மழவதரையர் (தஞ்சாவூர் பூதலூரில் கள்ளரில் மழவராயர் குடும்பங்கள் உள்ளன), கிளியூருடையான் மணலூருப்பெருமாள் மழவதரையர், அரியலூருடையான் மழவதரையன், கிருவக்கீசாமுடையான் மழவதரைய குறிப்பிட படுகிறார்கள். 

6) பொ.ஆ 1439 இல் அரசு சிவந்த பெருமாளான தேவராயர் மழவராயர் .

7) பொ.ஆ  1459 இல் பாண்டிய மழவரையர் சேதிராயன் இடத்து 

8) விஜய நகர ஆட்சியில் திருத்துறைப்பூண்டி ஸ்ரீ வர்த்தமானேஸ்வரர் கோயில் கல்வெட்டில் தேவராயமகாராயர் மன்னர் 1470 ம் ஆண்டில் தேவராய மழவராயர் என்பவர் கோயிலுக்கு மாணியம் வழங்கிய செய்தி காணப்படுகின்றன. 

9) பொ.ஆ 1505 இல் பராக்கிரம பாண்டிய மழவராயர் ....

10) பொ.ஆ 1564 இல் சின்ன வசவப்ப நாயக்கரின் நிலக் கொடை தியாகராஜ சுவாமி கோவிலுக்கு வழங்கப்பட்ட செய்தியும், மேலும் விளம்பிஸ்ரீ மாதம் 10 தேதி வசவப்ப மழவராயர் கட்டளைப்படி பஞ்சநதீசுவரர் கோயில் அமைந்த திருவாண்டார் கோயில் ஊரில் வந்து குடியேறும் குடிகளுக்கு இட்ட கட்டளை. 

விஜயநகர தளபதி சாளுவ மங்கு என்பவன் சம்புவரையர் மன்னர்களை வென்று தன்னை சாளுவமங்கு சம்புவராய ஸதாபனாசார்யன் என்று அழைத்து கொண்டான். அதே போல சில நாயக்க மன்னர்களும் மழவராயர் என்ற பட்டத்தை பயன்படுத்தியுள்ளனர்.

மழவராயர் பட்ட பெயராக பலர் பயன்படுத்தியதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இதன் மூலம் மழவராயர் பட்டம் பல சாதிகளுக்கும் இருந்திருக்கலாம். ஆனால் மழவராயர் பட்டத்தை இன்றும் தாங்கி நிற்பவர்கள் கள்ளர் குடியினரே.



அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை ஆண்ட 
ஒப்பில்லா மழவராயர்





அரியலூர், உடையார்பாளைய ஜமீன்தார்கள் கள்ளர் மரபினர் என்று குறிப்பிடுகிறது. ( Page 260,Trichinopoly gazetteer, 1878, lewis moore).  

அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஜமீன்தாரின் முன்னோர்கள் கள்ளர்கள் என மற்றொரு நூலில் குறிப்பிடப்படுகிறது.


1765 வரை அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஜமீன்கள் கள்ளர் பாளையக்காரர்களால் ஆளப்பட்டது. நவாப் மற்றும் ஆங்கிலேயர்களின் கூட்டுப் படைகள் அவர்களைத் தாக்கியபோது அவை அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர் இந்த ஜமின்கள் 1800களில் விற்கப்பட்டன. இன்றைய உரிமையாளர்கள் 1800 களில் ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கியவர்களின் வழித்தோன்றல்கள். அவர்கள் உண்மையான பாளையக்காரர்கள் பரம்பரை அல்ல.

The ancestors of the zamindar of Ariyalur and Udaiyarpalayam were Kallars as stated by Lewis Moore in Manual of Trichinopoly District in The Presidency or Madras (1878).






ஆனால் ஒப்பில்லாத மழவராயர்  என்ற ஜமீனை பள்ளி சாதியினரே உரிமை கூறுகின்றனர். 


அரியலூர் பாளையக்காரரின் வாரிசுகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு பிரிவினர், இன்று தங்களை மழவராய நயினார் என்றும், பள்ளி சாதியினர் என்றும் கூறிக்கொள்கின்றனர்.  இவர்கள் உறவினராக உடையார் சின்ன நல்ல நயினார் காளாக்க தோழ உடையார்  கூறிக்கொள்கின்றனர்.

