தஞ்சை மாவட்டம் புதைகரை என்னும் சிற்றூரில் திரு அப்புசோழகர் பெரிய வீட்டாயி அம்மாளுக்கும் 22/07/1909 ல் வடிவேலனார் பிறந்தார். தஞ்சைத் திரு நகரில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். கல்வியில் திருவையாறு அரசர் கல்லூரியில் வித்வான் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதர் பயிற்சியும் பெற்றார். திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்வேள் உமாமகேசுவரனரர் தலைமையிலும், திரு பன்னீர்செல்வம் முன்னிலையிலும் 1933ல் நாரயணசாமி நாட்டார் மகள் செல்வி இரஞ்சிதத்துடன் திருமணம் நடைபெற்றது.
தஞ்சை கல்யாணசுந்தரம் உயர்நிலை பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராக 39 ஆண்டுகள் பணியாற்றிய பெருமை படைத்தவர். இதனை அடுத்து தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பதிபியல் செயலராகவும் கரந்தை தமிழ் சங்கத்தில் மன்ற உறுப்பினராகவும் தமிழாசிரியர் கழகத்தில் செயலாலராகவும் தஞ்சை மாவட்ட ஆசிரியர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் கள்ளர் மகா சங்கத்தில் அமைப்பாளராகவும்
தஞ்சை கல்யாணசுந்தரம் உயர்நிலை பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராக 39 ஆண்டுகள் பணியாற்றிய பெருமை படைத்தவர். இதனை அடுத்து தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பதிபியல் செயலராகவும் கரந்தை தமிழ் சங்கத்தில் மன்ற உறுப்பினராகவும் தமிழாசிரியர் கழகத்தில் செயலாலராகவும் தஞ்சை மாவட்ட ஆசிரியர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் கள்ளர் மகா சங்கத்தில் அமைப்பாளராகவும்
தஞ்சை கம்பன் கழகத்தில் உறுப்பினராகவும் இராணிவாய்க்கால் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும்
பல்வேறு பதவிகளை திறம்பட நடத்திய பெருமைகளையும் உடையவர்.
மேலும் பல்லவ மன்னர்கள், இலக்கணவிளக்கம், திருக்குறள் உரை, விஞ்ஞான மேதைகள், செந்தமிழ்செல்வம், தமிழ்மணிக்கோவை, பைந்தமிழ் இலக்கணம், வடிவேலன் வழிகாட்டி என்ற நூகளையும் தமிழ்மண்ணில் இயற்றி பதிபித்துள்ளார். சோழகர் என்றாலே அது வடிவேல் சோழகரைத் தான் குறிக்கும் என்ற அளவுக்கு வாழ்ந்து காட்டியவர் வடிவேலனார்.
அடக்கமான தமிழ்பணி, அமைதி, புன்சிரிப்போடுகூடிய நிதானம்,படபடப்பு இல்லா நெறி, ஆடம்பர உடை அணியா போக்கு, எப்பணியுலும் ஒரு தெளிவு இவையே இவரின் அடையாளமாக இருந்தன. தமிழாசிரியர்கள் முன்னேற்றம் எய்திட வழிகள் பல கண்ட பெருமக்களில் இவர் குறிப்பிடதக்கவராவார். தமிழாசிரியர்கள் இடையே நிலவிய தாழ்வு மனப்பான்மை நீங்கவும் ஆசிரியர்கள் உலகில் தமிழாசிரியர்கள் தலைநிமிர்ந்து வலம் வரவும் இவர் வழிகாட்டியுள்ளார். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலைய மதிப்பியல் செயலராக பொறுப்பேற்று ஆற்றிய சீரிய பணியும், தமிழ் உணர்வை வளர்த்த பெருமைக்குரிய கரந்தைத் தமிழ்ச்சங்க வளர்ச்சியில் இவர் கொண்டிருந்த ஆர்வமும் எந்நாளும் நினைவில் நிற்பன.
தஞ்சையில் கள்ளர் மகாசங்கம் பிறப்பதற்கு காரணரும் பல்லாயிரக்கனக்கில் வீறுகொண்ட கள்ளர் மாணவச்செல்வங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை முதுபெரும்புலவரும், வித்துவான் வடிவேல் சோழகரையே சேரும். அவ்ர் அடி தொடர்ந்து நடப்போம்.