பள்ளி சாதியை சேர்ந்த திரு. நடனகாசிநாதன் தனது நூலில்

ஜமீன்தார் வாரிசு ஒரு கடித்த நகலை தருகிறார்.  அதை பற்றிய தகவல் கிபி 1907 ல் வெளிவந்த Trichinopoly gazetteer எனும் அரசாங்க வெளியீடு புத்தகத்தில் உள்ளது.

1818 ஆம் ஆண்டு அரியலூர் மழவராய பாளையக்காரர் (ஒலைச்சுவடியின் அடிப்படையில்) ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம்   ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்களது பூர்வீகம் பற்றிய தகவல் பெறப்பட்டுள்ளது. 

அந்த தகவல்படி, இன்றைய அரியலூர் பாளையகாரரின் முன்னோர் " உடையார் நயினார்" என்பவர் கர்நாடக மாநிலத்தின் வட எல்லையில் மகாராஷ்ட்ராவுக்கு அருகில் இருந்த " ஆனங்குன்ட்டி "(500 km from bangalore) எனும் பகுதியில் இருந்த, 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திம்ம ராயா என்பவர் மூலம் காவிரி ஆற்றின் கரையோரப்பகுதியில்  பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது புதல்வர்கள் பும்மி நயினார் மற்றும் ராமி நயினார் என குறிக்கப்பட்டுள்ளது.




ராயர் என்பவர் இவர்களை இங்கு கொண்டு வந்து ரனவிஜய ஒப்பில்லா மழவராய நயினார் என்று பட்டம் தந்தாக  குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் குறிப்பிடும் காலம் 14 ஆம் நூற்றாண்டு ஆனால் ஒப்பில்லா மழவராயர் என்று அழைக்கப்பட்ட நயினார்கள் பற்றி 17  ஆம் நூற்றாண்டில் ஒரு சில கல்வெட்டில் மட்டுமே காணப்படுகின்றன. அதற்கு முன்பு இவர்களை பற்றிய கல்வெட்டோ செப்பேடோ எதுவும் இல்லை. செஞ்சி நாயக்கன் ஆட்சியில் கீழே இருந்த இவர்கள் 17 ஆம் நூற்றாண்டில்  பீஜப்பூர் சுல்தான்கள் அரியலூர் கைப்பற்றிய பின்பு அரியலூர் முகலாயர்களிடமே சென்றதுவிட்டது. 



விசயநகர மன்னர் காலத்தில் குடியேறிய  உடையார் நயினார் மற்றும் அவரது புதல்வர்கள் ராமி நயினார், பூமி நயினார். ஒப்பில்லாத அம்மன் இவர்களின் குலதெய்வம்.


கிபி 1835 குறிப்பு -- அரியலூர், துரையூர் பாளையம், பள்ளி எனும் சூத்திரர் சாதியரிடம் உள்ளது (orme manuscript 1835) என்று உள்ளது. ஆனால் துறையூர் தெலுங்கு பாளையக்காரர் ரெட்டியார் சாதியினர். பள்ளி சாதியினரும் தங்களை ரெட்டி என்று அழைத்துக்கொண்டாலூம், துறையூர்  பாளையக்காரர் ரெட்டியார் சாதியினர் ஆவர்.

"ஸ்ரீமது செட்டிகுளம் வல்லகோல் எறம ரட்டியார் குமாரர் நல்லப்ப ரட்டியார்" 




நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அல்ல ஆனால் பாண்டியன் என்று சேர்த்துக்கொண்டது போல் , பல நாயக்க மன்னர்கள் சோழன், பாண்டியன் என்று தங்கள் பேருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டனர். ஆனால் உடையார் பாளையம், அரியலூர் எந்த காலத்தில் சின்ன நல்ல நயினார் காளாக்க தோழ உடையார், ஒப்பில்லா மழவராய நயினார்  என்ற பட்டத்தையும் மற்றும் பள்ளி சாதியாக  மாறினார்கள் என்பதை வேறு ஒரு பதிவில் விரிவாக காணலாம்.




©©©©©©©©©©©©©©©©©©


உடையான்மழவராயன்பட்டி 


கள்ளர்களின் 
திருமண பத்திரிகைகள் சில









கள்ளர்களின் 
மரண பத்திரிகைகள் சில







திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. சோழபாண்டியன்
திரு. பரத் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்